என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நானும்.. தனிமையும்...!

எப்போதும் பார்த்துக்கொண்டிருந்து
எப்போதாவது நினைப்பதை விட‌
எப்போதும் நினைத்துக்கொண்டு
எப்போதாவது பார்ப்பதில்தான்
எப்போதுமே காதலின் ஆழம் தெரியும்...!

 

dont-be-sad

தனிமை...

இதுதாங்க வழ்க்கையிலே மிகப்பெரிய நோய்களெல்லாம் வருவதற்கு காரணம், இது சில பேருக்கு ரொம்ப பிடிக்கும், பல பேருக்கு இதுதான் முதல் எதிரி. நான் அதுலே இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன். நீங்க எப்படினு நான் கேட்கமாட்டேன், அனுபவிக்கிறவனுக்குதான் அதனோட வலியும், சுகமும் தெரியும்.

"நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை கலைக்கப்படுகிறபோது ஏற்படும் இழப்புகளை
நான் அறிவேன்"
(நன்றி: தபூசங்கர்)

தனிமையிலே இனிமைக்கான முடியுமா..?

முடியும்... முடியாது என்ற இருவேறு கருத்துக்கள் கண்ணதாசன் காலத்திலிருந்தே இருந்துக்கொண்டுதானிருக்கிறது. இப்போது நமக்கு அதுவல்ல பிரச்சினை...

பெற்றோரின் அரவனைப்பிலிருந்து பிரிந்து (பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்)  படிக்க செல்கிறது  (முதன்முதலில் என் குழந்தையை பள்ளியில் விட்டுவரும்போது குழந்தையும், தாயும் அழுதது இன்னும் என் கண்முன்), நண்பர்கள் வட்டம் பெருகியவுடன் தனிமை காணாமல் போகின்றது.

a-gang-of-friends

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது... அதைவிட மகிழ்ச்சியான ஒரு சூழல் எப்போதுமே இருக்காதுங்க..இதனால் பசியை மறந்தும், இருக்கும் இடம் மறந்தும், வெயில் உச்சி மண்டையை பிளந்தும் உணர்வற்று இருக்கும்போது அடுத்தவர் நினைவுப்படுத்தி ஓஹ்.. என்ற நினைப்புடன் கலைந்து சென்ற காலமும் உண்டு, அப்போதெல்லாம் முக்கியமான தேர்வையும் மிஸ் பண்ணிய சம்பவம் நடந்திருக்கிறது. வேலைப்பழுவிலும், குடும்ப சூழ்நிலையாலும் ஒவ்வொருதரும் பார்ப்பதற்கே அரியதாக இருக்கும்போது பழைய நினைவுகளின் ஏக்கத்தால் நம்மை நாமாகவே தனிமைப்படுத்தப்படுகிறோம்

காதலுக்காகவும்,காதலிக்காகவும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும்போதும்,   அதற்குப்பிறகு முதல் பிரிவிலும்   தனிமையின் வலி அதிகம்..

சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா                                                                                      அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா                                                                                      அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா                                                                               அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று...       

என்னைவிட அதிகமாக என்னை காதலிக்கும்
உனக்கும் தெரியும் தனிமையின் வலி

யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...

sad

தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌...  

நீங்களும் மாடலிங்காக வேண்டுமா..? வாருங்கள்..!

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விளம்பர பலகைகளயும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் மனதுக்கு பிடித்த நடிகர், நடிகைகள், மாடல்கள், கிரிக்கெட் ஸ்டார்கள், அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள், மற்றும் இன்னும் பல...

இந்த விளம்பர பலகைகள் மரத்தில் செய்தது போக இப்பொழுது டிஜிடலில் மாறிவிட்டது என்பதும் தெரிந்த விஷயமே.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது எப்போதாவது நம்முடைய மனதிலும் ஒரு சிறிய ஆசை தோன்றி மறைந்திருக்கும்.. அந்த விளம்பரத்தில் வரும் கதாபாத்திரத்தில் நம்மை நாமே கற்பனை செய்துக்கொண்டும் எண்ணிகையில்லா மக்களின் பார்வை தம்மீது படும் என்ற சிற்சில சந்தோஷத்திலும் உலா வரும் மக்களை அன்றாடம் பார்த்துக்கொண்டும் இருக்கிறோம்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்து விட்டது ஒரு புதிய வலைத்தளம்.

http://www.photofunia.com

mainpage

மேலே குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் சென்றால்.. நிறைய/பல வகையான படங்கள் கொண்ட பக்கம் தோன்றும்.. அதில் தாங்களுக்கு உரிய/பிடித்தமான படத்தை கிளிக் செய்தால்

submain

மேலே குறிப்பிட்ட பிரவுசில் கிளிக் செய்து உங்களுடைய புகைப்படத்தை தேர்வு செய்தவுடன்...

தாங்கள் விருப்பபட்ட வகையில் நீங்களும் மாடலிங்காக மாறி பிரிண்ட் போட்டு வீட்டு சுவற்றில் மாட்டி வைக்கலாம்.. அல்லது இதோ பார் நானும் விளம்பரபத்தில் நடிக்கிறேன் என்று தெரிந்தவர்களுக்கு/ காதலிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது பிரிண்ட் எடுத்து கூரியர் மூலமோ அனுப்பி மகிழலாம்..

முக்கியம்: உங்களுடைய படம் JPEG, GIF,  PNG Format - ல் இருக்க வேண்டும், அதனுடைய அளவு 2MB க்கு மேல் இருக்க கூடாது

For Example:on wall

பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. 

என் க‌ன‌வு...!!!

pic49364

அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை.

ஒரு மாலை வேளையில் என் நண்பரின் ஞாபகம் வந்து கைப்பேசியில் அவனுடைய எண்ணிற்கு கால்பண்ணி ஹலோ என்றவுடன் எதிரில் எந்த பதிலும் இல்லை, பிறகு திரும்ப கூப்பிடலாம் என்று கைப்பேசியை பார்த்தால்.. அட ச்சே.. என் கைப்பேசியில் Charge இல்லை... அவனும் எனக்கு திரும்ப அழைத்திருப்பான்,  என்ன செய்வது என்று யோசிக்கயில் அருகே இருந்த பொது தொலைப்பேசி கண்ணில் பட்டது...

உடனே பொது தொலைபேசி கடையில் உள்ள கண்ணாடிப்பெட்டிக்குள் என்னை அடைத்துக்கொண்டு, தொலைப்பேசியில் என் நண்பனுடன் உறவாடிக்கொண்டே கண்ணாடிப்பெட்டியின் வெளிப்புறம் சாலையில் ஆட்டோ, பேருந்து, வேன், மாட்டுவண்டி, இன்னும் சில பல மணிதர்களின் நடமாட்டத்தை கண்டு கழித்துக்கொண்டும் இருந்தேன்.

அப்பொழுது ஒரு ஆட்டோ அதன் முன்னால் சென்ற பல சரக்குடன் சென்ற‌ மாட்டுவண்டியின் வேகம் கண்டு அதனோட ஓட்டுநர் அதை நிருத்திவிட்டு அந்த மாட்டு வண்டிக்காரனோடு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கையில்                                                                என் கண்கள் ஆட்டோவையும் அதன் சன்னல் ஓரத்தில் இருந்த பெண்ணையும் நோக்கின..??

எங்கேயோ பார்த்து ரசித்த முகம்..                                          இன்னும் என்னுடைய பார்வையை கூர்மையாக்கி             அந்த நொடியில்..                                                                                 உலகின் உயர்ந்த கட்டிடத்தின் மீது பட்டு தெரித்த மின்னல் கீற்றைப்போல் மனதுக்குள் ஒரு மின்னல்..

என் தேவதையா அது...?                                                                                                               அதே! நீ என் உயிர்

அட‌ர்ந்த‌ மேக‌க்கூட்ட‌த்திலிருந்து
மெல்ல‌ வெளிவ‌ரும் வான ஊர்திப்போன்று
அவ‌ள் முக‌ம் என் நினைவுக்குள் எட்டிப்பார்த்த‌து..

தூண்டிலில் மாட்டிய‌ மீனைப்போன்று
துடித்த‌து என் நாடித்துடிப்புக‌ள்

நீயும் ஒன்றும் புரியாதவளை போல்
உன் க‌ண்க‌ளும் என்னை கூர்ந்து நோக்குகிற‌து
விய‌ப்பில் உன் புருவ‌ம் அம்பு எய்வ‌த‌ற்கு த‌யாராகும் வில்லைபோல் வ‌ளைகிற‌து.

அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளிலிருந்து உதிர்ந்த‌
இலைக‌ளை சூராவ‌ளிக்காற்றில் அடித்து சென்ற‌து என் நினைவுக‌ளை                                                                                               ந‌ம் உல‌க‌ம் நோக்கி...!

"மற்ற பெண்களிடம் நட்புக்கா பேசிக்கொண்டிருந்தபோது
அழுததும்..
தினமும் காலையில் சிறிதளவாக‌ இருந்தாலும் உன்னிடம்தான் பகிர்ந்துண்ணுவேன் என்று
காத்துக்கொண்டிருந்ததும்..
நீண்ட நேரம் காத்திருந்து முதல் ஆளாக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பார்க்க‌
கால் கடுக்க காத்திருந்ததும்...
உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும்
கடற்கரையில் உட்கார்ந்து மணிக்கானக்காக
பேசியதும்...
தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்...
இன்னும் என்னமோவெல்லாம்
மின்மினி பூச்சியாய்
அந்த வசந்த கால சிறகடித்த நினைவுகள்
மனதில் தோன்றியது..."

கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்
ம‌ர‌த்திலிருந்து தோலிருத்த‌ ப‌ட்டையாய்.. ?

க‌ருங்கொண்ட‌ மேக‌த்திலிருந்து சிந்திய‌
ம‌ழை முத்துக்க‌ளாய் பிற‌காச‌மான‌
உன் முகம்
அந்த‌ ம‌ழைத்துளி பொருக்கு ம‌ண்ணில்
விழுந்து க‌ல‌ந்த‌து போல்...?

அழுகிறாயா..!?
உன் விழியிலிருந்து வழியும்
முத்துக்கள் என் இதயத்தை கிழிக்கின்றன‌..

கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்
புகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...

வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய்
மூச்சிரைக்க ஓடிவருகிறேன் உன்னிடம்                             ஆவலாய்....                                                                                                      ப‌ழைய‌ காத‌ல‌னாய்....                                                                                  உன‌து ப‌ட்டுக்குட்டியாய்.....

நீயும் என்னை காண துடிக்கிறாய், கையை அசைத்து அழைக்கிறாய்....

எதிரே த‌ரிக்கெட்ட‌த‌ன‌மாய் எமனுடைய நண்பனாய் வந்துக்கொண்டிருக்கும் லாரி..........

க‌த‌றுகிறேன்.. நெருப்பில் விழுந்த‌ புழுவாய் துடிக்கிறேன்..

சடாரென விழித்தெழுகின்றேன்...
அட கனவு...

என் அவளை காப்பாற்று
எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு
அவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...
என்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.

பி.கு.: இது கற்பணை மட்டுமே...

என் மதிப்பிற்குரிய வழிக்காட்டி...!!!

pic06885

அப்பா.....

வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்...

நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..

அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து  இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்...  அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று

நீயே ஆசானாய் இருந்து ஒரு மாணவனைப்போல்
பாடம் கற்றுக்கொடுத்தாய்..
சரியாக படிக்காத போது பெற்ற மகன் என்று பாராமல்
எல்லா மாணவர்களும் உரிய                                                                  சம தண்டனையை அளித்தாய்...

மாலைப்பொழுது வந்து வாசல்தட்டும் முன்
வீடு வந்து சேரவேண்டும் என்ற‌
கட்டளையிட்டாய்.. அப்போதெல்லாம் வெறுத்த நான்
இப்பொழுதும் நினைத்து சந்தோசப்படுகிறேன்
காலத்தின் விசரத்தன்மையை நினைத்து...

பள்ளியில் பயின்ற காலத்தில்
ஒவ்வொரு துறையிலும்
முன் தரவரிசையில் தலைக்காட்டிய போதெல்லாம்
அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய்
அப்போதெல்லாம் பள்ளிப்பருவம் இப்படியே
தொடராதா என்று யோசித்திருக்கிறேன்...

தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்..

இல்லாதவர்கள் வேண்டி வந்தபொழுதெல்லாம்
தன் தகுதிக்கும் மீறி அள்ளிக்கொடுத்தாய்..
இப்பொழுது அழுது வருத்தப்படுகிறார்கள்
கொடுக்க ஆளில்லாமல்.?

ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்தாய்... !
ஆசான்களெல்லாம் உன் வழிப்பின்பற்றும்
ஆசானாய் வாழ்ந்தாய்... !
ஒரு பெற்றோர் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணமாய் திகழ்ந்தாய்..!!
தான தர்மத்தின் தலைமகனாய் இருந்தாய்...!
உலக கல்வி மார்க்க கல்வி இரண்டிலும்
சிறந்து விளங்கினாய்...!

பெரியவர்களை மதிக்கவும், ஏழை பணக்காரரை
சமநிலையில் பாவிக்கவும்,
எப்போதும் எந்த இடத்திலும் பொறுமையை
கையாலவும் கற்றுக்கொடுத்தாய்...
அதனுடைய பலனை அனுபவிக்கிறேன்... உன் வழிப்பற்றி

உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்...                                                                              இருக்க‌ விரும்புகிறேன்..

வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன்                 உன் வெற்றிடத்தை நினைத்து..

நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......

பிரச்சினைகள்..தீர்வு... ஒரு உதாரணம்!

 life

அது ஒரு அமைதியாக நடந்துக்கொண்டிருக்கும் வகுப்பறை, மாணவர்கள் கவனத்துடன் பாடத்தை கவணித்துக்கொண்டிருந்தனர்...  

பேராசிரியர் ஒரு அழகிய கண்ணாடி கிளாஸில்(எனக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை, மண்ணிக்கவும்)சிறுதளவிற்கு தண்ணீரை ஊற்றி அதை தூக்கிப்பிடித்து மாணவர்களை நோக்கி கேட்டார், எனதருமை மாணாக்களே, நான் இப்போது பிடித்துக்கொண்டிருக்கும் கண்ணாடி கிளாஸின் எடை எவ்வளவு என்பதை உங்களால் கூற முடியுமா???

அதற்கு மாணவர்கள், அவரவர் கருத்துக்கேற்ப 50 கிராம், 25 கி, 150கி, 200கி.... கூறிக்கொண்டிருந்தனர்... அதற்கு பேராசிரியர் சொன்னார் உங்களுடைய கருத்துப்படி அவ்வளவு பெரிய எடை இல்லை.. நான் எடை போட்டுப்பார்தால் தான் அதனோட உண்மையா எடை எவ்வளவு என்பது தெரியும், ரொம்ப சாதாரணம்தான், இருக்கட்டும் இதுவல்ல என்னுடைய கேள்வி...

மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி ஒரு சில‌ நிமிடம் வரை வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?என்று மாணவர்களை பார்த்து கேட்டார். அதற்கு அவர்கள் ஒன்றும் ஆகாது என்றனர்..

பிறகு, மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி 1  மணி நேரம் வரை வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?? என்று அவர்களைப்பார்து கேட்டார்.. அதற்கும் அவர்கள் வலி விரலில் ஆரம்பித்து மூட்டுவரை வலிக்கும் என்றனர். சரி... itf061005

மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி 1  நாள் முழுவதும் தூக்கி வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?? என்று அவர்களைப்பார்து கேட்டார்..
அதற்கு அவர்கள்... கையில் தசைப்பிடிப்பு வந்து அதன் மூலம் உறைந்து விடுபதற்கு கூட வழியுண்டு அதன்மூலம் எலும்பு முறிவு மருத்துவரை அனுகி ட்ரெட்மென்ட் எடுக்க நேரிடும் என்றனர்... சரி இதன்மூலம் இந்த கிளாஸின் எடை கூடிவிடுமா என்று கேட்டார், அதற்கு அவர்கள் இல்லை என்று பதிலலித்தனர். அப்புறம் ஏன் இவ்வளவு வேதனை அதை தாங்கிக்கொண்டிருக்கும்பொது வருகிறது என்றார், எல்லா மாணவர்களும் குழப்பத்திலிருந்தனர்.

அப்போ இந்த கைவலியிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார், அதற்கு ஒரு மாணவர் கீழே வைத்துவிட வேண்டும் என்று பதிலளித்தார், அதற்கு ஆசிரியர் அவரை பாராட்டிவிட்டு..

அதற்கு அவர் விளக்கமளித்தார்...
circus உங்கள் பார்வையில் சாதாரண (50 கிராம் ‍ 150கிராம்) எடையுள்ள கண்ணாடி கிளாஸ் மாதிரிதான் நமக்குள்ளே உள்ள பிரச்சினைகள்..!!, அதை சில நிமிடங்கள் பிடித்திருந்தால் அதனோட வலி அவ்வளவாக தெரியாது, எப்பவுமே தூக்கிப்பிடிதுக்கொண்டிருந்தால் அதனோட வேதனைதான் அதிகரிக்குமே தவிர எதுவுமே செய்யமுடியாமல் அந்த வளையத்தை விட்டு வெளியேறவே முடியாது.

pbmவாழ்க்கையில் எப்பவுமே பிரச்சினைகளும், போராட்டங்களும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். முக்கியமான விஷயம் அதை எதிர்கொள்வதுதான், அதைவிட முக்கியமான விஷயம் அந்த கண்ணாடி கிளாஸை ஒவ்வொரு நாளின் முடிவிலும் கீழே வைத்துவிட்டு படுக்கைக்கு சென்றால்...   அடுத்த நாளின் விடிவு எப்போதுமே புத்தம் புது நாளாக, எழிதில் போராட்டங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கலாம்...

life

போர்க்களம்..!!!

yuvabarathi

இது எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது...

வளைகுடா ஏன் உலகம் முழுதும் வாழும் நம் சமுதாய மக்களின் வாழ்க்கை கூட ஒரு வகையான போர்க்களம் தான்....!

குடும்பம், பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள் வட்டம் குறிப்பாக இளமை என அனைத்தையும் இழந்து மற்ற நாட்டின் முன்னேற்றதிற்காக தம் உடல், உழைப்பு அனைத்தயும் இழந்து நிற்கும் நிலமைக்கூட ஒரு வகையான போர்களம்தான்..

வார இறுதி நாட்களில் தொலைப்பேசியிலேயே குடும்பம் நடத்தி (இப்பொழுது Online Chatting வந்துவிட்டது என்பது வேறு விசயம்), தம் குழந்தைகள் அவர்களின் கடந்த வாரம் பள்ளியில் படித்த கணித வாய்ப்பாட்டையும், ஆங்கில ரைம்ஸையும், பள்ளி ஆசிரியர் அடித்தது,  பாரட்டியது வரை தொலைப்பேசியிலேயே கேட்டுமகிழ்ந்து வார நாட்களில் அந்த இன்பத்திலேயே நாட்களை கடத்தும் நம்மவர்களின் நிலைக்கூட ஒரு வகைப்போர்களம் தான்...

தமது வீடுகளில் தான் குடித்த தண்ணீர் பாத்திரத்தைக்கூட கழுவி வைப்பதற்கு அலுப்புபடும் நம்மவர்கள் இங்கே சாப்பாட்டிற்காக (சமைக்க தெரியாதென்றால் தங்குவதற்கு கூட இடம் தருவதற்கு மறுப்பார்கள் என்பது வேறுவிசயம்) எல்லாவகையுலும் உடலை வருத்தி கஷ்டப்படுவதுக்கூட ஒரு வகை போர்க்களம்தான்....

ஆயுதம் ஏந்தி போர்க்களதிற்கு செல்பவனும், நமது நாட்டிற்காக அரசின் அன்னியச்செலவாணியை பெருக்குவதற்காக அயல் நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை தொலைப்பவனும்......?

இப்போதைக்கு இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..

"வாழ்க்கையே போர்க்களம்

வாழ்ந்துதான் பார்க்கனும்..."

உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை......

 

Financial Crisis……. இது உலக வர்த்தகத்தை, பெரிய/சிறிய வியாபாரம், வியாபாரிகளை மற்றும் பொருளாதார நிபுணர்களை ஆட்டிப்படைக்கும் கொடிய 100479511

வைரஸ், ப ட்டி தொட்டியெல்லாம் இதே பேச்சு. இந்த கொடிய வைரஸ் தாக்கத்தால் வேலை இழப்பு, பொருளாதார சீர்கேடு, சிறிய/பெரிய வியாபாரஸ்தலம் மூடு விழா.....மற்றும் மாதசம்பளம் குறைப்பு (அ) காலம் கடந்து கொடுத்தல்..

ஆபீஸ் துடைப்பவர்கள் முதல் மின்சாரம் பயன்பாடு, தேநீர் வரை அளவிற்குகதிகமாக குறைப்பு..

முன்பெல்லாம் வேலையை விட்டு தூக்கி விட்டால் வருத்தப்பட்ட காலம் போய் இப்போது எல்லோரிடமும் ஒரு சகஜமான சூழல்...

முதளாலித்துவ மக்களிடையே இது ஒரு HOBBY போல் ஆகிவிட்டது... நீ 4 பேரை தூக்குறியா... நானும் 7 பேரை வேலையிலிருந்து நீக்குவேன் என்ற இருமாப்பு..

tn_iammeltingபுதிய ப்ராஜக்ட் கிடைக்கலியாம், வங்கி லோன் தருவதற்கு மறுக்கிறார்களாம், ரியல் எஸ்டேட் பாதிப்பு எனவே அதையொட்டியுள்ள வேலைகளெல்லாம் பாதிப்பு அதையொட்டி வேலை செய்பவர்கள், அதையொட்டி வியாபாரம் செய்பவர்கள் உட்பட.. இப்படியாக எல்லோரிடமும் எல்லா இடங்களிலேயும் உள்ள புலம்பலை காணமுடிகிறது.

Softwareஇதன் தாக்கம் கணினியில் மென்பொருள் (Software) எழுதுவோரையும் விட்டுவைக்கவில்லை.. மனதில் தோன்றும் எண்ணிக்கையில் ஆள் குறைப்பு (கணினி வேலை தொடர்பு இல்லாதவர்கள், இவங்கலெள்ளாம் ஆடிய ஆட்டமென்ன என்று சந்தோஷப்படுவதை காணமுடிகிறது), இதன்மூலம் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் குடியிருப்பு (FLAT) விலை வீழ்ச்சி அதை வாங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அடிக்கடி குறுஞ்செய்திகள் (SMS) வேறு வந்த வண்ணம் உள்ளது (கணினியின் மென்பொருள் (Software) எழுதுவோருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் தோன்றுவது என்னமோ உண்மைதான்)

இந்த திடீர் பொருளாதார தாக்கதிற்கு என்ன காரணம்........???

ஏதோ ஒரு வளர்ந்த நாட்டில் அவர்களோட வியாபார உத்தியை கையாள்வதற்கு (புதிய ஆயுதங்கள் என்றால் அடுத்த நாட்டின்மீது போர் தொடுத்து சோதனை முயற்சி செய்வார்கள்) ஒரு சில வங்கிகள் தன்னோட பண இருப்பை பெருக்குவதற்காக தெருவில் போன குடிமகன்களுக்கெல்லாம் லோன் (Personal Loan, Business Loan) கொடுததார்களாம்.. அவர்கள் எந்த அளவிற்கு லோன் கொடுத்தார்கள் என்பதை நிரூபிக்க ஒரு சின்ன உதாரணம் இங்கே.....  [ஒருத்தர் அவசரமாக வங்கிக்கு வந்து எனக்கு லோன் வேண்டும், மிக முக்கியமாக பணம் தேவைப்படுது, தாங்கள் எவ்வளவு வட்டி வேண்டுமானாலும் தருகிறேன், அப்படியும் நம்மவில்லை என்றால் என்னுடைய விலை மிகுந்த கார் (ROLLS-ROYCE) இருக்கிறது அதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அவர்களும் அய்யோ பாவம் என்ன கஷ்டமோ தெரியவில்லை என்று வங்கிக்கு வெளியே நிறுத்தி இருந்த காரை சோதனை செய்துவிட்டு 25,000 டாலர் (உலக பொருளாதார விதிக்குட்பட்டு டாலர் லேயே பேசுவோம்) கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து அதே நபர் வங்கிக்கு வந்து நான் தாங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தர இருக்கிறேன், எவ்வளவு வட்டி சேர்த்து தரவேண்டும் என்று கேட்டுருக்கிறார்.அதற்கு அவர்கள் ஒரு வாரத்திற்கு கணக்கு பார்த்து 50/- டாலர் அதிகம் சேர்த்து மொத்தம் 25,050.00 டாலர் தரவேண்டும் என்றார்கள், அதற்கு அவர் பணம் கொடுத்து விட்டு தன்னுடைய கார் சாவியை வாங்கிக்கொண்டவுடன் வங்கியாளர் அவரிடம் கேட்டார், தங்களுக்கு நிச்சயமாக பணம் பற்றாகுரை இருக்கது, விலை மதிப்புமிக்க காரை அடமானமாக வைத்துவிட்டு குறைந்த பணம் பெற்று செல்லும் அளவிற்க்கு அப்படி என்ன கஷ்டம் என்று, அதற்கு அவர் சொன்ன பதில்

நான் ஒரு வாரம் வியாபர (Business Trip) விசயமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்தது அது வரை என்னுடைய விலை மதிப்புமிக்க காரை என்ன செய்வது என்று தெரியவில்லை, 50 டாலருக்கு தங்களைவிட இவ்வளவு பாதுகாப்பாக யாரும் வைத்திருக்க முடியாது, எனவே நானும் பயமில்லாமல் வெளிநாடு போய்வந்து என்னுடைய காரை திரும்ப பெற்றுக்கொண்டேன், நான் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கென் என்று சொல்லி தன் காரை எடுத்து சென்றார்]

Workload

இப்படியாக கொடுத்த லோன் திரும்ப பெறமுடியாமல் எல்லா வங்கிகளும் திவாலாகி மூட வேண்டிய சூழ்நிலை......லோன் வாங்கியவர்களெல்லாம் என்னிடம் பணம் இல்லை என்று கையை விரித்தார்கள், சரி பணம் இல்லேனா என்ன உன்னொட சொத்தை (வீடு, கார் மட்றும் இதரவை) கொடு என்று கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள்... இப்படியே எல்லோரிடமும் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தவுடன் எல்லோரும் சொத்தையெல்லாம் கொடுக்கவேண்டியதாகிவிட்டது.. இப்படியே ஒட்டுமொத்த சொத்து குவிந்தவுடன் அதை வாங்குவத்ற்கு நாட்டில் ஆளில்லை, எவ்வளவு விலை குறைத்தும் பயனில்லை, இதன் மூலம் ரியல் எஸ்டேட் குறைந்தது, திவாலான வங்கிகள் மூடப்பட்டன, அங்கு வேலை செய்தவர்களை LAYOFF என்றார்கள்.... அதையொட்டி வியாபாரம் செய்த கம்பெனிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் வருமானத்தை இழந்தன, இதன் தாக்கம் பிற உள்நாட்டிலுள்ள வியாபாரஸ்தலங்களையும் பாதித்ததுதான் நான் மேலே குறிப்பிட்ட புலம்பலுக்கு காரணம்...

இந்த ஒட்டுமொத்த தாக்கதுக்கு யார் காரணம், முதலாளித்துவமா, நாந்தான் பெரியவன் என்று மார்தட்டும் தலைக்கணமா (இப்போ கோவணம்  அவிழ்ந்துவிட்டது என்பது வேறுகதை), அப்படியென்றால் நாந்தான் வல்லரசு என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் சில பெரிய நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, நாளைய வல்லரசுகள் எப்படி சமாளிக்கப்போகிறது..?????

நம்மவூட்டு பொருளாதாரத்தை கொஞ்சம் பாராட்டலாம்.. fear3

எங்கேயோ அதாலப்பாதாளத்துக்கு செல்லவென்டியதை விளிம்பில் நிற்கவைத்து தாங்கிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இதுவரை இந்திய வரலாறுலேயே அதிகம் படித்த தற்போதுள்ள தலமையை சொல்லலாம்...

சரி, இந்த வைரஸை அழிப்பது எப்படி????

உலகம் உருண்டைதான் என்பதை நிரூபிப்பதைப்போல

 UN_045__1_

இந்த உலகப்பொருளாதாரம் மீண்டு எழுமா?

காலம்தான் பதில் சொல்லனும்......!!!

புரியவில்லை...

pic1

என் இனிய ரகசிய தோழியே...
புரியவில்லையடி எனக்கு
உன்னுடன் சேர்ந்திருந்த
நாட்களில்
நான் உன்னையறியாமல் இருந்தேன்
உன்னுடன் சேர்ந்து
பிரிந்து இருக்கும்
நாட்களில்
என்னையே நான்
அறியாமல் இருக்கிறேன்
புரியவில்லையடி
ஏன்
இந்த நிலை
இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது
ஆனாலும் தவிக்கிறேன்
காலத்தின் க ட்டளைக்கிணங்கி....


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே