என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என் க‌ன‌வு...!!!

pic49364

அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை.

ஒரு மாலை வேளையில் என் நண்பரின் ஞாபகம் வந்து கைப்பேசியில் அவனுடைய எண்ணிற்கு கால்பண்ணி ஹலோ என்றவுடன் எதிரில் எந்த பதிலும் இல்லை, பிறகு திரும்ப கூப்பிடலாம் என்று கைப்பேசியை பார்த்தால்.. அட ச்சே.. என் கைப்பேசியில் Charge இல்லை... அவனும் எனக்கு திரும்ப அழைத்திருப்பான்,  என்ன செய்வது என்று யோசிக்கயில் அருகே இருந்த பொது தொலைப்பேசி கண்ணில் பட்டது...

உடனே பொது தொலைபேசி கடையில் உள்ள கண்ணாடிப்பெட்டிக்குள் என்னை அடைத்துக்கொண்டு, தொலைப்பேசியில் என் நண்பனுடன் உறவாடிக்கொண்டே கண்ணாடிப்பெட்டியின் வெளிப்புறம் சாலையில் ஆட்டோ, பேருந்து, வேன், மாட்டுவண்டி, இன்னும் சில பல மணிதர்களின் நடமாட்டத்தை கண்டு கழித்துக்கொண்டும் இருந்தேன்.

அப்பொழுது ஒரு ஆட்டோ அதன் முன்னால் சென்ற பல சரக்குடன் சென்ற‌ மாட்டுவண்டியின் வேகம் கண்டு அதனோட ஓட்டுநர் அதை நிருத்திவிட்டு அந்த மாட்டு வண்டிக்காரனோடு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கையில்                                                                என் கண்கள் ஆட்டோவையும் அதன் சன்னல் ஓரத்தில் இருந்த பெண்ணையும் நோக்கின..??

எங்கேயோ பார்த்து ரசித்த முகம்..                                          இன்னும் என்னுடைய பார்வையை கூர்மையாக்கி             அந்த நொடியில்..                                                                                 உலகின் உயர்ந்த கட்டிடத்தின் மீது பட்டு தெரித்த மின்னல் கீற்றைப்போல் மனதுக்குள் ஒரு மின்னல்..

என் தேவதையா அது...?                                                                                                               அதே! நீ என் உயிர்

அட‌ர்ந்த‌ மேக‌க்கூட்ட‌த்திலிருந்து
மெல்ல‌ வெளிவ‌ரும் வான ஊர்திப்போன்று
அவ‌ள் முக‌ம் என் நினைவுக்குள் எட்டிப்பார்த்த‌து..

தூண்டிலில் மாட்டிய‌ மீனைப்போன்று
துடித்த‌து என் நாடித்துடிப்புக‌ள்

நீயும் ஒன்றும் புரியாதவளை போல்
உன் க‌ண்க‌ளும் என்னை கூர்ந்து நோக்குகிற‌து
விய‌ப்பில் உன் புருவ‌ம் அம்பு எய்வ‌த‌ற்கு த‌யாராகும் வில்லைபோல் வ‌ளைகிற‌து.

அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளிலிருந்து உதிர்ந்த‌
இலைக‌ளை சூராவ‌ளிக்காற்றில் அடித்து சென்ற‌து என் நினைவுக‌ளை                                                                                               ந‌ம் உல‌க‌ம் நோக்கி...!

"மற்ற பெண்களிடம் நட்புக்கா பேசிக்கொண்டிருந்தபோது
அழுததும்..
தினமும் காலையில் சிறிதளவாக‌ இருந்தாலும் உன்னிடம்தான் பகிர்ந்துண்ணுவேன் என்று
காத்துக்கொண்டிருந்ததும்..
நீண்ட நேரம் காத்திருந்து முதல் ஆளாக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பார்க்க‌
கால் கடுக்க காத்திருந்ததும்...
உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும்
கடற்கரையில் உட்கார்ந்து மணிக்கானக்காக
பேசியதும்...
தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்...
இன்னும் என்னமோவெல்லாம்
மின்மினி பூச்சியாய்
அந்த வசந்த கால சிறகடித்த நினைவுகள்
மனதில் தோன்றியது..."

கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்
ம‌ர‌த்திலிருந்து தோலிருத்த‌ ப‌ட்டையாய்.. ?

க‌ருங்கொண்ட‌ மேக‌த்திலிருந்து சிந்திய‌
ம‌ழை முத்துக்க‌ளாய் பிற‌காச‌மான‌
உன் முகம்
அந்த‌ ம‌ழைத்துளி பொருக்கு ம‌ண்ணில்
விழுந்து க‌ல‌ந்த‌து போல்...?

அழுகிறாயா..!?
உன் விழியிலிருந்து வழியும்
முத்துக்கள் என் இதயத்தை கிழிக்கின்றன‌..

கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்
புகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...

வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய்
மூச்சிரைக்க ஓடிவருகிறேன் உன்னிடம்                             ஆவலாய்....                                                                                                      ப‌ழைய‌ காத‌ல‌னாய்....                                                                                  உன‌து ப‌ட்டுக்குட்டியாய்.....

நீயும் என்னை காண துடிக்கிறாய், கையை அசைத்து அழைக்கிறாய்....

எதிரே த‌ரிக்கெட்ட‌த‌ன‌மாய் எமனுடைய நண்பனாய் வந்துக்கொண்டிருக்கும் லாரி..........

க‌த‌றுகிறேன்.. நெருப்பில் விழுந்த‌ புழுவாய் துடிக்கிறேன்..

சடாரென விழித்தெழுகின்றேன்...
அட கனவு...

என் அவளை காப்பாற்று
எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு
அவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...
என்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.

பி.கு.: இது கற்பணை மட்டுமே...

35 கருத்துசொல்ல:

அ.மு.செய்யது 20 January, 2009 20:38  

//எங்கேயோ பார்த்து ரசித்த முகம்.. இன்னும் என்னுடைய பார்வையை கூர்மையாக்கி அந்த நொடியில்.. //

ஹா ...களம் சூடுபிடிக்கிறது.தோ வரேன்..

அ.மு.செய்யது 20 January, 2009 20:41  

//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்
ம‌ர‌த்திலிருந்து தோலிருத்த‌ ப‌ட்டையாய்..//

புரொபஷனல் கவிஞரோ நீங்கள்...??

அ.மு.செய்யது 20 January, 2009 20:43  

//கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்
புகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...//

அட நம்மூர்ல் நடந்தது ..

அ.மு.செய்யது 20 January, 2009 20:52  

//சடாரென விழித்தெழுகின்றேன்...
அட கனவு... //

கிளைமாக்ஸ மாத்துங்க...நாங்க நம்ப ட்ரை பன்றோம்.

அ.மு.செய்யது 20 January, 2009 20:59  

மொத்தத்தில் உங்களிடமிருந்து எதிர்பார்த்த மிக நல்ல ரொமான்டிக் பதிவு...

குட்டி காவியம் அழகு...

Keep the momentum...!!!!!

அப்துல்மாலிக் 20 January, 2009 22:05  

அ.மு.செய்யது said...
//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்
ம‌ர‌த்திலிருந்து தோலிருத்த‌ ப‌ட்டையாய்..//

புரொபஷனல் கவிஞரோ நீங்கள்...??

அப்படியெல்லாம் இல்லீங்கோ, ஏதோ வருவதை பதியுரேங்க‌

அப்துல்மாலிக் 20 January, 2009 22:06  

அ.மு.செய்யது said...
//கெரசின் அதிகம் கலந்த டீசலில் ஓடும் நம்மூர் மாநகரப்பேருந்து போல்
புகையை கக்கிக்கொண்டு ஆட்டோ புறப்படுகிறது...//

அட நம்மூர்ல் நடந்தது ..


நம்மூர்தாங்கோ, சந்தேகமே வேண்டாம்

அப்துல்மாலிக் 20 January, 2009 22:08  

அ.மு.செய்யது said...
//சடாரென விழித்தெழுகின்றேன்...
அட கனவு... //

கிளைமாக்ஸ மாத்துங்க...நாங்க நம்ப ட்ரை பன்றோம்

நம்புங்கப்பூ அதாங்க உண்மை.

ரொம்ப நன்றி செய்யது தாங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும்

உங்களுடைய வாழ்த்துக்கள் எம்முடைய தெம்பு டானிக்

இராகவன் நைஜிரியா 20 January, 2009 23:39  

// அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை. //

கனவுல கூட கற்பனை குதிரையை இப்படி ஓட விட்டுருக்கீங்களே... நிஜத்தில் எப்படி இருக்கும்..

நீர் கவிஞர் தானய்யா... அதில் சந்தேகமில்லை...

இராகவன் நைஜிரியா 20 January, 2009 23:41  

// வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய் //

நாங்களும் தான் எத்தனையோ தடவை இரயில் வண்டி பார்த்திரிக்கோம், கை காட்டி பார்த்திருக்கோம்.. ஆனால் இதெல்லாம் தேணவேயில்லையே...

அது சரி... கவிஞருக்கும் எனக்கும் வித்யாசம் வேண்டாமா?

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:05  

\\அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை\\

என்னா வர்ணனைப்பா - கலக்கப்பே ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:07  

\\அப்பொழுது ஒரு ஆட்டோ அதன் முன்னால் சென்ற பல சரக்குடன் சென்ற‌ மாட்டுவண்டியின் வேகம் கண்டு அதனோட ஓட்டுநர் அதை நிருத்திவிட்டு அந்த மாட்டு வண்டிக்காரனோடு ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கையில் என் கண்கள் ஆட்டோவையும் அதன் சன்னல் ஓரத்தில் இருந்த பெண்ணையும் நோக்கின..??\\

சிறந்த எழுத்தோட்டம் ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:18  

\\தூண்டிலில் மாட்டிய‌ மீனைப்போன்று
துடித்த‌து என் நாடித்துடிப்புக‌ள் \\

என்னா துடிப்பு

என்னா துடிப்பு

அருமை ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:19  

\விய‌ப்பில் உன் புருவ‌ம் அம்பு எய்வ‌த‌ற்கு த‌யாராகும் வில்லைபோல் வ‌ளைகிற‌து.\\

வரிக்கு வரி கோல் அடிக்கற ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:20  

\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\

சூப்பர் மாப்ள ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:21  

\\சடாரென விழித்தெழுகின்றேன்...
அட கனவு... \\

எப்பா டேய் ...

நட்புடன் ஜமால் 21 January, 2009 06:23  

\\எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு
அவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...
என்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.

பி.கு.: இது கற்பணை மட்டுமே...\\

ஆரம்பிச்சிட்டானுங்கப்பா ... கற்பணை.

நம்பனும் ...

ஏண்டா டேய் என்னைய என்ன ...

சரி சரி கூல் கூல்

புதியவன் 21 January, 2009 08:25  

//என் க‌ன‌வு...!!!//

என்ன கனவு இது...படிச்சுட்டு வர்ரேன்...

புதியவன் 21 January, 2009 08:27  

//அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை.//

என்ன அபுஅஃப்ஸர் எழுத்து வர்ணனை அசத்துது...

புதியவன் 21 January, 2009 08:28  

//தூண்டிலில் மாட்டிய‌ மீனைப்போன்று
துடித்த‌து என் நாடித்துடிப்புக‌ள்//

உவமை அழகு...

புதியவன் 21 January, 2009 08:29  

//கிளிக‌ள் கொத்தி சித‌ற‌டிச்ச‌ கோவைப்ப‌ழ‌ம் போல் இருந்த‌ உன் இத‌ழ்க‌ள்
ம‌ர‌த்திலிருந்து தோலிருத்த‌ ப‌ட்டையாய்.. ?//

இது கலக்கல்...

புதியவன் 21 January, 2009 08:30  

//க‌த‌றுகிறேன்.. நெருப்பில் விழுந்த‌ புழுவாய் துடிக்கிறேன்..//

சோகம்...?...ஆனாலும் கனவுதானே பரவாயில்லை...

புதியவன் 21 January, 2009 08:33  

//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//

இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

அப்துல்மாலிக் 21 January, 2009 11:15  

ரொம்ப நன்றி ராகவன் தாங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

அப்துல்மாலிக் 21 January, 2009 11:17  

இராகவன் நைஜிரியா said...
// அது ஒரு அழகான இலையுதிர் காலம், குளிருக்கு விடைகொடுத்து சூரியனின் இளவேனி தன் மேனியை இந்த பூமாதேவிக்கு காட்டும் வேளை. //

கனவுல கூட கற்பனை குதிரையை இப்படி ஓட விட்டுருக்கீங்களே... நிஜத்தில் எப்படி இருக்கும்..

நீர் கவிஞர் தானய்யா... அதில் சந்தேகமில்லை...


எங்கேர்ந்து கெளம்பிருபக்கீங்க ஓட்டுரதுக்கு... நான் கவிஞ்னெல்லாம் இல்லே சார், வருவதை எழுதினேன்

அப்துல்மாலிக் 21 January, 2009 11:18  

இராகவன் நைஜிரியா said...
// வேகமாக வரும்பொழுது கைக்காட்டியின் வேகத்தடையால் நிற்கும் இரயில் வண்டியாய் //

நாங்களும் தான் எத்தனையோ தடவை இரயில் வண்டி பார்த்திரிக்கோம், கை காட்டி பார்த்திருக்கோம்.. ஆனால் இதெல்லாம் தேணவேயில்லையே...

அது சரி... கவிஞருக்கும் எனக்கும் வித்யாசம் வேண்டாமா//

பெரிய கவிஞரெல்லாம் அப்படி சொல்லிதான் தப்பிப்பாங்களாம், கவலைப்படாதீங்க நீங்க கவிஞர்னு ஒத்துக்கறேன்

அப்துல்மாலிக் 21 January, 2009 11:20  

//புதியவன் said... //

உவமை, கலக்கல், அழகு..

ரொம்ப நன்றி புதியவன் தாங்கள் கருத்துக்கு

இருந்தாலும் உங்களை மாதிரி கவிதை எழுதனும்னு ஆசை. ம்ம்ம்ம்

அப்துல்மாலிக் 21 January, 2009 11:22  

//நட்புடன் ஜமால் said...
\\எங்கிருந்தாலும் என் அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கை கொடு
அவள் நினைவுகளிலிருந்து என்னை நீக்கிவிடு...
என்று பிரார்த்தினவனாக மீண்டும் உறங்கசெல்கிறேன்.

பி.கு.: இது கற்பணை மட்டுமே...\\

ஆரம்பிச்சிட்டானுங்கப்பா ... கற்பணை.

நம்பனும் ...

ஏண்டா டேய் என்னைய என்ன ...

சரி சரி கூல் கூல்//

எப்பா ஜமாலு நம்புங்கப்பா... ரொம்ப டென்ஷன் ஆஹாதீங்க...
உண்மைய சொன்னா தப்பா...
எப்போதும் தப்பாவே எடுத்துக்கறீங்களே

ரொம்ப நன்றி தாங்கள் கருத்துக்கு...

அப்துல்மாலிக் 21 January, 2009 11:24  

//புதியவன் said...
//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//

இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...//



ஹி..ஹி.. எல்லாம் உங்ககிட்டேர்ந்து கத்துக்கிட்டதுதான்...

S.A. நவாஸுதீன் 21 January, 2009 15:19  

கற்பனைக் காதலி என்றாலும் கவிதை அருமை.

ஜமால் நீ எதை சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுற மாதிரி இருக்கு,
ஆனால் புரியவில்லை.

இருந்தாலும் இந்த கவிதை வரப்போகும் உன் படைப்புகளுக்கு ஒரு விதையாக இருக்கட்டும்.

S.A. நவாஸுதீன் 21 January, 2009 15:37  

\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\

நல்ல சிந்தனை, சிரிப்ப அடக்க முடியல மாப்ள

அப்துல்மாலிக் 21 January, 2009 15:46  

//Syed Ahamed Navasudeen said...
கற்பனைக் காதலி என்றாலும் கவிதை அருமை.

ஜமால் நீ எதை சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுற மாதிரி இருக்கு,
ஆனால் புரியவில்லை.

இருந்தாலும் இந்த கவிதை வரப்போகும் உன் படைப்புகளுக்கு ஒரு விதையாக இருக்கட்டும்//

ஜமால் அதை விளக்கமாதான் சொல்லேம்பா
ரொம்ப தாங்ஸ் டா உன்னொட கருத்துக்கு
எஔழுதுவேன் இன்னும்...

தேவன் மாயம் 23 January, 2009 05:49  

அழுகிறாயா..!?
உன் விழியிலிருந்து வழியும்
முத்துக்கள் என் இதயத்தை கிழிக்கின்றன‌..///

நல்லா உண்ர்ச்சிகரமாக எழுதியுள்ளீர்!!!

Divya 28 January, 2009 01:54  

Excellent flow of writing:))

Divya 28 January, 2009 01:55  

\\தொலைப்பேசி கடையின் முதலாளி பணக்காரனாகும் அளவிற்கு கப்பம் கட்டியதும்... \\

;))


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே