என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

செம்மொழியான தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?

செம்மொழியான தமிழ் மொழியே!!! இது சமீப காலமாக நாம் அனைவரும்முனுமுனுத்த வார்த்தை, அதையும் தாண்டி .ஆர். ரகுமானி இசையினூடேபாடலாகவும் முனுமுனுக்க வைத்தது, வைத்துக்கொண்டிருக்கிறது. 400 கோடிரூபாய் செலவு செய்து 5 நாட்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழ்நாட்டுஅரசுக்கு ஒரு சபாஷ்..!

இதெல்லாம் சரி, மொழியால் ஒன்றினைந்த நம் தாய் மொழியாம் தமிழுக்குஇந்திய அரசாங்கத்தால் அங்கீகாரம் கிடைத்ததா என்பது ஒருகேள்விக்குறியாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில்வெளிநாடுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஒரு புறம் இருக்கிறது (இந்தியாவுலேயே அதுவும் தமிழ்நாட்டுலேயே இது நடக்குதுனு சொல்றதுகாதுலே விழுது..)


தன் குழந்தைக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுப்பதற்கு தாய்/தந்தை இருவரும் தத்தமதுகடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குசென்று தேவையான கோப்புகளை பூர்த்திசெய்து கொடுத்தால் அது சரி பார்க்கப்பட்டுகுறைந்தது 10 நாட்களின் கடவுச்சீட்டு வீடுவந்து சேரும். இதே தந்தை வெளிநாட்டில்வேலை நிமித்தகாக தங்கிருக்க நேர்ந்தால்..?

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தூதரகம் உண்டு, குழந்தையின் முதன்மை (ஒரிஜினல்) பிறப்புச்சான்றிதளையும் தன் முதன்மை கடவுச்சீட்டையும்கொடுத்தால் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு Affidavity என்ற ஒரு forum கிடைக்கும், அதை அந்த குழந்தையின் தாய் தன் கடவுச்சீட்டுடன் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றால் அந்த குழந்தைக்கு கடவுச்சீட்டு கிடைக்கும். அந்த Affidavity Forum அந்த இடத்தில் தந்தை ஸ்தானத்தில் செய்லபடுகிறது, அது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதற்கு அடையாளம்.

சரி இப்போ விசயத்துக்கு வருவோம்... என் நண்பர் அவரின் மகளுக்கு கடவுச்சீட்டுபெறுவதற்காக ஊரிலேர்ந்து குழந்தையின் பிறப்பு சான்றிதள் வரவழைத்துமிகுந்த வேலைப்பளுக்கிடையே துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுஇருக்கிறார்.

சென்ற வேகத்துலேயே எந்த வேலையும் ஆகாமல் திரும்பவந்துவிட்டார். காரணம் கேட்டதற்கு அந்த பிறப்புச்சான்றிதழ் முழு முதற்கொண்டு தேவையானவிபரங்கள் பூர்த்தி செய்தது செம்மொழியாம் தமிழிலேயே இருக்கிறதாம். அவ்வாறு இருந்தால் அதற்கான அஃபிடவிட்டி தரமாட்டாங்களாம்.

ஆங்கிலம்
அராபிக்
ஹிந்தி
மலையாளம்

மேற் குறிப்பிட்ட மொழிகளில் அல்லாது வேறு மொழியில் இருந்தால்ஒத்துக்கொள்ளப்ப்டமாட்டாதாம். இவ்வாறு நண்பர் கூறி ஆதங்கப்பட்டார்.

மற்ற மூன்றையும் விட்டுவிடுவோம், மலையாளம் செம்மொழியாய்அங்கீகரிக்கப்பட்ட மொழியா? இந்திய தூதரகம் என்பதற்கு பதில் கேரள தூதரகம்என்று அழைக்கும் அளவிற்கு மலையாளீகளின் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்பதுஉண்மை. பாஸ்போர்ட் அலுவலகம் தமிழ்நாட்டுலேதானே இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு தமிழில் தறும் சான்றிதள்புறக்கணிப்படுமா? இங்கு வேலை செய்பவர்களுக்கு தமிழ் தெரியும்தானே. தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய தூதரகத்துக்கு அரசாங்கம்உத்தரவிடவில்லையா. இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் இரண்டுமாதங்களுக்கு முன்னர்தான் தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தால்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற இயற்றப்படாத சட்டம் அமுலாகிருக்கிறது. அதுவும் இரண்டு மாதம்கூட ஆகவில்லை செம்மொழி மாநாடு நடந்து.


என்னாலே இப்படி எழுததான் முடிகிறது, சிலது சரியாக நடவடிக்கை எடுக்கலாம், சிலது தனது ஆதங்கத்தை சொல்லலாம். இந்த பதிவு சரியான நபர்களிடம் சேர்ந்து அதற்கான தீர்வு கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழனுக்கும் பெருமை. நடக்குமா..???

பசங்க ஒரு கோப பார்வை..!

அபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்களைசந்திக்கவருகிறேன். காலச்சூழ்நிலை நம்மை எங்கெங்கோ கொண்டுசேர்த்துவிட்டது, வேலைப்பழு அதிகமாகி அதிகம் எழுத முடியாமல் போனது (தப்பிச்சோம்னுஇருந்தீங்களா?), இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு.

நான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா

அமீரகத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பிச்சாச்சு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் இங்கேவிடுமுறை. இந்த இரண்டு மாதங்கள் மட்டும் அதிகமானோர் வெக்கேஷனுக்குதத்தமது நாடுகளுக்கு சென்றுவிடுவதால் ட்ராஃபிக் குறைவாகவே இருக்கும், பெரும்பாலான ஷாப்பிங்க் காம்ளெக்ஸில் கூட்டமும் குறைவாகவேகாணப்படும்.இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவேஇருக்கின்றன. இது போன்ற நேரத்தில் ஷார்ஜாவில் மின்சாரம் ஒரு நாளைக்குகுறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் மணி நிறுத்திவிடுகிறார்கள். மின்சாரத்தேவை எவ்வளவு இன்றியமையாயது என்பது வளைகுடாநாடுகளில்குப்பைகொட்டுபவர்களுக்கு தான் தெரியும்.

பள்ளி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் என் பையன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பாவம் இப்படி அடைத்து வைத்தால் என்னதான் செய்வாங்க. சும்மா இருக்கும்போது விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது, நினைத்ததை வரைவது இப்படி ஏதாவது வேலை செய்துக்கொண்டிருக்கும் என் மகனை ஒரு நாள் சாப்பிடாமல் அடம்புடிச்ச காரணத்தால் கொஞ்சம் ஓவராக(?) அடித்துவிட்டேன். அவ்வளவுதான் கடுப்பாகிப்போய் அவன் வரைந்த ஓவியத்தில் என்ன செய்திருக்கிறன் என்பதை பாருங்க.தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவும்

அதோடு ஒரு பேப்பர் பென்சிலை எடுத்து தன்னை இவ்வாறு அடிச்சுட்டாங்களேஎன்ற ஆதங்கம் தாங்கமுடியாமல் கீழே உள்ளவாறு எழுதி என் கிட்டேபடிச்சுப்பார்க்க சொல்லி காட்டினார்.
சரியா தெரியாவிடில் படத்தை க்ளிக்கி படிக்கவும்

இது முன்னர் வரைந்த படம், அப்புறம் கிறுக்கி மேலே ஹேப்பி ஃபேமிலினுஎழுதிட்டு அடி வாங்கியது அதையே கிறுக்கி.....

இப்பொழுது முதல் வகுப்பு கிரேட்-1 படித்துக்கொண்டிருக்கிறார்

இப்போ உள்ள பசங்களுக்கு என்னா மாதிரியான கோபம் வருதுனு சொல்றதுக்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இல்லை. நாம சிறுவராக இறுந்த போது நம்பெற்றோர்களிடம் அடி வாங்கியது மாதிரி நினைத்து நம் பிள்ளைகளையும்அடித்தால் பின் விளைவை நிறைய சந்திக்க நேரிடும். காலம் மாறிப்போச்சு.... .

நித்தியானந்தா அப்படி என்னதான் செய்தார்?

நேற்று விஜய்டீவீயில் நித்யானந்தா பற்றி முழுதுமாக அறிந்துக்கொள்ளமுடிந்தது. மக்கள் அடைக்கலம் புகுந்ததுக்கு முக்கியமான மூலதனம் மனதுக்கு தேவையான அமைதி, அது தியானம், மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது தெரிகின்றது. இப்போதுல்ல அவசர உலகத்துலே நம்மளையும் நிலை நிறுத்திக்கனும்னா மனதுக்கு தேவை அமைதி, இதுலே வெற்றிப்பெற்றால் இந்த உலகத்தோடு ஒன்றி வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த முடியும். ஒருத்தர் ஓய்வு பெற்ற தமிழாசிரியராம், அவருக்கு உடல்நிலை சரியில்லையாம், மருத்துவர் அட்வைஸ்படி அவர் தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளனுமாம் அதோடு ஓய்வும் தேவையாம். இருந்தாலும் இதெல்லாம் இல்லாமல் நித்த்யானந்தா தியான பீடத்துக்குசென்றால் எல்லா நோயும் குணமாகிவிடுதாம்.

இப்போ உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்லும் பட்சத்தில் ஆன்டிபயடிக் மாத்திரை கொடுத்து ஓய்வு எடுத்தால்தான் குணமாகும் என்று சொல்லுவார். அப்ப‌டி ஓய்வு எடுக்காத‌ப‌ட்ச‌த்தில் எவ்வ‌ள‌வு மாத்திரை எடுத்தாலும் குண‌மாக‌ நெடுநாட்க‌ளாகும் அதே ச‌ம‌ய‌ம் இந்த‌ ம‌ருத்துவ‌ரிட‌ம் சென்றால் குண‌மாகிவிடும் என்ற‌ எண்ண‌த்துட‌ன்சென்றால் அது நிச்ச‌ய‌ம் ந‌ட‌க்கும் ஏனென்றால் ம‌ன‌க்க‌ட்டுப்பாடுதான் நோய் குண‌ப்ப‌டுத்துவ‌தில் முக்கிய‌ கார‌ண‌ம். இந்த மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு யுக்தியைதான் நித்தி தியானபீடத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது, இவருடைய நோய் குணமாவதற்கு ஒன்று அங்கு சென்றால் குணமாகும் திடமான நம்பிக்கை, இரண்டு யோகா. இதன் அடிப்படை காரணங்களை தெரிந்துக்கொண்டால் தன் வீட்டிலேயே செய்யலாம் அங்குதான் செல்லவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது, ஆனால் அவ்வாறு எத்தனை பேர் இதை தினமும் முழுமனதுடன் செய்யமுடியும். நான் கூட எத்தனையோ முறை தினமும் மாலைவேளையில் குறைந்த பட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற என்னத்தில் ஒவ்வொரு நாளும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது, நம்மில் எத்தனை பேர் நினைத்தது செய்கிறோம், அப்படியே செய்தாலும் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்?

இத‌ற்காக‌தான் அந்த‌ந்த‌ ம‌த‌த்தின‌ர் தாங்க‌ளுடைய‌ வ‌ழிபாட்டுத்த‌ள‌ங்க‌ளை நோக்கி செல்கிறார்க‌ள். கிறிஸ்த‌வ‌ர்க‌ள் ச‌ர்ச்சில் ம‌ண்டியிட்டு தியான‌ நிலைக்கு செல்வ‌தும், முஸ்லிம்க‌ள் ப‌ள்ளிவாச‌லில் ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்தி இறை தொழுவ‌தும், இந்துக்க‌ள் கோயிலில் இரு கைக்கூப்பி ம‌ன‌தை ஒருநிலைப்ப‌டுத்துவ‌தும், இன்னும் பிற‌ ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் இதேநிலை க‌டைப்பிடிப்ப‌தும் ந‌ட‌ந்துவ‌ருகிற‌து.

இந்த‌ லாஜிக்கை சாமியார்க‌ள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சில‌ர் ம‌க்க‌ளின் ம‌ன‌நிலைக‌ளை ந‌ன்க‌றிந்து அவ‌ர்க‌ளை தியான‌ம் (யோகா) என்ற‌ நிலைக்குட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் அவ‌ர்க‌ளை த‌ம் திற‌மைவாந்த‌ பேச்சாற்ற‌லால் த‌ன் வ‌சிய‌ப்ப‌டுத்தி நிறைய‌ காரிய‌ங்க‌ளை சாதித்துக்கொள்கிறார்க‌ள்.

சென்ற‌ வார‌ம் இன்று பெரிய‌ள‌வில் பாப்புல‌ராகிக்கொண்டிருக்கும் "இமாமி" க‌ம்பெனியின் முத‌ளாலி சொல்லியுள்ள‌ ஒரு பேட்டியில் த‌வ‌றாம‌ல் செய்யும் நான்கில் முத‌லாவ‌தாக‌ தின‌மும் த‌வ‌றாம‌ல் 1 ம‌ணிநேர‌ம் செய்யும் தியான‌ம் என‌ப்ப‌டும் யோகா, இதுவே இவ‌ருடைய‌ பிஸினெஸ் வெற்றிக்கும் அத‌னால் தொழிலாள‌ர்க‌ளையும், வியாபார‌யுக்திக‌ளையும் எளிதாக‌ கையாள‌ முடிகிற‌து என்கிறார்.

குடும்பத்தில், அலுவலில், பிஸினெஸில், கணவன்/மனைவிக்குள், காதலர்களுக்குள் இப்படி எத்தனை பிரச்சினைகளில் தினமும் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். ஒருத்தனுக்கு பணம் இல்லாமல் பிரச்சினை, ஒருத்தனுக்கு பணமே பிரச்சினை, இப்படி நிறைய. இந்த காலகட்டத்தில் மனதுக்கு அமைதி தேவைப்படுது, மனிதன் எதையோ தேடி அலைகிறான், அப்போதுதான் சாமியார்களின் அறிமுகம் கிடைக்கிறது. அங்கு செல்கிறான், அவர் இவனை தியானத்தில் ஈடுபடுத்துகிறார், ஆன்மீக வழியை சொல்லிக்கொடுக்கிறார், தன் பேச்சிலில் அவனை மெஸ்மரிசம் செய்கிறார், கடைசியில் தனக்கு எல்லாமே கிடைத்தாமாதிரி உணர்கிறான் முடிவில் நீ தான் என் கடவுள் என்று நம்புகிறான். அந்த இடத்தில் ஒரு சாதாரன மனிதன் உண்டு, உறங்கி, மலஜலம் கழித்து, இச்சைகளை தீர்த்துக்கொள்பவன் கடவுளாகிறான். அந்த கடவுளுக்கு தான் நினைத்ததைவிட பணம், புகழ் தானாக வந்து சேருகிறது, அந்த சுகத்தில் மித‌க்கும் அந்த‌ க‌ட‌வுளுக்கு ம‌ன‌து வேறு ப‌க்க‌மும் திசை மாறுகிற‌து. இது வ‌ரை க‌ன‌வுளேயும், போஸ்ட‌ரிலேயும் பார்த்த‌ த‌ன‌க்கு கைக்கெட்டும் தூர‌த்தில் எல்லாமே அமைகிற‌து, தான் க‌ற்பித்த‌ ஆன்மீக‌த்திலிருந்து ம‌ன‌து இட‌ரி சாதார‌ண‌ ம‌னித‌னுக்கேயுறிய‌ வேலைக‌ள் செய்ய‌தூண்டுகிற‌து. இதிலேர்ந்து அவ‌னும் ம‌னித‌ன்தான் க‌ட‌வுள் இல்லை என்ப‌து தெளிவாக‌ புரிகிற‌து

இது எல்லாமே தெளிவாக‌ தெரிந்தும் ஆழ்ம‌ன‌துக்கு கேட்க‌மாட்டேங்குது இன்ன‌மும் இது எங்கோ த‌ப்பு ந‌ட‌ந்திருக்கு, இவ‌ர் இன்னும் எங்க‌ளை மாதிரி ந‌ம்புன‌வ‌ங்க‌ளுக்கு க‌ட‌வுள் தான், எல்லாமே இட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பொய் என்றும், த‌ன் பெற்றோரே தன் மகனை மீட்டுத்த‌ர‌ சொல்லி போலீஸில் க‌ம்பளெயின் கொடுத்தும் இதுதான் எனக்கு சொர்க்க‌ம், இதுதான் என் வாழ்க்கை என்று சொல்லும் இளைஞ‌ர்க‌ளின் ம‌ன‌நிலையை யாரால் மாற்ற‌முடியும்? அவ‌ர்க‌ளால் இது எல்லாம் பொய் என்று அவ‌ர்க‌ளின் ஆழ் ம‌ன‌துக்கு அறியும் வ‌ரை...

ம‌க்க‌ளுக்கு சுய‌ அறிவு என்ற‌ ஒன்று க‌ட‌வுளால் த‌ர‌ப்ப‌ட்டிருக்கும் அந்த‌ ஆறாவ‌து அறிவை ப‌ய‌ன்ப‌டுத்தாத‌வ‌ரை இது மாதிரி ம‌னித‌க்க‌ட‌வுள்க‌ளின் அட்டூழிய‌ம் தொட‌ர்ந்துக்கொண்டேதானிருக்கும்.












































கவர்ண்மென்ட் உத்தியோகம்..!

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் த‌ல‌மையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..


























வெப்பத்தின் தாக்கம்..!



வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு
ஈரமாய்
உன்னை
அணைக்கயில்
என் வேர்கள்
உனக்குள்ளும்
உன் சுவாசம்
என் நிழலுக்குள்ளும்!
செந்தணப்பின்
சத்தத்திலும்!
நேரம்காட்டி
முட்களின்
சத்தத்தினூடே
இளைப்பாறிக்கொண்டன‌...!!!



-------------------




அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!

தொலைவில் இருக்கயில்
உன்னைப்பற்றி
மட்டுமே
பேசுகின்றன‌
என் இதயம்!


---------------------

பாராளுமன்றமும்.. பிரச்சினைகளும்..!

சட்ட சபையிலோ, நாடாளுமன்றத்திலோ நாட்டுமக்களின் நலன் கருதி கூடி நல்ல முடிவெடுக்கும் கூட்டத்தொடரில் எத்தனையோ காமெடிகளும், சொற்போரும், தீர்மானங்களும், வெளிநடப்புகளும் நடந்திருக்கிறது, இருந்த போதும் இதனூடே சிறப்பாக நடந்தேறிய வரலாற்று சிறப்புமிக்க சண்டகளை நாம் என்றுமே மறந்திடமுடியாது. அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டு சட்டசபையில் மைக்கை பிடிங்கியும், நாற்காலியை தூக்கியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்குவதும் இதற்கு ஒரு படி மேல் போய் சேலையை உருவியது, வேஷ்டிடைய அவிழ்த்துவிட்டதையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்கமுடியாத ஒன்று. இது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியமா என்ற கேள்விக்கு இங்கே தெளிவான விளக்கம்
உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் பரவலாக நடந்தேறியவன்னம் உள்ளது, இதில் அதிகமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதில்லை. அதையும் மீறி ஒரு சில மீடியாக்களின் உதவியுடன் உங்கள் பார்வைக்கு இங்கே....
இது உக்ரைன்.. கழுத்தை நெறிக்கிறாங்க‌

உக்ரைன் நாட்டின் காட்சி

தென் கொரியா


வட கொரியா ‍ அவங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக



இது சோமாலியா... சாப்பிடவே வழியில்லே இப்புடி எல்லா நாற்காலியை ஒடச்சிட்டா அப்புறம் தரை டிக்கெட்தான்




இது தைவான்...




இதுவும் தைவான்..... சூ பறக்குறது படு ஃபேமஸ்






இதுவும் தென் கொரியாதான்... தண்ணீர் வண்டியே உள்ளேயே அனுமதிச்சாச்சு தொல்லை தாங்காமல்







இது ரஷ்யா...






இதுவும் ரஷ்யாதான்









இது மெக்ஸிக்கோ... பந்தாடுறாங்கய்யா




இது துருக்கி... வாய பொத்தி கொலபண்ணுறாங்க




இது நம்ம இந்தியா...
இத பாருயா இங்கே மட்டும்தான் ஈவ் டீசிங் நடக்குது, செருப்புதான் ரொம்ப மலிவா கிடைக்குதாம்...

வந்து பாத்துட்டியே, ஏதாவது சொல்லிட்டுப்போங்க இல்லே ஓட்டாவது போட்டுடுங்கோ...









































































நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே