இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)
-
உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் *மெய்ப்பாட்டியல்* *அமைந்துள்ளது*
உணர்வுகளை ஆங்கிலத்தில் Emoti...
1 week ago