என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

தமிழர்கள்.. ஒரு கேடயமா..??

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம், பீரங்கி சத்தத்திலும், குண்டு மழைக்களுக்கிடையிலும் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள்.
tamil-eelam-brder-copy


தேயிலை முதல் தேங்காய் வரை உள்நாட்டு தேவைக்கதிகமாய் வியாபார ஏற்றுமதி, பூமாதேவியின் மடியினில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை எழில், இதன் மூலம் வெளிநாடுவாழ் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் இயற்கை வளம் நிறைந்த நாடு இன்று...? 

நம் இனத்தவர் வியாபாரரிகளாகவும், வேலைப்பார்க்கவும்  அயர்லாந்துகளுக்கும் புலம் பெயர்ந்த காலம், அந்த நாட்டின் வளம் வியாபாரிகளுக்கும், பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தகுதியான செல்லவசெழிப்பினை கொண்டிருந்தது.. அதிக்கப்படியான மக்கள் அதுவும் நம் இனத்தவர் அதிகமாக புலம் பெயர்ந்து தங்களுடைய வாழ்க்கையை நாட்டுடைய செல்வச்செழிப்பை மெம்மேலும் வளர அர்பணித்தனர்.

அங்கே தமக்கென்ற ஒரு சாம்ரஜ்யத்தை அமைத்தனர். நம் மக்கள் அரசியல் சட்ட சீர்திருத்த அமைப்பிலும், அரசாங்க பதவிகளிலும் முக்கிய பங்கு வகித்தனர். இன்னும் எத்தனையோ அரசியல் மாற்றத்திற்கு காரணமாக இருந்த்தனர். நமது மொழி ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டது..

crysis068

மெல்ல அங்கே தனிநாடு கோரிக்கையில் போராட்டம் வெடித்தது, அதுவே இனப்போராட்டமாக அறிவிக்கப்பட்டது, நூதனமுறையில் போரிடுகிறேனென்று ஆயுதமேந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது அதில் 269தமிழ் பேசும் மக்களை பலவந்தமாக போராட்டத்திற்குள் திணிக்கப்பட்டனர். இதனால் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் அரசுக்கு எதிராக போராடுவது போல் சித்தரிக்கப்பட்டது, இதன் விளைவால் அப்பாவி தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரியானார்கள். இன்று இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய், இப்போது இவர்கள்தான் போருக்கு கேடயம்.....இவர்களை முன்னிருத்தி போர் நடக்கிறது..


வெல்வது யாரகிலும்.. வீழ்வது...???

என்னுடன் வேலைப்பார்க்கும் சக ஊழியர் (இவர் கொழும்பு) ஒருவர் என்னிடம் இந்தியாவிற்கு வரவேண்டும் அதற்கு விசா ஏற்பாடு செய்து கேட்டார், நான் அதற்கான காரணத்தை வினவ அதற்கு அவர் எனது தந்தை வழி சொந்தம் இருக்கிறது, பெரியப்பா, மாமா, மாமி, சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தார் அனைவரும் இருக்கிறார்கள், சேலத்திற்கு பக்கத்தில் ஒரு ஊரை குறிப்பிட்டார். நம்முடைய இரத்த பாசத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்கஇயலும்.
ahathihalநம் இன மக்கள் எப்படி அகதியாக்கப்படுகிறார்கள், எப்படி அகதியாக பிற நாட்டிற்கு புலம்பெயர்கிறார்கள், அகதியாக அவர்கள் படும்பாடு என்பனவற்றை நாம் எத்தைனையோ திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது... ஒருவர் வீடு வாடகைக்கு இருந்துவிட்டு அடுத்த வீட்டுக்கு குடியேருவது எந்தளவிற்கு கஷ்டம் என்பதை நாமறிவோம், அப்போ சொந்த நிலம், பொருள், ஆசையா வீட்டில் வளர்த்த செடிகள், இப்படியாக இன்னும் சொல்ல முடியாத எத்தனையோ..... போட்டது போட்டப்படி, மாற்றுக்கு துணிகள்கூடஎடுக்க இயலாமல் அகதிகள் என்ற பெயரில் புலம்பெயரும் இவர்களின் நிலை..



சமீபத்தில் கூட தமிழர்களின் மேல் தாக்குதலை நிறுத்தக்கோரியும், அதை கண்டித்தும் தானே தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்,sucide இதன் மூலம் யாருக்கு நஷ்டம், இதனால் போரை நடத்தும் அரசாங்கம் என்ன செய்தது.. இதை வைத்து அரசியல்வாதிகளின் நாடகம் அரங்கேறியது, மீடியாக்கள் பரபரப்புக்காக ஓடியாடி செய்தி வெளியிட்டது, தெரிந்தவர்களும் கேள்விப்பட்டவர்களும் அச் சச்சோ என்று உச்சிக்கொட்டி பிறகு வரும் நாட்களில் தானாக மறத்தும் மறந்தும்போகும்... ஆனால்... தங்களை இறுதிவரை காப்பாற்றுவான் என்று பெற்றோர், தாங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார் என்று சகோதர சகோதரிகள், இனி வாழ்க்கை முழுதும் உன்னோடுதான் என்று வரும் மனைவி குழந்தைகள் மற்றும் உற்றார் உறவினரின் நிலை????

சமீபத்தில் எனது விமானப்பயணத்தின் போது இலங்கையில் 2 மணி நேரம் காலதாமதம் காரணம் காட்டி விமானநிலையத்திலே தங்க நேர்ந்தது, அப்போது வினாடிக்கொரு தடவை போர் விமானங்கள் தரை இறங்குவதும், கிளம்பிப்போவதுமாக இருந்தது. அதன் இயக்கத்தில் ஒரு கணம் குலை நடுங்கித்தான் போனது... அப்போ ஒவ்வொரு நிமிடமும் போர் விமானங்களை கண்டும், அதன் மூலம் எப்போது நாம் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தோடு வாழும் நம் சமுதாய மக்களின் நிலை..?

தமிழ் பேசுகிறவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு கிடைக்கும் தண்டனையா? மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அண்டை நாட்டின் தூண்டுதலை காரணம் காட்டி நம் நாட்டு கிரிக்கெட் டீமை அனுப்பாமல் தன் எதிர்ப்பை காட்டியதைப்போல்.. இப்போது நடந்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிராக விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், அதற்காக நம் அரசாங்கத்தை பாராட்டியிருக்கலாம்..
3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??

32 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 02 February, 2009 11:12  

\\3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??\\

வேதனையா இருக்குடா ...

புதியவன் 02 February, 2009 11:18  

//வெல்வது யாரகிலும்.. வீழ்வது...???//

உணர்வுப் பூர்வமான கேள்வி அபுஅஃப்ஸர்...

புதியவன் 02 February, 2009 11:36  

//இப்போது நடந்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிராக விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், //

இது நல்ல ஒரு யோசனை இது இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியுமா...?...என்பது தான் தெரியவில்லை...

அப்துல்மாலிக் 02 February, 2009 11:43  

//புதியவன் said...
//இப்போது நடந்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிராக விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், //

இது நல்ல ஒரு யோசனை இது இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியுமா...?...என்பது தான் தெரியவில்லை
//

இதன் கேள்வி மனதிற்குள் எழுகிறது..நடைமுறைப்படுத்துவது எப்படி
நன்றி புதியவன் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 02 February, 2009 11:44  

//நட்புடன் ஜமால் said...
\\3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??\\

வேதனையா இருக்குடா ...

//

ம்ம் என்ன பதில்சொல்வது என்று தெரியவில்லை, நன்றி ஜமால் வருகைக்கும் கருத்துக்கும்

RAMYA 02 February, 2009 12:12  

//
சமீபத்தில் எனது விமானப்பயணத்தின் போது இலங்கையில் 2 மணி நேரம் காலதாமதம் காரணம் காட்டி விமானநிலையத்திலே தங்க நேர்ந்தது, அப்போது வினாடிக்கொரு தடவை போர் விமானங்கள் தரை இறங்குவதும், கிளம்பிப்போவதுமாக இருந்தது. அதன் இயக்கத்தில் ஒரு கணம் குலை நடுங்கித்தான் போனது... அப்போ ஒவ்வொரு நிமிடமும் போர் விமானங்களை கண்டும், அதன் மூலம் எப்போது நாம் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தோடு வாழும் நம் சமுதாய மக்களின் நிலை..?
//

நல்லா உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்
எப்போது முடியும் இந்த போர்க்கோலம்
குலை மட்டு நடுங்காது நண்பா
உயிரே போயி விடும் போல் உள்ளது
இதை படிக்கையில், ஆனால் நீங்கள்
அந்த இடத்திலே நேராக கண்டிருக்கிறீர்கள்
உங்கள் இதயம் என்ன பாடு பட்டிருக்கும்

RAMYA 02 February, 2009 12:17  

//
தமிழ் பேசும் மக்களை பலவந்தமாக போராட்டத்திற்குள் திணிக்கப்பட்டனர். இதனால் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் அரசுக்கு எதிராக போராடுவது போல் சித்தரிக்கப்பட்டது, இதன் விளைவால் அப்பாவி தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரியானார்கள். இன்று இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய், இப்போது இவர்கள்தான் போருக்கு கேடயம்.....இவர்களை முன்னிருத்தி போர் நடக்கிறது..

//

இவை எல்லாம் சுய நலன்கள் அல்லவா??
காட்டாயப் படுத்தி அரசாங்கத்திற்கு எதிரியானார்கள் சித்தரிக்கப்பட்டு அவர்கள் உயிரும் கட்டாயமாகப் போகிறதே இதற்கு யாரு பதில் சொல்லுவார்கள்??

RAMYA 02 February, 2009 12:20  

//
அதற்காக நம் அரசாங்கத்தை பாராட்டியிருக்கலாம்..
3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??
//

வேதனையிலும் வேதனை
மிகக் கொடிய வேதனை
அந்த பிஞ்சு மனதிற்கு இப்படித்தான்
ஆறுதல் சொல்ல முடியும்

அப்துல்மாலிக் 02 February, 2009 12:24  

நன்றி ரம்யா தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

பாலா 02 February, 2009 12:33  

:(
varunthathakka nigalvugal
abu

S.A. நவாஸுதீன் 02 February, 2009 12:57  

என் இணம் அங்கு செத்து மடிந்து கொண்டு இருக்கின்றது. இங்கு அரசு வீண் வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் படும் அல்லல்களை அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்சித்தலைவரின் மரணத்திற்கு பழிக்குப்பழியாக ஒரு இனத்தையே அழிக்க உதவி புறிகின்றார்கள். ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடுகின்றனரே ஒழிய என் மக்களை காக்க இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை.

இறைவா உலகில் அமைதி நிலவ அருள் புரிவாயாக. சில கல்நெஞ்சம் படைத்த தலைவர்களின் கோரச்செயலில் இருந்து எம்மக்களை காப்பாயாக. இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் இனியும் இது போன்ற இன்னல்கள் தொடரவேண்டாம்.

அப்துல்மாலிக் 02 February, 2009 13:14  

//sayrabala said...
:(
varunthathakka nigalvugal
abu
//

வருந்துவதை விட வேறென்ன செய்யமுடியும் நம்மால், நன்றி தாங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 02 February, 2009 13:16  

//Syed Ahamed Navasudeen said...
என் இணம் அங்கு செத்து மடிந்து கொண்டு இருக்கின்றது. இங்கு அரசு வீண் வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் படும் அல்லல்களை அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்சித்தலைவரின் மரணத்திற்கு பழிக்குப்பழியாக ஒரு இனத்தையே அழிக்க உதவி புறிகின்றார்கள். ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஆதாயம் தேடுகின்றனரே ஒழிய என் மக்களை காக்க இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை.

இறைவா உலகில் அமைதி நிலவ அருள் புரிவாயாக. சில கல்நெஞ்சம் படைத்த தலைவர்களின் கோரச்செயலில் இருந்து எம்மக்களை காப்பாயாக. இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் இனியும் இது போன்ற இன்னல்கள் தொடரவேண்டாம்
//

நல்ல கேள்வி நவாஸ்.. பிரார்த்திப்பதை விட ஒரு பலமான ஆயுதம் நம்மிடையே இல்லை, நன்றி தன் கருத்துக்கு

S.A. நவாஸுதீன் 02 February, 2009 13:29  

இன்று ஆயுதம் ஏந்தியதால் தீவிரவாதிகள் என்று கூறுபவர்கள் நாளை அவர்கள் வென்றவுடன் தேசத்தலைவர்களாக போற்றப்படுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

அப்துல்மாலிக் 02 February, 2009 13:38  

//Syed Ahamed Navasudeen said...
இன்று ஆயுதம் ஏந்தியதால் தீவிரவாதிகள் என்று கூறுபவர்கள் நாளை அவர்கள் வென்றவுடன் தேசத்தலைவர்களாக போற்றப்படுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.
//

நல்லா சொன்னே மாப்பூ

அ.மு.செய்யது 02 February, 2009 17:16  

இன்று அலுவலகத்திற்கு செல்லாமல் வேறு அலுவல்களை கவனிக்க வேண்டியிருந்ததால்
வலைச்சரத்திற்கு வர இயலவில்லை.

கால தாம‌தத்திற்கு வ‌ருந்துகிறேன்...இப்போதைக்கு உள்ளேன் ஐயா ம‌ட்டும் போட்டு கொள்கிறேன்.

வீட்டிற்கு சென்று திரும்ப‌வும் வ‌ருகிறேன்.

சி தயாளன் 02 February, 2009 17:27  

உண்மை தான் அஃப்ஸர்..நீங்கள் கடைசி வரியில் குறிப்பிட்டது போல் தீபாவளி இல்லை..நரகாசுரன்களின் வேட்டை தான் நடக்கின்றது..தீபாவளி இன்னும் கொண்டாட காலம் கனியவில்லை..:-)

அப்துல்மாலிக் 02 February, 2009 17:36  

//’டொன்’ லீ said...
உண்மை தான் அஃப்ஸர்..நீங்கள் கடைசி வரியில் குறிப்பிட்டது போல் தீபாவளி இல்லை..நரகாசுரன்களின் வேட்டை தான் நடக்கின்றது..தீபாவளி இன்னும் கொண்டாட காலம் கனியவில்லை..:-)
//

கூடிய சீக்கிரம் காலம் கனியும் என நம்புவோம், நன்றி டொன்லீ தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

அப்துல்மாலிக் 02 February, 2009 17:37  

//அ.மு.செய்யது said...
இன்று அலுவலகத்திற்கு செல்லாமல் வேறு அலுவல்களை கவனிக்க வேண்டியிருந்ததால்
வலைச்சரத்திற்கு வர இயலவில்லை.

கால தாம‌தத்திற்கு வ‌ருந்துகிறேன்...இப்போதைக்கு உள்ளேன் ஐயா ம‌ட்டும் போட்டு கொள்கிறேன்.

வீட்டிற்கு சென்று திரும்ப‌வும் வ‌ருகிறேன்
//

வாங்க செய்யது.. உங்களின் கருத்துக்களுக்கு ஆவலுடன் எதிர்பார்து காத்திருக்கிறேன்

அ.மு.செய்யது 02 February, 2009 19:31  

இலங்கை தமீழழம் குறித்த பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

நன்றி அபுஅஃப்ஸர்.

அ.மு.செய்யது 02 February, 2009 19:33  

//இதை வைத்து அரசியல்வாதிகளின் நாடகம் அரங்கேறியது, மீடியாக்கள் பரபரப்புக்காக ஓடியாடி செய்தி வெளியிட்டது, தெரிந்தவர்களும் கேள்விப்பட்டவர்களும் அச் சச்சோ என்று உச்சிக்கொட்டி பிறகு வரும் நாட்களில் தானாக மறத்தும் மறந்தும்போகும்...//

சரியாகச் சொன்னீர்கள்.இது தானே நம் நிலைமை..

அ.மு.செய்யது 02 February, 2009 19:36  

//கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், அதற்காக நம் அரசாங்கத்தை பாராட்டியிருக்கலாம்..
//

இவர்கள் இந்த விடயத்தை சர்வதேச சமுதாயத்திற்கு கொண்டுசெல்லுமுன்
நம் தமிழினமே அழிந்து விடும்.

ஒரு திரைப்படத்தில் சொன்னது போல உலகின் ஏதோ ஒரு மூலையில் யுத்தம்
நீடிப்பதில் வளர்ந்த நாடுகளின் வியாபார நோக்கம் இருக்கிறது.வளர்ந்த நாடுகள்
தங்கள் ஆயுதங்களை விற்க சந்தைகளாக பின் தங்கிய நாடுகளை பயன் படுத்தி கொள்கின்றன.

என்னத்த சொல்வது ?? நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!

Anonymous 02 February, 2009 20:08  

ஒருவர் வீடு வாடகைக்கு இருந்துவிட்டு அடுத்த வீட்டுக்கு குடியேருவது எந்தளவிற்கு கஷ்டம் என்பதை நாமறிவோம், அப்போ சொந்த நிலம், பொருள், ஆசையா வீட்டில் வளர்த்த செடிகள், இப்படியாக இன்னும் சொல்ல முடியாத எத்தனையோ..... போட்டது போட்டப்படி, மாற்றுக்கு துணிகள்கூட‌ எடுக்க இயலாமல் அகதிகள் என்ற பெயரில் புலம்பெயரும் இவர்களின் நிலை..
//
என்றோ ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... தான் வாழ்ந்து வருகிறோம்...

Anonymous 02 February, 2009 20:13  

//3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??
//
உன்மைதான் நாங்கள் எல்லோரும் பரிதாபப்டுகிற இனமாகவும்.... அனுதாபப்படுகிற இனமாகவும்... இருக்கின்றோம்....

தமிழ் 03 February, 2009 06:36  

/3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??/

சொல்ல வார்த்தை இல்லை நண்பரே

அமுதா 03 February, 2009 12:18  

//3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??
:-((

எம்.எம்.அப்துல்லா 03 February, 2009 14:57  

அங்கே தமக்கென்ற ஒரு சாம்ரஜ்யத்தை அமைத்தனர்//

அபு அஃப்ஸர் உங்கள் கூற்றில் பிழை இருக்கின்றது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் இங்கிருந்து இலங்கை சென்றவர்கள் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகமும்,இலங்கையும் ஒன்றாக இருந்தது. பின் கடல்கோளால் துண்டிக்கப்பட்டு இலங்கைத் தனி தீவானது. அந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடல்தாண்டி வர இயலாது அவரவர் வாழ்விடத்திலேயே இருந்து விட்டனர். இன்றைய யாழ்பான, வன்னி மற்றும் திரிகோணமலைப் பகுதியைச் சார்ந்த தமிழ் மக்களின் பூர்விக பூமியே அதுதான்.ஆயிரக்கனக்கான் ஆண்டுகளாக நீ அதிராம்பட்டினத்தில் இருப்பது போல அவர்கள் அவர்களது பூர்வீக பூமியில் இருக்கின்றார்கள்.


பின்னர் கி.பி.1850 களுக்குப் பின் வெள்ளையர் ஆட்சியில் தோட்ட வேலை செயவதற்காக தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த சமயத்தில் வணிகம் புரியவும் தமிழகத்தில் இருந்து பலர் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதாவது கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் சிரிமாவோ, சாஸ்த்திரி ஒப்பந்த அடிப்படையில் 1970 களின் பிற்பகுதியில் இந்தியா திரும்பி விட்டனர்.

வடக்கு மாநில மக்கள் தங்கள் பூர்விக மண்ணில் தாங்கள் சிறுபான்மை இனமாக இரண்டாம் தரக் குடிகளாக நடத்தப் படுவதால் உரிமை கோரி நடத்திய போராட்டத்தின் இறுதி வடிவம் தான் 30 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டம்.

எப்படி இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற ஒரு தவறான கருத்தாக்கம் பரவி இருக்கிறதோ அதே போல இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் இங்கிருந்து சென்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்தாக்கமும் இருக்கின்றது. ஈழம் அவர்களின் பூர்விக மண். குழப்பம் வேண்டாம்.

அப்துல்மாலிக் 03 February, 2009 15:09  

ரொம்ப நன்றி மாப்பு, தெளிவான கருத்தை சொன்னதுக்கு.....
நான் ஒட்டு மொத்த தமிழர்களுக்காக தான் ஒரு அலசல் ரிப்போர்ட் கொடுத்தேன்.. அதை நீ விலாவாரியாக எடுத்து சொன்னதுக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா 04 February, 2009 16:18  

//கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், அதற்காக நம் அரசாங்கத்தை பாராட்டியிருக்கலாம்..
//

இந்த அணுகுமுறை கூட ஒருவகையில் பலன் தந்திருக்கும். குறைந்த பட்சம் எதிர்ப்பை தெரிவிக்க முயற்சித்து, அவர்களுக்கு உரைத்திருக்கும்.

செய்யாமல் போனது துரதிர்ஷ்டம்.

கடவுளுக்கு கூட கண்ணில்லை ஈழ மக்களைப்ப் பார்த்து.

Poornima Saravana kumar 05 February, 2009 18:48  

////3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??
//

வார்த்தைகளில்லை

அண்ணன் வணங்காமுடி 06 February, 2009 20:12  

விரைவில் விடிவு பிறக்கும் என நம்புவோம்

sakthi 27 February, 2009 13:35  

\3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??\\
padikum pothe valikindrathu abu


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே