என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நட்புகளின் காதலன்....!

"வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?"

--நன்றி நிலா ரசிகன்..

இந்த வரிகள் என்னை அதிகம் பாதித்தது உண்மை, உறவுகளை விட நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன் நான்.

நட்பால் உலகம் அறிகிறான்
நட்பால் வாழ்கையை படிக்கிறான்
நட்பால் தற்பெருமையை அழிக்கிறான்
நட்பால் உதவும் மனப்பான்மை பெருகிறான்
நட்பால் எல்லாமே கிடைக்கிறது.....

அந்த நட்புகளை பிரிந்து இன்று என்னைபோல் எத்தனையோ நண்பர்கள் த‌விப்பார்க‌ள்.. இதற்கு மனது அதே புதிய நட்பை நாடும் இவ‌ற்றையெல்லாம் ஓர‌ள‌வேணும் குறைப்ப‌தில் இந்த‌ப‌திவுக‌ளும், ப‌திவ‌ர்க‌ளும் முக்கிய‌ ப‌ங்கு ஆற்றுகின்ற‌ன‌. இந்த‌ ந‌ட்பும் இணைய‌ம் இருக்கும் வ‌ரைக்கும்தான்.. க‌ணினி ஆஃப் ஆனாலோ, இணைய‌ இணைப்பு துண்டிக்க‌ப‌ட்டாலோ ந‌ம் ந‌ட்பும் அத்தோடு லாகாஃப் ஆகிவிடும்.

இருந்தாலும் ம‌ன‌து அதிக‌மாக‌ இணைய‌ப்ப‌க்க‌ம் நாடுகிற‌து ந‌ண்ப‌ர்களின் ப‌திவையும், ஆன்லைன் சேட்டிலே பேசுவ‌த‌ற்காக‌வும்.

என்னை க‌ட்டினிய‌லா இல்லை இந்த‌ க‌ம்ப்யூட்ட‌ரை க‌ட்டிக்கிட்டிய‌லா * இது ம‌னைவி

என்னை பெத்தியலா இல்லை இந்த‌ க‌ம்ப்யூட்ட‌ரை பெத்தியலா * இது என் பைய‌ன்

என்னாடா பேசாம‌ல் உம் உம் உம் என்று சொல்லிக்கிட்டிருக்கே * இது தெரிந்தவர்கள், தொலைப்பேசியில் பேசும்போது க‌வ‌னம் முழுது ப‌திவில் இருப்ப‌தால்

அசைன்மெண்ட் 10 நிமிஷ‌த்துலே கொடுக்க‌னும், அதை விட்டுவிட்டு ஏதோ செய்துக்கிட்டிருக்கே (அலுவ‌ல‌க‌த்தில் க‌ணினி திரையிலே ஆங்கில‌த்தை த‌விர‌ த‌மிழ் மொழியை பார்த்த‌வுட‌ன்  நினைத்துவிடுவாங்க‌ சொந்த‌க்க‌தை பார்க்கிறானு)* இது மேனேஜ‌ர்

எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு எருமை மாட்டுமேலே மழை பெய்த கதையாக மீண்டும் மீண்டும் பதிவுகளை படித்தும் பின்னூட்டமிட்டும் (இதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்தும்) நட்பு வட்டத்திற்கு நம்மை அடைத்துக்கொள்வதே ஒரு சுகம்தான்.

அந்த வகையில் பிளாக்கர்ஸ் நண்பனாக எனக்கு விருதை தந்த நண்பர் ஸ்டார்ஜனுக்கு என் நன்றி....

இதையே நான் இந்த பிளாக் உலகில் நல்ல நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள், அவர்களின் நட்பை நிலைநாட்டிடும் பொருட்டு (இல்லாட்டியும் அவர்கள் நம் நண்பர்கள்தான்) இந்த அவார்டை கொடுத்து நட்பூக்கள் மலர்ந்து வாசனை வீசட்டும் உங்கள் பிளாக்கிலும்..

1. ஆதவா... நல்ல நண்பன், என் பதிவுகளை அதிகம் ரசித்து ஒரே பின்னூட்டத்தில் அத்தனை புகழ் பாடுவார்

2. அ.மு. செய்யது... ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர், ப‌திவுக‌ளை பிரிச்சி மேஞ்சிடுவார்.

3. த‌மிழ‌ர‌சி... க‌விதைக‌ளின் காத‌லி இவ‌ர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்

4. ராக‌வ‌ன்... நைஜீரியாவாக‌ இருந்தாலும் பாச‌த்தால் என் ப‌க்க‌த்தில் எப்போதும் இருப்ப‌வ‌ர்

5. க‌லைய‌ர‌ச‌ன்... எப்ப‌வும் த‌ன்னை சுற்றியுள்ள‌வ‌ரை க‌ல‌ க‌லனு வைத்திருப்ப‌வ‌ர்

6. பாலா... இவ‌ர் க‌ப்ப‌லின் நாய‌க‌ன், க‌ட‌லின் அதிசிய‌ம் போல‌வே இவ‌ர் க‌விதைக‌ளும் புதிராக‌வே இருக்கும்.

7. ராஜேஸ்வ‌ரி... என‌க்கு சிற‌ந்த‌ பிளாக் என்று சொல்லி ப‌ட்டாம்பூச்சி விருது த‌ந்த‌வ‌ர், என் ப‌திவுக‌ளை ர‌சித்து திருத்த‌வும் செய்ப‌வ‌ர்

8. காய‌த்திரி... க‌விதைக‌ளிலே பேசுப‌வ‌ர், கும்மியில் த‌லைசிற‌ந்த‌வ‌ர்

9.  வால்பயன்.. பெயரில் உள்ளது போலவே கலாய்ப்பதிலும் தலைசிறந்தவர்...

10. நிலாரசிகன்.. இவர் கவிதைகளில் கவரப்பட்டேன்...

Award_Image[2]

அவசரமான இந்த உலகத்தில் நட்புகளை பரிமாறிக்கொள்ளும் இந்த புனித தினத்தில் இந்த விருதுகளை கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்

தூக்கம் விற்று வாங்கிய வரிகள்..!
என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது
----------------------------------


பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

-----------------------------------தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

-----------------------------------உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

-----------------------------------

தமிழர்களாகிய நம் நிலை..!

நான் கடந்த ஒரு வருடமாக அனைத்து வலைப்பதிவுகளையும் படித்தும் கடந்த 5 மாதமாக நானே வலைத்தளம் ஆரம்பித்து ஏதோ தெரிந்ததை எழுதி வருகிறேன்.. இதுவரை படித்ததில் நம் பதிவர்கள் ஏதாவது ஒருவகையில் ஏதாவது அப்போதைக்கு பிரபலமாக உள்ள ஒரு சம்பவத்தை பற்றி தன் எழுத்தின் மூலம் உள்ளக்குமுறலை கொட்டுகின்றனர், அதே வேகத்தில் வெகுண்டெழுந்து அந்த பதிவு சம்பந்தமாக தானும் உள்ளக்குமுறலை பின்னூட்டம் மூலம் இடுகிறோம். அப்புறம் அதோடு மறந்து அவரவர் தத்தமது வேலைகளில் பிஸியாகிவிடுகிறோம், அதற்குப்பிறகு யாராவது அதைப்பற்றி நினைக்கிறோமா, அந்த பதிவை மூடுகின்றதோடு அதைப்பற்றிய கருத்தும் சேர்த்து மூடப்படும் நம் நினைவுகளிலிருந்து..

கடந்த சில நிகழ்வுகளைப்பார்த்தோமேயானால் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் தமிழர்களாகிய நாம் தான்.

கடந்த 4 வருடத்திற்கு முன் காவேரி நதி நீர் கேட்டு எத்தனைப்போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வியாபாரங்கள் முடக்கப்பட்டன.. தமிழ்நாட்டில் திரைப்படம் சம்பந்தப்பட்ட தொழிளாலர்களின் போராட்டம், நடிகர் நடிகைகள் ஒரு பகுதி மேலே போய் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை, சென்னையையும் நெய்வேலியையும் இரண்டாகப்பிளந்த மக்கள் கூட்டம் (நடிக/நடிகைகளை காண்பதற்காக மட்டும்) அதை நேரடியாக ஒளிப்பரப்பு செய்து விளம்பரமாக ஒரு நொடிக்கு இவ்வளவு பணம் என்று சம்பாதித்து கொழுத்த மீடியாக்கள், அதே கோரிக்கையை முன்வைத்து தனிமனித உண்ணாவிரத போராட்டம் அதிலேயும் கொழுத்த மீடியாக்கள், இப்படி எத்தனையோ.. அதன்பின் விளைவு >>???

அடுத்து.. ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், இதை அறிவித்த உடனே கன்னட விவசாயிகளெல்லாம் ஒன்னு சேர்ந்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று வினோதப்போராட்டமெல்லம் செய்தாங்க, அதைப்பார்த்து கொந்தளித்த நம் விவசாயிகளும் அதோடு சேர்ந்து திரைப்பட துறையினரும் தம் பங்குக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள், இதைக்கண்ட கன்னட திரைத்துறையினரும் எதிர் உண்ணாவிரதம் இருந்தார்கள்.. இதன் மூலமும் தமிழர்களின் சொத்துக்களுக்கும், உயிர்களுக்கும் சேதம் விளைந்தது. குடிநீர் திட்டத்தை அமுல்படுத்து என்று இங்கேயும், அமுல்பத்தக்கூடாது என்று அங்கேயும்... இதையும் நேரடி ஒளிப்பரப்பு செய்து வழக்கம்போல் கொழுத்தது மீடியாக்கள். எல்லோர் முன்னிலையிலும் அமுல்படுத்தக்கூடாது என்று எதிர் உண்ணாவிரதம் இருந்த‌ க‌ன்ன‌ட‌ ந‌டிக‌ர் ந‌டிகைக‌ள் இன்று இருதார‌ருமே ம‌ற‌ந்து இரு மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் ந‌ம் வாயில் லாலிபாப் வைத்துவிட்டு ந‌டித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.. அத‌ன்பின் விளைவு..>>???

கடந்த சில மாதங்கள் முன்பிலிருந்து புலிகளை அழித்தே தீருவோம் என்று ராட்சப்க்ஷே அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது, கண்டவர்களையெல்லாம் வெறிநாய்களை சுட்டு தள்ளுவது போல் கொன்று குவித்தார்கள், அரசியல் தலைவர்களாகிய‌  நம் மேன்மக்கள் இந்த விடயத்தை ஒவ்வொருவரும் கையிலெடுத்துக்கொண்டு நான் பெரியாளா இல்லை நீயா என்று தனது அரங்கேற்றத்தை தொடர்ந்தது. பேச்சுப்போர், வீண் பழி, கைது நாடகம், தனி ஈழம் அமைப்போம் என்ற வீண் புலம்பல், தனிமனித திடீர் உண்ணாவிரத நாடகம், தீக்குளிப்பு (மானிடர்க்கிடைத்த அற்புத வரமான உயிரை மாய்ப்பதற்கு நமக்கு எந்தவிதத்திலும் உரிமையில்லையடா, இப்போது அந்த குடும்பத்தை காப்பாத்துபவர் யார்),  நடிக/நடிகைகளின் உண்ணாவிரதப்போராட்டம், தனிமனித உண்ணாவிரதம், மத்தியரசுக்கு தந்தி, எத்தனையோ நம் பதிவர்களின் பதிவுகள் இப்படி எத்தனையோ பார்த்தாகிவிட்டது. அத‌ன் பின் விளைவு>>???

அடுத்து.. இந்த தேர்தலால் நாட்டின் அரசு தலைகீழாக மாறும், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு தராத அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவோம், ஆகாங்க்கே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், கட்சித்தாவல், கூட்டணி மாற்றம், தனி ஈழம் அமைப்போம், திடீர் உண்ணாவிரதம் இப்ப‌டியான‌ க‌ப‌ட‌ நாட‌க‌ம்.... என்ன‌ ந‌ட‌ந்த‌து.. த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஈழ‌ம் ஒரு பொருட்டு இல்லை, இவ‌ர்க‌ளை அந்த‌ ஆண்ட‌வ‌னால்கூட‌ திருத்த‌முடியாது என்று சொல்லும் அள‌விற்கு அதே ஆட்சி மீண்டும், ஈழ‌ப்பிர‌ச்சினை ஒரு சிறு எள் அள‌விற்கு யாரையும் பாதிக்க‌வில்லை. இவ்வ‌ள‌வு ப‌திவு எழுதி த‌ன் குமுற‌லை கொட்டியும் அத‌ன் பின் விளைவு>>????

நம் பதிவர்கள் எல்லாமே தற்கால/நிகழ்கால நிகழ்வுகளை எழுதி தன் மனக்கவலையை தெரிவித்துக்கொள்கிறோம், அதன் பிறகு அந்த சுவடே இல்லாதது மாதிரி அடுத்த காதல் கவிதைப்படித்தும், காமெடி சம்பந்தப்பட்டதை படித்தும் அதற்கும பின்னூட்டமிடுகிறோம்.

இந்த வலைபக்கம் நமக்கெல்லாம் ஒரு வரம், இது ஒரு திறந்த புத்தகம், தெரிந்ததை பதிகிறோம், பாராட்டுப்பெறுகிறோம். அதே சமயம் இந்த சமுதாயத்திற்காக என்னா செய்தோம்.

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.

இனிமேலாவது நம் வருங்கால தமிழ் சந்ததியினர்  எவ்வித போராட்டத்தாலும் பாதிப்படையாமல் தனது கவனத்தை நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதற்கு ஒரு வடிகாலாக அமையும்

ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு..

மைக்கேல் ஜாக்சன்..
இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை, இசையை விரும்புவர்கள் நிச்சயம் ஜாக்சனையும் விரும்புவார்கள், அந்தளவிற்கு தன் குரல் வளத்தாலும், நடனத்தாலும் (கும்ஃபூக்கு ஒரு புருஸ்லீ என்றால் நடனததுக்கு ஒரு ஜாக்சன்) அனைவரையும் தன் வசம் கட்டிவைத்தவர். இன்று அவர் வரலாறாக‌, அவருடைய ஒவ்வொரு அசைவும் நிச்சயம் ஒரு நடனவித்தையை சொல்லும்...

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..

 

3298415

1965ம் ஆண்டு ஜாக்சன் தன் 5 வது வயதில் மக்கள் முன் முதன் முதலாக கிறிஸ்தமஸ் அன்று இசை அரங்கேற்றம் செய்தபோது

 

 52590614

1969ம் வருடம் தன் ஆல்பமான Who’s Lovin You வெற்றிப்பெற்ற பின் அந்நாட்டு மாகாண தலைவரிடம் தன் குழுக்களுடன் ஆசிப்பெற்றபோது...

 

50787214

அந்த காலம் முதல் ரசிகர்களை தன் வசம் கட்டிவைத்திருந்திருக்கிறார்...

 

50462407

1984 ம் வருசம் மே மாதம் தன் புகழ் பெற்ற ஆல்பமான “Beat It” என்ற ஆல்பத்தினுடைய முக்கிய கருத்தான “குடித்துவிட்டு வாகனம் ஒட்டாதே” என்ற கருத்தை உலகம் முழுது பரப்புவதற்காக அப்போதைய அமெரிக்க பிரெஸிடென்ட் ரொனால்ட் ரீகனை சந்தித்தபோது..

.

88696481

1984 ஆகஸ்ட் மாதம் தன் உருவத்தையும், உடையலங்காரத்தையும் மாற்ற உதவிய நண்பியுடன்....

 

51533361

1994 ல் எடுக்கப்பட்டது, புகழ்பெற்ற எல்விஸுனுடை மகள் லிஸாமேரியை திருமணம் செய்துக்கொண்டு முதன் முதலாக புதாபஸ் ஏர்போர்ட் க்கு வந்தபோது...
இவர்களின் திருமண வாழ்க்கை இரண்டு வருடம் கழித்து சில பல காரணங்களுக்காக முறிந்தது...

 2031237

2001 ம் ஆண்டு ஜாக்சனின் Moon Walk ஆரம்பமானது..

 

watermarkcomp1

 ஜூன் 25, 2009 தன் 50 வது வயதில் ஒரு இசை சகாப்தம் பத்திரிக்கைகளின் அட்டைபடமாக மட்டுமே...


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே