உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்....
கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
அதனால்தான் என்னை தெரியவில்லையோ..(உணரவில்லையோ)?
ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?
இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
