நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....
உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....
ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...
உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட
தொலைவில்.....
உனை இறுக்கி அணைத்து
உனை திணரவைத்து
உன்னிடம் சண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும் இருள்தான்.... ??
டிஸ்கி: இது என்னுடைய பதிவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டதால், இப்பொழுது மீண்டும் உங்களுக்காக
கடல் - அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
-
*கடல்*
மணல், அலைகள்
ஊருக்கு கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம்போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தி...
1 week ago