என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

தமிழர்களாகிய நம் நிலை..!

நான் கடந்த ஒரு வருடமாக அனைத்து வலைப்பதிவுகளையும் படித்தும் கடந்த 5 மாதமாக நானே வலைத்தளம் ஆரம்பித்து ஏதோ தெரிந்ததை எழுதி வருகிறேன்.. இதுவரை படித்ததில் நம் பதிவர்கள் ஏதாவது ஒருவகையில் ஏதாவது அப்போதைக்கு பிரபலமாக உள்ள ஒரு சம்பவத்தை பற்றி தன் எழுத்தின் மூலம் உள்ளக்குமுறலை கொட்டுகின்றனர், அதே வேகத்தில் வெகுண்டெழுந்து அந்த பதிவு சம்பந்தமாக தானும் உள்ளக்குமுறலை பின்னூட்டம் மூலம் இடுகிறோம். அப்புறம் அதோடு மறந்து அவரவர் தத்தமது வேலைகளில் பிஸியாகிவிடுகிறோம், அதற்குப்பிறகு யாராவது அதைப்பற்றி நினைக்கிறோமா, அந்த பதிவை மூடுகின்றதோடு அதைப்பற்றிய கருத்தும் சேர்த்து மூடப்படும் நம் நினைவுகளிலிருந்து..

கடந்த சில நிகழ்வுகளைப்பார்த்தோமேயானால் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் தமிழர்களாகிய நாம் தான்.

கடந்த 4 வருடத்திற்கு முன் காவேரி நதி நீர் கேட்டு எத்தனைப்போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வியாபாரங்கள் முடக்கப்பட்டன.. தமிழ்நாட்டில் திரைப்படம் சம்பந்தப்பட்ட தொழிளாலர்களின் போராட்டம், நடிகர் நடிகைகள் ஒரு பகுதி மேலே போய் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை, சென்னையையும் நெய்வேலியையும் இரண்டாகப்பிளந்த மக்கள் கூட்டம் (நடிக/நடிகைகளை காண்பதற்காக மட்டும்) அதை நேரடியாக ஒளிப்பரப்பு செய்து விளம்பரமாக ஒரு நொடிக்கு இவ்வளவு பணம் என்று சம்பாதித்து கொழுத்த மீடியாக்கள், அதே கோரிக்கையை முன்வைத்து தனிமனித உண்ணாவிரத போராட்டம் அதிலேயும் கொழுத்த மீடியாக்கள், இப்படி எத்தனையோ.. அதன்பின் விளைவு >>???

அடுத்து.. ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், இதை அறிவித்த உடனே கன்னட விவசாயிகளெல்லாம் ஒன்னு சேர்ந்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று வினோதப்போராட்டமெல்லம் செய்தாங்க, அதைப்பார்த்து கொந்தளித்த நம் விவசாயிகளும் அதோடு சேர்ந்து திரைப்பட துறையினரும் தம் பங்குக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள், இதைக்கண்ட கன்னட திரைத்துறையினரும் எதிர் உண்ணாவிரதம் இருந்தார்கள்.. இதன் மூலமும் தமிழர்களின் சொத்துக்களுக்கும், உயிர்களுக்கும் சேதம் விளைந்தது. குடிநீர் திட்டத்தை அமுல்படுத்து என்று இங்கேயும், அமுல்பத்தக்கூடாது என்று அங்கேயும்... இதையும் நேரடி ஒளிப்பரப்பு செய்து வழக்கம்போல் கொழுத்தது மீடியாக்கள். எல்லோர் முன்னிலையிலும் அமுல்படுத்தக்கூடாது என்று எதிர் உண்ணாவிரதம் இருந்த‌ க‌ன்ன‌ட‌ ந‌டிக‌ர் ந‌டிகைக‌ள் இன்று இருதார‌ருமே ம‌ற‌ந்து இரு மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் ந‌ம் வாயில் லாலிபாப் வைத்துவிட்டு ந‌டித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.. அத‌ன்பின் விளைவு..>>???

கடந்த சில மாதங்கள் முன்பிலிருந்து புலிகளை அழித்தே தீருவோம் என்று ராட்சப்க்ஷே அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது, கண்டவர்களையெல்லாம் வெறிநாய்களை சுட்டு தள்ளுவது போல் கொன்று குவித்தார்கள், அரசியல் தலைவர்களாகிய‌  நம் மேன்மக்கள் இந்த விடயத்தை ஒவ்வொருவரும் கையிலெடுத்துக்கொண்டு நான் பெரியாளா இல்லை நீயா என்று தனது அரங்கேற்றத்தை தொடர்ந்தது. பேச்சுப்போர், வீண் பழி, கைது நாடகம், தனி ஈழம் அமைப்போம் என்ற வீண் புலம்பல், தனிமனித திடீர் உண்ணாவிரத நாடகம், தீக்குளிப்பு (மானிடர்க்கிடைத்த அற்புத வரமான உயிரை மாய்ப்பதற்கு நமக்கு எந்தவிதத்திலும் உரிமையில்லையடா, இப்போது அந்த குடும்பத்தை காப்பாத்துபவர் யார்),  நடிக/நடிகைகளின் உண்ணாவிரதப்போராட்டம், தனிமனித உண்ணாவிரதம், மத்தியரசுக்கு தந்தி, எத்தனையோ நம் பதிவர்களின் பதிவுகள் இப்படி எத்தனையோ பார்த்தாகிவிட்டது. அத‌ன் பின் விளைவு>>???

அடுத்து.. இந்த தேர்தலால் நாட்டின் அரசு தலைகீழாக மாறும், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு தராத அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவோம், ஆகாங்க்கே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், கட்சித்தாவல், கூட்டணி மாற்றம், தனி ஈழம் அமைப்போம், திடீர் உண்ணாவிரதம் இப்ப‌டியான‌ க‌ப‌ட‌ நாட‌க‌ம்.... என்ன‌ ந‌ட‌ந்த‌து.. த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஈழ‌ம் ஒரு பொருட்டு இல்லை, இவ‌ர்க‌ளை அந்த‌ ஆண்ட‌வ‌னால்கூட‌ திருத்த‌முடியாது என்று சொல்லும் அள‌விற்கு அதே ஆட்சி மீண்டும், ஈழ‌ப்பிர‌ச்சினை ஒரு சிறு எள் அள‌விற்கு யாரையும் பாதிக்க‌வில்லை. இவ்வ‌ள‌வு ப‌திவு எழுதி த‌ன் குமுற‌லை கொட்டியும் அத‌ன் பின் விளைவு>>????

நம் பதிவர்கள் எல்லாமே தற்கால/நிகழ்கால நிகழ்வுகளை எழுதி தன் மனக்கவலையை தெரிவித்துக்கொள்கிறோம், அதன் பிறகு அந்த சுவடே இல்லாதது மாதிரி அடுத்த காதல் கவிதைப்படித்தும், காமெடி சம்பந்தப்பட்டதை படித்தும் அதற்கும பின்னூட்டமிடுகிறோம்.

இந்த வலைபக்கம் நமக்கெல்லாம் ஒரு வரம், இது ஒரு திறந்த புத்தகம், தெரிந்ததை பதிகிறோம், பாராட்டுப்பெறுகிறோம். அதே சமயம் இந்த சமுதாயத்திற்காக என்னா செய்தோம்.

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.

இனிமேலாவது நம் வருங்கால தமிழ் சந்ததியினர்  எவ்வித போராட்டத்தாலும் பாதிப்படையாமல் தனது கவனத்தை நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதற்கு ஒரு வடிகாலாக அமையும்

41 கருத்துசொல்ல:

நசரேயன் 08 July, 2009 23:13  

வழி மொழிகிறேன்

ப்ரியமுடன் வசந்த் 08 July, 2009 23:45  

நிதர்சனமான கருத்துக்கள் அபு

இதுக்கு என் ஆதரவு உண்டு......

ஜெஸ்வந்தி - Jeswanthy 09 July, 2009 00:30  

உங்கள் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

SUFFIX 09 July, 2009 01:07  

நல்ல பதிவு, எனக்கும் கூட இந்த மீடியாக்கள், அதன் ஆக்கத்திற்க்கு அழகாக நடிக்கும் அரசியல் மற்றும் சினிமாக்காரர்களை பார்த்து வெறுப்பு தட்டியது உண்டு. பலரது மனக்குமுரல், தாங்கள் வெளிச்சத்திர்க்கு கொன்டு வந்திருக்கின்றீர்கள். நன்றி.

கட்டபொம்மன் 09 July, 2009 01:55  

நல்ல பதிவு

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com/

ஹேமா 09 July, 2009 02:08  

ஆழமான சிந்தனைச் சிதறல்.

நட்புடன் ஜமால் 09 July, 2009 03:37  

அந்த பதிவை மூடுகின்றதோடு அதைப்பற்றிய கருத்தும் சேர்த்து மூடப்படும் நம் நினைவுகளிலிருந்து..\\


அருமை ராஸா

நட்புடன் ஜமால் 09 July, 2009 03:42  

நல்ல சிந்தனை மச்சான் - வழிமொழிகிறேன் ...

Mathuvathanan Mounasamy / cowboymathu 09 July, 2009 04:25  

ஆரோக்கியமான சிந்தனை,

இவ்வாறு பல பதிவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை பற்றி அதிக பதிவுகள் எழுதும்போது அது சம்மந்தப்பட்டவர்களைச் சென்று சேரக்கூடிய சாத்தியம் உளது.

அதுதவிர குறித்த பதிவருக்கு சம்மந்தப்பட்டோரை தனிப்பட்ட ரீதியில் சென்றடையச் செல்ல முடியுமெனின் அதை செய்வதே சிறப்பு.

sakthi 09 July, 2009 05:54  

ரொம்ப சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அபு அண்ணா

sakthi 09 July, 2009 05:56  

எல்லா பிரச்னைகளும் கதை கவிதை கட்டுரை எழுத மட்டுமே உபயோகபடும்..
பின் அது தூர எறியப்படும்...

இதுவே நிஜம்....

அ.மு.செய்யது 09 July, 2009 07:11  

//அதே சமயம் இந்த சமுதாயத்திற்காக என்னா செய்தோம். //

மில்லியன் டாலர் கேள்வி !!!!

அப்படியே நாம் எழுதினாலும்,அதில் சுயலாபம் ஒளிந்திருக்கிறது.

சமுதாயத்திற்காக என்றில்லாமல்,நம்முடைய அடையாளத்தை பதிவுலகுக்கு பறைசாற்றுதல் என்ற கொள்கையே மேலோங்கியிருக்கிறது.

ஒரு காமெடி பதிவு போட்டா..ஒரு சீரியஸ் பதிவு...என்ற மசாலா படரேஞ்சுக்கு
நிலைமை மோசமாகிவிட்டது.

அந்த சீரியஸ் பதிவில் தான் சமூக அக்கறை உள்ளிட்ட இத்யாதிகள் தப்பி தவறி இடம் பெற்று விடுகின்றன.

அ.மு.செய்யது 09 July, 2009 07:14  

//நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.//

நடைமுறையில் இது எந்த அளவு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மலையை நாம் நகர்த்த முடியாவிட்டாலும்,சிறுதுரும்பையாவது கிள்ளி போட விழைந்த‌
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் அபு !!!!

Anonymous 09 July, 2009 08:01  

இதற்கு நாம் நம் குடும்பத்துக்கும் அதன் தேவைக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இந்த மாதிரி தொண்டுகளுக்கு தருவதில்லை காரணம் நாமில்லை நம் பொருளாதாரம் என்ன செய்வது? நமக்குள்ளும் இவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் இருக்கிறது ஆனால் ஒற்றுமையில்லை ஆம் நான் தயார் என்றால் அடுத்தவருக்கு நேரமிருக்காது..முதல்ல இதுக்கு வழிவகுத்தல் அவசியம்...இது தான் ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.....என்ன செய்ய ஏதேனும் செய்வோம் நாம் அனைவரும் ஒன்று பட்ட அன்று....

Rajeswari 09 July, 2009 09:15  

உண்மைதான்..

வால்பையன் 09 July, 2009 09:26  

மக்களின் இந்த மெத்தனம் தானே!
அரசின் சிம்மாசனத்திற்கு காரணம்!

S.A. நவாஸுதீன் 09 July, 2009 10:33  

நல்ல உணர்வு பூர்வமான பதிவு மச்சான்.

அப்துல்மாலிக் 09 July, 2009 10:34  

//நசரேயன் said...
வழி மொழிகிறேன்
//

நன்றி நர்சிம் தாங்கள் வழிமொழிதலுக்கு

அப்துல்மாலிக் 09 July, 2009 10:35  

//பிரியமுடன்.........வசந்த் said...
நிதர்சனமான கருத்துக்கள் அபு

இதுக்கு என் ஆதரவு உண்டு......
//

நன்றி வஸ்ந்த ஆதரவுக்கு

அப்துல்மாலிக் 09 July, 2009 10:36  

//ஜெஸ்வந்தி said...
உங்கள் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்
//

நன்றி ஜெஸ்வந்தி பாராட்டுக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 09 July, 2009 10:37  

//ஷ‌ஃபிக்ஸ் said...
நல்ல பதிவு, எனக்கும் கூட இந்த மீடியாக்கள், அதன் ஆக்கத்திற்க்கு அழகாக நடிக்கும் அரசியல் மற்றும் சினிமாக்காரர்களை பார்த்து வெறுப்பு தட்டியது உண்டு. பலரது மனக்குமுரல், தாங்கள் வெளிச்சத்திர்க்கு கொன்டு வந்திருக்கின்றீர்கள். நன்றி.
//

நன்றி ஷஃபி வருகைக்கும் கருத்துக்கும்.. நம் பதிவு புரிந்துக்கொள்ளப்படனும்

S.A. நவாஸுதீன் 09 July, 2009 10:37  

நடிகர் நடிகைகள் ஒரு பகுதி மேலே போய் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை, சென்னையையும் நெய்வேலியையும் இரண்டாகப்பிளந்த மக்கள் கூட்டம்

(நடிக/நடிகைகளை காண்பதற்காக மட்டும்)

இதுதான் மச்சான் நிதர்சனம்.

அப்துல்மாலிக் 09 July, 2009 10:38  

//கட்டபொம்மன் said...
நல்ல பதிவு

கட்டபொம்மன்
//

வாங்க கட்டமொம்மன், தாங்கள் முதல் வருகை மகிழ்ச்சியெ

//ஹேமா said...
ஆழமான சிந்தனைச் சிதறல்.
//

நன்றி ஹேமா

அப்துல்மாலிக் 09 July, 2009 10:39  

//நட்புடன் ஜமால் said...
நல்ல சிந்தனை மச்சான் - வழிமொழிகிறேன் ...
//

நன்றி மச்சான் வழிமொழிதலுக்கும்

//மதுவதனன் மௌ. said...
ஆரோக்கியமான சிந்தனை,

இவ்வாறு பல பதிவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை பற்றி அதிக பதிவுகள் எழுதும்போது அது சம்மந்தப்பட்டவர்களைச் சென்று சேரக்கூடிய சாத்தியம் உளது.

அதுதவிர குறித்த பதிவருக்கு சம்மந்தப்பட்டோரை தனிப்பட்ட ரீதியில் சென்றடையச் செல்ல முடியுமெனின் அதை செய்வதே சிறப்பு
//

சரியா சொன்னீங்க மதுவதனன், இதை விள‌க்குவ‌துதான் இந்த‌ ப‌திவின் நோக்க‌மே

கலையரசன் 09 July, 2009 10:43  

சரியா சொன்னீங்க அபு..
இப்ப கூட நீங்க போட்டுருக்குற
இடுகையை படிச்சிட்டு, ச்சு.. ச்சு ன்னு
சொல்லிட்டு நான் என் வேலையை
பார்பேன், நீங்க உங்க வேலையை
பார்பிங்க.. ம்ம்! என்னத்த கருத்து
சொல்றது?

ஓட்டு போட்டாச்சு!!

அப்துல்மாலிக் 09 July, 2009 11:01  

//அந்த சீரியஸ் பதிவில் தான் சமூக அக்கறை உள்ளிட்ட இத்யாதிகள் தப்பி தவறி இடம் பெற்று விடுகின்றன//
சமுதாயத்திற்காக என்றில்லாமல்,நம்முடைய அடையாளத்தை பதிவுலகுக்கு பறைசாற்றுதல் என்ற கொள்கையே மேலோங்கியிருக்கிறது//

இந்த‌ க‌ருத்தை நான் ஆமோதிக்கிறேன் செய்ய‌து...

//மலையை நாம் நகர்த்த முடியாவிட்டாலும்,சிறுதுரும்பையாவது கிள்ளி போட விழைந்த‌
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் அபு !!!!
/

ந‌ன்றி செய்ய‌து (பார்த்தீங்க‌ளா இப்ப‌டி பாராட்டி என்னையும் அந்த‌ லிஸ்ட்லே சேர்த்துட்டீங்க) பாராட்டுக்கு ம‌ய‌ங்காத‌வ‌ர் யார், இருந்தாலும் அத‌ற்காக‌ ம‌ட்டும் ப‌திவுஎழுதாம‌ல் அந்த‌ ப‌திவின் பிர‌திப்ப‌ல‌னை அடைய‌ முய‌ற்சி செய்ய‌வேண்டும் என்ப‌துதான் என் ஆவ‌ல்

பாலா 09 July, 2009 11:36  

irumadikkira edaththula "eeee"ku (eanakku ) enna velai????????????

Unknown 09 July, 2009 12:22  

நல்லா சொன்னே மச்சான்

அப்துல்மாலிக் 09 July, 2009 13:14  

//தமிழரசி said...
இதற்கு நாம் நம் குடும்பத்துக்கும் அதன் தேவைக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இந்த மாதிரி தொண்டுகளுக்கு தருவதில்லை காரணம் நாமில்லை நம் பொருளாதாரம் என்ன செய்வது? நமக்குள்ளும் இவைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் இருக்கிறது ஆனால் ஒற்றுமையில்லை ஆம் நான் தயார் என்றால் அடுத்தவருக்கு நேரமிருக்காது..முதல்ல இதுக்கு வழிவகுத்தல் அவசியம்...இது தான் ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.....என்ன செய்ய ஏதேனும் செய்வோம் நாம் அனைவரும் ஒன்று பட்ட அன்று....
//

எல்லோருக்கும் இதே வேகம் இருக்கு அதனாலேதான் அது பதிவா வெளிவருது.. அந்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் இதுதான் என் ஆவல், நன்றி கருத்துரைக்கு

logu.. 09 July, 2009 13:16  

\\நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.\\

Its great..
ungal aasai nichayam niraiverum..

அப்துல்மாலிக் 09 July, 2009 13:20  

//Rajeswari said...
உண்மைதான்..
//

நன்று ராஜேஸ்வரி

//வால்பையன் said...
மக்களின் இந்த மெத்தனம் தானே!
அரசின் சிம்மாசனத்திற்கு காரணம்!
//

ஆமோதிக்கிறேன் வால் நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 09 July, 2009 13:21  

//S.A. நவாஸுதீன் said...
நடிகர் நடிகைகள் ஒரு பகுதி மேலே போய் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை, சென்னையையும் நெய்வேலியையும் இரண்டாகப்பிளந்த மக்கள் கூட்டம்

(நடிக/நடிகைகளை காண்பதற்காக மட்டும்)

இதுதான் மச்சான் நிதர்சனம்.
//

உண்மைதான் மச்சான், மக்களீன் மெத்தனப்போக்குதான் இதுக்கெல்லாம் காரணம்

அப்துல்மாலிக் 09 July, 2009 13:23  

//கலையரசன் said...
சரியா சொன்னீங்க அபு..
இப்ப கூட நீங்க போட்டுருக்குற
இடுகையை படிச்சிட்டு, ச்சு.. ச்சு ன்னு
சொல்லிட்டு நான் என் வேலையை
பார்பேன், நீங்க உங்க வேலையை
பார்பிங்க.. ம்ம்! என்னத்த கருத்து
சொல்றது?
//

நன்றி கலை

பட் இதுதான் எப்பவுமே நடக்குது என்னையும் சேர்த்து, அந்தப்பதிவுகள் சரியான இடத்தில் சேர்ப்பிக்கவேண்டும் என்பதுதான் என் ஆதங்கம்

அப்துல்மாலிக் 09 July, 2009 13:26  

//பாலா said...
irumadikkira edaththula "eeee"ku (eanakku ) enna velai????????????
/

வாங்க பாலா, இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது... தன் எழுத்தில் புதுமையை புகுத்தும் நீங்களும் ஏன் ஒரு வித்தியாசமா செய்யக்கூடாது


//logu.. said...
\\நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.\\

Its great..
ungal aasai nichayam niraiverum..
//

நன்றி லோகு நிச்சயமா இது நடந்தால் சந்தோஷம்தான்

தமிழ் அமுதன் 09 July, 2009 20:47  

தமிழர் தமிழர் என்று நாம்தான் நம்மை பெருமையாக நினைத்து கொண்டு இருக்கிறோம்!

மற்ற மொழி,மாநிலத்தவர் யாரும் நம்மை மதிப்பதாக தெரியவில்லை!
முக்கியமாக மத்தியில் ஆட்சி செய்பவர்கள்! தமிழனை துளியும் மதிப்பதில்லை!

கச்சத்தீவு பிரச்னை , காவிரி பிரச்னை ,இலங்கை தமிழர் பிரச்னை எதிலும் தமிழர் உணர்வு மதிக்க படவில்லை!

தமிழின விரோதியாக செயல் படுகிறவன் தமிழகத்திலேயே ஜெயித்து காட்டுகிறான்
என்ன செய்வது?

அப்துல்மாலிக் 09 July, 2009 21:56  

ஜீவன் said...//தமிழின விரோதியாக செயல் படுகிறவன் தமிழகத்திலேயே ஜெயித்து காட்டுகிறான்
என்ன செய்வது?
//

அண்ணே இதை நான் முழுதும் ஆமோதிக்கிறேன்.. எல்லா துறையிலேயும் தமிழர்கள் மதிக்கப்படுவது இல்லை

நன்றி அண்ணாச்சி கருத்துக்கும் என் உணர்வை புரிந்துக்கொண்டதுக்கும்

சிநேகிதன் அக்பர் 09 July, 2009 22:50  

வரிக்கு வரி உண்மை.

ஆனால் இதற்கு யாரைச்சொல்லியும் பலன் இல்லை,

தனி மனித சுயநலம் தான் இங்கு அதிகம்.

ஒரு ப‌ட‌த்தில் விவேக் சொல்லுவார் ம‌க்க‌ள் ம‌ற‌தி நோய்ல‌ இருக்கங்க‌ன்னு.

ஒரு முக்கிய‌மான பிரச்சனைக்கு போராடுப‌வ‌ர்க‌ள், இன்னொன்றை க‌ண்ட‌தும் ப‌ழைய‌தை விட்டு புதிய‌ பிர‌ச்ச‌னையை கையிலெடுப்பார்க‌ள். ப‌ழைய‌ பிர‌ச்ச‌னை அதோக‌திதான்.


உங்க‌ள் க‌ருத்தை முழுவ‌தும் ஏற்கிறேன்.

ஹேமா 10 July, 2009 00:04  

அபு,பிரம்பு வச்சு அடிச்சுப் பாடம் நடத்தினமாதிரி யோசிச்சுச் செயல்பட வைக்கும் பதிவு.

சப்ராஸ் அபூ பக்கர் 10 July, 2009 00:49  

யோசிக்க வைக்குது... (யோசிக்க ஆரம்பிச்சாச்சு......)

வாழ்த்த்துக்கள் அபு..... தொடருங்கள்.....

CHANDRA 10 July, 2009 12:50  

தமிழர்களாகிய நம்மில் 80% பேர் பிரச்சினையை படித்து விட்டு அருமையான பதிவு என்று பின்னூட்டம் இட்டு விட்டு வேறு வேலயை பார்க்க போய் விடுகிறோம்(என்னையும் சேர்த்தே).
10% புண்ணியவான்கள் உங்களை போல எழுதி பிரச்சினைய் வெளியே கொண்டு வருகிறார்கள்.
வெகு சிலரே ட்ராபிக் ராமசாமி போன்றோர் வழக்கு இட்டு பொது பிரச்சினைக்கு போராடுகிறார்கள்

முனைவர் இரா.குணசீலன் 13 July, 2009 14:53  

/நம் பதிவர்கள் எல்லாமே தற்கால/நிகழ்கால நிகழ்வுகளை எழுதி தன் மனக்கவலையை தெரிவித்துக்கொள்கிறோம், அதன் பிறகு அந்த சுவடே இல்லாதது மாதிரி அடுத்த காதல் கவிதைப்படித்தும், காமெடி சம்பந்தப்பட்டதை படித்தும் அதற்கும பின்னூட்டமிடுகிறோம்./

நீங்கள் சொல்வது உண்மைதான்....

இதனை ஆக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே