என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

இடி! மின்னல்!!

nilalady

மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!

குளிரின் தாக்க‌த்தால்
ந‌ம் இருவ‌ரின்
கைக‌ளும்
சூடான‌ இட‌த்தில்
ஆனால் ந‌ம்
உத‌டுக‌ள் ம‌ட்டும்
உத‌ற‌ளில்..

குளிருக்கு விடை கொடுப்பதற்காக‌                                                                                  உன் இத‌ழ் பிரித்து
என் இத‌ழை நுழைக்க‌யில்..

பொறாமையின் உச்ச‌த்திலிருந்த‌
இடியும், மின்ன‌லும்
க‌ங்க‌ணம் க‌ட்டிக்கொண்டு
ச‌த்த‌மாக‌வும், ஒளிக்கீற்றாக‌வும்
ஓல‌மிட்டன..

இதை ச‌ற்றும் எதிர்பாராத
நீ ப‌ய‌த்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் வில‌கி..

இதைக்க‌ண்ட‌
இடியும் மின்ன‌லும்                                                சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்த‌ன‌

ஆனால்....

ந‌ம் முத்த‌ம் ம‌ட்டும்
ஏக்க‌மாய்...???

வழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.!!

அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி), நாமும் ஏதாவது சொல்லனும், இதுக்குமேலே விட்டால் அப்புறம் சரியா வராதுனு யோசிச்சேன்... யோசிச்சேன்.... கடைசிலே ஒன்னுமே புலப்படலே. ஆணி புடுங்குறதுலேயே கவனம் இருந்தது, சரிதான் இப்போதைக்கு ஏதாவது சொல்லித்தான் ஆகோனும் இல்லேனா மேலே எனக்காக வக்காலத்து வாங்கியவர்கள் கோவிச்சிக்குவாங்கனு, இப்படி ஒரு (விபரிதமான?) முடிவு எடுத்துவிட்டேன்.

த‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி (அடிக்க‌ வ‌ந்துடாதீங்க‌), ஆனா இதை பேசும் வித‌ம் ஓவ்வொரு நாட்டில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஒவ்வொரு மாநில‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஓவ்வொரு மாவ‌ட்ட‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும் ஏன் ஒவ்வொரு ம‌க்க‌ளிடையேயும் வேறுப‌டும் (இது நிரூப‌ன‌மான‌ உண்மை). வ‌ழ‌க்கொழிந்த‌ மொழி என்ப‌தை திரும்ப‌ ஞாப‌க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ ப‌திவு என்ப‌து எல்லோருக்கும் தெரிந்த‌ பொதுவான‌ க‌ருத்து, இது எல்லா த‌மிழ் பேசும் ப‌டிக்கும் ம‌க்க‌ளுக்கும் இது சாத்திய‌மே, இருந்தாலும்....

நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம். த‌மிழ் நாட்டிலுள்ள‌ சில‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌த்தில் பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ள் பேசும் வித‌ம் வேறுப‌டும், அதுக்காக‌வே த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  அதுக்கென்னா என்கிறீர்க‌ளா? அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். நான் இந்த‌ வித்தியாச‌மான‌ (அப்ப‌டினு நான் நினைக்கிறேன்) முய‌ற்சியாய் ந‌ம் ம‌க்க‌ளிடையே பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....

திடுதூரா                                         =   திடீரென
ஓங்காரம்                                       = வாந்தி
மசக்கம்                                          = மயக்கம்
கோதாரி                                         = வறட்டு பிடிவாதம்
கூப்பாடு                                          = விருந்தழைப்பு
திட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை

இங்கிரு                                           = இங்கேப் பார்
எசலு, சலுவு                = காரணமில்லால் வம்பு இழுத்தல்
பொவ்மானம்                                 = திமிர், ஏளனம்
ஒரு வாட்டி                                   = ஒரு தடவை
தாயபுள்ள                                       = சொந்த பந்தம்
பொரத்தியான்                                = அந்நியன்
சும்மாத்துக்கும்                              = வெறுமனே
உட்ரு/உர்ரா                                     = விட்டு விடு
என்னன்டு                                         = என்ன வென்று
நாசுவென்                                         = நாவிதன்
உச்சிஉரும நேரம்                           = உச்சி வெயில் நேரம்
மாலமணி நேரம்                      = சூரியன் மறையும் நேரம்
வீதல்ரோடு                             = உடைந்த கண்ணாடி துண்டு
சீந்தாப்பு                                              = மழைத்தூரல்
சீக்கனம்,வெள்ளனமே, சுருக்கன     = சீக்கிரம்
பொத்தல்                                            = ஓட்டை
ஒசக்கெ                                               = உயரத்தில்
கானு                                                   = சாக்கடை
முடுக்கு                                              = சந்து
அவுருவம்                                          = அரிதானது
நல்ல நாளு, பெரிய நாளு            = முக்கியமான நாட்கள்
இருட்டுக்கசம், மைக்கசம்                 = இருள்

தினுசு, தினுசா                                    = வித, விதமாய்
மப்பு                                                     = மேக மூட்டம்
மூடாத்து                     = விவரம் இல்லாதவன்/முட்டாள்
என்னான்டாக்கா                                 = என்ன வென்றால்
குட்டான்                                             = கையால் நெய்த கூடை

நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே. இதைப்படித்துவிட்டு அவுகளாகவே அவுகளுக்கு தெரிந்த பேச்சு வழக்கிலுள்ள‌ மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒரு பதிவாக போட்டால்... அதை படித்துவிட்டு அந்தந்த ஊருகளுக்கு போகும்போது மொழிப்பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம். அல்லது பின்னூட்டமாகவும் சொல்லலாம்.

உலக அரங்கில் தமிழுக்கு ஒரு அங்கீகாரம்

23rahcr 

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அன்று சொன்னான் பாரதி, இன்று அந்த கனவு நனவாகி உலக அரங்கில் தலை நிமிர்ந்து தமிழர்களாகிய நாம்.

கடந்த 81 வருடங்களில் உலக அரங்கில் பிரபல ஜாம்பாவன்களுக்கு மத்தியில் ஒரு வார்த்தை "எல்லா புகழும் இறைவனுக்கே..!" என்று பேசி தமிழ் மொழியை உலக மத்தியில் எடுத்துச்சென்ற ஒரு தமிழனுக்கு அவருக்கு கிடைத்த உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது மூலம் நம் அனைவருக்கும் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழைத்தேடி தந்துள்ளார்.

அவருடைய பொறுமைக்கும், அடக்கத்திற்கு கிடைத்த விருது.

அமைதியின் இலக்கணமாய் இருந்தாய்
சூராவளியாய், புயலாய், வெகுண்டெலுந்த அலையாய் கரை கடந்தாய்
பழமை மொழியாம் தமிழை உலக அரங்கில் உச்சரித்து உச்சத்துக் சென்று புதிய வரலாறு படைத்த‌                       உனக்கு
ஒரு தமிழனாய், ரசிகனாய் எங்களுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வாழ்க்கையில் எல்ல வளங்களும் பெற்று மென்மேலும் தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் பல அவார்ட்களை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தொடர் வேலையிழப்பு‍ - தற்காத்துக்கொள்ள வழிமுறைகள்

நீங்கள் மாத சம்பளம் அடிப்படையில் வேலைப்பார்ப்பவரா? ஆம் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதை படிக்கத்தான் வேண்டும்.

time                          மச்சான் எனக்கு லெட்டர் கொடுத்துட்டாங்க, என்னோட பேரும் ஷார்ட் லிஸ்ட்லே இருக்கு, தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கிட்டு இருக்கு அது எப்போ விழுமோ தெரியலே.. இப்படி நிறைய புலம்பல்கள் நாள்தோறும், மாசக் கடைசியில் (இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா) சம்பளம் வருமோ வராதோ, எனக்கு இந்த மாசம் சம்பளம் லேட்டு மச்சான், என்ன செய்றதுனு தெரியலேடா, வாடகை தொல்லை, கரண்ட் பில் தொல்லை (கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது??), இது பரவா இல்லை எப்படியோ சமாளிச்சிடலாம்.. நமக்காக நம்மளையே நம்பி வூட்டாண்ட எத்தனை ஜீவன்கள் காத்திருக்கு (இதே கரண்ட், ஸ்கூல் பீஸ்.. அங்கேயும் தொடரும்..)

"Last in First out.."  இதுதாங்க ரொம்ப மோசமான நிலமை இப்போதைக்கு, என் நண்பன் இப்போதாங்க புது வேலைக்கு மாறினான், மச்சான் இரண்டு மடங்கு சம்பளம், புது டபுள் பெட்ரூம் ஹால் ஃப்லாட் ரொம்பா சந்தோசம்னு சொன்னான், ஒரு மாசம் சம்பளம்கூட வாங்கலே, ஒரே புலம்பல், இப்போ அவனும் வேலை இல்லாமல்... மற்ற கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியபடி, அப்படியே கிடைத்தாலும் பழைய கம்பெனியில் கிடைத்ததைவிட 40% குறைச்சு சம்மளம் தாறேனு கூப்பிடுறாங்க. இதுதான் இப்போதைக்கு எல்லா கம்பெனிகளும் ஃபாலோ பண்ணும் தாரக மந்திரம்.

வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு.  சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007‍ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது  2009‍ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. நிலமை மேலும் மோசமடைந்து வருவதாக ஐ.எல்.ஓ பொது செயலாளர் ஜீவான் சோமாவியா கடந்த வாரம் ஜெனீவாவில் சர்வதேச அளவில் வேலையில்லா வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

சரி அதெல்லாம் இருக்கட்டும், நாம என்னதான் திறமைசாலியா இருந்தாலும் நாம் வேலைப்பார்க்கிற கம்பெனிக்கு நல்ல பிஸினஸ் மற்றும் வருமானம் வந்தாதானே வேலையும் கொடுத்து சம்பளமும் (முடிந்தால் போனஸ், கமிஸன்) கொடுப்பார்கள். இப்பொவெல்லாம் நிறைய கம்பெனிகள் புது உத்தியை கையாளுகின்றது, அதாவது தாங்களே வேலை விட்டு தூக்கினால் International Labour சட்டப்படி அவருக்கு சேரவேண்டிய கிராஜுவேட்டி, 30 நாள் நோட்டீஸ் பீரியட், எக்ஸட்ரா... கொடுக்கனும். அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது, செய்துகொண்டிருக்கும் பிஸினஸை பொருளாதாரம் காரணம் காட்டி நிறுத்துவது, இன்னும் பல.. அப்போ தானாகவே ஊழியர்களுக்கு வேலை இருக்காது, இப்படி எத்தனை நாளைக்குதான் செவ்வனேனு சும்மாவே இருப்பாங்க‌.. தானாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்துக்கொண்டு போய்விடுவார்கள், இப்படி செய்வதால் ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை கணிசமாக குறைகிறது...

இதே நெருக்கடியினால் வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்கள் பரவலாக தாங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் 100,000 லிருந்து 1 மில்லியன் வரை மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate)  கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி சொல்கிறது.

சரி இப்போதைக்கு வேலையிலிருப்பவர்கள் இருக்கும் வரை எப்படியெல்லம் தாங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. இதோ.. சில நல்ல தகவல்கள்..

நான் ஒரு வேலைசெய்பவன் (I am an Employee)
* என்னுடைய வேலை நிரந்திரமாக்கபடவேண்டும்
* நான் EMI கட்டவேண்டும்
* என்னை நம்பி எனது குடும்பம் இருக்கிறது
* எனக்காக வேலையை தொடர்ந்து செய்யவேண்டும்
* இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும்

அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள்

எதுவெல்லாம் செய்யக்கூடாது
* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்
* சம்பள உயர்வு, ப்ரமோஷன் (உங்களைப்போல் திறமைப்படைத்த குறைந்த சம்பளத்திற்கு ஆள் ரெடியா இருப்பதை மறக்கவேண்டாம்)
* பிற‌ரைப்பற்றி கம்ப்ளெயின் பண்ணுவது, டிரான்ஸ்ஃபர் ஏற்காமல் இருப்பது, சம்பளம் கட் பண்ணால் ஏன் என்று கேட்காமல் இருப்பது
*அதிக வேலை கொடுத்தாலோ, தேவையான போது அலுவலகத்தில் நேரம் செலவழித்து கொடுக்கப்பட்ட அஸ்ஸெயின்மென்ட் முடித்துக்குகொடுக்காமல் இருப்பது                                                                                                                  *பர்ஸனல் லோன், கிரெடிட் கார்ட் போன்றவற்றை தவிர்ப்பது                                                                                                                 * முக்கியமாக வேறு வேலைக்கிடைத்தால் மறந்தும் கூட மாறாதிருப்பது

எதுவெல்லாம் செய்ய வேண்டும்

* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது
*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது
*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது
* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது
* நிறைய ட்ரெயினிங் செல்வது
*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது
* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது
*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.

செலவை குறைப்பது எப்படி?
* ஷாப்பிங் மால் செல்வதை குறைப்பது, நம்ம கை ஓட்டைனு நமக்கே தெரியாது, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்ட்
*அதிகப்படியாக ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடுவதை குறைப்பது
* அன்றாடம் தேவையானவற்றை மட்டும் வாங்குவது
*அடிக்கடி வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் போவதை தவிர்ப்பது
* அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது

இதெல்லாம் இருக்கட்டும், இது ச்சும்மா கொஞ்ச நாளைக்குதான். இதே மாதிரி குழப்பத்திலிருந்து விடுபட இப்போ நம்ம அட்வைஸ் அண்ணாத்தே டிஸ்கி வந்து என்ன சொல்றாருனு கேட்போம்..

* குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளிடனும் அதிகநேரம் செலவு செய்யவேண்டும்
* காலார நடந்து எக்ஸசைஸ் செய்யனும்
* மனதுக்கு இதமான இசை கேட்கவேனும்
* நண்பர்களுடனும், உறவினர்களுடனும் நேரம் செலவு செய்யனும்
*அதிகமான பொது சேவையில் கவனத்தை செலுத்தவேணும்.

பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..

காணிக்கை..!

 katebeach

காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று

நிலவுக்கு தெரியும்
நாள் தோறும் தேய்கிறேனென்று

தூக்கத்திற்கு தெரியும் 
கனவுகளில் நீ மட்டும் வருகிறாயென்று

இருட்டுக்கு தெரியும்
உன் கண்ணிமையின் வெளிச்சத்தில் நடக்கிறேனென்று

இந்த உலகுக்கு தெரியுமா?
நம் இருவர் உயிர்களும்
பைத்தியமாய் அழைகிறது என்று..!

------------------------------------------------------------------------------------------------------

  love2

இசையை வெறுக்கிறேன்
உன் குரலை கேட்டப்பிறகு

எதையும் உற்று நோக்குவதை வெறுக்கிறேன்
உன் விழிகள் என் கண்ணுக்குள்ளே இருப்பதால்

தேவைக்கதிகமாய் பேசுவதை வெறுக்கிறேன்
உன்னிடம் தேவையைவிட‌ பேசுவதற்காக‌

கம்யூட்டர் கீஃபோர்ட் தட்டுவதையே வெறுக்கிறேன்
என் உணர்வுகளை ‌உனக்கு எழுத்துக்களால் வடிப்பதற்காக‌ ‌

கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால்

நீ எங்கோயிருந்தோ கொடுத்த முத்தம்
என் காதுகளுக்கு அமிர்தமாய்

பொதுவாக கொடுக்கும் முத்ததினால்
காதுமடல் உலர்ந்து இதழ்கள் ஈரமாகும்            
தொலைப்பேசியுனூட கொடுத்த முத்தத்தால்                                இதழ்கள் உலர்ந்து காதுமடல் ஈரமானது..

உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!

------------------------------------------------------------------------------------------------------

 images

தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..!

அமைதியான‌ ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில்
எங்கேயோ கேட்கும் இனிய‌ ஒலி
உன் வ‌ளைய‌லின் ஒலிதானோ என்று
திடுக்கிட்டு எழுவேன்
அப்போது..!

இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...

------------------------------------------------------------------------------------------------------

காதலைப்போற்றும் இவ்வேளையில்
என் உயிருக்கு..!
காணிக்கையாக‌.. சில வரிகள்....

---------------------------------------------------------------------------------

 

வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை

  

ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கிறது, இதையெல்லாம் சேர்த்து எனக்கு தோன்றிய கவிதைள். இது ஒரு சோதனை முயற்சிதான்.. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே..

என் உயிரே.. ல் தொடங்கி இதோ..

என் உயிரே..!  

vaanamvelithapinnumவானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக‌ 

malaikkuothungiyavaiமழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும்  வாசனையா உன் வரவு

puthiyavan வானமும் வசப்படும்  
நான் உன் வசப்பட்டதால்

karpomvaarungalகற்போம் வாருங்கள் என்றார்கள் 
உன்னிடம் கற்றதைவிடவா

          

vaanavilveethiவானவில் வீதியில் 
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் புடை சூழ உலா வருவோம்

manasukkulmathappu மனசுக்குள் மத்தாப்பாய்
உன்  அருகாமை

 pirivaiyum nesippavalபிரிவையும் நேசிப்போம்.. 
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம்

naaezhuthaninaippathellamநான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான்

tamilthuliதமிழ் துளியாய்
உன் காதல் ரசம் சொட்ட தித்திக்குது என் மனம்

karaiyorakanavuhalகரையோர கனவுகளாய்
கடற்கரையோர‌ பாறையாய் உன் உணர்வலைகளை எதிர்ப்பார்த்து

maravaathekanmaniyeமறவாதே கண்மனியே
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
கரைந்த அந்த நொடிப்பொழுதுகளை

kadalpuraகடல் புறாவாய்
உன் கைகோர்த்து இவ்வுலகை வலவர ஆசை

ithayappookkalஇதயப்பூக்களாய்
வாடாமல் எப்பவுமே புதுப்பொழிவுடன் என் காதல்

oonjal என் இதய ஊஞ்சலில்
உறக்கத்திலும் உன்னுடைய சுவாசஅதிர்வுவலைகள்

ithayavaasalகவுகள், ஜன்னல்கள் பூட்டியே இருக்கின்றன‌
எப்படி நுழைகிறாய் என் கனவில்
அட என் இதயவாசல் திறந்தே இருக்கிறது உனக்காக‌

kanavilthenpattathu என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்க‌யில் த‌னித‌னி இனிமை
அதில் முழுவ‌தும் நீ ப‌ட‌ர்ந்திருப்ப‌தால்

vaanamஎன் வானம்
எனக்கே சொந்தம் நம் காதலை உலகம் போற்றுவதால்

tamilthoziதமிழ் தோழியாய்
எனக்கு காதல் மொழி பேச கற்றுக்கொடுத்தாய்

willtoliveWill to Live

raahavan naizeeriaராகவன் நைஜீரியா

donleeடொன்லீ

மண்ணிக்கவும்

இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை

திருமண வாழ்க்கை.. கசப்பா?


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது...
ஏதோ ஒரு புண்ணியவான் சொல்லிவிட்டு சென்றது, இது மெய்யாலுமே உண்மையா? சரி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம், நிச்சயிக்கப்பட்டபிறகு.. அது எந்தளவிற்கு நரகமாவிடுகிறது என்பது ஒரு பொதுவான புலம்பல்.
"ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்..." இது எந்தளவிற்கு சாத்தியமாகும்..
 
பொதுவாக காதலிக்கும்போதும், திருமணநாள் நிச்சயிக்கப்பட்டு அந்த நாள் நெருங்கி வரும்போது உ ள்ள பரவசம் இருக்கே... அதுக்கு எத்தனை பதிவு போட்டாலும் பற்றாது.சரி காதலிக்கும் போது உள்ள அதே நெருக்கம், புரிதல், அன்பு எல்லாமே கல்யாணத்திற்கு பிறகும் அதே % குறையாதஅளவுடன் தொடருதா?
கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே பலபேருக்கு கசக்கும், ஒரு படத்தில் கூட கமல்ஹாசன் தனது பெயரை பம்மல் ஊவ்வே.. சம்பந்தம் என்று சொல்வார். நிறைய திரைப்படங்களில் கதாநாயகன்/நாயகியின் காதலை மட்டும் காட்டிவிட்டு படத்தை முடித்துவிடுகிறார்கள்... அதற்கு பிறகுதான் உண்மையான காதலும் சமுதாயத்தில் பல சிக்கல்களை எதிர்த்து போராடும் வாழ்க்கையும் இருக்கு, இன்னும் பல திரைப்படத்தில் கூட இதைம் காட்டியிருப்பார்கள்.

அப்போ தீவிரமாக காதலித்து, சமுதாயத்தை எதிர்த்தும்  பெற்றோர்களும் மற்ற உறவிணர்களும் தேவையில்லை என்றும் செய்து கொள்ளும் திருமணம் ஏன் அதே காதலோடு இருப்பதில்லை.. அப்போ அவர்கள் காதலித்தது வெறும் Infatuation தானா? வெறும் ஆசைதானா?

சரி அதெல்லாம் இருக்கட்டும்

வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சில/பல குடும்பத்தலைவர்/ தலைவிகள் படும்பாட்டை இங்கே ச்சும்மா நகைச்சுவையாகவும்..., கற்பனையாகவும்...கீழே..

இப்பொழுதும்.. எப்போதும் வாழ்க்கையில் ஒன்றாகவே இருக்க விரும்புவார்கள்..

marraige2

ஒரே வழியில் வாழ்க்கைப்பயணத்தை நடத்த திட்டமிடுவார்கள்
marraige3
 
ஒருவருக்கொருவர் அழகான? புனை பெயர் கொண்டு அழைத்துக்கொள்வார்கள்
marraige1
இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள்
marraige4
 
ஒரே சேனலை TV லே பார்ப்பதற்கு விருப்பப்படுவார்கள்
marraige5

மரியாதையோடு பிரச்சினைகளை விவாதம் பண்ணி அதில் தீர்வு காண முயலுவார்கள்

marraige6
 
ஒன்றாக குளிப்பதில் அலாதி பிரியம் இவருக்கு
marraige11
 
வீட்டிற்கு வரும்போது அவரின் செருப்பை கொண்டுவர மறக்கமாட்டார்
marraige7
 
எப்போவும்.. எங்கேயும் அவருடைய மணைவியின் நினைவுலேயே இருப்பார்..!
marraige8
அலுவலக வேலைகளின் மெய்மறந்து இருப்பார்.. அதனால் அலுவலகத்தை விட்டு போக மனது வராது..
marraige9
அமைதியாக கணவரின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார் marraige10

நீங்களும் கார சாரமாக, சூடாக, கூலாக தாங்களின் விவாதங்களை பின்னூட்டமாக சொல்லலாமே..
இதன் மூலம் திருமணம் செய்ய போறவங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும்... திருமணமானவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்குமே.......!!

தமிழர்கள்.. ஒரு கேடயமா..??

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம், பீரங்கி சத்தத்திலும், குண்டு மழைக்களுக்கிடையிலும் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள்.
tamil-eelam-brder-copy


தேயிலை முதல் தேங்காய் வரை உள்நாட்டு தேவைக்கதிகமாய் வியாபார ஏற்றுமதி, பூமாதேவியின் மடியினில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை எழில், இதன் மூலம் வெளிநாடுவாழ் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் இயற்கை வளம் நிறைந்த நாடு இன்று...? 

நம் இனத்தவர் வியாபாரரிகளாகவும், வேலைப்பார்க்கவும்  அயர்லாந்துகளுக்கும் புலம் பெயர்ந்த காலம், அந்த நாட்டின் வளம் வியாபாரிகளுக்கும், பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தகுதியான செல்லவசெழிப்பினை கொண்டிருந்தது.. அதிக்கப்படியான மக்கள் அதுவும் நம் இனத்தவர் அதிகமாக புலம் பெயர்ந்து தங்களுடைய வாழ்க்கையை நாட்டுடைய செல்வச்செழிப்பை மெம்மேலும் வளர அர்பணித்தனர்.

அங்கே தமக்கென்ற ஒரு சாம்ரஜ்யத்தை அமைத்தனர். நம் மக்கள் அரசியல் சட்ட சீர்திருத்த அமைப்பிலும், அரசாங்க பதவிகளிலும் முக்கிய பங்கு வகித்தனர். இன்னும் எத்தனையோ அரசியல் மாற்றத்திற்கு காரணமாக இருந்த்தனர். நமது மொழி ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டது..

crysis068

மெல்ல அங்கே தனிநாடு கோரிக்கையில் போராட்டம் வெடித்தது, அதுவே இனப்போராட்டமாக அறிவிக்கப்பட்டது, நூதனமுறையில் போரிடுகிறேனென்று ஆயுதமேந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது அதில் 269தமிழ் பேசும் மக்களை பலவந்தமாக போராட்டத்திற்குள் திணிக்கப்பட்டனர். இதனால் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் அரசுக்கு எதிராக போராடுவது போல் சித்தரிக்கப்பட்டது, இதன் விளைவால் அப்பாவி தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரியானார்கள். இன்று இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய், இப்போது இவர்கள்தான் போருக்கு கேடயம்.....இவர்களை முன்னிருத்தி போர் நடக்கிறது..


வெல்வது யாரகிலும்.. வீழ்வது...???

என்னுடன் வேலைப்பார்க்கும் சக ஊழியர் (இவர் கொழும்பு) ஒருவர் என்னிடம் இந்தியாவிற்கு வரவேண்டும் அதற்கு விசா ஏற்பாடு செய்து கேட்டார், நான் அதற்கான காரணத்தை வினவ அதற்கு அவர் எனது தந்தை வழி சொந்தம் இருக்கிறது, பெரியப்பா, மாமா, மாமி, சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தார் அனைவரும் இருக்கிறார்கள், சேலத்திற்கு பக்கத்தில் ஒரு ஊரை குறிப்பிட்டார். நம்முடைய இரத்த பாசத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்கஇயலும்.
ahathihalநம் இன மக்கள் எப்படி அகதியாக்கப்படுகிறார்கள், எப்படி அகதியாக பிற நாட்டிற்கு புலம்பெயர்கிறார்கள், அகதியாக அவர்கள் படும்பாடு என்பனவற்றை நாம் எத்தைனையோ திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது... ஒருவர் வீடு வாடகைக்கு இருந்துவிட்டு அடுத்த வீட்டுக்கு குடியேருவது எந்தளவிற்கு கஷ்டம் என்பதை நாமறிவோம், அப்போ சொந்த நிலம், பொருள், ஆசையா வீட்டில் வளர்த்த செடிகள், இப்படியாக இன்னும் சொல்ல முடியாத எத்தனையோ..... போட்டது போட்டப்படி, மாற்றுக்கு துணிகள்கூடஎடுக்க இயலாமல் அகதிகள் என்ற பெயரில் புலம்பெயரும் இவர்களின் நிலை..சமீபத்தில் கூட தமிழர்களின் மேல் தாக்குதலை நிறுத்தக்கோரியும், அதை கண்டித்தும் தானே தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்,sucide இதன் மூலம் யாருக்கு நஷ்டம், இதனால் போரை நடத்தும் அரசாங்கம் என்ன செய்தது.. இதை வைத்து அரசியல்வாதிகளின் நாடகம் அரங்கேறியது, மீடியாக்கள் பரபரப்புக்காக ஓடியாடி செய்தி வெளியிட்டது, தெரிந்தவர்களும் கேள்விப்பட்டவர்களும் அச் சச்சோ என்று உச்சிக்கொட்டி பிறகு வரும் நாட்களில் தானாக மறத்தும் மறந்தும்போகும்... ஆனால்... தங்களை இறுதிவரை காப்பாற்றுவான் என்று பெற்றோர், தாங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார் என்று சகோதர சகோதரிகள், இனி வாழ்க்கை முழுதும் உன்னோடுதான் என்று வரும் மனைவி குழந்தைகள் மற்றும் உற்றார் உறவினரின் நிலை????

சமீபத்தில் எனது விமானப்பயணத்தின் போது இலங்கையில் 2 மணி நேரம் காலதாமதம் காரணம் காட்டி விமானநிலையத்திலே தங்க நேர்ந்தது, அப்போது வினாடிக்கொரு தடவை போர் விமானங்கள் தரை இறங்குவதும், கிளம்பிப்போவதுமாக இருந்தது. அதன் இயக்கத்தில் ஒரு கணம் குலை நடுங்கித்தான் போனது... அப்போ ஒவ்வொரு நிமிடமும் போர் விமானங்களை கண்டும், அதன் மூலம் எப்போது நாம் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தோடு வாழும் நம் சமுதாய மக்களின் நிலை..?

தமிழ் பேசுகிறவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு கிடைக்கும் தண்டனையா? மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அண்டை நாட்டின் தூண்டுதலை காரணம் காட்டி நம் நாட்டு கிரிக்கெட் டீமை அனுப்பாமல் தன் எதிர்ப்பை காட்டியதைப்போல்.. இப்போது நடந்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிராக விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் டீமையும் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து அனுப்பாமல் இருந்திருந்தால் இது உலகப்பார்வைக்கு கொண்டுசெல்லும் ஒரு விடயமாக அமைந்திருக்கும், அதற்காக நம் அரசாங்கத்தை பாராட்டியிருக்கலாம்..
3 வயதே நிரம்பிய என் மகன் என்னிடம்.. அப்பா இலங்கையில் மட்டும் ஏன் மாதம் முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்..??


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே