மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!
குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்..
குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்..
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..
இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..
இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன
ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???
