என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

வழக்கிலுள்ள தமிழ் சொற்கள் - ‍ நடைமுறை சொற்கள்.!!

அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி), நாமும் ஏதாவது சொல்லனும், இதுக்குமேலே விட்டால் அப்புறம் சரியா வராதுனு யோசிச்சேன்... யோசிச்சேன்.... கடைசிலே ஒன்னுமே புலப்படலே. ஆணி புடுங்குறதுலேயே கவனம் இருந்தது, சரிதான் இப்போதைக்கு ஏதாவது சொல்லித்தான் ஆகோனும் இல்லேனா மேலே எனக்காக வக்காலத்து வாங்கியவர்கள் கோவிச்சிக்குவாங்கனு, இப்படி ஒரு (விபரிதமான?) முடிவு எடுத்துவிட்டேன்.

த‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி (அடிக்க‌ வ‌ந்துடாதீங்க‌), ஆனா இதை பேசும் வித‌ம் ஓவ்வொரு நாட்டில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஒவ்வொரு மாநில‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும், ஓவ்வொரு மாவ‌ட்ட‌த்தில் வாழும் ம‌க்க‌ளிடையேயும் ஏன் ஒவ்வொரு ம‌க்க‌ளிடையேயும் வேறுப‌டும் (இது நிரூப‌ன‌மான‌ உண்மை). வ‌ழ‌க்கொழிந்த‌ மொழி என்ப‌தை திரும்ப‌ ஞாப‌க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ ப‌திவு என்ப‌து எல்லோருக்கும் தெரிந்த‌ பொதுவான‌ க‌ருத்து, இது எல்லா த‌மிழ் பேசும் ப‌டிக்கும் ம‌க்க‌ளுக்கும் இது சாத்திய‌மே, இருந்தாலும்....

நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம். த‌மிழ் நாட்டிலுள்ள‌ சில‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌த்தில் பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ள் பேசும் வித‌ம் வேறுப‌டும், அதுக்காக‌வே த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  அதுக்கென்னா என்கிறீர்க‌ளா? அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். நான் இந்த‌ வித்தியாச‌மான‌ (அப்ப‌டினு நான் நினைக்கிறேன்) முய‌ற்சியாய் ந‌ம் ம‌க்க‌ளிடையே பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....

திடுதூரா                                         =   திடீரென
ஓங்காரம்                                       = வாந்தி
மசக்கம்                                          = மயக்கம்
கோதாரி                                         = வறட்டு பிடிவாதம்
கூப்பாடு                                          = விருந்தழைப்பு
திட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை

இங்கிரு                                           = இங்கேப் பார்
எசலு, சலுவு                = காரணமில்லால் வம்பு இழுத்தல்
பொவ்மானம்                                 = திமிர், ஏளனம்
ஒரு வாட்டி                                   = ஒரு தடவை
தாயபுள்ள                                       = சொந்த பந்தம்
பொரத்தியான்                                = அந்நியன்
சும்மாத்துக்கும்                              = வெறுமனே
உட்ரு/உர்ரா                                     = விட்டு விடு
என்னன்டு                                         = என்ன வென்று
நாசுவென்                                         = நாவிதன்
உச்சிஉரும நேரம்                           = உச்சி வெயில் நேரம்
மாலமணி நேரம்                      = சூரியன் மறையும் நேரம்
வீதல்ரோடு                             = உடைந்த கண்ணாடி துண்டு
சீந்தாப்பு                                              = மழைத்தூரல்
சீக்கனம்,வெள்ளனமே, சுருக்கன     = சீக்கிரம்
பொத்தல்                                            = ஓட்டை
ஒசக்கெ                                               = உயரத்தில்
கானு                                                   = சாக்கடை
முடுக்கு                                              = சந்து
அவுருவம்                                          = அரிதானது
நல்ல நாளு, பெரிய நாளு            = முக்கியமான நாட்கள்
இருட்டுக்கசம், மைக்கசம்                 = இருள்

தினுசு, தினுசா                                    = வித, விதமாய்
மப்பு                                                     = மேக மூட்டம்
மூடாத்து                     = விவரம் இல்லாதவன்/முட்டாள்
என்னான்டாக்கா                                 = என்ன வென்றால்
குட்டான்                                             = கையால் நெய்த கூடை

நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே. இதைப்படித்துவிட்டு அவுகளாகவே அவுகளுக்கு தெரிந்த பேச்சு வழக்கிலுள்ள‌ மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒரு பதிவாக போட்டால்... அதை படித்துவிட்டு அந்தந்த ஊருகளுக்கு போகும்போது மொழிப்பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம். அல்லது பின்னூட்டமாகவும் சொல்லலாம்.

78 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 25 February, 2009 16:05  

எந்த ஊருப்பா இது

சி தயாளன் 25 February, 2009 16:13  

அதே..கேள்வி....எந்த ஊர்..?

கோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)

அ.மு.செய்யது 25 February, 2009 16:15  

உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்.

அ.மு.செய்யது 25 February, 2009 16:21  

//பொவ்மானம்//

நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.

இல்ல "பகுமானம்" இப்படியும் சொல்லலாம்.

அ.மு.செய்யது 25 February, 2009 16:21  

//வெள்ளனமே//

//நல்ல நாளு, பெரிய நாளு//

//என்னான்டாக்கா//

இதெல்லாம் ராமநாதபுர மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மக்களின் பிரயோகங்கள்.

அ.மு.செய்யது 25 February, 2009 16:21  

//இருட்டுக்கசம்//

அழுக்குக்கசம்னு கூட சொல்வாங்க...( அழுக்க மட்டும் )

அப்துல்மாலிக் 25 February, 2009 16:23  

//நட்புடன் ஜமால் said...
எந்த ஊருப்பா இது
/

அதெல்லாம் சொல்லப்படாது, கண்டுபிடிக்கோனும்

அ.மு.செய்யது 25 February, 2009 16:23  

//த‌மிழ் நாட்டிலுள்ள‌ சில‌ ப‌ல‌ மாவ‌ட்ட‌த்தில் பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ள் பேசும் வித‌ம் வேறுப‌டும், //

சுருக்கமாக வட்டார மொழிகள்னு சொல்லியிருக்கலாமே !!!!!!

அப்துல்மாலிக் 25 February, 2009 16:24  

//’டொன்’ லீ said...
அதே..கேள்வி....எந்த ஊர்..?

கோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)
//

இருக்கலாம் டொன்லீ

அப்துல்மாலிக் 25 February, 2009 16:24  

//அ.மு.செய்யது said...
உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்
/

எப்போங்க ஜெயிலுக்கு போனீங்க‌

அ.மு.செய்யது 25 February, 2009 16:25  

விதிப்படி யாரையாவது மாட்டி வுடணும்..

அட்லீஸ்ட்...

ஜார்ஜ் புஸ்,
ஒசாமா,
மைக்கேல் ஷுமேகர் அப்டினாவது கீழ போடுங்க தல...

அப்துல்மாலிக் 25 February, 2009 16:26  

இதன் மூலம்வரும் பின்னூட்டத்தை பொறுத்து தரப்பட்ட வார்த்தைகள் எந்த ஊருலே அதிகம் புலக்கத்தில் உள்ளது என்று ஒரு முடிவுக்கு வரலாம்

அ.மு.செய்யது 25 February, 2009 16:27  

//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்
/

எப்போங்க ஜெயிலுக்கு போனீங்க‌
//

நேத்துலர்ந்தே ஒரே பிடிவாரண்ட்,ஜெயிலு அப்டி இப்டினு பீதிய கிளப்புறீங்களே !!!

ஒரே கெட்ட கனவு தூங்கினா..!!!!!

அப்துல்மாலிக் 25 February, 2009 16:27  

//அ.மு.செய்யது said...
//வெள்ளனமே//

//நல்ல நாளு, பெரிய நாளு//

//என்னான்டாக்கா//

இதெல்லாம் ராமநாதபுர மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மக்களின் பிரயோகங்கள்
//

அப்படியா... அப்படியும் இருக்கலாம்

அப்துல்மாலிக் 25 February, 2009 16:28  

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்
/

எப்போங்க ஜெயிலுக்கு போனீங்க‌
//

நேத்துலர்ந்தே ஒரே பிடிவாரண்ட்,ஜெயிலு அப்டி இப்டினு பீதிய கிளப்புறீங்களே !!!

ஒரே கெட்ட கனவு தூங்கினா..!!!!!
//

நம்ம தேவா போட்ட பிடிவாரண்ட்லே புடிச்சி உள்ளே போட்டுட்டாங்களோனு பார்த்தேன், அதான் உறுதி செய்துக்கிட்டேன்

அ.மு.செய்யது 25 February, 2009 16:28  

நான் அப்பீட்டுக்கிறேன்..

பிகாஸ், ஈவ்னிங் 6 டு 10 பிஎம் ,செய்யதுக்கும் வலைப்பூக்கும் ரெம்ப தூரம்...


Will be back !!!!!!!! after 10 pm

தமிழ் 25 February, 2009 16:32  

வாழ்த்துகள்


ஒட்டுமொத்தமாக
தமிழகத்தையே
வாடகை எடுத்துவிட்டு
வீட்டீர்கள்

அழைப்பு யாருமில்லையா

அப்துல்மாலிக் 25 February, 2009 16:36  

//திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்


ஒட்டுமொத்தமாக
தமிழகத்தையே
வாடகை எடுத்துவிட்டு
வீட்டீர்கள்

அழைப்பு யாருமில்லையா
//

நன்றி திகழ்மிளிர்
அழைத்தால் பயந்து ஓடுறாங்கோ
அதனாலேதான் அவங்க இன்டிரஸ்ட்லே போடட்டுமேனு விட்டுவிட்டேன்

தேவன் மாயம் 25 February, 2009 17:17  

அப்பா கேப் விடக்கூடாதா
நான் போய் பழய பதிவுல போட்டேன்

தேவன் மாயம் 25 February, 2009 17:18  

அதே..கேள்வி....எந்த ஊர்..?

கோதாரி எங்கட பக்கமும் வழக்கில் இருக்கு :-)//

டொன்லீ இருக்கும் வரை வழக்குத்தமிழுக்கு வாழ்வு உண்டு!!

தேவன் மாயம் 25 February, 2009 17:20  

த‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி (அடிக்க‌ வ‌ந்துடாதீங்க‌), //

போஸ்ட் ஆணி உளறலா?

அப்துல்மாலிக் 25 February, 2009 17:20  

//thevanmayam said...
அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//

பிடி வாரண்ட் போடடாதான் சரியா வருது.
//

அவுகளா நீங்க‌

தேவன் மாயம் 25 February, 2009 17:20  

நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //

காரைக்குடித்தமிழ்!

அப்துல்மாலிக் 25 February, 2009 17:21  

//thevanmayam said...
அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//

தூங்கிற் நேரத்தில் போட்டுத்தாக்கி
ரகளை பண்ரீயளே
//

இனிமே தூங்கப்போறேனென்றும், எழப்போறேனென்றும் ஒரு ஒரு பதிவை போட்டுடுங்க‌

அப்துல்மாலிக் 25 February, 2009 17:23  

//thevanmayam said...
நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு, இல‌ங்கை த‌மிழ் கூட‌ அதில் ஒரு வ‌கைதான். இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //

காரைக்குடித்தமிழ்
//

இதை வைத்து ஒரு பதிவு போடலாமே

தேவன் மாயம் 25 February, 2009 17:23  

பேச்சுவ‌ழ‌க்கில் உள்ள இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்...//

குறிப்பாக பெண்களிடம்!!!
ஆண்கள் தமிழ்ப் பேரவை வன்மையாகக்கண்டிக்கிறது!!

தமிழ் அமுதன் 25 February, 2009 18:37  

நல்லா ஊர்பக்கம் பேசுற வார்த்தையெல்லாம் போட்டு இருக்கீய!
நான் சொல்லுறது என்னான்டாக்கா? திடுதூரா இம்புட்டு வார்த்தையெல்லாம்
பாக்கும்போது எனக்குமசக்கமா வருது!!

cute baby 25 February, 2009 18:51  

ஓங்காரம் = வாந்தி
மசக்கம் = மயக்கம்
கோதாரி = வறட்டு பிடிவாதம்
கூப்பாடு = விருந்தழைப்பு
திட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை
//
இது நம்ம ஊருல‌

Rajeswari 25 February, 2009 18:52  

ஜீவன் அண்ணே!மசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாப்புடலாம்

cute baby 25 February, 2009 18:55  

இப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை

தமிழ் அமுதன் 25 February, 2009 19:09  

///Rajeswari

ஜீவன் அண்ணே!மசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////

அது என்னங்க வெண்ணி பழசு?

///cute baby said...

இப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை
///

தஞ்சாவூரு குசும்பு ? ;;;))))

cute baby 25 February, 2009 19:44  

ஜீவன் அண்ணே!மசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////

அது என்னங்க வெண்ணி பழசு?

///cute baby said...

இப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை
///

தஞ்சாவூரு குசும்பு ? ;;;))))
//
hahaha.......

அப்துல்மாலிக் 25 February, 2009 19:55  

//ஜீவன் said...
///Rajeswari

ஜீவன் அண்ணே!மசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாபபுடலாம் ////

அது என்னங்க வெண்ணி பழசு?

///cute baby said...

இப்போ அவகளுக்கு தேவை இல்லை ஜீவன் அவுக வீட்டுகார அம்மாக்கு தான் தேவை
///

தஞ்சாவூரு குசும்பு ? ;;;))))
//


அது என்னாங்க தஞ்சாவூர் குசும்பு
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைதான் கேள்விப்பட்டிருக்கேன்

அப்துல்மாலிக் 25 February, 2009 19:56  

//cute baby said...
ஓங்காரம் = வாந்தி
மசக்கம் = மயக்கம்
கோதாரி = வறட்டு பிடிவாதம்
கூப்பாடு = விருந்தழைப்பு
திட்டு முட்டு, செரவடி, தெகரடி=சொல்லயியலாப் பிரச்சினை
//
இது நம்ம ஊருல‌
//

அவுக அவுக கண்டுபிடிச்சிக்க வேண்டியதுதான்

அப்துல்மாலிக் 25 February, 2009 20:01  

//Rajeswari said...
ஜீவன் அண்ணே!மசக்கமா வந்துச்சுனா எங்க வூட்டுக்கு வாங்க .குளிச்சியா வெண்ணி பழசு சாப்புடலாம்
/

அது என்னாப்பா அது வெண்ணி பழசு

அப்துல்மாலிக் 25 February, 2009 20:02  

//ஜீவன் said...
நல்லா ஊர்பக்கம் பேசுற வார்த்தையெல்லாம் போட்டு இருக்கீய!
நான் சொல்லுறது என்னான்டாக்கா? திடுதூரா இம்புட்டு வார்த்தையெல்லாம்
பாக்கும்போது எனக்குமசக்கமா வருது!!
/

ஒஹ் அப்படியா கொஞ்சம் இங்கிட்டு வாங்க ஆட்டுக்காள் சூப்பு ரெடியா இருக்கு

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:17  

// அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி)//

வெரிகுட்... வெரிகுட்... உசுப்பேத்திவிட ஒருத்தர் வரணும் போல இருக்கு... அன்பா சொன்னா கேட்கமாட்டீங்களே..

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:18  

// கடைசிலே ஒன்னுமே புலப்படலே. //

அப்ப முதல்ல புலப்பட்டு இருக்கணுமே...

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:19  

// சரிதான் இப்போதைக்கு ஏதாவது சொல்லித்தான் ஆகோனும் //

ஏதாவது...

சொல்லியாச்சுப்பா...

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:20  

// இல்லேனா மேலே எனக்காக வக்காலத்து வாங்கியவர்கள் கோவிச்சிக்குவாங்கனு, //

நாங்க எல்லாம் கோச்சிக்க மாட்டோம். அடி உதவற மாதிரி அண்ணன், தம்பி கூட உதவ மாடாங்க, தெரியுமில்ல...

அரெஸ்ட் வாரண்டோட வருவோமில்ல...

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:21  

// த‌மிழ், இதுதாங்க‌ ந‌ம்மோட‌ தாய்க்கெல்லாம் தாய் மொழி //

ஓ... ஐ...சி... யூ மீன் மதர் டங்க்...

சூப்பர் அப்பு

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:22  

// நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. //

பேசித்தான் பாருங்களேன். பேக் பண்ணி சென்னை - 10 க்கு அனுப்பிவிடுவாங்க..

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:23  

// நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம் //

ஆமாங்க... நடைமுறைப்பேச்சு, உட்கார்ந்தமுறைப்பேச்சு அப்படின்னு நிறைய இருக்குங்களா...

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:25  

// படிப்பதற்கு ஒரு பேச்சு //

ஆமாங்க ... பள்ளிக்கூடம் போகின்ற காலத்தில் (இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் .. போகின்ற காலத்தில்... படிக்கின்ற காலத்தில் இல்லை) சரியா மார்க வாங்கலை என்றால்..

படிக்காததற்கும் பேச்சு கேட்க வேண்டும்.

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:30  

// அதுக்காக‌வே த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) //

அய்யா... எதாவது கங்கணம் கட்டிகிட்டு வந்து இருக்கிங்களா என்ன... அதுக்குதான் தமிழில அகராதி அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கில்ல.

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:31  

// இன்னும் ஒரு படி மேலே போய் சிங்கார சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். //

ஒரு படி மேலே போய், ஒரு ஆழாக்கு மேலே போய்... என்னங்க இதெல்லாம்...

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:32  

// அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். //

இந்த அரசியல்வாதிகள் பேசும் பேச்சை எப்படி புரிஞ்சுகிறதுங்க...

அதுதாங்க ரொம்ப கன்பூயஷன்..

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:33  

// நான் இந்த‌ வித்தியாச‌மான‌ (அப்ப‌டினு நான் நினைக்கிறேன்) முய‌ற்சியாய் //

அப்படித்தான் இருக்கணும். வித்யாசமாய் எதாவது செய்யணும்.

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:35  

// இந்த பேச்சு அதிகமாக ஒரு பகுதியை சேர்ந்த குறிப்பாக பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....//

பேச்சு அப்படின்னாலே பெண்கள் தாங்க.. நாம எல்லாம் அவங்க முன்னாடி ஒன்னுமில்லங்க..

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:38  

// ஒருவாட்டி = ஒரு தடவை
மப்பு = மேக மூட்டம் //

இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் எனக்கு தெரிந்த வார்த்தைகள்.

மற்றவை பற்றி ஒன்றும் தெரியாது.

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:39  

அப்பாடா... தனியா உட்கார்ந்து, தம்பி பதிவுல, ஒருவழியா, 50 வது பின்னூட்டம்.

ராகவா வெரிகுட், வெரி குட்... கீப் இட் அப்..

இராகவன் நைஜிரியா 25 February, 2009 23:40  

// நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே. //

யாரும் கிடைக்கவில்லையா...

அப்படி, இப்படின்னு புதுப் பதிவர் ரசனைக்காரியை மாட்டிவிட வேண்டியதுதானுங்களே...

நசரேயன் 26 February, 2009 03:06  

மப்பு க்கு அர்த்தம் இதுதானா?

ஆதவா 26 February, 2009 05:40  

ம்ம்ம்ம்..... ஆரம்பிச்சாச்சா..???

ஆதவா 26 February, 2009 05:41  

பல சொற்கள், நான் உபயோகிடததுக் கொண்டிருக்ககறேன்...

சில எனக்குப் புதியது!!!

ஆதவா 26 February, 2009 05:46  

த‌னி டிக்ஷ‌ன‌ரியெல்லாம் (அதாங்க சிறந்த மொழிப்பெயர்ப்பாளர்) நாம் வைத்துக்கிட்ட‌து உண்டு,/////

நமக்கும் கொஞ்சம் அப்படியே காட்டறது!!!!!!

ஆதவா 26 February, 2009 05:54  

நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. நடைமுறைப்பேச்சு, படிப்பதற்கு ஒரு பேச்சு அப்படினு நிறைய சொல்லலாம்.//////

ஆதி காலம் தொட்டட இந்தத நடைமுறை இருக்கிறது!!!!

தொல்காப்பியத்தில் வழக்குத் தமிழ் குறித்து தொல்காப்பியர் எழுதியிருக்கிறார்...

ஆதவா 26 February, 2009 05:57  

எசலு, சலுவு = காரணமில்லால் வம்பு இழுத்தல்

எங்கள் தெலுகில், எசிலி என்போம்....

ஒரு வாட்டி - ஒருக்கா என்றுகூட சொல்லுவ்ம்

புதியவன் 26 February, 2009 08:24  

எங்கே இருந்து புடிச்சீங்க இந்த சொற்களை எல்லாம்...

புதியவன் 26 February, 2009 08:25  

//பெண்களிடையே உலா வரும் வட்டாரத்தமிழ், பேச்சுவழக்கில் உள்ள‌ சொற்களும் அதற்கான சரியான அர்த்தமும்....//

இந்த சொற்களை பெண்கள் மட்டும் தான் உபயோகிக்கின்றார்களா...?

புதியவன் 26 February, 2009 08:27  

//நான் ரொம்ப நல்லவனாக்கும், யாரையும் மாட்டிவிட விரும்பலே.//

அபுஅஃப்ஸர்...என்னுடைய பதிவில நானும் யாரையும் மாட்டிவிடவில்லை...

அப்துல்மாலிக் 26 February, 2009 09:30  

//இராகவன் நைஜிரியா said...
// அதாங்க‌ சொல்ல‌ வாரேன், நாம் பேசும் பேச்சை புரிந்துக்கொள்வ‌து கூட‌ ஒரு வகையான‌ வ‌ழ‌க்கில் வாழும் மொழிதான். //

இந்த அரசியல்வாதிகள் பேசும் பேச்சை எப்படி புரிஞ்சுகிறதுங்க...

அதுதாங்க ரொம்ப கன்பூயஷன்..
//

வாங்க அண்ணாத்தே

அதுக்கென்னா தனி பதிவு போட்டுடுவோம்

அப்துல்மாலிக் 26 February, 2009 09:31  

//இராகவன் நைஜிரியா said...
// அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை இதையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் ஒரு இது (அதாங்க வெறி)//

வெரிகுட்... வெரிகுட்... உசுப்பேத்திவிட ஒருத்தர் வரணும் போல இருக்கு... அன்பா சொன்னா கேட்கமாட்டீங்களே..
//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டுத்தாய்யா ரணகளமாகிப்போகுது

அப்துல்மாலிக் 26 February, 2009 09:32  

//இராகவன் நைஜிரியா said...
// நாம் யாருமே சுத்தமான சங்கத்தமிழில் பேசுவது இல்லை. //

பேசித்தான் பாருங்களேன். பேக் பண்ணி சென்னை - 10 க்கு அனுப்பிவிடுவாங்க..
/

ஹா ஹா

அப்துல்மாலிக் 26 February, 2009 09:34  

//இராகவன் நைஜிரியா said...
அப்பாடா... தனியா உட்கார்ந்து, தம்பி பதிவுல, ஒருவழியா, 50 வது பின்னூட்டம்.

ராகவா வெரிகுட், வெரி குட்... கீப் இட் அப்..
/

ரொம்ப நன்றி தல, லேட்டஸ்டா வந்து கலக்கிட்டீங்க‌

அப்துல்மாலிக் 26 February, 2009 09:35  

//நசரேயன் said...
மப்பு க்கு அர்த்தம் இதுதானா?
/

வாங்க நசரேயன்

இப்போவாவது தெரிஞ்சதே

அப்துல்மாலிக் 26 February, 2009 09:36  

//ஆதவா said...
எசலு, சலுவு = காரணமில்லால் வம்பு இழுத்தல்

எங்கள் தெலுகில், எசிலி என்போம்....

ஒரு வாட்டி - ஒருக்கா என்றுகூட சொல்லுவ்ம்
/

வாங்க தல, ஆமாம் எல்லா மொழிகளும் உற்றார் உறவினர்கள்தானே
ஒருக்கா ஒருக்கா சில பல மாறி வரும்

நன்றிங்க‌

அப்துல்மாலிக் 26 February, 2009 09:37  

//புதியவன் said...
எங்கே இருந்து புடிச்சீங்க இந்த சொற்களை எல்லாம்...
//

வாங்க புதியவன்

எல்லாம் பேச்சுவழக்கு மொழிகள்தான்

Rajeswari 26 February, 2009 09:47  

சாரி பாஸ் லேட் ஆகிடுச்சு "வெண்ணி பழசு" ன்னா பழைய சாதம் தான்

அப்துல்மாலிக் 26 February, 2009 12:23  

//Rajeswari said...
சாரி பாஸ் லேட் ஆகிடுச்சு "வெண்ணி பழசு" ன்னா பழைய சாதம் தான்
/

நாங்க பழங்கஞ்சி என்று சொல்லுவோம்

S.A. நவாஸுதீன் 26 February, 2009 12:48  

எல்லா வார்த்தையும் எங்க மாப்ள வச்சிருந்த பின் யான்ஸ்லயா?

அப்துல்மாலிக் 26 February, 2009 12:51  

//Syed Ahamed Navasudeen said...
எல்லா வார்த்தையும் எங்க மாப்ள வச்சிருந்த பின் யான்ஸ்லயா?
//

பின் யான்ஸ் நா?

நட்புடன் ஜமால் 26 February, 2009 18:07  

\\யான்ஸ்லயா?\\

டேய் அபுஅஃப்ஸர் இது தெரியலையா!

நட்புடன் ஜமால் 26 February, 2009 18:23  

ரூம்!

நட்புடன் ஜமால் 26 February, 2009 18:25  

75 நானா ???

ஹேமா 27 February, 2009 13:27  

இப்பத்தான் வர நேரம் கிடைச்சது.எக்கச்சக்கமா நிறையச் சொல்லுகள் போட்டிருக்கு.அப்பாடி...!

ஹேமா 27 February, 2009 13:28  

சில சொல்லுகள் எங்கட ஊர்ல பாவிக்கிற மாதிரியும் இருக்கு.அதுதான் தமிழ்.அழகு தமிழ்.

ஜியா 27 February, 2009 23:04  

neraiya kelvi padaatha vaarthaigalaa irukku.... kaththukitten ippo


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே