அவசரமான இந்த உலகத்துலே எல்லோரும் பணத்தை தேடி அலைந்துக்கொண்டிருக்கோம், பணம்தான் வாழ்க்கைக்கு இன்றியமயாததாகிவிட்டது என்ப்பது யாவரும் அரிந்தது, அப்படி இருக்கயில் சாதாரணமாக 500க்கும் 1000க்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நம் மக்களை மில்லியனுக்கும் பில்லியனுக்கும் அதிபதியாக மாற்றுகிறேன் வாருங்கள் என்றால் யார்தான் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள், நானும் அதையே அழைக்கிறேன் இந்த பதிவின் மூலம் உங்களையும் மல்டி பில்லியனர்களாக பார்க்க எனக்கும் ஆசைதான்.
இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு ரொம்ப சிம்பிளாக ஷாப்பிங்க் செய்யும் காலம் வந்துவிட்டது, அதற்கும் ஒருபடி மேல்போய் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகம நம்மூரில் அதிகம் புலக்கத்தில் வந்துவிட்டது. அப்படி இருக்கயில் இங்கெ பாருங்களேன் பணத்தை கட்டு கட்டாக தூக்கினுப்போய் ஷாப்பிங்க் பண்ணுறாங்க, எங்கேனு கேக்குறீங்களா ஜிம்பாப்வே நாட்டில்தான்.
இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம்
பார்ட்டி கொடுத்துட்டு பில் செட்டில் பண்ண போறாருங்க, இப்போ நெனச்சிருப்பாரு ஏன்டா பார்ட்டிக்கொடுத்தோம்னு
அவரு பார்ட்டிவெச்சு செலவு பண்ணதுக்கு கட்டவேண்டிய பில்(ரஷீது)

100$ பில்லியன் நோட்டு இது, அட இப்போ $100 ட்ரில்லியன் நோட்டு வெளியிடப்போறாங்களாம்
3 முட்டையோட விலை 100$ பில்லியன் தான்
ஷோ ரூம்லே ஒரு கால்சட்டை(PANT) க்கு விலை என்னா என்று TAG வைத்திருக்கிறார்கள்
பள்ளிக்குழந்தைக்கு கொடுக்கும் பாக்கெட் பணமாம்
பள்ளிக்கு போகும்போது புத்தக மூட்டையை சுமக்கிறோம், பள்ளிவிட்டு வந்தவுடன் கடைக்கு சாமான் வாங்க சொல்லி இப்படி பணமூட்டைய தாராங்க.. எங்களுக்கு ஒரு விடிவே இல்லியா..?
$1 ட்ரில்லியன் ஜிம்பாப்வே நோட்டு $33 USD க்கு சமமாம்
முக்கியமான விசயம் என்னான்னா 1980 ம் ஆண்டுகளில் $1 ZMD 1 இங்லாந்து பவுண்ட்டுக்கு சமமாம். இப்போ..???
எல்லாம் "அவங்க" தான் இந்த உலகத்தையே கட்டியாளனும்னு கங்கணங்கட்டிக்கினு இருக்குறதுனாலே வார வினைக
விதை விதைத்தவன் ஒரு நாள் வினையருப்பான்...