என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

செம்மொழியான தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?

செம்மொழியான தமிழ் மொழியே!!! இது சமீப காலமாக நாம் அனைவரும்முனுமுனுத்த வார்த்தை, அதையும் தாண்டி .ஆர். ரகுமானி இசையினூடேபாடலாகவும் முனுமுனுக்க வைத்தது, வைத்துக்கொண்டிருக்கிறது. 400 கோடிரூபாய் செலவு செய்து 5 நாட்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழ்நாட்டுஅரசுக்கு ஒரு சபாஷ்..!

இதெல்லாம் சரி, மொழியால் ஒன்றினைந்த நம் தாய் மொழியாம் தமிழுக்குஇந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்ததா என்பது ஒருகேள்விக்குறியாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில்வெளிநாடுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு புறம் இருக்கிறது (இந்தியாவுலேயே அதுவும் தமிழ்நாட்டுலேயே இது நடக்குதுனு சொல்றதுகாதுலே விழுது..)


தன் குழந்தைக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுப்பதற்கு தாய்/தந்தை இருவரும் தத்தமதுகடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குசென்று தேவையான கோப்புகளை பூர்த்திசெய்து கொடுத்தால் அது சரி பார்க்கப்பட்டுகுறைந்தது 10 நாட்களின் கடவுச்சீட்டு வீடுவந்து சேரும். இதே தந்தை வெளிநாட்டில்வேலை நிமித்தகாக தங்கிருக்க நேர்ந்தால்..?

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தூதரகம் உண்டு, குழந்தையின் முதன்மை (ஒரிஜினல்) பிறப்புச்சான்றிதளையும் தன் முதன்மை கடவுச்சீட்டையும்கொடுத்தால் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு Affidavity என்ற ஒரு forum கிடைக்கும், அதை அந்த குழந்தையின் தாய் தன் கடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றால் அந்த குழந்தைக்கு கடவுச்சீட்டு கிடைக்கும். அந்த Affidavity Forum அந்த இடத்தில் தந்தை ஸ்தானத்தில் செய்லபடுகிறது, அது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.

சரி இப்போ விசயத்துக்கு வருவோம்... என் நண்பர் அவரின் மகளுக்கு கடவுச்சீட்டுபெறுவதற்காக ஊரிலேர்ந்து குழந்தையின் பிறப்பு சான்றிதள் வரவழைத்துமிகுந்த வேலைப்பளுக்கிடையே துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுஇருக்கிறார்.

சென்ற வேகத்துலேயே எந்த வேலையும் ஆகாமல் திரும்பவந்துவிட்டார். காரணம் கேட்டதற்கு அந்த பிறப்புச்சான்றிதழ் முழு முதற்கொண்டு தேவையானவிபரங்கள் பூர்த்தி செய்தது செம்மொழியாம் தமிழிலேயே இருக்கிறதாம். அவ்வாறு இருந்தால் அதற்கான அஃபிடவிட்டி தரமாட்டாங்களாம்.

ஆங்கிலம்
அராபிக்
ஹிந்தி
மலையாளம்

மேற் குறிப்பிட்ட மொழிகளில் அல்லாது வேறு மொழியில் இருந்தால்ஒத்துக்கொள்ளப்ப்டமாட்டாதாம். இவ்வாறு நண்பர் கூறி ஆதங்கப்பட்டார்.

மற்ற மூன்றையும் விட்டுவிடுவோம், மலையாளம் செம்மொழியாய்அங்கீகரிக்கப்பட்ட மொழியா? இந்திய தூதரகம் என்பதற்கு பதில் கேரள தூதரகம்என்று அழைக்கும் அளவிற்கு மலையாளீகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்பதுஉண்மை. பாஸ்போர்ட் அலுவலகம் தமிழ்நாட்டுலேதானே இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு தமிழில் தறும் சான்றிதள்புறக்கணிப்படுமா? இங்கு வேலை செய்பவர்களுக்கு தமிழ் தெரியும்தானே. தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய தூதரகத்துக்கு அரசாங்கம்உத்தரவிடவில்லையா. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரண்டுமாதங்களுக்கு முன்னர்தான் தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தால்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற இயற்றப்படாத சட்டம் அமுலாகிருக்கிறது. அதுவும் இரண்டு மாதம்கூட ஆகவில்லை செம்மொழி மாநாடு நடந்து.


என்னாலே இப்படி எழுததான் முடிகிறது, சிலது சரியாக நடவடிக்கை எடுக்கலாம், சிலது தனது ஆதங்கத்தை சொல்லலாம். இந்த பதிவு சரியான நபர்களிடம் சேர்ந்து அதற்கான தீர்வு கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழனுக்கும் பெருமை. நடக்குமா..???

19 கருத்துசொல்ல:

தேவன் மாயம் 31 July, 2010 12:08  

தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு புறம் இருக்கிறது (இந்தியாவுலேயே அதுவும் தமிழ்நாட்டுலேயே இது நடக்குதுனு சொல்றதுகாதுலே விழுது..//

மிக வருத்தமான செய்திதான் !

தேவன் மாயம் 31 July, 2010 12:14  

ஆங்கிலம்
அராபிக்
ஹிந்தி
மலையாளம்

மேற் குறிப்பிட்ட மொழிகளில் அல்லாது வேறு மொழியில் இருந்தால்ஒத்துக்கொள்ளப்ப்டமாட்டாதாம். இவ்வாறு நண்பர் கூறி ஆதங்கப்பட்டார்.///


தமிழ் இன்னும் கடக்க வேண்டிய தடைகள் உள்ளன!

நட்புடன் ஜமால் 31 July, 2010 12:59  

உன் புலம்பலில் இணைகிறேன்

வேற என்னத்த செய்றது ...

பொன் மாலை பொழுது 31 July, 2010 13:00  

சத்தமில்லாமல் , ஆர்பாட்டம் இல்லாமல் காரியமாற்ற நாம் மலையாளிகளிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த பதிவினை படித்து ஆவன செய்ய வேண்டும்.
தொடர்புடயவர்களுக்கு இந்த பதிவினை அனுப்பி வைக்கவும்.

Anonymous 31 July, 2010 13:51  

semmozhi semmozhi ena pulambum sevigaluku yettuma? ungal kural

ஆதவா 31 July, 2010 14:35  

இது வருத்தமான செய்தி என்று சொல்லமாட்டேன். எப்பொழுதும் நிகழ்வதுதானே.... புதிதாக என்ன நடந்துவிட்டது என்றுதான் தோணுகிறது. இன்னும் தமிழுக்கு இருந்த தடைகள் நீங்கவில்லை. செம்மொழி மாநாடு நடந்துவிட்டால் எல்லாம் மாறிவிட்டதா என்ன.... அப்படியேதான் இருக்கிறது!!!

பார்ப்போம்!!!

எம்.எம்.அப்துல்லா 31 July, 2010 14:48  

:(

ஜெய்லானி 31 July, 2010 16:11  

எந்த எம்பஸிக்கு போனாலும் தமிழ் ஆள் யாராவது இருக்காங்களான்னு முதல்ல பாருங்க..... அப்புறம் எப்படி தமிழ் வாழும்....???

ஹேமா 31 July, 2010 20:27  

எல்லார் மனதிலும் உள்ள ஆதங்கம்தான் !

sakthi 01 August, 2010 06:31  

ungal athangam purikindrathu anna

Ahamed irshad 19 August, 2010 20:03  

Very Sad..

priyamudanprabu 30 August, 2010 09:35  

Very Sad..
mm vera enna sollaaaa....

Shameed 12 September, 2010 14:23  

இதை அப்படியோ மலையாளத்தில் மொழியக்காம் செய்து மலையாளிகளிடம் காட்டினாள் மலையாளிகளுக்கு குதுகலமாக இருக்கும் ,

புல்லாங்குழல் 23 September, 2010 12:14  

மளையாளம் அங்கீகரிக்கப்ப்டுவதில் நமக்கு வருத்தம் இல்லை. தமிழ் புறக்கணிக்கப்படுவது தான் சசிக்க முடியவில்லை.

ஜெய்லானி 25 September, 2010 09:05  

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_21.html

thiyaa 27 September, 2010 14:13  

அருமை

Jaleela Kamal 03 October, 2010 13:11  

தமிழும் சீக்கிரமே இங்கு அங்கீகரிப்பார்கள்.முன்பு போல் இல்லை
இப்போது இங்கு அதிகமாக தமிழர்கள்

ஏன் பதிவுகளை இதற்கு பிறகு போடல்

Ahamed irshad 17 November, 2010 12:13  

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html..

வேண்டாம் வரதட்சணை 21 November, 2010 10:16  

வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே