என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பாசக்கார புள்ளைக(ஹ)...!

நான் பதிவெழுத வந்து இன்னும் ஒரு வருடம் கூட முழுதாகலே, அலுவலக ஆணிகளின் அட்டகாசத்தால் பதிவுலகத்தை விட்டே சென்றுவிடலாமென்று சில சமயம் தோண்றும், என்னை பதிவெழுத சொல்லி சிங்கைக்கு வரவழைத்து வற்புறுத்திய‌ என் நண்பன் நட்புடன் ஜமாலை நினைத்தால் ஆத்திரமாக வரும், ஏன்டா இப்படி என்னை மாட்டிவிட்டேனு அடிக்கடி நொந்துக்குவேன். இதை ஒரு வகையான போதை என்றே எண்ணுவேன். இதனால் நிறைய அலுவலக வேலைகளில் கவனக்குறைவுக்கும் ஒரு காரணம். கடந்த 2 மாத காலமாக என் வலைத்தளம் கேட்பாரற்று கவனிக்க ஆளின்றி கிடக்கிறது, என் கடைக்கு வருபவர்கள் கடையில் பழைய ஸ்டாக் இருக்கு என்று வெறுத்துப்போய் திரும்புவர்கள் ஏராளம். இருந்தாலும் என் அன்பர்களின் வலைத்தளங்களுக்கு போவதையும், படித்து கமெண்டிடுவதையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, கிடைக்குற கேப்புலே லாரி ஓட்டிக்கிட்டு இருக்கிறேன். என் கடையில் பழைய ஸ்டாக் இருந்தும் நிரந்தர கஸ்டமர்களாக என் அன்பர்கள் 100 பேர் இருக்கிறார்கள் (100 லோவர்கள்), இந்த பாசக்கார மக்களுக்காக மீண்டும் ஏதாவது (இது வரை என்னத்த எழுதி கிழித்தேனு கேக்குறது வெளங்குது) எழுதலாமென்று இருக்கிறேன்.

பதிவெழுத வந்த காலத்தில் நான் மட்டும்தான் துபாயில் வலைத்தளம் வைத்திருக்கிறோம் என்று நானே பெருமைப்பட்ட காலம் உண்டு நானும் நிறைய பதிவுகளுக்கு சென்று லோவர் ஆகி தொடர்ந்து படிக்கும்வரை, இப்போ நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பா வருது.....:)))

அமீரகத்தில் இவ்வளவு பதிவர்கள் அதுவும் அண்ணாச்சி (இப்போதான் பதிவுலகத்துக்கு வந்து 5வது வருட விழா எடுத்தாங்க), குசும்பன் போன்ற பிரபல பதிவர்களை சந்தித்த பின் நான் வெறும் வெறும் பந்தாபார்ட்டினு தெரிஞ்சிக்கிட்டு அடக்கிவாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

அண்ணாச்சி நைஜீரியா சிங்கம் ராகவ் தன் குடும்ப சகாக்களுடன் துபாய் வந்திருந்தப்போது நான் ஒரு வாரம் ஊர் போய்விட்டு வந்த அன்று இரவு அவரை பார்க்கப்போய்ருந்த போதுதான் மற்ற அமீரகப்பதிவர்களின் ஒரு சிலர் அறிமுகம் ஏற்பட்டது, அதிலிருந்து பிரமாண்ட கூட்டத்திற்கு செல்லமுடியாமல், குறும்(பு) படம் வெளியாக காரணமாக இருந்த சுற்றுளாவுக்கு குடும்பத்துடன் இருந்ததாலும் போக முடியாமல் இருந்ததால்.. ராஸாண்ணாவோட அன்புத்தொல்லையால் கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸ் (ட்ரைலர் பார்த்து மிரண்டேன்) அன்னிக்கு கட்டாயம் போயாகவேண்டும் என்று சொல்லி குடும்பம் சகிதமாக வருவதாக வாக்கு கொடுத்திருந்தேன். திடீர் விருந்தாளிகளின் (அட நம்புங்கப்பா என் வாப்பா காலத்திலிருந்தே விருந்தாளிகளை நெஞ்சில் தாங்குவேன்) வரவால் நான் மட்டும் போவதாக பிளான் பண்ணி அவர்களுடன் மதிய உணவை (என்னிக்குமே வெள்ளி மதிய உணவை தங்கமணி கையாலே சாப்பிட்டு பழக்கம்) முடித்துவிட்டு டிரெஸ் மாற்றியதை கண்டு என் மகனின் அடத்தால் அவரையும் உடன் கூட்டிக்கினு கிளம்பினேன். அண்ணாச்சி சத்திரம் என்று சொல்லிருந்ததால் லொகேஷன் தெரியாமல் என்கிட்டே உள்ள சொச்ச பிளாக்கர்ஸ் ஃபோனில் அழைத்தாலும் எடுக்கவில்லை, அங்கே கண்ட கலீஜ் டைம்ஸ் பேப்பர் விற்பவரிடம் சத்திரம் எவடடுண்டு நு மலையாளத்தில் சம்சாரிச்சால் எனக்கு சத்திரம் அறியாது பத்திரம் மாத்திரம் அறியும் நு சொல்லியதை கேட்டு என் மகன் கூட சிரித்துவிட்டார்.

ஒரு வழியா குசும்பனை ஃபோனில் பிடித்து அண்ணாச்சி வீட்டை அடைந்தால் அவரோட ஃபிளாட்டைதான் சத்திரம் என்று சொல்லிருக்கிறார், நான் கூட இந்த விழாவுக்காக ஒரு சத்திரத்தை வாடகைக்கு பிடித்துவிட்டார்கள் என்று நினைத்தேன். தன் ஃபிளாட்டை பதிவுலகத்திற்காக சத்திரமாக்கிய அண்ணாச்சியை இங்கே நினைவு கூறுகிறேன்.

இப்போ எதற்கு இத்தனி கதை என்று கேட்பது தெரிகிறது. இந்த பதிவர்களின் சந்திப்பின் மூலம் நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.


தாய்நாட்டை விட்டு வந்து மற்ற மொழிகளுடன் உறவாடி, அளவாவி நம் தாய்மொழியின் மடியில் தவழ்வதுபோல்..பிரபல எழுத்தர் இலங்கை தமிழ் வாழ் மக்களின் வாப்பா என்று அழைக்கப்படும் திரு. ஜின்னா ஷர்புதீன் அவர்களை கண்டதில் சந்தோஷம், அவர் சொன்னது போல் மதங்களையும் தாண்டி மொழி நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது. சில மொக்கைகளையும், அரட்டைகளையும் தாண்டி அங்கே இலக்கியமும், வெண்பாவும் பேசியதை கேட்டதில் ஆச்சரியம், வியப்பு.. விடைபெரும்போது மனதில் புது வித புத்துணர்ச்சி பரவவைத்த என் நண்பன் ஜமாலுக்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.

43 கருத்துசொல்ல:

சிநேகிதன் அக்பர் 21 December, 2009 17:38  

//நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.//

அது. அப்படித்தான் இருக்கணும்.

நாங்களும் அப்படித்தான் பாஸ்.

அ.மு.செய்யது$ 21 December, 2009 17:41  

நூறு ஃபாலோவயர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

நீங்கள் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுள் நான் தான் முதலில் இருப்பேன்.

எழுதுவது ஜஸ்ட் ஒரு ஆத்ம திருப்தி தானே...!!!

அதையும் தாண்டி நிறைய இருக்கிறது..

S.A. நவாஸுதீன் 21 December, 2009 17:53  

எல்லாமே சரியாத்தான் மச்சான் சொல்லியிருக்க. படத்தை பத்தி ஒன்னும் சொல்லாம விட்டுட்டியே மச்சான்.

திருட்டு சிடி கிடைச்சா சௌதிக்கு அனுப்பி வைடா

இராகவன் நைஜிரியா 21 December, 2009 18:14  

ஆமாம் ப்ளாக்கர் உலகமே பாசக்காரவுகத்தான்.

அதை நேரில் அனுபவிச்சவன் என்ற முறையில் சொல்லுகின்றேன்.

Starjan (ஸ்டார்ஜன்) 21 December, 2009 18:37  

அபு அஃப்ஸர் , உங்க உண்மையான பெயரென்ன ? ...

Starjan (ஸ்டார்ஜன்) 21 December, 2009 18:38  

அக்பர் said...

//நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.//

அது. அப்படித்தான் இருக்கணும்.

நாங்களும் அப்படித்தான் பாஸ்.

சும்மா கன்னாபின்னான்னு ரிப்பிட்டு ... ரிப்பிட்டு ...

கலையரசன் 21 December, 2009 18:40  

நல்லமுடிவு தலைவா.. நடத்துங்க!!

ஷாகுல் 21 December, 2009 18:54  

ஆணின்னா அப்படிதான் இருக்கும்.

// இதை ஒரு வகையான போதை என்றே எண்ணுவேன்.//

கரீட்டு

துபாய் ல இருந்து Enjoy பன்னுறீங்க. வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

100க்கு வாழ்த்துக்கள்

கண்ணா.. 21 December, 2009 19:02  

//நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.//

பாஸ் நீங்க எப்போ விலகுனீங்க...ரீ எண்ட்ரி ஆகுறதுக்கு...எப்பவும் நாங்க உங்களை தொரத்திகிட்டே இருப்போம் (ஃபாலோயிங்)..


100 க்கு வாழ்த்துக்கள்..

வினோத் கெளதம் 21 December, 2009 19:11  

வாழ்த்துக்கள் 100க்கு..

நட்புடன் ஜமால் 22 December, 2009 03:50  

வாழ்த்துகள் மச்சான்.

கடைசி லைன் ட்விஸ்ட் ரொம்ப பிடிச்சிருக்கு ;) :P

Anonymous 22 December, 2009 09:00  

ஹப்பாடா இப்பவாவது தோனியதே எதாவது எழுதுவோம்முன்னு முதல்ல அதற்கு நன்றி..அடிக்கடி என் உயிரே எனப்படும் உங்கள் தளத்திற்கு உயிர் கொடுங்கள் அபு...

Anonymous 22 December, 2009 09:02  

முதல்ல ஜமாலை திட்டியதற்கு நன்றி நானும் திட்டனும் ஆமாம் இப்ப எல்லாம் வலைதளத்தில் சரி வர உலாவருவதில்லை அந்த தென்றல் அதற்காக....

Anonymous 22 December, 2009 09:04  

பதிவைப் பற்றி சொல்லனும் என்றால் அத்தனையும் அஃமார்க் உண்மை ஆமாங்க முகம் காணாமல் பழகி அவர்களை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ஒரு நினைவில் இருந்து நீளா சம்பவமாக அமைந்து விடுகிறது அந்த பூக்களை சந்தித்த சந்திப்புகள்...

Anonymous 22 December, 2009 09:05  

நெகிழ்வான பதிவே..அதை ஆர்வம் தூண்ட படிக்கும் அளவு எழுதியிருக்கீங்க....இனி மாதம் மும்மாரி போல எழுதவும் பதிவு மழை பொழியவும்...

gayathri 22 December, 2009 10:54  

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அபு அஃப்ஸர் , உங்க உண்மையான பெயரென்ன ? ...

eaan anna அபு அஃப்ஸர் intha name patha athu avaraoda unmayana peyar mathri illaya

ஹுஸைனம்மா 22 December, 2009 10:55  

ஃபாலோவர்ஸைத்தானே தவறுதலா “லோவர்கள்”னு சொல்றீங்க? இல்ல நிஜமாவே திட்றீங்களா? :-)

அரசியலை விட்டு விலகுகிறேன்னு சொல்லிட்டு அப்புறம் தொண்டர்களுக்காகத் திரும்பி வருகிறேன்னு சொல்ற மாதிரி இருக்கு.

ஆனா நீங்க வர்ரதுல சந்தோஷமே!! வாங்க. தொடர்ந்து எழுதுங்க.

gayathri 22 December, 2009 10:55  

நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.//

nalla mudivu

அகமது சுபைர் 22 December, 2009 12:45  

வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் 22 December, 2009 13:44  

நன்றி அக்பர்
நன்றி செய்யது (இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு)
நன்றி நவாஸ் (மச்சான் திருட்டு மாங்கா சாப்பாடு மாதிரி வருமா)
நன்றி ராகவ் அண்ணே மெய்யாலுமே

நன்றி ஸ்டார்ஜன் என் பெயர் அப்துல் மாலிக்

நன்றி ஷகுல்
நன்றி கலை
நன்றி கண்ணா (உண்மைதானுங்கோ)
நன்றி வினோத்
நன்றி ஜமால் (அந்த ட்விஸ்டே உன்னாலேதானே)

அப்துல்மாலிக் 22 December, 2009 13:45  

//அடிக்கடி என் உயிரே எனப்படும் உங்கள் தளத்திற்கு உயிர் கொடுங்கள் அபு...//

உயிர் கொடுக்கதான் உங்களை மாதிரி நண்பர்கள் இருக்கியலே

அப்துல்மாலிக் 22 December, 2009 13:47  

நன்றி ஹுஸைனாம்மா (முதல் வருகைக்கு, என்னை அரசியல்லே இறங்காம விடமாட்டீங்களே)

ந‌ன்றி காயு

நன்றி சுபைர்

Jazeela 22 December, 2009 16:12  

உங்க பதிவின் ‘லேஅவுட்’ அழகு.

/சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று// இப்படிதாங்க நானும் நினைச்சேன். எங்க நேரம் ஒதுக்க முடியலையே. ஹும் பெருமூச்சு தான் விட முடியுது :-)

கிளியனூர் இஸ்மத் 22 December, 2009 16:13  

நண்பரே எழுதுங்கள்...வாழ்த்துக்கள்

மேவி... 22 December, 2009 16:26  

:)

குசும்பன் 22 December, 2009 17:02  

ரைட்டு போகிற போக்கில் என்னை ரெண்டு சாத்து சாத்திட்டு போய் இருக்கலாம் இப்படி ஒருவார்த்தை என்னை பற்றி பதிவில் சொல்வதுக்கு:))

Prathap Kumar S. 22 December, 2009 19:26  

நாங்களே இன்னும் இருக்கோம்... நீங்க ஏங்க போணும்... இன்னும் வெறியோட கிளம்புங்க...
ஆனாலும் குசம்பனை இப்படி கலாயச்சிருக்க கூடாது...

பாலா 23 December, 2009 04:13  

ஜமால் நாம எப்போ இப்படி பதிவர் சந்திப்பு வைக்கறது சீக்கிரம் ஏற்பாடு செய்யவும்

--

பாலா 23 December, 2009 04:14  

இவருக்கு மட்டும் தான் பதிவர் சந்திப்பை பற்றி எழுத வருமா? நானமலும் எழுதலாம் ஜமால்
ஏற்பாடு பண்ணுங்க சீக்கிரம்

Unknown 24 December, 2009 00:21  

எதாவது எழுது மச்சான் படிக்கதான் நாங்க இருக்கோம்லே கலக்கு மச்சான்

RAMYA 24 December, 2009 20:55  

நூறு ஃபாலோவயர்களுக்கு வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர் !

RAMYA 24 December, 2009 20:57  

//
நாம் ஏன் இந்த உலகத்தை விட்டு விலக வேண்டும், சமயம் கிடைக்கும்போது ஏதாவது கிறுக்கினால் என்ன என்று அங்கு அனைத்து பதிவர்களை சந்தித்தபின் ஒரு முடிவு எடுத்தேன்.
//


நானும் இதுபோல் பல முறை நினைப்பதுண்டு. காரணம் அலுவலகப் பணிதான்.

ஆனாலும் நிரந்தரமாக ஒதுங்க முடியாது. நேரம் கிடைக்கும் பொது எழுதுங்க பாஸ்!

ஹேமா 25 December, 2009 16:36  

அபு ஏன் இப்பிடி மனம் சோர்ந்துகிட்டு.சந்தோஷமா இருங்க.வாழ்த்துக்கள் எப்பவும் இருக்கும்.நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் நிறைய எழுதுங்க.மனசுக்கு சந்தோஷமும் மனப்பாரம் குறையவும் ஒரு வடிகால் இந்த எழுத்து.என் அனுபவம் இது.

priyamudanprabu 25 December, 2009 16:58  

மதங்களையும் தாண்டி மொழி நம் அனைவரையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது. சில மொக்கைகளையும், அரட்டைகளையும் தாண்டி அங்கே இலக்கியமும், வெண்பாவும் பேசியதை கேட்டதில் ஆச்சரியம், வியப்பு.. விடைபெரும்போது மனதில் புது வித புத்துணர்ச்சி பரவவைத்த என் நண்பன் ஜமாலுக்கு நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.

//////////////

நடக்கட்டும்

SUFFIX 26 December, 2009 10:48  

உணர்வுப்பூர்வமான மடல், அருமையா இருக்கு அபூ!!

SUFFIX 26 December, 2009 10:51  

//அலுவலக ஆணிகளின் அட்டகாசத்தால் பதிவுலகத்தை விட்டே சென்றுவிடலாமென்று சில சமயம் தோண்றும்//

நாங்க அவ்ளோ எளிதா விட்டுவிடுவோமா? என்னையும் மாட்டி விட்ட நவாஸ், தாங்கள் மற்றும் ஜமாலை நினைவு கூர்கிறேன்.

Jaleela Kamal 31 December, 2009 09:10  

100 பாலேவர்ஸ், எழுத ஆரம்பித்து ஒரு வருடம் வாழ்த்துக்கள்.

ஹேமா சொல்வது போல் கண்டிப்பா /பதிவு போடுவதில் மனப்பாரம் குறைவதும் சந்தோஷமும் கண்டிப்பாக இருக்கு.

நல்ல பகிர்வு.

Jaleela Kamal 31 December, 2009 09:11  

//அலுவலக ஆணிகளின் அட்டகாசத்தால் பதிவுலகத்தை விட்டே சென்றுவிடலாமென்று சில சமயம் தோண்றும்//

நீங்க போறேன் என்றாலும் பாசக்கரபிள்ளைக(ஹ) விட்டுவிடுவார்களா என்ன

அன்புடன் மலிக்கா 31 December, 2009 10:19  

அருமையான பதிவு. பதிவுலகம் நம் ஆத்ம திருப்தியையும் நல்ல உள்ளங்கள்ளையும் கிடைக்கச்செய்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள். 100 பாலோவர்ஸ். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

சிநேகிதன் அக்பர் 31 December, 2009 23:34  

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மேவி... 04 January, 2010 08:17  

puththandu valthukkal

அன்புடன் மலிக்கா 08 January, 2010 11:07  

நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பார்க்கவும்

http://fmalikka.blogspot.com/

scharu 17 January, 2010 12:33  

:)


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே