"வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?"
--நன்றி நிலா ரசிகன்..
இந்த வரிகள் என்னை அதிகம் பாதித்தது உண்மை, உறவுகளை விட நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன் நான்.
நட்பால் உலகம் அறிகிறான்
நட்பால் வாழ்கையை படிக்கிறான்
நட்பால் தற்பெருமையை அழிக்கிறான்
நட்பால் உதவும் மனப்பான்மை பெருகிறான்
நட்பால் எல்லாமே கிடைக்கிறது.....
அந்த நட்புகளை பிரிந்து இன்று என்னைபோல் எத்தனையோ நண்பர்கள் தவிப்பார்கள்.. இதற்கு மனது அதே புதிய நட்பை நாடும் இவற்றையெல்லாம் ஓரளவேணும் குறைப்பதில் இந்தபதிவுகளும், பதிவர்களும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. இந்த நட்பும் இணையம் இருக்கும் வரைக்கும்தான்.. கணினி ஆஃப் ஆனாலோ, இணைய இணைப்பு துண்டிக்கபட்டாலோ நம் நட்பும் அத்தோடு லாகாஃப் ஆகிவிடும்.
இருந்தாலும் மனது அதிகமாக இணையப்பக்கம் நாடுகிறது நண்பர்களின் பதிவையும், ஆன்லைன் சேட்டிலே பேசுவதற்காகவும்.
என்னை கட்டினியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை கட்டிக்கிட்டியலா * இது மனைவி
என்னை பெத்தியலா இல்லை இந்த கம்ப்யூட்டரை பெத்தியலா * இது என் பையன்
என்னாடா பேசாமல் உம் உம் உம் என்று சொல்லிக்கிட்டிருக்கே * இது தெரிந்தவர்கள், தொலைப்பேசியில் பேசும்போது கவனம் முழுது பதிவில் இருப்பதால்
அசைன்மெண்ட் 10 நிமிஷத்துலே கொடுக்கனும், அதை விட்டுவிட்டு ஏதோ செய்துக்கிட்டிருக்கே (அலுவலகத்தில் கணினி திரையிலே ஆங்கிலத்தை தவிர தமிழ் மொழியை பார்த்தவுடன் நினைத்துவிடுவாங்க சொந்தக்கதை பார்க்கிறானு)* இது மேனேஜர்
எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு எருமை மாட்டுமேலே மழை பெய்த கதையாக மீண்டும் மீண்டும் பதிவுகளை படித்தும் பின்னூட்டமிட்டும் (இதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்தும்) நட்பு வட்டத்திற்கு நம்மை அடைத்துக்கொள்வதே ஒரு சுகம்தான்.
அந்த வகையில் பிளாக்கர்ஸ் நண்பனாக எனக்கு விருதை தந்த நண்பர் ஸ்டார்ஜனுக்கு என் நன்றி....
இதையே நான் இந்த பிளாக் உலகில் நல்ல நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள், அவர்களின் நட்பை நிலைநாட்டிடும் பொருட்டு (இல்லாட்டியும் அவர்கள் நம் நண்பர்கள்தான்) இந்த அவார்டை கொடுத்து நட்பூக்கள் மலர்ந்து வாசனை வீசட்டும் உங்கள் பிளாக்கிலும்..
1. ஆதவா... நல்ல நண்பன், என் பதிவுகளை அதிகம் ரசித்து ஒரே பின்னூட்டத்தில் அத்தனை புகழ் பாடுவார்
2. அ.மு. செய்யது... நல்ல நண்பர், பதிவுகளை பிரிச்சி மேஞ்சிடுவார்.
3. தமிழரசி... கவிதைகளின் காதலி இவர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்
4. ராகவன்... நைஜீரியாவாக இருந்தாலும் பாசத்தால் என் பக்கத்தில் எப்போதும் இருப்பவர்
5. கலையரசன்... எப்பவும் தன்னை சுற்றியுள்ளவரை கல கலனு வைத்திருப்பவர்
6. பாலா... இவர் கப்பலின் நாயகன், கடலின் அதிசியம் போலவே இவர் கவிதைகளும் புதிராகவே இருக்கும்.
7. ராஜேஸ்வரி... எனக்கு சிறந்த பிளாக் என்று சொல்லி பட்டாம்பூச்சி விருது தந்தவர், என் பதிவுகளை ரசித்து திருத்தவும் செய்பவர்
8. காயத்திரி... கவிதைகளிலே பேசுபவர், கும்மியில் தலைசிறந்தவர்
9. வால்பயன்.. பெயரில் உள்ளது போலவே கலாய்ப்பதிலும் தலைசிறந்தவர்...
10. நிலாரசிகன்.. இவர் கவிதைகளில் கவரப்பட்டேன்...
அவசரமான இந்த உலகத்தில் நட்புகளை பரிமாறிக்கொள்ளும் இந்த புனித தினத்தில் இந்த விருதுகளை கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்