கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்..
கடந்த மே மாதம் நான் எழுதிய 4 இடுக்கைகள்(பதிவுகள்) காணாமல் போய்விட்டது, அதனோட லின்க் கிளிக் செய்தால் "Page Cannot be Found" என்று வருகிறது, உடனே என் வலைப்பக்கம் சென்று பார்த்தால் மே 25 க்கு பிறகு பதிவிட்ட என்னுடைய "போட்டிகள்" மட்டுமே இருக்கிறது மற்ற பதிவுகளை (குறிப்பாக "கில்லி") காணவில்லை, அதை நான் முன்னரே லக்கிலுக் அறிமுகப்படுத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பியிருந்தேன். இதனால் என்னுடைய சந்தேகம் வலுக்கிறது அதாவது அதை யாரோ திருடிவிட்டு அது எடுக்கப்பட்ட சுவடு தெரியாமல் அழித்துவிட்டார்கள் என்று.
வலைத்தளம் முழுதும் திருடப்படுவது போய் இப்போதெல்லம் முக்கியமான பதிவுகள் மட்டும் திருடப்படுகிறது. இதை தடுக்க ஆளேயில்லியா..?
பதிவுகள் போனது மட்டுமின்றி பின்னூட்டங்களும் சேர்ந்து போனதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயம்.
அன்பார்ந்த நண்பர்களே/தோழிகளே உங்களுக்கு அதை எப்படி Retrieve பண்ணுவது என்றும் இனிமேல் மற்ற பதிவுகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், மற்ற நண்பர்கள் அதை ஃபாலோ பண்ணி இந்த செயல்களிலேர்ந்து தன் பதிவுகளை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
மீள் பதிவு போடலாம்.. இருந்தாலும் இழந்ததை திரும்ப பெற்றால் மகிழ்ச்சியே..!
ஒரு எச்சரிக்கைக்காகவே இந்த பதிவு....
திருடப்பட்ட பதிவுகள்..!
By
அப்துல்மாலிக்
at
Jun 6, 2009
வகை எச்சரிக்கை
20 கருத்துசொல்ல:
ஹைய்யோ வலையில் வார்த்தைத் திருட்டா?
தமிழ் நெஞ்சம் இதை பலமுறை எச்சரித்து இருக்கிறார்.. நாம் தான் எச்சரிக்கை உணர்வு இல்லாமல் இருந்தோம்...ஆமாம்பா இதற்கு தீர்வு நம்ம பென்சில் ஆசிரியர் பதிவில் இருக்கு இல்லையேல் ஆதவாவை நாடலாம்ப்பா....
ஆகா!! இது இப்படி எல்லாம் நடக்குதா!!
கொஞ்ச நாள் முன்னால தான் என்னோட பதின் மரக்கிளை ntamilலால முற்றிலும் அழிந்து விட்டது. நண்பரே அது போல் உங்க தளத்தில் ஏதும் வைரஸ் மால்வோர் இருக்கா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆதே போல்ல் நண்பர் கவின் அவர்களது தளத்திலும் இடுகைகள் அனைத்தும் நீங்கள் சொல்லுவது போல் திடீரென அழிந்து விட்டதாக சொன்னார் அவரும் இப்போது புதிதாகத் தான் துவங்கி உள்ளார்.
நீங்கள் கூறுவது போல் திருட்டா இருக்காது என்று எண்ணுகிறேன் (அப்படி இருந்தாலும் இருக்கலாம் தெரியவில்லை) நண்பர்களிடம் கேளுங்கள் இதை மீட்பதற்கான வழி இருக்களாம் மேலும் உங்கள் தளத்தை
இப்பவே நன்கு சரிபார்த்துக் கொள்ளுங்கள் வைரஸ் இருக்கா என்று.
ம்ம்ம் இங்கையுமா
Disgusting, இதை எப்படியாவது நிறுத்தனும்.
ada enna sollrenga nejamava
என்ன மச்சான், கில்லியை காணோமா? ஸ்டெம்பாவது(கிட்டி)பத்திரமா இருக்கா?
யாராவது இந்த பிரச்சனைக்கு ஒரு விடை சொல்லுங்கப்பா
rose said...
ம்ம்ம் இங்கையுமா
ஏன் உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கா?
அட இது வேறயா!
அடப்போப்பா....என் பிளாக்கே திருடு போச்சு...நீ என்னவோ இடுகை போனதுக்கே அழுவுற!
:))
இதென்ன பிரச்சினையா இருக்கே!! தேவையானதை மட்டும் துக்கிட்டானுங்கன்னா ஆச்சரியம்தான்!!
நம்மளுது ஒன்னும் திருடு போகலையே?
திருடுற அளவுக்கு நம்ம கிட்ட விஷயம் ஒன்னும் இல்லையோ ?
வலை திருட்டில் இப்படியெல்லாமா..?
அதிர்ச்சியாக இருக்கிறது...
நீங்கள் அதன் கருத்துகளை குறிப்பிட்டும் ஒரு பதிவு போட்டு விடுங்கள்..
ஓ..
இப்பிடில்லாம் நடக்குதா???
ஐயோ திருடு போயிடுச்சா?
ரொம்ப கஷ்டமா போய்டுச்சுங்க.
ஜமால் உதவி செய்வார்!
அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்..அதுவும் உங்கள் பதிவுகளில் நான் அதிகம் ரசித்தது அந்த கில்லி கதையை தான்.
வலைப்பதிவு திருட்டுகள் சாதாரணமாக நடந்து வரும் அபாயங்கள் அதிகம் இருப்பதால்
அனைவரும் ஒரு டம்மி வலைப்பூ வைத்து கொள்வது நலம்.
மெயின் வலையில் போடுவதற்கு முன்பு, ஒரு வெள்ளோட்டமாக அந்த டம்மி வலைப்பூவில் செக் செய்து விட்டு அதை அப்படியே டிபாஃப்டில் சேமித்தும் வைத்து கொள்ளலாம்.
சமீபகாலமாக சில நண்பர்களின் வலைப்பூக்கள் தான் திருடு போயின, இப்போது குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் திருடு போவது அதிர்ச்சியான தகவல் தான்...
இதற்கான மாற்று நடவடிக்கைகளை சிந்திப்பது பதிவர்களின் இப்போதைய நிலை...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாலிக்.
ஆஹா.. இதுவேறையா..
ஆனா.., என் பிளாக்ல இப்டி பண்ணுற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லாததால நாங்க எல்லாம் இதுக்கு பயப்பட வேண்டியதில்லை..
உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..
அடி ஆத்தீ....
Post a Comment