நேற்று விஜய்டீவீயில் நித்யானந்தா பற்றி முழுதுமாக அறிந்துக்கொள்ளமுடிந்தது. மக்கள் அடைக்கலம் புகுந்ததுக்கு முக்கியமான மூலதனம் மனதுக்கு தேவையான அமைதி, அது தியானம், மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது தெரிகின்றது. இப்போதுல்ல அவசர உலகத்துலே நம்மளையும் நிலை நிறுத்திக்கனும்னா மனதுக்கு தேவை அமைதி, இதுலே வெற்றிப்பெற்றால் இந்த உலகத்தோடு ஒன்றி வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த முடியும். ஒருத்தர் ஓய்வு பெற்ற தமிழாசிரியராம், அவருக்கு உடல்நிலை சரியில்லையாம், மருத்துவர் அட்வைஸ்படி அவர் தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளனுமாம் அதோடு ஓய்வும் தேவையாம். இருந்தாலும் இதெல்லாம் இல்லாமல் நித்த்யானந்தா தியான பீடத்துக்குசென்றால் எல்லா நோயும் குணமாகிவிடுதாம்.
இப்போ உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்லும் பட்சத்தில் ஆன்டிபயடிக் மாத்திரை கொடுத்து ஓய்வு எடுத்தால்தான் குணமாகும் என்று சொல்லுவார். அப்படி ஓய்வு எடுக்காதபட்சத்தில் எவ்வளவு மாத்திரை எடுத்தாலும் குணமாக நெடுநாட்களாகும் அதே சமயம் இந்த மருத்துவரிடம் சென்றால் குணமாகிவிடும் என்ற எண்ணத்துடன்சென்றால் அது நிச்சயம் நடக்கும் ஏனென்றால் மனக்கட்டுப்பாடுதான் நோய் குணப்படுத்துவதில் முக்கிய காரணம். இந்த மனதை ஒருநிலைப்படுத்தும் ஒரு யுக்தியைதான் நித்தி தியானபீடத்தில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது, இவருடைய நோய் குணமாவதற்கு ஒன்று அங்கு சென்றால் குணமாகும் திடமான நம்பிக்கை, இரண்டு யோகா. இதன் அடிப்படை காரணங்களை தெரிந்துக்கொண்டால் தன் வீட்டிலேயே செய்யலாம் அங்குதான் செல்லவேண்டும் என்ற அவசியம் ஏற்படாது, ஆனால் அவ்வாறு எத்தனை பேர் இதை தினமும் முழுமனதுடன் செய்யமுடியும். நான் கூட எத்தனையோ முறை தினமும் மாலைவேளையில் குறைந்த பட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற என்னத்தில் ஒவ்வொரு நாளும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது, நம்மில் எத்தனை பேர் நினைத்தது செய்கிறோம், அப்படியே செய்தாலும் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்?
இதற்காகதான் அந்தந்த மதத்தினர் தாங்களுடைய வழிபாட்டுத்தளங்களை நோக்கி செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சர்ச்சில் மண்டியிட்டு தியான நிலைக்கு செல்வதும், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் மனதை ஒருநிலைப்படுத்தி இறை தொழுவதும், இந்துக்கள் கோயிலில் இரு கைக்கூப்பி மனதை ஒருநிலைப்படுத்துவதும், இன்னும் பிற மதத்தவர்கள் இதேநிலை கடைப்பிடிப்பதும் நடந்துவருகிறது.
இந்த லாஜிக்கை சாமியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர் மக்களின் மனநிலைகளை நன்கறிந்து அவர்களை தியானம் (யோகா) என்ற நிலைக்குட்படுத்தி அதன்மூலம் அவர்களை தம் திறமைவாந்த பேச்சாற்றலால் தன் வசியப்படுத்தி நிறைய காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள்.
சென்ற வாரம் இன்று பெரியளவில் பாப்புலராகிக்கொண்டிருக்கும் "இமாமி" கம்பெனியின் முதளாலி சொல்லியுள்ள ஒரு பேட்டியில் தவறாமல் செய்யும் நான்கில் முதலாவதாக தினமும் தவறாமல் 1 மணிநேரம் செய்யும் தியானம் எனப்படும் யோகா, இதுவே இவருடைய பிஸினெஸ் வெற்றிக்கும் அதனால் தொழிலாளர்களையும், வியாபாரயுக்திகளையும் எளிதாக கையாள முடிகிறது என்கிறார்.
குடும்பத்தில், அலுவலில், பிஸினெஸில், கணவன்/மனைவிக்குள், காதலர்களுக்குள் இப்படி எத்தனை பிரச்சினைகளில் தினமும் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள். ஒருத்தனுக்கு பணம் இல்லாமல் பிரச்சினை, ஒருத்தனுக்கு பணமே பிரச்சினை, இப்படி நிறைய. இந்த காலகட்டத்தில் மனதுக்கு அமைதி தேவைப்படுது, மனிதன் எதையோ தேடி அலைகிறான், அப்போதுதான் சாமியார்களின் அறிமுகம் கிடைக்கிறது. அங்கு செல்கிறான், அவர் இவனை தியானத்தில் ஈடுபடுத்துகிறார், ஆன்மீக வழியை சொல்லிக்கொடுக்கிறார், தன் பேச்சிலில் அவனை மெஸ்மரிசம் செய்கிறார், கடைசியில் தனக்கு எல்லாமே கிடைத்தாமாதிரி உணர்கிறான் முடிவில் நீ தான் என் கடவுள் என்று நம்புகிறான். அந்த இடத்தில் ஒரு சாதாரன மனிதன் உண்டு, உறங்கி, மலஜலம் கழித்து, இச்சைகளை தீர்த்துக்கொள்பவன் கடவுளாகிறான். அந்த கடவுளுக்கு தான் நினைத்ததைவிட பணம், புகழ் தானாக வந்து சேருகிறது, அந்த சுகத்தில் மிதக்கும் அந்த கடவுளுக்கு மனது வேறு பக்கமும் திசை மாறுகிறது. இது வரை கனவுளேயும், போஸ்டரிலேயும் பார்த்த தனக்கு கைக்கெட்டும் தூரத்தில் எல்லாமே அமைகிறது, தான் கற்பித்த ஆன்மீகத்திலிருந்து மனது இடரி சாதாரண மனிதனுக்கேயுறிய வேலைகள் செய்யதூண்டுகிறது. இதிலேர்ந்து அவனும் மனிதன்தான் கடவுள் இல்லை என்பது தெளிவாக புரிகிறது
இது எல்லாமே தெளிவாக தெரிந்தும் ஆழ்மனதுக்கு கேட்கமாட்டேங்குது இன்னமும் இது எங்கோ தப்பு நடந்திருக்கு, இவர் இன்னும் எங்களை மாதிரி நம்புனவங்களுக்கு கடவுள் தான், எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட பொய் என்றும், தன் பெற்றோரே தன் மகனை மீட்டுத்தர சொல்லி போலீஸில் கம்பளெயின் கொடுத்தும் இதுதான் எனக்கு சொர்க்கம், இதுதான் என் வாழ்க்கை என்று சொல்லும் இளைஞர்களின் மனநிலையை யாரால் மாற்றமுடியும்? அவர்களால் இது எல்லாம் பொய் என்று அவர்களின் ஆழ் மனதுக்கு அறியும் வரை...
மக்களுக்கு சுய அறிவு என்ற ஒன்று கடவுளால் தரப்பட்டிருக்கும் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்தாதவரை இது மாதிரி மனிதக்கடவுள்களின் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டேதானிருக்கும்.