என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

அமீரக வாழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - Country Club/Vacation International Club


ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம், சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்னு எத்தனிக்கும்போது அபுதாபியிலிருந்து ஒரு ஃபோன் கால், சார் மாலிக்குங்களா? போன வாரம் நீங்க லுலு செண்டர்லே கூப்பன் எழுதிப்போட்டதுலே நீங்க ஜெயிச்சிருக்கீங்க (இது மாதிரி கூப்பன் எழுதி கை வலிச்சதுதான் மிச்சம்) என்ற சந்தோஷமான செய்தி கேள்விப்பட்டவுடன் வந்த கொட்டாவியெல்லாம் போன இடம் தெரியலே. உடனே சுறுசுறுப்பாகி அப்புறம் சொல்லுங்க சார் என்று கேட்டதுதான் மிச்சம். நீங்க உங்க குடும்பத்தோடு 7 நாள் கோவா சுற்றுலா செல்லலாம், இந்த வருஷத்துக்குள்ளே பயன்படுத்திக்கனும், விமான டிக்கெட் நீங்களே எடுக்கனும் என்றும் அங்கே இறங்கியவுடன் 3 ஸ்டார் ஹோட்டல் மற்றும் முழு சுத்திக்காட்டும் செலவும் இந்த கூப்பனில் அடங்கும் என்றும் சொன்னார். அந்த கூப்பனை வாங்கனும் என்றால் ஒரு பெரீய காரியம் செய்யனும். அதாவது துபாய்- ஷார்ஜா ரோட்டில் உள்ள அலுவலகம் அன்றே மாலை சரியாக 6 மணிக்கு மனைவி, குழந்தையுடன் சென்று அதற்கான சின்ன(?) புரோகிராம் நடக்கும் அதுலே கலந்துக்கொண்டவுடன் வெற்றிப்பெற்றதற்கான கூப்பன் கிடைக்கும் என்றார்.

சரி வந்த அந்த ஒரு நல்லதையாவது போய் வாங்கிடலாம் என்று தூக்கம் தொலைத்து 6.10க்கே போய் ஒரு ஃபில்டிங்க்லே 13 வது ஃபிளாட்டில் ஆஃபீஸ் இருக்கு என்று கண்டு பிடித்து போனால் மயான அமைதி. விபரம் சொன்னவுடன் ரெஜிஸ்டர் செய்துட்டு இங்கே புரோகிராம் குறைந்தது 3 மணிநேரம் முழுதா இருக்கனும் என்ற உத்திரவாதம் வாங்கிட்டு பிள்ளைகள் விளையாடுவதற்கும் பார்ப்பதற்கும் டாம்/ஜெர்ரி வீடியோவை போட்டு அவங்களை அங்கே தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். 

சிறிது காத்திருப்பிற்கு பிறகு அழைப்பு வந்தது, நீங்க இங்க்லீஸா/ஹிந்தியா என்றார்கள் நான் தமிழ் ஆனால் இங்க்லீஸை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றோம். அங்கே...

ஒரு பெரிய ஹால், கிட்டத்தட்ட ஒரு மேசைக்கு மூனு நாற்காலிப்போட்டு அந்த காலத்து டி.ராஜேந்தர் படத்துலே டிஸ்கோ டான்ஸ் பாட்டு நடந்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி (மேடை மட்டும் மிஸ்ஸிங்), பக்கத்துலே உள்ளவங்களிடம் காதோடு காது வைத்து பேசினால்தான் விளங்கும் என்றளவுக்கு அதிரடி மியூஸிக் சிஸ்டம் அதிர்ந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கான இருக்கை மிக நெருக்கமாக போடப்பட்டு தலையோடு தலை ஒட்டி பேசினால்தான் விளங்கும் என்ற அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருவர் ஹைதராபாத் காரராம், தன் பெயர் காதர் Welcome to Country Club என்று ஆரம்பித்து ஃபோனில் சொன்ன அதே வார்த்தைகளை இவரும் ரிப்பீட்டு செய்தார். மேலும் சன் டீவிலே கேட்பது மாதிரி லவ் மேரேஜா, சொந்தமா, யாரு சமைப்பா, என்னா படிச்சிருக்கீங்க, எத்தன குழந்தைகள், இருவருக்கும் என்னா சமையல் புடிக்கும், யாரு சமைச்சா புடிக்கும் இப்படி நிறைய கேட்டு கேட்டு சொல்லி சொல்லி இப்போது 45 நிமிடம் கடந்துவிட்ட்து. 

திடீர்னு ஒரு மேசையில் உள்ளவர் எழுந்து Dear Ladies and Gentle man, Pleased to welcome to join our club Mrs & Mrs X and just they signed our contract அப்படினு சொன்னவுடன் மற்ற மேஜையிலுள்ளவங்க கைதட்டினர், நமக்கும் எதுவுமே புரியவில்லை இருந்தாலும் மேனர்ஸ் கருத்தில் கொண்டு நாமும் பேருக்கு தட்டினோம்.

சரி, எங்களுக்கான ஆள் (காதர்), இப்போ உலகத்துலே சுற்றுலா செல்லவேண்டுமானால் எங்கே செல்ல புடிக்கும்? இப்படி ஒரு கேள்வி, நாங்களும் ஏதோ ஒன்னு சொன்னோம், அதுக்கு அங்கே போகனும் என்றால் பெண்சில் கால்குலேட்டர் வைத்து ஒரு கால்குலேஷன் செய்து இவ்வளவு திர்ஹாம் செலவு ஆகும், அதே எங்களுக்கான மெம்பர்ஷிப் அட்டை காண்பித்தால் அதுலே பாதிதான் வரும், எது பெட்டர் என்றார்.யோசித்தோம், இடையிடையே தேனீர், ஜூஸ் இப்படி சப்ளை வேறு.

இடையிடையே ஒவ்வொரு 20 நிமிஷத்துகு ஒரு தடவை அதே மாதிரி ஒவ்வொரு மேசையா ஒருத்தர் எழுந்து அதே வசனத்தை ஓதி கைதட்டு வாங்கினர். அதற்குபிறகு என்ன நடக்குது என்பதை உணர்வதற்கு கால அவகாசம் தரவில்லை.

பழைய ரெஸ்டாரண்ட்லே அடிப்பட்ட மெனு கார்ட் மாதிரி ஒரு புத்தகத்தை கொடுத்து இதுலேயுள்ள ரிஸார்ட் எல்லாம் எங்க கம்பெனியோடது, இந்தியாவுலே உள்ள எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அங்கே 3 அல்லது 5 ஸ்டார் ரிசார்ட் இருக்கு நீங்க தங்கிக்கலாம் என்றார். அதற்கு நான் நான் ஏண்டா நடுராத்திரிலே சுடுகாட்டுக்கு போகப்போரேனு வடிவேலு ஒரு படத்துலே கேட்பார் அதுமாதிரி சுற்றுலா செல்பவங்க கிடைக்கும் நேரங்களில் முடிந்தளவு எல்லா இடங்களையும் பார்த்து அனுபவித்து சந்தோஷப்படத்தான் தவிர படுத்து தூங்குவதற்கு இல்லையே. எனவே சாதாரண கட்டணத்தில் அறை போதுமானது என்றவுடன் சின்ன சிரிப்புடன் சமாளித்துவிட்டு இவங்களோட மெம்பர்ஷிப் கார்ட் வாங்கினால் கராமாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வாரம் ஒரு முறையும், ஏதாவது கோலிவுட் பட்டாளம் வந்து செய்யும் புரோகிராமுக்கு டிக்கட்டும் இலவசமாக கிடைக்குமாம்.

சரி, முடிவா மெம்பர் ஆவதற்கு எவ்வளவு என்று இடையிடையே கேட்டாலும் அதை கடைசி 30 நிமிடத்தில்தான் வெச்சிருக்காங்க ட்விஸ்ட், இதை பற்றி விலாவாரியா மேனேஜர் சொல்லுவார் என்று இன்னொருவர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு 10 நிமிஷம் அதே வேதம் ஓதினார். கடைசியில் மற்ற நேரங்களில் சேரனும்னா 45,000 திர்ஹாம் வருமாம், இன்னிகு அது ஆஃபராம் அதாவது 27,000 திர்ஹாம் வருவாம். அதிலேயும் இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம் இருக்காம் அதாவது 9,000 திர்ஹாம் இப்போ உடனே கட்டிவிட்டு அடுத்த 2 மாசத்தில் மீதியை செலுத்தனுமாம். 

இதைவிட கொடுமை என்னவென்றால், கொடைக்கானலில் ஒரு பிளாட் (காலி மனை) தருவாங்களாம், அதுலே இவங்களே வில்லா கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் 50% தருவாங்களாம், மேலும் 9,000 திர்ஹாம் கட்டியது போக மீதி பணம் ADCB பேங்க் மூலம் சேலரி ட்ராண்ஸ்பர் இல்லாமல் லோன் வாங்கி தருவாங்களாம்.. அத்தோடு விட்டாங்களா இப்போ பணம் இல்லை, சம்பளம் வாங்கியதும் திரும்ப வருகிறேன் இல்லேனா 2 நாள் கழித்து யோசித்து வருகிறேன் என்றதுக்கு இங்கேயே இப்போவே கொடுக்கனும் இல்லேனா முன்னர் சொன்னா மாதிரி 45,000 கொடுக்கும்படியாகிடும் என்றார்கள்.  வேணும்னா ஒரு ஆளை கூடவே அனுப்புறேன் பணம் கொடுத்துவிடுங்க என்றர்கள். சுதாரிச்சுக்கடா என்று அப்பப்போ எனக்குள்ளே நானே சொல்லிக்கிட்டேன். 

நேரம் இரவு 10 ஆகிவிட்டது, நாங்கள் மட்டுமே மீதி அவர்களும் விடுவதாக இல்லை கடைசியாக 1000 திர்ஹாம் அட்வாஸா கொடுங்கள் அப்புறம் 2 நாள் கழித்து மீதியை கொடுங்க என்று பிச்சை எடுக்கும் ரேஞ்சுக்கு வந்துட்டாங்க. இவ்வளவு பேசி சும்மா வர மனசு இடம் தரலே, கடைசிலே என் நண்பனுடைய கிரடிட் கார்டை கொடுத்து அதுலே எடுத்துக்க என்று கொடுத்தவுடன் பரபரப்பான வேலைகள் நடந்தன, என்னை அங்கேயே பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து அந்த கூப்பனில் பிரிண்ட் செய்து கையிலே கொடுத்தாங்க. அதே நேரம் இறைவனின் கிருபையால் அந்த கடன் அட்டையை தேய்க்கும்போது Insufficient Money என்று ரிசல்ட் வந்துவிட்டது. அத்தோடு தலைக்கு வந்த்து தலைவலியோடு மட்டும் திரும்பிவிட்டேன்.

சில நாள் கழித்து நண்பரிடம் பகிர்ந்துக்கிட்ட போது, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிக்காட்டினார். இடையிடையே எழுந்து சொன்னதும் கைதட்டியது எல்லாமே அவர்களின் செட்-அப் என்றார். அடங்கொய்யாலே.... அப்போ ”எனக்கு ரத்தம் கக்கி சாவே” என்று மயில்சாமி சொன்ன ஜோக்தான் ஞாபகம் வந்த்து...

சில நாள் கழித்து எதார்த்தமா என் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். இதுவும் இறைவன் நாடியது, இப்போ அவசரமா ஒரு மீட்டிங்க் கிளம்பிக்கிட்டிருகேன் அப்புறமா ஃபோன் செய்றேன் என்றான், என்னானு விசாரிச்சா அவனும் ரத்தம் கக்கி சாவ ரெடியாகிட்டான், அடப்பாவி மக்கா பாயிண்ட் பாயிண்டா விளக்கி அங்கே போகவேனாம் என்று தடுத்த புண்ணியம் கிடைத்தது. இனிமேலாவது மக்கள் உஷாராவாங்களா?

இரண்டு காரியம் புரியவில்லை

எப்படி இந்தநாட்டு அரசாங்கம் இதை கண்டுக்காம இருக்கு !?

எப்படி இவ்வளவு ஓப்பனா ஏமாத்துறாங்க. !?

எகிப்தை மையமாக வைத்து இயங்கும் International Tourism club

இந்தியர்கள் நடத்தும் Country Club…

என்ற இரண்டும் இங்கே செயல்பட்டுக்கிட்டிருக்கு...


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே