என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

காணிக்கை..!

 katebeach

காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று

நிலவுக்கு தெரியும்
நாள் தோறும் தேய்கிறேனென்று

தூக்கத்திற்கு தெரியும் 
கனவுகளில் நீ மட்டும் வருகிறாயென்று

இருட்டுக்கு தெரியும்
உன் கண்ணிமையின் வெளிச்சத்தில் நடக்கிறேனென்று

இந்த உலகுக்கு தெரியுமா?
நம் இருவர் உயிர்களும்
பைத்தியமாய் அழைகிறது என்று..!

------------------------------------------------------------------------------------------------------

  love2

இசையை வெறுக்கிறேன்
உன் குரலை கேட்டப்பிறகு

எதையும் உற்று நோக்குவதை வெறுக்கிறேன்
உன் விழிகள் என் கண்ணுக்குள்ளே இருப்பதால்

தேவைக்கதிகமாய் பேசுவதை வெறுக்கிறேன்
உன்னிடம் தேவையைவிட‌ பேசுவதற்காக‌

கம்யூட்டர் கீஃபோர்ட் தட்டுவதையே வெறுக்கிறேன்
என் உணர்வுகளை ‌உனக்கு எழுத்துக்களால் வடிப்பதற்காக‌ ‌

கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால்

நீ எங்கோயிருந்தோ கொடுத்த முத்தம்
என் காதுகளுக்கு அமிர்தமாய்

பொதுவாக கொடுக்கும் முத்ததினால்
காதுமடல் உலர்ந்து இதழ்கள் ஈரமாகும்            
தொலைப்பேசியுனூட கொடுத்த முத்தத்தால்                                இதழ்கள் உலர்ந்து காதுமடல் ஈரமானது..

உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!

------------------------------------------------------------------------------------------------------

 images

தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..!

அமைதியான‌ ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில்
எங்கேயோ கேட்கும் இனிய‌ ஒலி
உன் வ‌ளைய‌லின் ஒலிதானோ என்று
திடுக்கிட்டு எழுவேன்
அப்போது..!

இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...

------------------------------------------------------------------------------------------------------

காதலைப்போற்றும் இவ்வேளையில்
என் உயிருக்கு..!
காணிக்கையாக‌.. சில வரிகள்....

---------------------------------------------------------------------------------

 

70 கருத்துசொல்ல:

Mathu 14 February, 2009 03:15  

Verrry nice! I loved it :))

Mathu 14 February, 2009 03:16  

WOW...உண்மையா ரொம்ப நல்லா இருக்கு கவிதை....எல்லா வரிகளுமே அருமை....
ரொம்ப உணர்வுபூர்வமா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.....ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கவிதைக்கு WOW சொல்லிருக்கேன் :)

Mathu 14 February, 2009 03:19  

//அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு... //****

//உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..! -//**

அ.மு.செய்யது 14 February, 2009 05:43  

ஆஹா....காதலர் தின சிறப்பு வெளியீடா...

படிச்சிட்டு வரேனுங்க..

அ.மு.செய்யது 14 February, 2009 05:47  

//காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று

நிலவுக்கு தெரியும்
நாள் தோறும் தேய்கிறேனென்று

தூக்கத்திற்கு தெரியும்
கனவுகளில் நீ மட்டும் வருகிறாயென்று
//

உங்களுக்குள்ள என்னமோ இருந்துர்க்கு..

அ.மு.செய்யது 14 February, 2009 05:48  

//இசையை வெறுக்கிறேன்
உன் குரலை கேட்டப்பிறகு

எதையும் உற்று நோக்குவதை வெறுக்கிறேன்
உன் விழிகள் என் கண்ணுக்குள்ளே இருப்பதால்

தேவைக்கதிகமாய் பேசுவதை வெறுக்கிறேன்
உன்னிடம் தேவையைவிட‌ பேசுவதற்காக‌
//

யதார்த்தமான சொல்லாட்சி....அழகு.

அ.மு.செய்யது 14 February, 2009 05:50  

//கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால்

நீ எங்கோயிருந்தோ கொடுத்த முத்தம்
என் காதுகளுக்கு அமிர்தமாய்
//

காதுகளுக்கு மட்டுமா....

புதியவன் 14 February, 2009 05:51  

//காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று//

ஆஹா...ஆரம்ப வரியே அசத்தல்...

புதியவன் 14 February, 2009 05:52  

//இந்த உலகுக்கு தெரியுமா?
நம் இருவர் உயிர்களும்
பைத்தியமாய் அழைகிறது என்று..!//

ஹா...ஹா...ஹா...உண்மையாகவா...?

அ.மு.செய்யது 14 February, 2009 05:52  

// பொதுவாக கொடுக்கும் முத்ததினால்
காதுமடல் உலர்ந்து இதழ்கள் ஈரமாகும் தொலைப்பேசியுனூட கொடுத்த முத்தத்தால் இதழ்கள் உலர்ந்து காதுமடல் ஈரமானது.. //

அனுப‌வ‌ம் சில‌ நேர‌ங்க‌ளில் இப்ப‌டி தான் வெளிப்ப‌டுமோ...

புதியவன் 14 February, 2009 05:53  

//கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால்//

புரியுது அபுஅஃப்ஸர்...புரியுது...

புதியவன் 14 February, 2009 05:53  

//உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!//

இது அருமை...

அ.மு.செய்யது 14 February, 2009 05:54  

//உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!//

ஒற்றைப் புள்ளிக்குள் ஓருலகம்...

அருமை நண்பரே !!!

புதியவன் 14 February, 2009 05:56  

//இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...//

அருமை...அழகு...அட்டகாசம்...

காதலர் தினக் கவிதை...?

காதலர் தின வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

அ.மு.செய்யது 14 February, 2009 05:59  

//தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..!
//

இது போல எண்ணிலடங்கா தருணங்கள்...

மறக்க நினைத்தும், போராடி நினைவுகளுடன் தோற்றுப் போன கணங்கள்.

அட‌ போங்க‌ப்பா !!!

அ.மு.செய்யது 14 February, 2009 05:59  

//அமைதியான‌ ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில்
எங்கேயோ கேட்கும் இனிய‌ ஒலி
உன் வ‌ளைய‌லின் ஒலிதானோ என்று
திடுக்கிட்டு எழுவேன்
அப்போது..! //

கிளாஸ்.....

சொல்ல வேறொன்றுமில்லை...

அ.மு.செய்யது 14 February, 2009 06:02  

//இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...//

நினைவுக‌ளுடன் சேர்த்து சில வடுக்களையும் தான் பத்திரப்படுத்துகிறோம்.

ஆனாலும் அதுவும் ஒரு சுக‌ம் தான்.

அ.மு.செய்யது 14 February, 2009 06:04  

அதிகாலையில் உங்கள் கவிதை ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தது.

ஆனா ஃபீல் பண்ண வச்சிடீங்க...

மறக்க முடியாத நினைவுகள்...மூழ்கினேன்.

அ.மு.செய்யது 14 February, 2009 06:07  

விமர்சனங்கள் முடிந்து விட்டன...

மீண்டும் சபை கூடிய பிறகு, கும்மி அதிகாரப் பூர்வமாக ஆரம்பிக்கப் படும்.

ஆதவா 14 February, 2009 06:07  

நல்ல கவிதைங்க..

காதலிக்கும் காதலருக்கும் எதுவுமே தெரிவதில்லைங்க... ஏனெனில் இரண்டு பேருமே இந்த உலகத்தில் இருப்பதில்லை..

////
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...///

நல்லா இருக்குங்க.

ஆதவா 14 February, 2009 06:13  

காதலைப்போற்றும் இவ்வேளையில்
என் உயிருக்கு..!
காணிக்கையாக‌.. சில வரிகள்....

அதானே பார்த்தேன்....

வாழ்த்துக்க்ள்..

Mohan R 14 February, 2009 07:48  

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..!
இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...



அருமை

இராகவன் நைஜிரியா 14 February, 2009 10:53  

இப்போதைக்கு பிரசண்ட் போட்டுகிறேன்.

அப்பால வந்து ஆராய்ச்சி பண்றேன்.

ஆபீசில ஆணி பிடுங்கிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்.

அப்துல்மாலிக் 14 February, 2009 11:40  

//Mathu said...
WOW...உண்மையா ரொம்ப நல்லா இருக்கு கவிதை....எல்லா வரிகளுமே அருமை....
ரொம்ப உணர்வுபூர்வமா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.....ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கவிதைக்கு WOW சொல்லிருக்கேன் :)
/

ரொம்ப நன்றி உஙகள் wow க்கு
mathu

அப்துல்மாலிக் 14 February, 2009 11:41  

ரொம்ப நன்றி செய்யது உங்கள் காலை வாழ்த்துக்கு

அப்துல்மாலிக் 14 February, 2009 11:42  

நன்றி புதியவரே, என்னுடைய கவிதைக்கு உங்களைமாதிரி பெரிய கவிஞர்களிடமிருந்து வாழ்த்து பெறுவது பெரிய பொக்கிஷமே

அப்துல்மாலிக் 14 February, 2009 11:44  

//ஆதவா said...
காதலைப்போற்றும் இவ்வேளையில்
என் உயிருக்கு..!
காணிக்கையாக‌.. சில வரிகள்....

அதானே பார்த்தேன்....

வாழ்த்துக்க்ள்..
//

நன்றி ஆதவா தாங்கள் வாழ்த்துக்கு

அப்துல்மாலிக் 14 February, 2009 11:45  

//இராகவன் நைஜிரியா said...
இப்போதைக்கு பிரசண்ட் போட்டுகிறேன்.

அப்பால வந்து ஆராய்ச்சி பண்றேன்.

ஆபீசில ஆணி பிடுங்கிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்.
//

வாங்க அண்ணாச்சி.. நீங்க இல்லாமல் கடை களைக்கட்டலே

அப்துல்மாலிக் 14 February, 2009 11:46  

//இவன் said...
நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..!
இப்ப‌டி சித‌றித்தான் போகிறேன்
அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு...



அருமை
//

நன்றி இவன் தாஙகள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

S.A. நவாஸுதீன் 14 February, 2009 12:03  

மெஸ்ஸில் சாப்பிடும்போது அம்மாவின் கைப்பக்குவம்

உயர் அதிகாரியின் ஆலோசனை கேட்கும்போது அப்பாவையும்

அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது என் உயிர் நண்பர்களும்

நினைவில் வருவதுண்டு. ஆனால் நீ மட்டும் வருவதில்லை.

ஒருமுறை மட்டும் கட்டாயம் நீ நினைவில் வருகின்றாய்.

நான் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும்.

அப்துல்மாலிக் 14 February, 2009 12:14  

// Syed Ahamed Navasudeen said...
மெஸ்ஸில் சாப்பிடும்போது அம்மாவின் கைப்பக்குவம்

உயர் அதிகாரியின் ஆலோசனை கேட்கும்போது அப்பாவையும்

அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது என் உயிர் நண்பர்களும்

நினைவில் வருவதுண்டு. ஆனால் நீ மட்டும் வருவதில்லை.

ஒருமுறை மட்டும் கட்டாயம் நீ நினைவில் வருகின்றாய்.

நான் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும்.
//

ஆஹா பின்னூட்டத்துலேயே ஒரு கவிதையா
கலக்குறே மாப்ஸ்
சீக்கிரம் நீயும் காவியம் எழுத வாழ்த்துக்கள்

VASAVAN 14 February, 2009 15:45  

//கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால்//

புதுமை, அருமை. வாழ்த்துக்கள்

ஹேமா 14 February, 2009 17:29  

அபுஅஃப்ஸர்,இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.காதலின் இதமான தென்றல் காற்று உங்கள் பதிவில்.அருமையாய் இருக்கு ஒவ்வொரு வரிகளும்.

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:30  

வந்துட்டோமில்ல...

இன்னும் 20 நிமிஷம்... எதாவது செஞ்சு 50 க்கு கொண்டு போயிடணும்

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:31  

// காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று நிலவுக்கு தெரியும் //

காற்றுக்கு மட்டும்தான் தெரியுமா..
அவங்க அப்பாவுக்கு தெரியாதா என்ன

ஹேமா 14 February, 2009 17:32  

//உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!//

ஆழமான காதலின் அழகிய வரிகள்.

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:33  

// உன் கண்ணிமையின் வெளிச்சத்தில் நடக்கிறேனென்று இந்த உலகுக்கு தெரியுமா? //

பாத்துங்க.. எப்படிங்க இதெல்லாம்

நல்லா வெளிச்சம் இருந்தாலே.. எல்லோரும் தடுமாறுவாங்க..

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:34  

// நம் இருவர் உயிர்களும்
பைத்தியமாய் அழைகிறது என்று..!//

நீங்க சொல்லவில்லை என்றால் எங்களுக்குத் தெரியாதா என்ன பைத்தியமாய் அலைகின்றீர்கள் என்று.

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:35  

// இசையை வெறுக்கிறேன்
உன் குரலை கேட்டப்பிறகு //

இவ்வளவு மோசமா பாடமுடியுமா என்று நினைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:35  

// இசையை வெறுக்கிறேன்
உன் குரலை கேட்டப்பிறகு //

இவ்வளவு மோசமா பாடமுடியுமா என்று நினைக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:36  

// எதையும் உற்று நோக்குவதை வெறுக்கிறேன்
உன் விழிகள் என் கண்ணுக்குள்ளே இருப்பதால் //

ரொம்ப உற்று நோக்கக் கூடாது... கண்ணு உறுத்துமில்ல

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:37  

// தேவைக்கதிகமாய் பேசுவதை வெறுக்கிறேன்
உன்னிடம் தேவையைவிட‌ பேசுவதற்காக‌//

யாகாவாரியினும் நா காக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழிக்குப்பட்டு...

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:38  

// கம்யூட்டர் கீஃபோர்ட் தட்டுவதையே வெறுக்கிறேன்
என் உணர்வுகளை ‌உனக்கு எழுத்துக்களால் வடிப்பதற்காக‌ //

பார்த்து தட்டுங்க... வேகமா தட்டி உடைஞ்சுட போகுது.. கம்பூயட்டர் கீ போர்டு

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:39  

// கேட்கும் திறன் அதிகமாகிவிட்டது
நீ தொலைப்பேசியுனூடே கொடுத்த முத்தத்தின் சத்தத்தால் நீ //

நான் நைஜிரியாவில் இருந்து பேசுவது கேட்குதாங்க

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:39  

// தொலைப்பேசியுனூட கொடுத்த முத்தத்தால் இதழ்கள் உலர்ந்து காதுமடல் ஈரமானது..//

அப்ப தொலைபேசி அவ்வளவுதானா...

இராகவன் நைஜிரியா 14 February, 2009 17:40  

// உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!//

இதுதாங்க கரெக்டாய் சொல்லியிருக்கீங்க..

எல்லோருமே ஒரு புள்ளிதாங்க

*இயற்கை ராஜி* 14 February, 2009 17:57  

//அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு//

மிக‌ அழ‌கு

*இயற்கை ராஜி* 14 February, 2009 17:58  

//தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..! //

ovvoru varium arumai..yethai solvathu yethai viduvathu nne therillanga

*இயற்கை ராஜி* 14 February, 2009 18:01  

//நம் இருவர் உயிர்களும்
பைத்தியமாய் அழைகிறது என்று..!//

அலைகிற‌து???

அப்துல்மாலிக் 14 February, 2009 18:31  

பின்னூட்ட புலி ராகவா அண்ணாத்தே.. காதலர்களை ச்சே என்னைமாதிரி பதிவர்களை வாழவைப்பதே உங்களைமாதிரி ஆளோட பின்னூட்டம் தான்

வாழ்க உங்கள் புகழ்
நனிறிகள் பல‌

அப்துல்மாலிக் 14 February, 2009 18:32  

கடைசிலே 50 போடாமல் போய்ட்டீங்களே

அப்துல்மாலிக் 14 February, 2009 18:35  

//இய‌ற்கை said...
//தனியாக நடந்து போகும்போது
திடீரென்று உன் முகம் ஞாபகம் வரும்
அப்போது..!

நாம் இருவரும் ரசித்த பாடலை
எங்கேயாவது கேட்க நேரிடும்
அப்போது..!

தவறாக பேசி நீ திருத்திய
ஆங்கில வார்த்தையை
யாரிடமாவது உற‌வாட‌ நேரும்
அப்போது..! //

//

நன்றி இயற்கை தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 14 February, 2009 18:38  

//ஹேமா said...
//உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!//

ஆழமான காதலின் அழகிய வரிகள்.
/

நன்றி ஹேமா வாழ்த்துக்கு

ஆதவா 14 February, 2009 19:00  

குறும்பாக ஒரு கவிதை எழுதறேங்க... உங்க கவிதையை வெச்சு.....

நீங்க கோச்சுக்காதீங்க.... ப்லீஸ்....  


காற்றுக்குத் தெரியும்
நான் அதை சுவாசிக்கிறேனென்று
நிலவுக்குத் தெரியும்
நான் அதை நேசிக்கிறேனென்று
தூக்கத்திற்குத் தெரியும்
நான் நன்கு குறட்டை விடுவேனென்று
இருட்டுக்குத் தெரியும்
நான் தடுமாறி விழுவேனென்று
இந்த உலகுக்குத் தெரியுமா?
நான் கீழ்பாக்க வாசி என்று????
அடடஏ!!!! (இது குறும்புக்கு!!!!!)

நீங்கள் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
ஆதவா!!!

அப்துல்மாலிக் 14 February, 2009 19:39  

// ஆதவா said...
குறும்பாக ஒரு கவிதை எழுதறேங்க... உங்க கவிதையை வெச்சு.....

நீங்க கோச்சுக்காதீங்க.... ப்லீஸ்....


காற்றுக்குத் தெரியும்
நான் அதை சுவாசிக்கிறேனென்று
நிலவுக்குத் தெரியும்
நான் அதை நேசிக்கிறேனென்று
தூக்கத்திற்குத் தெரியும்
நான் நன்கு குறட்டை விடுவேனென்று
இருட்டுக்குத் தெரியும்
நான் தடுமாறி விழுவேனென்று
இந்த உலகுக்குத் தெரியுமா?
நான் கீழ்பாக்க வாசி என்று????
அடடஏ!!!! (இது குறும்புக்கு!!!!!)

நீங்கள் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
ஆதவா!!!
//

உங்கள் குரும்பான கவிதையை ரசித்தேன் ஆதவா

இராகவன் நைஜிரியா 14 February, 2009 23:45  

50வது பின்னூட்டம் போடனும் அப்படின்னுதான் ஆரம்பிச்சேன்..

நடுவுல ஒரு பெரிய ஆணி...

வேற வழியே இல்லாம பாதில் உட்டுட்டு போக வேண்டியதாப் போச்சு..

வெரி வெரி சாரி

கார்த்திகைப் பாண்டியன் 15 February, 2009 09:24  

கவிதை நல்லா இருக்குங்க.. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

cute baby 15 February, 2009 11:05  

ஆஹா! அற்புத வரிகள் இதுவா?சின்ன பசங்க எழுதும் கவிதை

வேத்தியன் 15 February, 2009 12:45  

கவிதை சூப்பர்ங்க...
வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் 15 February, 2009 14:42  

//கார்த்திகைப் பாண்டியன் said...
கவிதை நல்லா இருக்குங்க.. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..
/

நன்றி கார்த்திகை பாண்டியன்

அப்துல்மாலிக் 15 February, 2009 14:43  

//cute baby said...
ஆஹா! அற்புத வரிகள் இதுவா?சின்ன பசங்க எழுதும் கவிதை
//

நன்றி Cute Baby

அப்துல்மாலிக் 15 February, 2009 14:43  

//வேத்தியன் said...
கவிதை சூப்பர்ங்க...
வாழ்த்துகள்...
//

நன்றி வேத்தியன்

தேவன் மாயம் 15 February, 2009 18:09  

கவிதை மிக அருமை!
நல்லா இருக்கு கவிதை....எல்லா வரிகளுமே அருமை..மிகவும்
ரசித்தேன்

தேவா..

தேவன் மாயம் 15 February, 2009 18:10  

/காற்றுக்கு தெரியும்
உன் நினைவுகளை மட்டுமே சுவாசிக்கிறேனென்று

நிலவுக்கு தெரியும்
நாள் தோறும் தேய்கிறேனென்று

தூக்கத்திற்கு தெரியும்
கனவுகளில் நீ மட்டும் வருகிறாயென்று
//
எங்களுக்கும் தெரியுது!

ஜியா 16 February, 2009 08:54  

//தொலைப்பேசியுனூட கொடுத்த முத்தத்தால் இதழ்கள் உலர்ந்து காதுமடல் ஈரமானது..//

நச்... கடைசி கவிதையும் நல்லா இருந்தது... கலக்குங்க...

அமிர்தவர்ஷினி அம்மா 16 February, 2009 10:28  

சிறப்பான காணிக்கை

எம்.எம்.அப்துல்லா 17 February, 2009 13:28  

படிச்சு முடிக்கிறதுக்குள்ள...உஸ்...அப்பாடா. எம்மாம் பெரிய கவிதை :)

எம்.எம்.அப்துல்லா 17 February, 2009 13:28  

படிச்சு முடிக்கிறதுக்குள்ள...உஸ்...அப்பாடா. எம்மாம் பெரிய கவிதை :)

அமுதா 17 February, 2009 17:42  

/*உலகில் எங்கோ மூலையில்
நீ ஒரு புள்ளி
ஆனால் எனக்கு அந்த உலகமே நீதான்..!*?
சூப்பர்


/*அப்போதெல்லாம்..!
உன்னை ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி
உன் நினைவுக‌ளை ப‌த்திர‌ப்ப‌டுத்திக்கொண்டு... */
அருமை

ஆதவா 19 February, 2009 08:13  

என்னங்க வேற எதுவவம் எழுதலயா!!!

காத்திட்டு இருக்கோம்ல???


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே