என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என் மதிப்பிற்குரிய வழிக்காட்டி...!!!

pic06885

அப்பா.....

வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்...

நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..

அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து  இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்...  அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று

நீயே ஆசானாய் இருந்து ஒரு மாணவனைப்போல்
பாடம் கற்றுக்கொடுத்தாய்..
சரியாக படிக்காத போது பெற்ற மகன் என்று பாராமல்
எல்லா மாணவர்களும் உரிய                                                                  சம தண்டனையை அளித்தாய்...

மாலைப்பொழுது வந்து வாசல்தட்டும் முன்
வீடு வந்து சேரவேண்டும் என்ற‌
கட்டளையிட்டாய்.. அப்போதெல்லாம் வெறுத்த நான்
இப்பொழுதும் நினைத்து சந்தோசப்படுகிறேன்
காலத்தின் விசரத்தன்மையை நினைத்து...

பள்ளியில் பயின்ற காலத்தில்
ஒவ்வொரு துறையிலும்
முன் தரவரிசையில் தலைக்காட்டிய போதெல்லாம்
அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய்
அப்போதெல்லாம் பள்ளிப்பருவம் இப்படியே
தொடராதா என்று யோசித்திருக்கிறேன்...

தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்..

இல்லாதவர்கள் வேண்டி வந்தபொழுதெல்லாம்
தன் தகுதிக்கும் மீறி அள்ளிக்கொடுத்தாய்..
இப்பொழுது அழுது வருத்தப்படுகிறார்கள்
கொடுக்க ஆளில்லாமல்.?

ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்தாய்... !
ஆசான்களெல்லாம் உன் வழிப்பின்பற்றும்
ஆசானாய் வாழ்ந்தாய்... !
ஒரு பெற்றோர் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணமாய் திகழ்ந்தாய்..!!
தான தர்மத்தின் தலைமகனாய் இருந்தாய்...!
உலக கல்வி மார்க்க கல்வி இரண்டிலும்
சிறந்து விளங்கினாய்...!

பெரியவர்களை மதிக்கவும், ஏழை பணக்காரரை
சமநிலையில் பாவிக்கவும்,
எப்போதும் எந்த இடத்திலும் பொறுமையை
கையாலவும் கற்றுக்கொடுத்தாய்...
அதனுடைய பலனை அனுபவிக்கிறேன்... உன் வழிப்பற்றி

உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்...                                                                              இருக்க‌ விரும்புகிறேன்..

வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன்                 உன் வெற்றிடத்தை நினைத்து..

நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......

41 கருத்துசொல்ல:

புதியவன் 15 January, 2009 11:12  

//அப்பா.....//

தலைப்பு சொல்லுது ஒரு கவிதை...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:13  

முந்திக்கிட்டே .

நான் எழுதனும்ன்னு இருந்தேன் ...

புதியவன் 15 January, 2009 11:14  

//நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..//

அருமை...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:14  

\\அப்பா ...\\

தலைப்பே சொல்லுது ஒரு வாழ்க்கையை ...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:15  

\\வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்... \\

மாப்ள தூள் ...

புதியவன் 15 January, 2009 11:15  

//உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க‌ விரும்புகிறேன்..//

எல்லோரும் பின்பற்ற வேண்டிய
நல்ல வழி தந்தை காட்டும் வழியே...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:17  

\\அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்... அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று\\

வெளியிட வார்த்தியில்லை ...

புதியவன் 15 January, 2009 11:18  

//நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......//

இழப்பின் வலி வார்த்தைகளில்...
அருமை அபுஅஃப்ஸ்ர்...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:19  

\\அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய் \\

நல்ல தந்தை ...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:20  

\தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்.. \\

அருமை தோழா ...

உன் தோழனையும் தோழமையுடன் பார்ப்பாரே ...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:21  

\\உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க‌ விரும்புகிறேன்..\\

மிகவும் அருமைடா ...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:23  

\\வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து.\\

அருமையான வரிகள் ...

நட்புடன் ஜமால் 15 January, 2009 11:23  

\\நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......\\

அவர் செய்துவிட்டு போன பிரார்த்தனைகள் உன் உடன் இருக்கும்.

அ.மு.செய்யது 15 January, 2009 11:30  

//வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..
//

சொல்ல வார்த்தைகளில்லை..........இந்த வரிகளைப் படித்து விட்டு...

அப்துல்மாலிக் 15 January, 2009 11:31  

நன்றிகள் பல நட்புடன் ஜமால்/புதியவர்களுக்கு, என் மன வலியை புரிந்ததற்கு.., இந்த பதிவின் மூலம் என் மனபாரத்தி இறக்கிவைத்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
PLS PRAY FOR HIM...

அ.மு.செய்யது 15 January, 2009 11:32  

உங்கள் தந்தை இக்கவிதையை பார்க்கவில்லையே என்ற வருத்தம் தான் என்னை ஆட்கொள்கிறது....

அ.மு.செய்யது 15 January, 2009 11:34  

//தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்.. //

அந்த தோள்களைத் தவிர வேறெதுவும் வலிமையானதாக எனக்கு தோன்றவில்லை.....

கவிதையின் தரமும் மதிப்பும் ஏறிவிட்டது அபுஅஃப்ஸர் !!!
வாழ்த்துக்க‌ள் !!!!!

S.A. நவாஸுதீன் 15 January, 2009 11:48  

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதை தெளிவாக சொல்லி இருக்க மாப்ளே

அப்துல்மாலிக் 15 January, 2009 11:54  

//அ.மு.செய்யது said...
உங்கள் தந்தை இக்கவிதையை பார்க்கவில்லையே என்ற வருத்தம் தான் என்னை ஆட்கொள்கிறது....//

நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பாங்க,, அவரும் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர் மற்றும் ஆசிரியர்...

அப்துல்மாலிக் 15 January, 2009 11:56  

//Syed Ahamed Navasudeen said...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதை தெளிவாக சொல்லி இருக்க மாப்ளே//

நிச்சயமாக....
நன்றி தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

S.A. நவாஸுதீன் 15 January, 2009 11:59  

"வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து."

பலருக்கும் அவர்களை பிரிந்த பிரியப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் உயரிய வாசகங்கள். ஒவ்வொருவருக்கும் பொறுந்தும் ஒப்பற்ற வார்த்தைகள்

உன் நண்பன்
நவாஸ்

அப்துல்மாலிக் 15 January, 2009 12:06  

//அ.மு.செய்யது said... அந்த தோள்களைத் தவிர வேறெதுவும் வலிமையானதாக எனக்கு தோன்றவில்லை.....//

உண்மைதான் செய்யது

//கவிதையின் தரமும் மதிப்பும் ஏறிவிட்டது அபுஅஃப்ஸர் !!!
வாழ்த்துக்க‌ள் !!!!!//
நன்றி தாங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்..
PRAY FOR HIM

அப்துல்மாலிக் 15 January, 2009 12:07  

//நட்புடன் ஜமால் said...
முந்திக்கிட்டே .

நான் எழுதனும்ன்னு இருந்தேன் ...//

நீங்களும் ஒரு பதிவு போடலாமே....

அப்துல்மாலிக் 15 January, 2009 12:40  

//பலருக்கும் அவர்களை பிரிந்த பிரியப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் உயரிய வாசகங்கள். ஒவ்வொருவருக்கும் பொறுந்தும் ஒப்பற்ற வார்த்தைகள்

உன் நண்பன்
நவாஸ்//

நல்ல கருத்து நவாஸ்..வாழ்க்கையில் கொடுமையானது பிரிவு....
நன்றி தன் வருகைக்கு..

அப்துல்மாலிக் 15 January, 2009 12:43  

ஒவ்வொரு Feed Back படிக்குக்கும்போது அழுகிறேன்....
நன்றிகள் பல தாங்களுடைய மேலான கருத்துக்களுக்கு...

நட்புடன் ஜமால் 15 January, 2009 14:40  

\\அபுஅஃப்ஸர் said...

ஒவ்வொரு Feed Back படிக்குக்கும்போது அழுகிறேன்....
நன்றிகள் பல தாங்களுடைய மேலான கருத்துக்களுக்கு...
\\

உணர்வுகள் வெளிப்படுத்தவே இந்த இடம் ...

சி தயாளன் 15 January, 2009 16:25  

மனதைத் தொட்ட சொற்கள்... உங்கள் அப்பா பிரிந்தாலும் உங்கள் உணர்வுகளில் வாழ்வார் என்று நம்புகிறேன்.

அப்துல்மாலிக் 15 January, 2009 17:07  

//’டொன்’ லீ said...
மனதைத் தொட்ட சொற்கள்... உங்கள் அப்பா பிரிந்தாலும் உங்கள் உணர்வுகளில் வாழ்வார் என்று நம்புகிறேன்//

ஆமாம் வாழ்ந்துக்கொண்டுதானிருக்கார், அதனோட வெளிப்பாடுதான் இந்த காவியம்...
நன்றி லீ தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

kajan 15 January, 2009 17:20  

நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்:::இந்த வரி எனக்கு பிடித்து உள்ளது.நல்லா இருக்குங்க

தேவன் மாயம் 15 January, 2009 17:29  

உங்கள்
உணர்வுகளைச்
சொல்லுகின்றன
வார்த்தைகள்!!!!

தேவா..

அப்துல்மாலிக் 17 January, 2009 10:44  

//kajan's said...
நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்:::இந்த வரி எனக்கு பிடித்து உள்ளது.நல்லா இருக்குங்க//

ரொம்ப நன்றி காஜன்ஸ் தாங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

அப்துல்மாலிக் 17 January, 2009 10:45  

//உங்கள்
உணர்வுகளைச்
சொல்லுகின்றன
வார்த்தைகள்!!!!

தேவா..//

உண்மைதான் தேவா..

ரொம்ப நன்றி தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

prem prakashdasபிரகாஷ்தாஸ் 18 January, 2009 07:51  

vanakam,
good theme and personification of the poem.

தேவன் மாயம் 19 January, 2009 05:30  

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

அமுதா 19 January, 2009 12:58  

/*உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..*
ஒவ்வொரு வரியும் உங்கள் உணர்வுகளை அழகாக வடித்துள்ளன. வெற்றிடத்தின் தாக்கம் மிகக் கொடியது.

அப்துல்மாலிக் 19 January, 2009 13:27  

நன்றிகள் பல தேவா, பிரகாஷ்தாஸ் மற்றும் அமுதா தாங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

தமிழ் 26 January, 2009 13:39  

அருமையான வரிகள்

Anonymous 26 January, 2009 23:54  

எங்கள் பள்ளிக்கு உன் தந்தை வந்ததும், என்னோடு அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டு இருந்ததும் மறக்க முடியாத நினைவுகள். அவர் நல்ல மனிதர் என்று ஊர் சொன்னதென்ன??? இறைவனே செல்லி விட்டானே மெக்காவில் அவரை மரணமடையச் செயததன் மூலம்...

Divya 28 January, 2009 01:59  

என் அன்பு அப்பாவின் நினைவில் மூழ்க வைத்தது உங்கள் பதிவின் வரிகள்.....

KANTHANBABU 01 April, 2009 10:59  

Really Supreb
Mikka Nandri Iyya

SUFFIX 07 July, 2009 16:06  

அபூ, பழைய பதிவு ஆனாலும், தந்தை‍ பிள்ளைகள் உறவை அழகிய வரிகளில் வடித்து இருக்கின்றீர்கள். ஒரு தந்தைக்கான சிறு 'கைடு'!!


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே