என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நித்தியானந்தா அப்படி என்னதான் செய்தார்?

நேற்று விஜய்டீவீயில் நித்யானந்தா பற்றி முழுதுமாக அறிந்துக்கொள்ளமுடிந்தது. மக்கள் அடைக்கலம் புகுந்ததுக்கு முக்கியமான மூலதனம் மனதுக்கு தேவையான அமைதி, அது தியானம், மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது தெரிகின்றது. இப்போதுல்ல அவசர உலகத்துலே நம்மளையும் நிலை நிறுத்திக்கனும்னா மனதுக்கு தேவை அமைதி, இதுலே வெற்றிப்பெற்றால் இந்த உலகத்தோடு ஒன்றி வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த முடியும். ஒருத்தர் ஓய்வு பெற்ற தமிழாசிரியராம், அவருக்கு உடல்நிலை சரியில்லையாம், மருத்துவர் அட்வைஸ்படி அவர் தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளனுமாம் அதோடு ஓய்வும் தேவையாம். இருந்தாலும் இதெல்லாம் இல்லாமல் நித்த்யானந்தா தியான பீடத்துக்குசென்றால் எல்லா நோயும் குணமாகிவிடுதாம்.

இப்போ உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்லும் பட்சத்தில் ஆன்டிபயடிக் மாத்திரை கொடுத்து ஓய்வு எடுத்தால்தான் குணமாகும் என்று சொல்லுவார். அப்ப‌டி ஓய்வு எடுக்காத‌ப‌ட்ச‌த்தில் எவ்வ‌ள‌வு மாத்திரை எடுத்தாலும் குண‌மாக‌ நெடுநாட்க‌ளாகும் அதே ச‌ம‌ய‌ம் இந்த‌ ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்றால் குண‌மாகிவிடும் என்ற‌ எண்ண‌த்துட‌ன்சென்றால் அது நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்கும் ஏனென்றால் ம‌ன‌க்க‌ட்டுப்பாடுதான் நோய் குண‌ப்ப‌டுத்துவ‌தில் முக்கிய‌ கார‌ண‌ம். இந்த மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு யுக்தியைதான் நித்தி தியானபீடத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது, இவருடைய நோய் குணமாவதற்கு ஒன்று அங்கு சென்றால் குணமாகும் திடமான நம்பிக்கை, இரண்டு யோகா. இதன் அடிப்படை காரணங்களை தெரிந்துக்கொண்டால் தன் வீட்டிலேயே செய்யலாம் அங்குதான் செல்லவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது, ஆனால் அவ்வாறு எத்தனை பேர் இதை தினமும் முழுமனதுடன் செய்யமுடியும். நான் கூட எத்தனையோ முறை தினமும் மாலைவேளையில் குறைந்த பட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற என்னத்தில் ஒவ்வொரு நாளும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது, நம்மில் எத்தனை பேர் நினைத்தது செய்கிறோம், அப்படியே செய்தாலும் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்?

இத‌ற்காக‌தான் அந்த‌ந்த‌ ம‌த‌த்தின‌ர் தாங்க‌ளுடைய‌ வ‌ழிபாட்டுத்த‌ள‌ங்க‌ளை நோக்கி செல்கிறார்க‌ள். கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ச‌ர்ச்சில் ம‌ண்டியிட்டு தியான‌ நிலைக்கு செல்வ‌தும், முஸ்லிம்க‌ள் ப‌ள்ளிவாச‌லில் ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்தி இறை தொழுவ‌தும், இந்துக்க‌ள் கோயிலில் இரு கைக்கூப்பி ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்துவ‌தும், இன்னும் பிற‌ ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் இதேநிலை க‌டைப்பிடிப்ப‌தும் ந‌ட‌ந்துவ‌ருகிற‌து.

இந்த‌ லாஜிக்கை சாமியார்க‌ள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சில‌ர் ம‌க்க‌ளின் ம‌ன‌நிலைக‌ளை ந‌ன்க‌றிந்து அவ‌ர்க‌ளை தியான‌ம் (யோகா) என்ற‌ நிலைக்குட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் அவ‌ர்க‌ளை த‌ம் திற‌மைவாந்த‌ பேச்சாற்ற‌லால் த‌ன் வ‌சிய‌ப்ப‌டுத்தி நிறைய‌ காரிய‌ங்க‌ளை சாதித்துக்கொள்கிறார்க‌ள்.

சென்ற‌ வார‌ம் இன்று பெரிய‌ள‌வில் பாப்புல‌ராகிக்கொண்டிருக்கும் "இமாமி" க‌ம்பெனியின் முத‌ளாலி சொல்லியுள்ள‌ ஒரு பேட்டியில் த‌வ‌றாம‌ல் செய்யும் நான்கில் முத‌லாவ‌தாக‌ தின‌மும் த‌வ‌றாம‌ல் 1 ம‌ணிநேர‌ம் செய்யும் தியான‌ம் என‌ப்ப‌டும் யோகா, இதுவே இவ‌ருடைய‌ பிஸினெஸ் வெற்றிக்கும் அத‌னால் தொழிலாள‌ர்க‌ளையும், வியாபார‌யுக்திக‌ளையும் எளிதாக‌ கையாள‌ முடிகிற‌து என்கிறார்.

குடும்பத்தில், அலுவலில், பிஸினெஸில், கணவன்/மனைவிக்குள், காதலர்களுக்குள் இப்படி எத்தனை பிரச்சினைகளில் தினமும் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். ஒருத்தனுக்கு பணம் இல்லாமல் பிரச்சினை, ஒருத்தனுக்கு பணமே பிரச்சினை, இப்படி நிறைய. இந்த காலகட்டத்தில் மனதுக்கு அமைதி தேவைப்படுது, மனிதன் எதையோ தேடி அலைகிறான், அப்போதுதான் சாமியார்களின் அறிமுகம் கிடைக்கிறது. அங்கு செல்கிறான், அவர் இவனை தியானத்தில் ஈடுபடுத்துகிறார், ஆன்மீக வழியை சொல்லிக்கொடுக்கிறார், தன் பேச்சிலில் அவனை மெஸ்மரிசம் செய்கிறார், கடைசியில் தனக்கு எல்லாமே கிடைத்தாமாதிரி உணர்கிறான் முடிவில் நீ தான் என் கடவுள் என்று நம்புகிறான். அந்த இடத்தில் ஒரு சாதாரன மனிதன் உண்டு, உறங்கி, மலஜலம் கழித்து, இச்சைகளை தீர்த்துக்கொள்பவன் கடவுளாகிறான். அந்த கடவுளுக்கு தான் நினைத்ததைவிட பணம், புகழ் தானாக வந்து சேருகிறது, அந்த சுகத்தில் மித‌க்கும் அந்த‌ க‌ட‌வுளுக்கு ம‌ன‌து வேறு ப‌க்க‌மும் திசை மாறுகிற‌து. இது வ‌ரை க‌ன‌வுளேயும், போஸ்ட‌ரிலேயும் பார்த்த‌ த‌ன‌க்கு கைக்கெட்டும் தூர‌த்தில் எல்லாமே அமைகிற‌து, தான் க‌ற்பித்த‌ ஆன்மீக‌த்திலிருந்து ம‌ன‌து இட‌ரி சாதார‌ண‌ ம‌னித‌னுக்கேயுறிய‌ வேலைக‌ள் செய்ய‌தூண்டுகிற‌து. இதிலேர்ந்து அவ‌னும் ம‌னித‌ன்தான் க‌ட‌வுள் இல்லை என்ப‌து தெளிவாக‌ புரிகிற‌து

இது எல்லாமே தெளிவாக‌ தெரிந்தும் ஆழ்ம‌ன‌துக்கு கேட்க‌மாட்டேங்குது இன்ன‌மும் இது எங்கோ த‌ப்பு ந‌ட‌ந்திருக்கு, இவ‌ர் இன்னும் எங்க‌ளை மாதிரி ந‌ம்புன‌வ‌ங்க‌ளுக்கு க‌ட‌வுள் தான், எல்லாமே இட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பொய் என்றும், த‌ன் பெற்றோரே தன் மகனை மீட்டுத்த‌ர‌ சொல்லி போலீஸில் க‌ம்பளெயின் கொடுத்தும் இதுதான் எனக்கு சொர்க்க‌ம், இதுதான் என் வாழ்க்கை என்று சொல்லும் இளைஞ‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை யாரால் மாற்ற‌முடியும்? அவ‌ர்க‌ளால் இது எல்லாம் பொய் என்று அவ‌ர்க‌ளின் ஆழ் ம‌ன‌துக்கு அறியும் வ‌ரை...

ம‌க்க‌ளுக்கு சுய‌ அறிவு என்ற‌ ஒன்று க‌ட‌வுளால் த‌ர‌ப்ப‌ட்டிருக்கும் அந்த‌ ஆறாவ‌து அறிவை ப‌ய‌ன்ப‌டுத்தாத‌வ‌ரை இது மாதிரி ம‌னித‌க்க‌ட‌வுள்க‌ளின் அட்டூழிய‌ம் தொட‌ர்ந்துக்கொண்டேதானிருக்கும்.












































38 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 11 March, 2010 13:54  

ரைட்டு!

பீர் | Peer 11 March, 2010 14:14  

நானும் ஒரு மடம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். பணத்துக்கு பணமும் ஆச்சு...

ஜீவன்பென்னி 11 March, 2010 14:31  

நம்ம மக்கள் திர்ந்திடுவாங்கன்னு நினைக்குறீங்க. சான்சே இல்ல.

AvizhdamDesigns 11 March, 2010 15:38  
This comment has been removed by the author.
சிநேகிதன் அக்பர் 11 March, 2010 17:59  

ஆதங்கம் நியாயமானதுதான்.

மைதீன் 11 March, 2010 18:02  

முப்பத்திரண்டு வயதில் இந்த விஞ்ஞான உலகில் ஐம்புலன்களை அடக்கி பற்றற்று வாழ்வதென்பது இயலாத காரியம், நம்மை இயக்குவது இறைதான் என்று முழுமையாக நம்புபவர்கள்,இறைவனுக்கு இணையாக வேறு எவரையும் நினைக்க மாட்டார்கள்.கொடுப்பவனும் வாங்குபவனும் முழுமையாக புரிந்துகொண்டால் தரகர்கள் தேவையில்லை. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) 11 March, 2010 18:29  

//நித்தியானந்தா அப்படி என்னதான் செய்தார்?"
ஐயோ அநியாயமாகப் பழி சுமத்தாதீர்கள். அவர் ஒண்ணுமே செய்யவில்லை. அந்தப் பொண்ணுதான் எல்லாமே செய்தது.
நீங்கள் வேறு ஏதாவது பார்த்தீர்களா?
நிற்க!
நாம் எப்படி மாய்ந்து மாய்ந்து எழுதினாலும்; எவனோ ஒருவன் காவிகட்டதான் போகிறான்; இந்த மந்தைகளும் அவன் காலைக் காசு கொடுத்துக் கழுவப்போகிறது. அந்தக் காசில் அவன் நடிகையைக்
கால் பிடிக்க விடுவான்.அதுக்குமேல் லைட்டை அணைப்பான்.//

தேவன் மாயம் 11 March, 2010 19:22  

நல்ல கேள்விங்க!!

Starjan (ஸ்டார்ஜன்) 11 March, 2010 22:05  

நல்ல அருமையான கட்டுரை; பகிர்வுக்கு நன்றி அபு அஃப்ஸர்.

Anonymous 12 March, 2010 07:53  

//ம‌க்க‌ளுக்கு சுய‌ அறிவு என்ற‌ ஒன்று க‌ட‌வுளால் த‌ர‌ப்ப‌ட்டிருக்கும் அந்த‌ ஆறாவ‌து அறிவை ப‌ய‌ன்ப‌டுத்தாத‌வ‌ரை இது மாதிரி ம‌னித‌க்க‌ட‌வுள்க‌ளின் அட்டூழிய‌ம் தொட‌ர்ந்துக்கொண்டேதானிருக்கும்.//

உண்மை இப்படி எத்தனை உதாரணங்களை சந்தித்தாலும் திருந்தாதது வருந்தத்தக்கதே....ஒரு வேளை இதுவும் மனித இயல்புகளில் ஒன்றோ?

AvizhdamDesigns 12 March, 2010 09:29  

எனக்கருமையான அபுஅஃப்ஸர் அவர்களே..
ஆன்மிகம் மற்றும் ஆன்மிகவாதிகள் குறித்தான தங்களுடைய இந்தப்பதிவு மிகவும் ஆழமானது.

எந்த ஒரு மனிதனுக்கும் தன்னுடைய நிலையை உணரும்வரை, ஆன்மிகத்தில் வளர்ந்த
பிறருடைய வழிகாட்டுதல் நிச்சயமாக தேவை. ஆனால் அவர்களை
வழிநடத்துபவர்கள், வழிவிலகும்போது தான்
இருவருக்குமே பிரச்சினை.

எனவே கண்ணில் கண்ட சாமியார்களின் கால்களில் விழுவதை விட, நாமே ஒரு மனதோடு இறைவனின் திருப்பாதத்தில் அமர்ந்திருந்து
இறைவா, உன்னை எனக்கு தெரியப்படுத்து என்று கேட்போமாகில்
நிச்சயம் அந்த இறைவன் நமக்கு தன்னை வெளிப்படுத்துவார்.

இது, நடைமுறையில் நான் கண்ட உண்மை.

தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது நாம் இறைவனுக்காக ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற வரை கடவுளை தேடினால்
நிச்சயம் இதுபோன்ற பிரச்சினைகள் வரும் காலங்களில் நடக்காது..

ரவி 12 March, 2010 12:32  

ஜீசசும் முகமதுவும் கூட மனிதன் தான் இல்லையா ?

அப்துல்மாலிக் 12 March, 2010 14:26  

ஜமால் ரைட்டு

பீர் முழுசா முடிச்சிடுங்க பணம் மட்டுமதானா?

ஜீவன்பென்னி * இதுக்குமேலேயும் திருந்தலேனா கஷ்டம்தாங்க நன்றி

நன்றி ராஜ்

ஆமா அக்பர்

அப்துல்மாலிக் 12 March, 2010 14:27  

//கொடுப்பவனும் வாங்குபவனும் முழுமையாக புரிந்துகொண்டால் தரகர்கள் தேவையில்லை//

உண்மைதான் மைதீன், அதனால்தான் என்னிடம் நேரிடையா கேள் என்று இறைவனே சொல்லிருக்கான்

அப்துல்மாலிக் 12 March, 2010 14:29  

ஹா ஹா நன்றி யோகன் பாரீஸ் ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை நன்றி

நன்றி தேவா

நன்றி சேக்பாய்

//....ஒரு வேளை இதுவும் மனித இயல்புகளில் ஒன்றோ?
//

அந்த இயல்பைதான் மாத்தனும் என்கிறேன். நன்றி தமிழ்

அப்துல்மாலிக் 12 March, 2010 14:30  

//தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது நாம் இறைவனுக்காக ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற வரை கடவுளை தேடினால்
நிச்சயம் இதுபோன்ற பிரச்சினைகள் வரும் காலங்களில் நடக்காது..//

சரியா சொன்னீங்க, நன்றி முதல் வருகைக்கு தேவபிரபு

அப்துல்மாலிக் 12 March, 2010 14:30  

//செந்தழல் ரவி said...
ஜீசசும் முகமதுவும் கூட மனிதன் தான் இல்லையா ?
//

கண்டிப்பாக மறுக்கப்ப்டாத உண்மை செந்தமிழ் நன்றி

சகோதரன் ஜெகதீஸ்வரன் 13 March, 2010 08:13  

விமர்சனங்களில் சிக்காத பெரிய மனிதர்களே இல்லை. இருப்பினும் நித்தியானந்தர் விசயத்தில் அதிக அக்கரையுடன் (பணம் சம்பாதிக்கும்) மீடியாக்கள் செயல்படுங்கன என்றே தோன்றுகிறது.

ஷாகுல் 15 March, 2010 10:19  

//நித்தியானந்தா அப்படி என்னதான் செய்தார்?//

அதானே அவர் என்ன செய்தார் எல்லாமே ரஞ்சிதா தானே பன்னுனாங்க :))))))))

Annam 17 March, 2010 13:46  

ennatha solrathuney teriala!!!

SUFFIX 20 March, 2010 16:34  

கொஞ்சமாவது யோசிச்சா இந்த மாதிரி பெரிய தப்புங்க நடக்காது அபூ.

அன்புடன் மலிக்கா 21 March, 2010 13:15  

இறையை மறந்து இயற்கையை மீறி
நடக்கமுற்படும்போது இதுபோன்ற அசிங்கங்கள் அரங்கேறுகிறது..

//பீர் | Peer said...
நானும் ஒரு மடம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். பணத்துக்கு பணமும் ஆச்சு.//

பீரண்ணா இப்படிவேர ஆசையா ம்ம்ம்/

ஆனாலும்.
மடத்தச்சுத்தி பார்த்துவிட்டு மடத்துக்குள்ளபோங்க...

அன்புடன் மலிக்கா 27 March, 2010 17:47  

இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க அபு.

http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html

குசும்பன் 27 March, 2010 20:02  

//நித்தியானந்தா அப்படி என்னதான் செய்தார்? //

லைட்டை ஆப் செஞ்சுட்டாய்ங்க படுபாவிங்க! ஒன்னியும் தெரியலை பாஸ்!:)))

ஜெய்லானி 28 March, 2010 00:22  

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

அன்புத்தோழன் 28 March, 2010 12:06  

மன அமைதிக்கான தேடுதல் நெறிபடுத்த பட வேண்டும் என்ற தங்களின் எண்ணமும்....

இறைவனிடம் நேராக கேட்காமல், எதுக்குப்பா இடை தரகர்கள் என்கிற கருத்தும்....

இவர்கள் திருந்த மாட்டார்களா என்கிற ஆதங்கமும்....

சமுதாய சிந்தனை உள்ள உங்களின் எண்ணங்களின் நல்ல வெளிப்பாடு....

மின்மினி RS 28 March, 2010 13:34  

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

malar 30 March, 2010 09:14  

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்!!
(Dr. அப்துலாஹ் (formerly) Dr. பெரியார்தாசன் அவர்களின் உரை)

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=654:21-mar-10&catid=88:others

அ. முஹம்மது நிஜாமுத்தீன் 30 March, 2010 20:18  

//இத‌ற்காக‌தான் அந்த‌ந்த‌ ம‌த‌த்தின‌ர் தாங்க‌ளுடைய‌ வ‌ழிபாட்டுத்த‌ள‌ங்க‌ளை நோக்கி செல்கிறார்க‌ள். கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ச‌ர்ச்சில் ம‌ண்டியிட்டு தியான‌ நிலைக்கு செல்வ‌தும், முஸ்லிம்க‌ள் ப‌ள்ளிவாச‌லில் ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்தி இறை தொழுவ‌தும், இந்துக்க‌ள் கோயிலில் இரு கைக்கூப்பி ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்துவ‌தும், இன்னும் பிற‌ ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் இதேநிலை க‌டைப்பிடிப்ப‌தும் ந‌ட‌ந்துவ‌ருகிற‌து.//

நித்தியானந்தாக்க்கள் தேவையேயில்லை என்பதை அழகாக
விளக்கினீர்கள்!

Starjan (ஸ்டார்ஜன்) 02 April, 2010 23:38  

அபு அஃப்ஸர் உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

priyamudanprabu 07 April, 2010 03:58  

நானும் ஒரு மடம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். பணத்துக்கு பணமும் ஆச்சு...??
அப்புறம்.................

அன்புடன் மலிக்கா 07 April, 2010 15:36  

கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் எங்கே போயிட்டீங்க...
சங்கத்தில் சொல்லி ஆட்டோ அனுப்பனுமோ

www.bogy.in 14 April, 2010 16:09  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

குடந்தை அன்புமணி 02 June, 2010 08:54  

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

Riyas 20 June, 2010 19:27  

//ம‌க்க‌ளுக்கு சுய‌ அறிவு என்ற‌ ஒன்று க‌ட‌வுளால் த‌ர‌ப்ப‌ட்டிருக்கும் அந்த‌ ஆறாவ‌து அறிவை ப‌ய‌ன்ப‌டுத்தாத‌வ‌ரை இது மாதிரி ம‌னித‌க்க‌ட‌வுள்க‌ளின் அட்டூழிய‌ம் தொட‌ர்ந்துக்கொண்டேதானிருக்கும்.//

சரியாக சொன்னீர்கள்

priyamudanprabu 26 June, 2010 21:42  

என்ன ஆச்சு?

அதிரை தும்பி 28 September, 2010 10:00  

100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்

அரபுத்தமிழன் 21 November, 2010 09:53  

ஜூலைக்குப் பிறகு ஆளைக்காணோமே அபூ அஃப்ஸர், எங்க போயிட்டீங்க.


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே