என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பாசக்கார புள்ளைக(ஹ)...!

நான் பதிவெழுத வந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுதாகலே, அலுவலக ஆணிகளின் அட்டகாசத்தால் பதிவுலகத்தை விட்டே சென்றுவிடலாமென்று சில சமயம் தோண்றும், என்னை பதிவெழுத சொல்லி சிங்கைக்கு வரவழைத்து வற்புறுத்திய‌ என் நண்பன் நட்புடன் ஜமாலை நினைத்தால் ஆத்திரமாக வரும், ஏன்டா இப்படி என்னை மாட்டிவிட்டேனு அடிக்கடி நொந்துக்குவேன். இதை ஒரு வகையான போதை என்றே எண்ணுவேன். இதனால் நிறைய அலுவலக வேலைகளில் கவனக்குறைவுக்கும் ஒரு காரணம். கடந்த 2 மாத காலமாக என் வலைத்தளம் கேட்பாரற்று கவனிக்க ஆளின்றி கிடக்கிறது, என் கடைக்கு வருபவர்கள் கடையில் பழைய ஸ்டாக் இருக்கு என்று வெறுத்துப்போய் திரும்புவர்கள் ஏராளம். இருந்தாலும் என் அன்பர்களின் வலைத்தளங்களுக்கு போவதையும், படித்து கமெண்டிடுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, கிடைக்குற கேப்புலே லாரி ஓட்டிக்கிட்டு இருக்கிறேன். என் கடையில் பழைய ஸ்டாக் இருந்தும் நிரந்தர கஸ்டமர்களாக என் அன்பர்கள் 100 பேர் இருக்கிறார்கள் (100 லோவர்கள்), இந்த பாசக்கார மக்களுக்காக மீண்டும் ஏதாவது (இது வரை என்னத்த எழுதி கிழித்தேனு கேக்குறது வெளங்குது) எழுதலாமென்று இருக்கிறேன்.

பதிவெழுத வந்த காலத்தில் நான் மட்டும்தான் துபாயில் வலைத்தளம் வைத்திருக்கிறோம் என்று நானே பெருமைப்பட்ட காலம் உண்டு நானும் நிறைய பதிவுகளுக்கு சென்று லோவர் ஆகி தொடர்ந்து படிக்கும்வரை, இப்போ நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது.....:)))

அமீரகத்தில் இவ்வளவு பதிவர்கள் அதுவும் அண்ணாச்சி (இப்போதான் பதிவுலகத்துக்கு வந்து 5வது வருட விழா எடுத்தாங்க), குசும்பன் போன்ற பிரபல பதிவர்களை சந்தித்த பின் நான் வெறும் வெறும் பந்தாபார்ட்டினு தெரிஞ்சிக்கிட்டு அடக்கிவாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

அண்ணாச்சி நைஜீரியா சிங்கம் ராகவ் தன் குடும்ப சகாக்களுடன் துபாய் வந்திருந்தப்போது நான் ஒரு வாரம் ஊர் போய்விட்டு வந்த அன்று இரவு அவரை பார்க்கப்போய்ருந்த போதுதான் மற்ற அமீரகப்பதிவர்களின் ஒரு சிலர் அறிமுகம் ஏற்பட்டது, அதிலிருந்து பிரமாண்ட கூட்டத்திற்கு செல்லமுடியாமல், குறும்(பு) படம் வெளியாக காரணமாக இருந்த சுற்றுளாவுக்கு குடும்பத்துடன் இருந்ததாலும் போக முடியாமல் இருந்ததால்.. ராஸாண்ணாவோட அன்புத்தொல்லையால் கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸ் (ட்ரைலர் பார்த்து மிரண்டேன்) அன்னிக்கு கட்டாயம் போயாகவேண்டும் என்று சொல்லி குடும்பம் சகிதமாக வருவதாக வாக்கு கொடுத்திருந்தேன். திடீர் விருந்தாளிகளின் (அட நம்புங்கப்பா என் வாப்பா காலத்திலிருந்தே விருந்தாளிகளை நெஞ்சில் தாங்குவேன்) வரவால் நான் மட்டும் போவதாக பிளான் பண்ணி அவர்களுடன் மதிய உணவை (என்னிக்குமே வெள்ளி மதிய உணவை தங்கமணி கையாலே சாப்பிட்டு பழக்கம்) முடித்துவிட்டு டிரெஸ் மாற்றியதை கண்டு என் மகனின் அடத்தால் அவரையும் உடன் கூட்டிக்கினு கிளம்பினேன். அண்ணாச்சி சத்திரம் என்று சொல்லிருந்ததால் லொகேஷன் தெரியாமல் என்கிட்டே உள்ள சொச்ச பிளாக்கர்ஸ் ஃபோனில் அழைத்தாலும் எடுக்கவில்லை, அங்கே கண்ட கலீஜ் டைம்ஸ் பேப்பர் விற்பவரிடம் சத்திரம் எவடடுண்டு நு மலையாளத்தில் சம்சாரிச்சால் எனக்கு சத்திரம் அறியாது பத்திரம் மாத்திரம் அறியும் நு சொல்லியதை கேட்டு என் மகன் கூட சிரித்துவிட்டார்.

ஒரு வழியா குசும்பனை ஃபோனில் பிடித்து அண்ணாச்சி வீட்டை அடைந்தால் அவரோட ஃபிளாட்டைதான் சத்திரம் என்று சொல்லிருக்கிறார், நான் கூட இந்த விழாவுக்காக ஒரு சத்திரத்தை வாடகைக்கு பிடித்துவிட்டார்கள் என்று நினைத்தேன். தன் ஃபிளாட்டை பதிவுலகத்திற்காக சத்திரமாக்கிய அண்ணாச்சியை இங்கே நினைவு கூறுகிறேன்.

இப்போ எதற்கு இத்தனி கதை என்று கேட்பது தெரிகிறது. இந்த பதிவர்களின் சந்திப்பின் மூலம் நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.


தாய்நாட்டை விட்டு வந்து மற்ற மொழிகளுடன் உறவாடி, அளவாவி நம் தாய்மொழியின் மடியில் தவழ்வதுபோல்..பிரபல எழுத்தர் இலங்கை தமிழ் வாழ் மக்களின் வாப்பா என்று அழைக்கப்படும் திரு. ஜின்னா ஷர்புதீன் அவர்களை கண்டதில் சந்தோஷம், அவர் சொன்னது போல் மதங்களையும் தாண்டி மொழி நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது. சில மொக்கைகளையும், அரட்டைகளையும் தாண்டி அங்கே இலக்கியமும், வெண்பாவும் பேசியதை கேட்டதில் ஆச்சரியம், வியப்பு.. விடைபெரும்போது மனதில் புது வித புத்துணர்ச்சி பரவவைத்த என் நண்பன் ஜமாலுக்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.

நிர்வாண இரவுகள்..!

நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத

விடியல்....

என்றென்றும் இருள்தான்.... ??


டிஸ்கி: இது என்னுடைய பதிவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டதால், இப்பொழுது மீண்டும் உங்களுக்காக‌

பெண்களின் சதவிகிதம் குறைவு?

சென்ற மாதம் ராஜஸ்தானில் ஒரு பெண்ணை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்ற அதிர்ச்சிகரமான நம்பத்தகுந்த செய்தி. அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் பெண்கள் குறைவாக இருப்பதாகவும், பெண் கிடைப்பதில் (அது எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்) மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இந்த நிலை தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிறுக்கிறது என்பதுதான் வேதனை

இது பற்றி எஸ்.ஐ.ஆர்.டி (SIRD – State Institute of Rural Development) என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு தீவிர விசாரனையில் இறங்கியது, அது வெளியிடும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது அதன்படி, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1000 ஆண்களுக்கு நிகராக 952 பெண்களே இருக்கிறார்கள், 1969 ல் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் (அதற்காகதான் முன்னோர்கள் 1 க்கும் மேற்பட்ட கல்யாணம் செய்துக்கொண்டார்களோ?) இந்த் கணக்கீடு வரும் ஆண்டுக‌ளில் பெண்க‌ளின் எண்ணிக்கை மேலும் குறைந்து 469 ஆகும் என்ற‌ அதிர்ச்சிக‌ர‌மான‌ த‌க‌வ‌லை வெளியிட்டுள்ள‌து.

இத‌ற்கு அவ‌ர்க‌ள் கூறும் கார‌ண‌ங்க‌ள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று தெரிந்துக்கொண்டு அந்த உயிரை கருப்பையிலேயே வைத்து அழித்துவிடுவது, இன்று குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்து அதற்கு தகுந்தார்போல மருந்துவகைகள் கொடுத்து ஆரோக்யமான பிரசவத்திற்கு வழிவகை செய்யும் தற்போதைய ஸ்கேன் செய்யும் முறை இன்று ஸ்கேன் செய்தவுடன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று சொல்லப்படுகிறது, அதை வைத்து பெண் என்றால் மேற் சொன்ன முறையின் மூலம் கரு அழிக்கப்படுகிறது. ஸ்கேன் வசதி இல்லாத காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அது பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள்

எஸ்.ஐ.ஆர்.டி என்ற தன்னார்வத்தொண்டின் தொண்டர்கள் நிறைய அடித்தட்டு கிராமங்களுக்கு சென்று களப்பணி செய்து நிறைய மக்களுக்கு பெண்குழந்தைகளின் மகத்துவத்தை பற்றி எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம் ஓரளவேனும் இந்த பெண் சிசு கொலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வரிக்கை சொல்லுகிறது.

100% கருத்தரித்தலின் போது 45% ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் (அ) ஒரு குழந்தை பிறந்து 2 மாதத்தில் மறு கருத்தரிப்பு (அ) பொருளாதார, வேலை சூழ்நிலையால் குழந்தை பிறப்பு தள்ளிவைப்பு இந்த காரணங்களால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, 12% பெண் குழந்தை என்று தெரிந்து க‌ரு கொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து, மீதி 43% விரும்பி குழ‌ந்தை பெற்றுக்கொள்ள‌ப்ப‌டுகிற‌து. தற்போது அரசின் கடுமையான தண்டனை சட்டத்திற்கு பிறகு இரண்டு வெவ்வேறு உறுதிமொழி பத்திரங்களில் என்ன குழந்தை என்று சொல்லமாட்டோம் என்று மருத்துவரும், என்ன குழந்தையானாலும் ஆரோக்யமா இருந்தால் சரி அது என்ன குழந்தை என்று மருத்துவரை நச்சரித்து கேட்க மாட்டோம் என்று பெற்றோரும் கையெழுத்திட்ட பிறகே கர்பினிப்பெண் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்படுகிறாள்.

ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 15% பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் அந்த 15% எப்பவும் வெற்றிடமாகவே இருக்கிறது, இந்த கணக்கீடு பிற்காலத்தில் பற்றாக்குறை 1000 க்கு 952 என்று நிற்கிறது. பெண் சிசு கொலைக்கு சொல்லப்படும் முதல் காரணம் வறுமை, வரதட்சணை. இந்த இரண்டு "வ" க்கும் ஆண் பிள்ளைக்கு சாதகமானதே அதனாலே ஆண் குழந்தை என்றாலே போற்றி பெருமிதம் கொள்கிறார்கள், இளைஞர்கள் வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிப்பட இருக்கவேண்டும்.

இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம்.

வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழ‌ந்தைக‌ளாக‌ இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி ம‌கிழ்வார்க‌ள், இந்த‌ நில‌மை ந‌ம்நாட்டிலும் வ‌ர‌வேண்டும், பெண் என்ற‌ பொக்கிஷம் பாதுகாத்து போற்றப்படவேண்டும்!

டிஸ்கி: இது என்னுடைய 50வது பதிவு, இதன் மூலம் சமூக அவலத்தை வெளிச்சம்போட்டுக்காட்டுவதில் பெருமையடைகிறேன்.

தேவதை தந்த வரம்..!

கடந்த வாரம் முழுதும் நம் பதிவர்கள் அனைவரும் தேவதையிடம் வரம்கேட்டு பதிவிட்டனர், அதுலே என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தினர். தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி, ஒரு வித்தியாசமா தேவதை எனக்கு வரம் தந்தது. நடு நிசி ஜாமத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தபோது ஒரு வித்தியாசமான வாசனை அறை முழுதும், யாரோ தட்டி எழுப்பியதுபோல் திடீரென எழுந்து உட்கார்கிறேன், தங்கத்தினால் முழுதும் அலங்கரிக்கபட்டு தக தக என மின்னி கண்ணை பறிக்க ஒரு அழகான தேவதை, கண்கள் விரிய நம் பதிவர்களின் பதிவுகளில் படமாக பார்த்த எனக்கு இப்போது நேரில் ஆச்சரியம் இருக்காதா என்னா?
அந்த தேவதை எனக்கு மிகப்பெரிய வரம் கொடுத்தது அதாவது இந்த நிமிடம் முதல் நீதான் உலகத்திலேயே பணக்காரன்!!!! அன்று முதல் என் வாழ்க்கை மாறியது...
வாசனை திரவியம்(அத்தர் மற்றும் சென்ட்) நிறைந்த என்னுடைய நீச்சல் குளம்

அந்த நிலவை வாங்கிடுவேன், அது எனக்கு மட்டும்தான் சொந்தமென்று கொண்டாடுவேன்நான் பயணம் செய்யும் வாகனம் இது, இதுலேதான் என்னுடைய அவசர‌ பிஸினெஸ் மீட்டிங்


என்னுடைய செக்யூரிட்டி, தேவையானபோது தப்பித்து செல்ல (தீவிரவாத மிரட்டல் இருக்கு இல்லியா)என்னுடைய வீட்டின் சன்னல்மூலம் இந்த உலகை கண்டு ரசிப்பேன். என்னுடைய வீட்டின் ரிசெப்ஷன் விண்வெளியில் பறந்துக்கொண்டிருக்கும்போது...


நேரம் கிடைக்கும்போது ஓய்வு எடுப்பதற்காக‌


போரடிக்கும்போது கோல்ஃப் விளையாடுவதது இங்கேதான்


வைரத்தினாலான என்னுடைய பர்ஷனல் லேப்டாப், உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இது


எல்லா பார்ட்டிகளிலும் பயன்படுத்துவது..


என்னுடைய தங்கத்தினாலான பெர்ஷனல் கார்

டிஸ்கி: ஆஃபீஸுக்கு டைம் ஆச்சு என்னா தூக்கம் வேண்டிகிடக்கு என்ற தங்கமனியின் சத்தத்தால்... அட கனவு, சரி கனவுலேயாவது இந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் என்று மனதை தேற்றிக்கிட்டேன்.. நீங்களும் வாழனுமா கனவு காணுங்கள் (முன்னாள் பிரெஸிடென்ட் அப்துல் கலாம் சொன்ன கனவு இல்லை)

என் இளவரசன்..!பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுத்து
உன்னை சும‌க்கும் வ‌ர‌த்தைக்கொடுத்து
பெருமிதம் கொள்ளச்செய்தாய்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு
ஐம்தாயிரம் கோடி
தவிப்புகளும் பேரின்பமும் கொள்ளச்செய்து
மகிழ்ச்சி வெள்ள‌த்தில் ஆழ்த்தினாய்!

நீ பேசும் ம‌ழ‌லையில் ம‌ய‌ங்கி
உன் ம‌டியினில் வீழ்த்திட்டாய்!

யோசித்து விய‌க்க‌ வைக்கும் கேள்விக‌ள் கேட்டு
உன் அறிவை மெச்சி போற்றிடுமளவிற்கு
யாவ‌ரையும் திணற‌வைப்பாய்!

எல்லா செல்வ‌மும் ஒருங்கே பெற்று
உன்த‌ன் ஈருல‌க‌ வாழ்வில்
குன்றின் மேலிட்ட‌ விள‌க்காய்
பிர‌காசிக்க‌
நீ பிற‌ந்த‌ இந்நாளில்
இறைவ‌னிட‌ம் இரு க‌ர‌மேந்தி
இறைஞ்சுகிறேன்
வாழிய‌ ப‌ல்லாண்டு..!!!

டிஸ்கி: என் அன்பு மகனுக்கு (அஃப்ஸர்) இன்று 16 செப்டம்பர், 5 வது பிறந்தநாள்..!அனைவரும் வந்து வாழ்த்தி வளமான வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டுகிறேன்..!

இந்தியா‍வின் முதல் சுதந்திர தின கொண்டாட்டம் - 1947 ஆகஸ்ட் 15

 

அமைதியான, மதக்கலவரங்கலில்லா, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காண புறப்படுவோம் ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லா சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாது காக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம் இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. வாழ்க இந்தியா; வளர்க அதன் மைந்தர்கள்.

இந்திய சுதந்திரன தின கொண்டாட்டங்கள் கலைகட்டிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை இங்கே காணலாம்.

1947-1

சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயர்களுடன் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு

 

1947-3

 அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சாலையின் இருபுறங்களிலும் குவிந்த மக்கள்

1947-7

 

1947-6 எந்தவித தீவிரவாத மிரட்டலும் இன்றி பாதுகாப்பு வளையமில்லாத ஒரு அணிவகுப்பு படையினர்

 

1947-4 1947-2

1947-8

 

மெய்சிலிர்க்க வைக்கிறதல்லவா, மற்றவர்களும் கண்டுகளிக்க ஓட்டுப்போடுங்கள்

சாப்பிடலாம் வாங்கோ!!

சமீபத்தில் ஷஃபிக்ஸ் அவரோட அலுவலகத்தில் ஒரு ISO செமினார் இருந்ததாகவும் அதைப்பற்றி தெளிவாக எல்லாம் நேரெந்தேன் பதிவிட்டிருந்தார் . அதை தொடர்ந்து... இங்கேயும்………

கடந்த மாதம் என் கம்பெனிலேயும் திடீர்னு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தாங்க, 2008 லே APC UPS பெஸ்ட் சேல்ஸ் அப்படினு ஒரு சிறிய(?) Function வெச்சாங்க. அதையும் உங்ககிட்டே பகிர்ந்துக்கலாமேனுதான் இந்த பதிவு, இதனால் யாருக்காவது புகைந்து அதன் மூலம் இதை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. இதை சாக்காகா வைத்து ஆஃபீஸுக்கு லீவு போடுவதற்கு ஒரு சான்ஸாக இருக்கட்டுமே..

 

எல்லாம் ரெடியா பந்தியை விரிச்சிட்டாங்கையாIMG_1863

 

 

பரப்பி வெச்சிருக்கிற சாப்பாடு ஐட்டங்களை பாருங்கோ. இதுதான் சிக்கன் டிக்கா, ஹமூஸ் (கொண்டக்கடலைலே செய்தது), சலேட், பிரியாணி

IMG_1865

IMG_1866

 

இதுதாங்க டாப்.. ஒரு முழு ஆட்டை அப்படியே இறக்கிட்டானுங்க

IMG_1864

 

அட ஒன்னு ஒன்னா எடுங்கப்பா.. எல்லாம் உங்களுக்குதான்... இதெல்லாம் ஜூஸ்

IMG_1867

எல்லோரும் எல்லாத்தையும் நோண்டி நொங்கெடுத்துட்டானுங்க இன்னும் என்னத்தையா தேடுறே?!

IMG_1881

 

டிஸ்கி: இப்படிதான் தினமும் திண்பானுங்கனு தவறா நினைத்திடவேண்டாம். ஹெ ஹெ எப்போவாவது எப்போதும் பார்ட்டி வெச்சா இப்படிதான்...

நல்லா சாப்பிட்டாச்சா ச்சே பார்த்தாச்சா, ஓட்டை போட்டுட்டுப்போங்க இன்னும் நாலு மக்கா பார்த்து..... இதுக்குமேலே சொல்லுவதற்கு ஒன்னுமில்லை...

நட்புகளின் காதலன்....!

"வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?"

--நன்றி நிலா ரசிகன்..

இந்த வரிகள் என்னை அதிகம் பாதித்தது உண்மை, உறவுகளை விட நட்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவன் நான்.

நட்பால் உலகம் அறிகிறான்
நட்பால் வாழ்கையை படிக்கிறான்
நட்பால் தற்பெருமையை அழிக்கிறான்
நட்பால் உதவும் மனப்பான்மை பெருகிறான்
நட்பால் எல்லாமே கிடைக்கிறது.....

அந்த நட்புகளை பிரிந்து இன்று என்னைபோல் எத்தனையோ நண்பர்கள் த‌விப்பார்க‌ள்.. இதற்கு மனது அதே புதிய நட்பை நாடும் இவ‌ற்றையெல்லாம் ஓர‌ள‌வேணும் குறைப்ப‌தில் இந்த‌ப‌திவுக‌ளும், ப‌திவ‌ர்க‌ளும் முக்கிய‌ ப‌ங்கு ஆற்றுகின்ற‌ன‌. இந்த‌ ந‌ட்பும் இணைய‌ம் இருக்கும் வ‌ரைக்கும்தான்.. க‌ணினி ஆஃப் ஆனாலோ, இணைய‌ இணைப்பு துண்டிக்க‌ப‌ட்டாலோ ந‌ம் ந‌ட்பும் அத்தோடு லாகாஃப் ஆகிவிடும்.

இருந்தாலும் ம‌ன‌து அதிக‌மாக‌ இணைய‌ப்ப‌க்க‌ம் நாடுகிற‌து ந‌ண்ப‌ர்களின் ப‌திவையும், ஆன்லைன் சேட்டிலே பேசுவ‌த‌ற்காக‌வும்.

என்னை க‌ட்டினிய‌லா இல்லை இந்த‌ க‌ம்ப்யூட்ட‌ரை க‌ட்டிக்கிட்டிய‌லா * இது ம‌னைவி

என்னை பெத்தியலா இல்லை இந்த‌ க‌ம்ப்யூட்ட‌ரை பெத்தியலா * இது என் பைய‌ன்

என்னாடா பேசாம‌ல் உம் உம் உம் என்று சொல்லிக்கிட்டிருக்கே * இது தெரிந்தவர்கள், தொலைப்பேசியில் பேசும்போது க‌வ‌னம் முழுது ப‌திவில் இருப்ப‌தால்

அசைன்மெண்ட் 10 நிமிஷ‌த்துலே கொடுக்க‌னும், அதை விட்டுவிட்டு ஏதோ செய்துக்கிட்டிருக்கே (அலுவ‌ல‌க‌த்தில் க‌ணினி திரையிலே ஆங்கில‌த்தை த‌விர‌ த‌மிழ் மொழியை பார்த்த‌வுட‌ன்  நினைத்துவிடுவாங்க‌ சொந்த‌க்க‌தை பார்க்கிறானு)* இது மேனேஜ‌ர்

எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு எருமை மாட்டுமேலே மழை பெய்த கதையாக மீண்டும் மீண்டும் பதிவுகளை படித்தும் பின்னூட்டமிட்டும் (இதெல்லாம் வெட்டிவேலை என்று தெரிந்தும்) நட்பு வட்டத்திற்கு நம்மை அடைத்துக்கொள்வதே ஒரு சுகம்தான்.

அந்த வகையில் பிளாக்கர்ஸ் நண்பனாக எனக்கு விருதை தந்த நண்பர் ஸ்டார்ஜனுக்கு என் நன்றி....

இதையே நான் இந்த பிளாக் உலகில் நல்ல நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள், அவர்களின் நட்பை நிலைநாட்டிடும் பொருட்டு (இல்லாட்டியும் அவர்கள் நம் நண்பர்கள்தான்) இந்த அவார்டை கொடுத்து நட்பூக்கள் மலர்ந்து வாசனை வீசட்டும் உங்கள் பிளாக்கிலும்..

1. ஆதவா... நல்ல நண்பன், என் பதிவுகளை அதிகம் ரசித்து ஒரே பின்னூட்டத்தில் அத்தனை புகழ் பாடுவார்

2. அ.மு. செய்யது... ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர், ப‌திவுக‌ளை பிரிச்சி மேஞ்சிடுவார்.

3. த‌மிழ‌ர‌சி... க‌விதைக‌ளின் காத‌லி இவ‌ர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்

4. ராக‌வ‌ன்... நைஜீரியாவாக‌ இருந்தாலும் பாச‌த்தால் என் ப‌க்க‌த்தில் எப்போதும் இருப்ப‌வ‌ர்

5. க‌லைய‌ர‌ச‌ன்... எப்ப‌வும் த‌ன்னை சுற்றியுள்ள‌வ‌ரை க‌ல‌ க‌லனு வைத்திருப்ப‌வ‌ர்

6. பாலா... இவ‌ர் க‌ப்ப‌லின் நாய‌க‌ன், க‌ட‌லின் அதிசிய‌ம் போல‌வே இவ‌ர் க‌விதைக‌ளும் புதிராக‌வே இருக்கும்.

7. ராஜேஸ்வ‌ரி... என‌க்கு சிற‌ந்த‌ பிளாக் என்று சொல்லி ப‌ட்டாம்பூச்சி விருது த‌ந்த‌வ‌ர், என் ப‌திவுக‌ளை ர‌சித்து திருத்த‌வும் செய்ப‌வ‌ர்

8. காய‌த்திரி... க‌விதைக‌ளிலே பேசுப‌வ‌ர், கும்மியில் த‌லைசிற‌ந்த‌வ‌ர்

9.  வால்பயன்.. பெயரில் உள்ளது போலவே கலாய்ப்பதிலும் தலைசிறந்தவர்...

10. நிலாரசிகன்.. இவர் கவிதைகளில் கவரப்பட்டேன்...

Award_Image[2]

அவசரமான இந்த உலகத்தில் நட்புகளை பரிமாறிக்கொள்ளும் இந்த புனித தினத்தில் இந்த விருதுகளை கொடுப்பதில் பெருமைகொள்கிறேன்

தூக்கம் விற்று வாங்கிய வரிகள்..!
என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது
----------------------------------


பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

-----------------------------------தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

-----------------------------------உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

-----------------------------------

தமிழர்களாகிய நம் நிலை..!

நான் கடந்த ஒரு வருடமாக அனைத்து வலைப்பதிவுகளையும் படித்தும் கடந்த 5 மாதமாக நானே வலைத்தளம் ஆரம்பித்து ஏதோ தெரிந்ததை எழுதி வருகிறேன்.. இதுவரை படித்ததில் நம் பதிவர்கள் ஏதாவது ஒருவகையில் ஏதாவது அப்போதைக்கு பிரபலமாக உள்ள ஒரு சம்பவத்தை பற்றி தன் எழுத்தின் மூலம் உள்ளக்குமுறலை கொட்டுகின்றனர், அதே வேகத்தில் வெகுண்டெழுந்து அந்த பதிவு சம்பந்தமாக தானும் உள்ளக்குமுறலை பின்னூட்டம் மூலம் இடுகிறோம். அப்புறம் அதோடு மறந்து அவரவர் தத்தமது வேலைகளில் பிஸியாகிவிடுகிறோம், அதற்குப்பிறகு யாராவது அதைப்பற்றி நினைக்கிறோமா, அந்த பதிவை மூடுகின்றதோடு அதைப்பற்றிய கருத்தும் சேர்த்து மூடப்படும் நம் நினைவுகளிலிருந்து..

கடந்த சில நிகழ்வுகளைப்பார்த்தோமேயானால் அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள் தமிழர்களாகிய நாம் தான்.

கடந்த 4 வருடத்திற்கு முன் காவேரி நதி நீர் கேட்டு எத்தனைப்போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வியாபாரங்கள் முடக்கப்பட்டன.. தமிழ்நாட்டில் திரைப்படம் சம்பந்தப்பட்ட தொழிளாலர்களின் போராட்டம், நடிகர் நடிகைகள் ஒரு பகுதி மேலே போய் நெய்வேலி அனல்மின் நிலைய முற்றுகை, சென்னையையும் நெய்வேலியையும் இரண்டாகப்பிளந்த மக்கள் கூட்டம் (நடிக/நடிகைகளை காண்பதற்காக மட்டும்) அதை நேரடியாக ஒளிப்பரப்பு செய்து விளம்பரமாக ஒரு நொடிக்கு இவ்வளவு பணம் என்று சம்பாதித்து கொழுத்த மீடியாக்கள், அதே கோரிக்கையை முன்வைத்து தனிமனித உண்ணாவிரத போராட்டம் அதிலேயும் கொழுத்த மீடியாக்கள், இப்படி எத்தனையோ.. அதன்பின் விளைவு >>???

அடுத்து.. ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், இதை அறிவித்த உடனே கன்னட விவசாயிகளெல்லாம் ஒன்னு சேர்ந்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று வினோதப்போராட்டமெல்லம் செய்தாங்க, அதைப்பார்த்து கொந்தளித்த நம் விவசாயிகளும் அதோடு சேர்ந்து திரைப்பட துறையினரும் தம் பங்குக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள், இதைக்கண்ட கன்னட திரைத்துறையினரும் எதிர் உண்ணாவிரதம் இருந்தார்கள்.. இதன் மூலமும் தமிழர்களின் சொத்துக்களுக்கும், உயிர்களுக்கும் சேதம் விளைந்தது. குடிநீர் திட்டத்தை அமுல்படுத்து என்று இங்கேயும், அமுல்பத்தக்கூடாது என்று அங்கேயும்... இதையும் நேரடி ஒளிப்பரப்பு செய்து வழக்கம்போல் கொழுத்தது மீடியாக்கள். எல்லோர் முன்னிலையிலும் அமுல்படுத்தக்கூடாது என்று எதிர் உண்ணாவிரதம் இருந்த‌ க‌ன்ன‌ட‌ ந‌டிக‌ர் ந‌டிகைக‌ள் இன்று இருதார‌ருமே ம‌ற‌ந்து இரு மொழிப்ப‌ட‌ங்க‌ளிலும் ந‌ம் வாயில் லாலிபாப் வைத்துவிட்டு ந‌டித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.. அத‌ன்பின் விளைவு..>>???

கடந்த சில மாதங்கள் முன்பிலிருந்து புலிகளை அழித்தே தீருவோம் என்று ராட்சப்க்ஷே அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தது, கண்டவர்களையெல்லாம் வெறிநாய்களை சுட்டு தள்ளுவது போல் கொன்று குவித்தார்கள், அரசியல் தலைவர்களாகிய‌  நம் மேன்மக்கள் இந்த விடயத்தை ஒவ்வொருவரும் கையிலெடுத்துக்கொண்டு நான் பெரியாளா இல்லை நீயா என்று தனது அரங்கேற்றத்தை தொடர்ந்தது. பேச்சுப்போர், வீண் பழி, கைது நாடகம், தனி ஈழம் அமைப்போம் என்ற வீண் புலம்பல், தனிமனித திடீர் உண்ணாவிரத நாடகம், தீக்குளிப்பு (மானிடர்க்கிடைத்த அற்புத வரமான உயிரை மாய்ப்பதற்கு நமக்கு எந்தவிதத்திலும் உரிமையில்லையடா, இப்போது அந்த குடும்பத்தை காப்பாத்துபவர் யார்),  நடிக/நடிகைகளின் உண்ணாவிரதப்போராட்டம், தனிமனித உண்ணாவிரதம், மத்தியரசுக்கு தந்தி, எத்தனையோ நம் பதிவர்களின் பதிவுகள் இப்படி எத்தனையோ பார்த்தாகிவிட்டது. அத‌ன் பின் விளைவு>>???

அடுத்து.. இந்த தேர்தலால் நாட்டின் அரசு தலைகீழாக மாறும், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு தராத அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவோம், ஆகாங்க்கே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், கட்சித்தாவல், கூட்டணி மாற்றம், தனி ஈழம் அமைப்போம், திடீர் உண்ணாவிரதம் இப்ப‌டியான‌ க‌ப‌ட‌ நாட‌க‌ம்.... என்ன‌ ந‌ட‌ந்த‌து.. த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஈழ‌ம் ஒரு பொருட்டு இல்லை, இவ‌ர்க‌ளை அந்த‌ ஆண்ட‌வ‌னால்கூட‌ திருத்த‌முடியாது என்று சொல்லும் அள‌விற்கு அதே ஆட்சி மீண்டும், ஈழ‌ப்பிர‌ச்சினை ஒரு சிறு எள் அள‌விற்கு யாரையும் பாதிக்க‌வில்லை. இவ்வ‌ள‌வு ப‌திவு எழுதி த‌ன் குமுற‌லை கொட்டியும் அத‌ன் பின் விளைவு>>????

நம் பதிவர்கள் எல்லாமே தற்கால/நிகழ்கால நிகழ்வுகளை எழுதி தன் மனக்கவலையை தெரிவித்துக்கொள்கிறோம், அதன் பிறகு அந்த சுவடே இல்லாதது மாதிரி அடுத்த காதல் கவிதைப்படித்தும், காமெடி சம்பந்தப்பட்டதை படித்தும் அதற்கும பின்னூட்டமிடுகிறோம்.

இந்த வலைபக்கம் நமக்கெல்லாம் ஒரு வரம், இது ஒரு திறந்த புத்தகம், தெரிந்ததை பதிகிறோம், பாராட்டுப்பெறுகிறோம். அதே சமயம் இந்த சமுதாயத்திற்காக என்னா செய்தோம்.

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு முக்கியமான நிகழ்வை விவாதிப்பதோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட பதிவை யாரிட கொண்டுசென்றால் சற்றேனும் திரும்பிப்பார்க்கப்படும் என்று முடிவுசெய்து அதற்கான‌ முய‌ற்சியில் (யாருக்கு வாய்ப்பு உள்ள‌தோ அவ‌ர்க‌ள்) கொண்டு சேர்த்து அத‌ற்கான‌ தீர்வு கிடைக்க‌ போராட‌வேண்டும் என்பதே என் ஆவ‌ல்.

இனிமேலாவது நம் வருங்கால தமிழ் சந்ததியினர்  எவ்வித போராட்டத்தாலும் பாதிப்படையாமல் தனது கவனத்தை நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதற்கு ஒரு வடிகாலாக அமையும்

ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு..

மைக்கேல் ஜாக்சன்..
இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை, இசையை விரும்புவர்கள் நிச்சயம் ஜாக்சனையும் விரும்புவார்கள், அந்தளவிற்கு தன் குரல் வளத்தாலும், நடனத்தாலும் (கும்ஃபூக்கு ஒரு புருஸ்லீ என்றால் நடனததுக்கு ஒரு ஜாக்சன்) அனைவரையும் தன் வசம் கட்டிவைத்தவர். இன்று அவர் வரலாறாக‌, அவருடைய ஒவ்வொரு அசைவும் நிச்சயம் ஒரு நடனவித்தையை சொல்லும்...

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..

 

3298415

1965ம் ஆண்டு ஜாக்சன் தன் 5 வது வயதில் மக்கள் முன் முதன் முதலாக கிறிஸ்தமஸ் அன்று இசை அரங்கேற்றம் செய்தபோது

 

 52590614

1969ம் வருடம் தன் ஆல்பமான Who’s Lovin You வெற்றிப்பெற்ற பின் அந்நாட்டு மாகாண தலைவரிடம் தன் குழுக்களுடன் ஆசிப்பெற்றபோது...

 

50787214

அந்த காலம் முதல் ரசிகர்களை தன் வசம் கட்டிவைத்திருந்திருக்கிறார்...

 

50462407

1984 ம் வருசம் மே மாதம் தன் புகழ் பெற்ற ஆல்பமான “Beat It” என்ற ஆல்பத்தினுடைய முக்கிய கருத்தான “குடித்துவிட்டு வாகனம் ஒட்டாதே” என்ற கருத்தை உலகம் முழுது பரப்புவதற்காக அப்போதைய அமெரிக்க பிரெஸிடென்ட் ரொனால்ட் ரீகனை சந்தித்தபோது..

.

88696481

1984 ஆகஸ்ட் மாதம் தன் உருவத்தையும், உடையலங்காரத்தையும் மாற்ற உதவிய நண்பியுடன்....

 

51533361

1994 ல் எடுக்கப்பட்டது, புகழ்பெற்ற எல்விஸுனுடை மகள் லிஸாமேரியை திருமணம் செய்துக்கொண்டு முதன் முதலாக புதாபஸ் ஏர்போர்ட் க்கு வந்தபோது...
இவர்களின் திருமண வாழ்க்கை இரண்டு வருடம் கழித்து சில பல காரணங்களுக்காக முறிந்தது...

 2031237

2001 ம் ஆண்டு ஜாக்சனின் Moon Walk ஆரம்பமானது..

 

watermarkcomp1

 ஜூன் 25, 2009 தன் 50 வது வயதில் ஒரு இசை சகாப்தம் பத்திரிக்கைகளின் அட்டைபடமாக மட்டுமே...

மல்டி மில்லியனராக‌ வேண்டுமா..???

அவசரமான இந்த உலகத்துலே எல்லோரும் பணத்தை தேடி அலைந்துக்கொண்டிருக்கோம், பணம்தான் வாழ்க்கைக்கு இன்றியமயாததாகிவிட்டது என்ப்பது யாவரும் அரிந்தது, அப்படி இருக்கயில் சாதாரணமாக 500க்கும் 1000க்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நம் மக்களை மில்லியனுக்கும் பில்லியனுக்கும் அதிபதியாக மாற்றுகிறேன் வாருங்கள் என்றால் யார்தான் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள், நானும் அதையே அழைக்கிறேன் இந்த பதிவின் மூலம் உங்களையும் மல்டி பில்லியனர்களாக பார்க்க எனக்கும் ஆசைதான்.

இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு ரொம்ப சிம்பிளாக ஷாப்பிங்க் செய்யும் காலம் வந்துவிட்டது, அதற்கும் ஒருபடி மேல்போய் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகம நம்மூரில் அதிக‌ம் புல‌க்க‌த்தில் வ‌ந்துவிட்ட‌து. அப்ப‌டி இருக்க‌யில் இங்கெ பாருங்க‌ளேன் ப‌ண‌த்தை க‌ட்டு க‌ட்டாக‌ தூக்கினுப்போய் ஷாப்பிங்க் ப‌ண்ணுறாங்க‌, எங்கேனு கேக்குறீங்க‌ளா ஜிம்பாப்வே நாட்டில்தான்.

இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம்
 


பார்ட்டி கொடுத்துட்டு பில் செட்டில் பண்ண போறாருங்க, இப்போ நெனச்சிருப்பாரு ஏன்டா பார்ட்டிக்கொடுத்தோம்னு

அவரு பார்ட்டிவெச்சு செலவு பண்ணதுக்கு கட்டவேண்டிய பில்(ரஷீது)

 

100$ பில்லியன் நோட்டு இது, அட இப்போ $100 ட்ரில்லியன் நோட்டு வெளியிடப்போறாங்களாம்

 

3 முட்டையோட விலை 100$ பில்லியன் தான்

 
ஷோ ரூம்லே ஒரு கால்சட்டை(PANT) க்கு விலை என்னா என்று TAG வைத்திருக்கிறார்கள்

 

பள்ளிக்குழந்தைக்கு கொடுக்கும் பாக்கெட் பணமாம்


 


 

 

 

 

 

 

பள்ளிக்கு போகும்போது புத்தக மூட்டையை சுமக்கிறோம், பள்ளிவிட்டு வந்தவுடன் கடைக்கு சாமான் வாங்க சொல்லி இப்படி பணமூட்டைய தாராங்க.. எங்களுக்கு ஒரு விடிவே இல்லியா..?

$1 ட்ரில்லியன் ஜிம்பாப்வே நோட்டு $33 USD க்கு சமமாம்

முக்கியமான விசயம் என்னான்னா 1980 ம் ஆண்டுகளில் $1 ZMD  1 இங்லாந்து பவுண்ட்டுக்கு சமமாம். இப்போ..???

எல்லாம் "அவங்க" தான் இந்த உலகத்தையே கட்டியாளனும்னு கங்கணங்கட்டிக்கினு இருக்குறதுனாலே வார வினைக

விதை விதைத்தவன் ஒரு நாள் வினையருப்பான்...

என் குட்டி தேவதை..!என்னுள்ளே கலந்தாய்
ஓருரிய் ஆனாய்
ஒரு உயிரை சும‌ந்தாய்
விரும்பி உணவுண்டாய்
இன்னுமொரு உயிர் உயிர்வாழ

ஈரைந்து மாத‌ங்க‌ள் சும‌ந்தாய்
சிர‌த்தைக‌ளையும்
சிறு ர‌ண‌ங்க‌ளையும் தாங்கினாய்

வ‌லியின் உண‌ர்வுக‌ள் புரிந்து
நானும் அனுப‌விக்க‌
ஓடோடி பறந்து வ‌ந்தேன்
என் அருகாமையால்
உன் உண‌ர்வுக‌ளையும் ப‌கிர்ந்துண்டேன்

ஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்
ம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது

ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ள்
தன் வேலைகள் அனைத்தையும்
தள்ளிவைத்துவிட்டு
காத்திருந்து
மலர்தூவ‌
அழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்

இவ‌ள் வர‌வால்
அன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை
ந‌ட்ச‌த்திர‌ங்கள் கூட‌
ஓடி ஒழிந்த‌ன
இனி ந‌ம‌க்கு வேலையில்லையென்று

சிரமங்களை குறைத்து
சீரான பிரசவத்தை கொடுத்த‌
அந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..!!

டிஸ்கி: ஜூன் 17ம் தேதி புதன் மதியம் 2.15(இந்திய நேரம்)மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்த நண்பர் அ.மு.செய்யதுக்கும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்திய அனைவருக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.

நட்பின் இலக்கணம் - எழுத்தோசை..!

இன்று எனக்கு பிறந்தநாளாம்.. !

பொதுவாகவே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு வருஷம் கடந்துவிட்டதே என்றும் இந்த வருடத்தில் என்னத்த‌ சாதிச்சோம் என்று நொந்துக்கொண்டவனாகவே ஒவ்வொரு வருடமும் அந்நாள் (8‍ஜூன்) கழியும். சிறுவயது முதலே இதை கொண்டாட வேண்டும் என்று என் பெற்றோர்கள் போதிக்கவில்லை. சிறு வயது நண்பர்களும் அப்படியே கல்லூரி காலத்தில்கூட வெற்று நாடகமாட வேண்டியிருந்தது அதுவும் நண்பர்களின் ட்ரீட் க்காக. (ட்ரீட்க்கு ஏதாவது காரணம் வேண்டுமல்லவா). இப்போவெல்லாம் என்னுடைய பிறந்தநாளை என்வீட்டு தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள் மற்றும் நண்பர்கள் SMS அ தொலைப்பேசி மூலம். நேற்றும் இவ்வாறுதான் ஞாபகப்படுத்தப்பட்டு அதே மேற்சொன்ன காரணத்தினால் வருத்ததோடு கழிந்த இரவின் இருட்டில் இன்று பிரகாசமாய் ஒரு வாழ்த்துக்கவிதை தமிழரசி அவர்களின் தளத்தில் அனைவரும் வாருங்கள் அபுவை வாழ்த்தலாம் பார்க்கவும். இப்படியெல்லாம் எழுதி என்னை வாழ்த்தியது மட்டுமின்றி அனைவரையும் வாழ்த்துவதற்காக அழைத்து பதிவிட்ட இவர்களை என்னா செய்வது, நன்றி என்ற வாழ்த்தை தவிர வேறு தெரியவில்லை...

சிலந்தியாய்
வலையுலகத்தில் வலைப்பின்னிய நீ
அதில் மாட்டிய பூச்சியாய்
இந்த நட்பு என்னும் பாசத்திலிருந்து
வெளிவரமுடியாமல் தவிக்கும் நண்பன்!

இன்று புதிதாய் பிறந்த‌
சந்தோஷத்தை கொடுத்த‌ ந‌ட்பின் இல‌க்க‌ணமே!
மற்றும்
என்னை வாழ்த்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றிக‌ள் கோடி

வாழிய‌ உம‌து தொண்டு..!!

திருடப்பட்ட பதிவுகள்..!

கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்..
கடந்த மே மாதம் நான் எழுதிய 4 இடுக்கைகள்(பதிவுகள்) காணாமல் போய்விட்டது, அதனோட லின்க் கிளிக் செய்தால் "Page Cannot be Found" என்று வருகிறது, உடனே என் வலைப்பக்கம் சென்று பார்த்தால் மே 25 க்கு பிறகு பதிவிட்ட என்னுடைய "போட்டிகள்" மட்டுமே இருக்கிறது மற்ற பதிவுகளை (குறிப்பாக "கில்லி") காணவில்லை, அதை நான் முன்னரே லக்கிலுக் அறிமுகப்படுத்திய சிறுகதை போட்டிக்கு அனுப்பியிருந்தேன். இதனால் என்னுடைய சந்தேகம் வலுக்கிறது அதாவது அதை யாரோ திருடிவிட்டு அது எடுக்கப்பட்ட சுவடு தெரியாமல் அழித்துவிட்டார்கள் என்று.

வலைத்தளம் முழுதும் திருடப்படுவது போய் இப்போதெல்லம் முக்கியமான பதிவுகள் மட்டும் திருடப்படுகிறது. இதை தடுக்க ஆளேயில்லியா..?

பதிவுகள் போனது மட்டுமின்றி பின்னூட்டங்களும் சேர்ந்து போனதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயம்.

அன்பார்ந்த நண்பர்களே/தோழிகளே உங்களுக்கு அதை எப்படி Retrieve பண்ணுவது என்றும் இனிமேல் மற்ற பதிவுகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், மற்ற நண்பர்கள் அதை ஃபாலோ பண்ணி இந்த செயல்களிலேர்ந்து தன் பதிவுகளை தற்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மீள் பதிவு போடலாம்.. இருந்தாலும் இழந்ததை திரும்ப பெற்றால் மகிழ்ச்சியே..!

ஒரு எச்சரிக்கைக்காகவே இந்த பதிவு....

டைட்டானிக் - II

டைட்டானிக் என்று ஒரு கப்பல் 1912 காலகட்டத்துலே கடலிலே மூழ்கியதாக வரலாற்று உண்மை, அதற்கான ஆதாரம் கண்டுபிடித்து அது எப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது, என்னென்ன கேளிக்கைகள், காமெடிகள், பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்...... அதை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது, அந்த கப்பல் உருவான விதம் அதற்கான மொத்த செலவு எல்லாம் கணக்கிலடங்கா. இதைப்பற்றி வேத்தியன் டைட்டானிக் பயணத்தின் போது உயிர்தப்பித்த கொஞ்ச சிலரில் கடைசியாக ஒருவர் இன்று உயிர்யிழந்தார் என்ற செய்தியை பதிவாக போட்டுள்ளார் அதை படிக்க இங்கே   பாவம் அவருக்கு இந்த புது டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய பாக்கியம் இல்லை (ஒரு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் தப்பித்ததே போதும் என்று இருந்திருக்கலாம்)

இப்போது உலகின் மிகப்பெரிய டைட்டானிக்-II என்ற கப்பலை வடிவமைத்து பயணக்கப்பலாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதை இங்கே காணலாம்

image016

எம்மாம்பெருசு..

image003 பார்க்கவே நல்லாயிருக்குலே, மொட்டமாடிலேர்ந்து படம் புடிச்சதாம்image018 அட இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌

image017 கிரவுண்ட்லே விளையாட மாட்டாங்க, இங்கே பந்தாவுக்கு விளையாடுவாங்க‌

 image015

7 ஸ்டார் ஹோட்டல் மாதிரி உள் கட்டமைப்பு நல்லாயிருக்குலே

image014

ஏர்போர்ட் மாதிரி இங்கேயும் சப் கன்ட்ரோல் தளம் இருக்காம்

 image013 சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே

image012 மேடை கச்சேரி வேறா.. இது இல்லாமல் மக்களுக்கு இருக்கமுடியாதுலே..

image011 அட கப்பலுக்குள்ளே பூங்கா வேறயா.. குழந்தைகளுக்கு குதூகலம்தான்

image010 image009 நீச்சல் குளம் மேல்தட்டும் கீழ் தட்டும்

image008 இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

image007 இயற்கையை ரசிக்க ஒரு இடம்

image006 image005 வாக்கிங் போறதுக்கும், கில்லி விளையாடுவதற்கு இதை பயன்படுத்தலாமாம்

image004

இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை...

நல்லா ரசிச்சீங்களா

ஓட்டைப்போட்டுவிட்டு போங்கப்பா அதோடு பின்னூட்டமும் மறக்காம‌


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே