சென்ற மாதம் ராஜஸ்தானில் ஒரு பெண்ணை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்ற அதிர்ச்சிகரமான நம்பத்தகுந்த செய்தி. அதுக்கு அவர்கள் சொல்லும் காரணம் பெண்கள் குறைவாக இருப்பதாகவும், பெண் கிடைப்பதில் (அது எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும்) மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இந்த நிலை தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிறுக்கிறது என்பதுதான் வேதனை
இது பற்றி எஸ்.ஐ.ஆர்.டி (SIRD – State Institute of Rural Development) என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு தீவிர விசாரனையில் இறங்கியது, அது வெளியிடும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது அதன்படி, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1000 ஆண்களுக்கு நிகராக 952 பெண்களே இருக்கிறார்கள், 1969 ல் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் (அதற்காகதான் முன்னோர்கள் 1 க்கும் மேற்பட்ட கல்யாணம் செய்துக்கொண்டார்களோ?) இந்த் கணக்கீடு வரும் ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து 469 ஆகும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று தெரிந்துக்கொண்டு அந்த உயிரை கருப்பையிலேயே வைத்து அழித்துவிடுவது, இன்று குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்து அதற்கு தகுந்தார்போல மருந்துவகைகள் கொடுத்து ஆரோக்யமான பிரசவத்திற்கு வழிவகை செய்யும் தற்போதைய ஸ்கேன் செய்யும் முறை இன்று ஸ்கேன் செய்தவுடன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா/பெண்ணா என்று சொல்லப்படுகிறது, அதை வைத்து பெண் என்றால் மேற் சொன்ன முறையின் மூலம் கரு அழிக்கப்படுகிறது. ஸ்கேன் வசதி இல்லாத காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அது பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள்
எஸ்.ஐ.ஆர்.டி என்ற தன்னார்வத்தொண்டின் தொண்டர்கள் நிறைய அடித்தட்டு கிராமங்களுக்கு சென்று களப்பணி செய்து நிறைய மக்களுக்கு பெண்குழந்தைகளின் மகத்துவத்தை பற்றி எடுத்துச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம் ஓரளவேனும் இந்த பெண் சிசு கொலை குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வரிக்கை சொல்லுகிறது.
100% கருத்தரித்தலின் போது 45% ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதால் (அ) ஒரு குழந்தை பிறந்து 2 மாதத்தில் மறு கருத்தரிப்பு (அ) பொருளாதார, வேலை சூழ்நிலையால் குழந்தை பிறப்பு தள்ளிவைப்பு இந்த காரணங்களால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது, 12% பெண் குழந்தை என்று தெரிந்து கரு கொலை செய்யப்படுகிறது, மீதி 43% விரும்பி குழந்தை பெற்றுக்கொள்ளப்படுகிறது. தற்போது அரசின் கடுமையான தண்டனை சட்டத்திற்கு பிறகு இரண்டு வெவ்வேறு உறுதிமொழி பத்திரங்களில் என்ன குழந்தை என்று சொல்லமாட்டோம் என்று மருத்துவரும், என்ன குழந்தையானாலும் ஆரோக்யமா இருந்தால் சரி அது என்ன குழந்தை என்று மருத்துவரை நச்சரித்து கேட்க மாட்டோம் என்று பெற்றோரும் கையெழுத்திட்ட பிறகே கர்பினிப்பெண் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்படுகிறாள்.
ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 15% பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதால் அந்த 15% எப்பவும் வெற்றிடமாகவே இருக்கிறது, இந்த கணக்கீடு பிற்காலத்தில் பற்றாக்குறை 1000 க்கு 952 என்று நிற்கிறது. பெண் சிசு கொலைக்கு சொல்லப்படும் முதல் காரணம் வறுமை, வரதட்சணை. இந்த இரண்டு "வ" க்கும் ஆண் பிள்ளைக்கு சாதகமானதே அதனாலே ஆண் குழந்தை என்றாலே போற்றி பெருமிதம் கொள்கிறார்கள், இளைஞர்கள் வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற உறுதிமொழியில் உறுதிப்பட இருக்கவேண்டும்.
இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம்.
வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழந்தைகளாக இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி மகிழ்வார்கள், இந்த நிலமை நம்நாட்டிலும் வரவேண்டும், பெண் என்ற பொக்கிஷம் பாதுகாத்து போற்றப்படவேண்டும்!
48 கருத்துசொல்ல:
அருமையான் பதிவு
அபு
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களிடமிருந்து
(என்னைய எதையோ கழற்றி அடிச்சா மாதிரி இருந்தது "இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம்"
இந்த வரிகள்
அய்யய்யோ! என்னய்யா பயத்தை கிளப்புற?
அப்ப நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிறேன்!!
நன்றி பாலா..!
அந்த வகையிலே நாங்கள் பெருமைப்படுகிறோம், இறைவனின் கிருமையால் எல்லோருமே நல்லாயிருக்கோம். இது ஒரு பாடமாக அமையவேண்டும் இனிமேல் வருபவர்களுக்கு
//கலையரசன் said...
அய்யய்யோ! என்னய்யா பயத்தை கிளப்புற?
அப்ப நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிறேன்!!
//
ஹா ஹா கலை இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவு, நன்றி வருகைக்கு
அபு,வறுமை வரதட்தணைக்கு அடுத்து வக்கிரம் பிடிச்ச மனிதன்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கு.இன்னும் எழுதுங்க.
// ஹேமா said...
அபு,வறுமை வரதட்தணைக்கு அடுத்து வக்கிரம் பிடிச்ச மனிதன்.
//
நிச்சயமா வரதட்சனையை சாக்காவைத்து எத்தனை வக்கிரம் பிடித்தவர்கள் வக்கிரபுத்தியோடு வாழ்கிறார்கள்
நன்றி வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்
// வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழந்தைகளாக இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி மகிழ்வார்கள் //
அதற்கும் காரணம் வரதட்சனை தான். அங்கே பெண்கள் வரதட்சனை வாங்குகிறார்கள். அதனால் பெண் குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்கிறார்கள்.
அதிர்ச்சிகரமான தகவல்.
சீக்கிரமா போய் துண்டு போடனும் போல இருக்கே.
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
//அதற்கும் காரணம் வரதட்சனை தான். அங்கே பெண்கள் வரதட்சனை வாங்குகிறார்கள். அதனால் பெண் குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்கிறார்கள்.//
ஐயா அதற்க்கு பெயர் வரதட்சனை அல்ல மஹர் எனப்ப்டும் மணக்கொடை. பென்னுக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டியது. அதை முடிவு செய்ய வேண்டியது மணப்பெண் தான். அவளது பெற்றோர்கள் அல்ல.
//அதற்கும் காரணம் வரதட்சனை தான். அங்கே பெண்கள் வரதட்சனை வாங்குகிறார்கள். அதனால் பெண் குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்கிறார்கள்.//
அதற்கு பெயர் வரதட்சனையில்லை தோழரே, தன் திருமண வாழ்க்கைக்கு தேவையானதை தாங்களே (இருவரும் சேர்ந்து) தயார் செய்துக்கொள்கிறார்கள்
நன்றி தோழரே கருத்துக்கு
//ஷாகுல் said...
அதிர்ச்சிகரமான தகவல்.
சீக்கிரமா போய் துண்டு போடனும் போல இருக்கே
//
நன்றி சாகுல், இது ஒரு முன்னெச்சரிக்கையே
//கலையரசன்
03 October, 2009 11:51
அய்யய்யோ! என்னய்யா பயத்தை கிளப்புற?
அப்ப நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிறேன்!//
யோவ் நீ இன்னும் எத்தனை கல்யாணம் பண்ணுவ? ஒரு பொண்ணுக்கே வழியக்காணோமுன்னுதான் இந்த இடுகையே. நீ என்னடான்னா.. :)
50-க்கு வழ்த்துக்கள் மச்சான். சமூக சிந்தனையுடன் நல்லதொரு இடுகை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கே.
kevin mathews said,
"""""அதற்கும் காரணம் வரதட்சனை தான். அங்கே பெண்கள் வரதட்சனை வாங்குகிறார்கள். அதனால் பெண் குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்கிறார்கள்.""""""
திருமணத்திற்கு பிறகு அதிக வலியும் வேதனையும் அடைவது பெண்கள்தான்.தாய் வீட்டைவிட்டு வெளியேறி மாமியார் வீட்டுக்கு செல்வது,பிள்ளை பெறும்போது படும் வேதனைகள்,அந்த பிள்ளையை வளர்த்து ஆளாக்குவது இப்படி பெண்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமில்லை.இங்கு சிறு உதாரணம்தான் குறிப்பிட்டிருக்கிறேன் இன்னும் எத்தனையோ அடிக்கி கொண்டே போகலாம்.அதனால் பெண்களுக்கு மண க்கொடை(உங்கள் பாஷையில் வரதட்சணை )கொடுப்பது தவறில்லையே.
வரதட்சனை வாங்கி கொள்ளாமல் திருமணம் புரிந்ததர்க்கு பாராட்டுக்கள்..
அனால் இன்று எத்தனை இளைஞர்கள் வரதட்சனை வாங்கி கொள்ளாமல் திருமணம் செய்ய தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை..
உண்மையில் இதே மாதிரி சில காரணங்களால் தான் இன்று இதே மாதிரி ஒரு
சமநிலையற்ற விகிதப்பாடு உள்ளது.
பெண்பிள்ளையை கருவில் கலைப்பவர்கலக இருந்தாலும் சரி..
பிறந்தப்பின் கொள்பவர்களாக இருந்தாலும் சரி..ஒரு கொடிய கொலைக்கரனுக்கு சமம் ஆனவர்கள்..கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
வரவேற்க்கதகுந்த இடுகை..
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள் அபு
//கலையரசன் said...
அய்யய்யோ! என்னய்யா பயத்தை கிளப்புற?
அப்ப நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிறேன்!!//
பொண்ணு யாரு பார்க்கப்போறா? உன் பையனா இல்ல உங்க தங்கமணியா?
கிகிகிகிகி
50க்கு வாழ்த்துகள் நண்பா.
அருமை பதிவு.
உன் நண்பனாக நானும் அதில் ஒருவன் என நினைப்பதில் சந்தோஷமடைகிறேன்.
இந்த இடத்தில ஒரு கருத்தை பதிய விரும்புகிறேன் எனது திருமணம் நான் இஸ்லாத்தை பற்றி உண்மை நிலை அறியும் முன்பே நடைபெற்றது அபொழுது நான் வரதட்சினை வாங்கி திருமணம் செய்து இருந்தேன் உண்மை நிலை அறிந்தவுடன் அன்று நான் வாங்கிய அணைத்து பொருட்களையும் நகை உட்பட எனது மாமனாரிடம் திரும்ப கொடுத்துவிட்டேன்.
எனது சகோதரனுகும் ஒரு நயா பைசா வரதட்சினை வாங்காமல் பெண் வீட்டார்க்கு எந்த வித சிலவும் வைக்காமல் மண பெண்னுக்கு எங்கள் சிலவிலேயே நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளோம்.
முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கும், பின்னர் எங்களை நல்வழி காட்டிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன்,
நல்ல சமுதாய சிந்தனை உள்ள பதிவு இது போல் பல பதிவுகளை உன் இடம் இருந்து எதிர் பார்க்கிறோம் மச்சான்.
ஆரம்பமே அதிர்ச்சியா இருக்கு !!!!
//இந்த இடத்தில் நான் ஒன்றை மிகப்பெருமையா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம். //
Hats off abuafsar thala !!!
நானும் அதே உறுதியோடு தான் இருக்கிறேன்.இன்னும்
பல திருமண சம்பிரதாயங்களை உடைக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்.
//நட்புடன் ஜமால் said...
50க்கு வாழ்த்துகள் நண்பா.
அருமை பதிவு.
//
ohhhh....VAazthukkal ..
சமிபத்தில் நண்பகள் அனைவருக்கும் ஆண் குழந்தைதான் பிறந்திருக்கிறதும்,பெண் குழந்தை % கம்மியாகிறது.
50க்கு வாழ்த்துக்கள்
தல பின்லேடனுக்கு 50 பொண்டாட்டியாமே. அங்க எல்லாம் எப்படி கட்டுபடி ஆகிறது. என்னால நம்ப முடியல. அதனால தான் அவர பாத்து எல்லோரும் பயப்படராங்க
அபு தற்காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு,
வாழ்த்துக்கள்
ஐம்பதாவது பதிவை அர்த்தமானதாக்கி விட்டீங்க அபு..
வாழ்த்துக்கள்..பெண்கள் பற்றி தலைப்பு எடுத்து இதை பெருமைபடித்தி விட்டீர்கள்...என்றும் நினைவில் நிற்கும் பதிவுகளில் ஒன்றாய்.... நேரம் ஒதுக்கி சிரமமெடுத்து ஒரு நல்ல பதிவிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
அடுத்த பதிவுக்கு நீண்ட நாள் இடைவெளி தர வேண்டாம்பா.....
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள் அபூ, சிந்திக்க வேண்டிய பகிர்வு. வாய்ச்சவடால் இல்லாமல் சிறப்பாக தாங்கள் செயலிள் செய்து காட்டி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!!
எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்
50vathu pathivukku vazthukkal nalla
pathivu nalla irukung anna
நல்ல கருத்து.
அருமையான பதிவு அபுஅஃப்ஸர், வாழ்த்துக்கள்...
எனக்கு விபரம் தெரிந்த பிறகு என் வீட்டில் நடந்த எந்த திருமணத்திலும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை.
வரவேற்க்கதகுந்த இடுகை..
50வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!!!
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல!
வரதட்சணையை விட மற்ற சம்பிரதாயங்களில் செலவிடப்படும் (விரயமாக்கப்படும்) பணமும், நேரமும்தான் அதிகம். கல்யாணத்தில் ஆரம்பித்து, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, பேர் வைத்தல், வருடாந்திர சீர்வரிசைகள், இன்னும் என்னென்னவோ நடைமுறைகள் ஊருக்கு ஊர் மாறுபடும் பழக்கங்களில் பெண்வீட்டினர்தான் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள், வரதட்சணை மட்டுமல்லாது இவற்றையும் களைய முன் வரவேண்டும்.
நல்ல பதிவு அபு.
50க்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அபு
//வளைகுடா நாடுகளில் பெண் குழந்தை என்றால் (அது எந்த நாட்டின் குழந்தைகளாக இருந்தாலும்) வாரி அணைத்து கொஞ்சி மகிழ்வார்கள், இந்த நிலமை நம்நாட்டிலும் வரவேண்டும், பெண் என்ற பொக்கிஷம் பாதுகாத்து போற்றப்படவேண்டும்!//
வறுமை என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்த நாட்டிலும் ஆண் பெண் பேதமிருக்காது.
இதை நீங்களே உங்கள் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
முதலில் 50 க்கு வாழ்த்துகள் மாப்ள.
//என்னுடை நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவான வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி செய்து அதன் படி நடத்தியும் காட்டிருக்கிறோம் //
அட!ஆமாம்ல! நம்ப செட்டில் யாருமே வரதட்சணை வாங்கவேயில்லையில்ல!கடைசியா கல்யாணமான யாசின் உட்பட :)
kudos! 2 u n ur frnds who decided not 2 get dowry. A guy becomes manly not for his looks but for his actions..
u guyz r manly
ungaloda article enna sindhika vechidichi... this made me write a post in my blog.
padinga..padichitu unga opinion a share pannunga!
உங்க 50 வது பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள் ,
//நானும் உங்களை மாதிரி சராசரி மனிதன் பிரகாசமான எதிர்காலம் தேடி அழைபவன்
View my complete profile//
தலைவா !! உங்க View my complete profile இன்னு இருக்கறதுல , அழைபவன் இன்னு இருக்கு ,
அலைபவன் என்பதே சரி , என நினைக்கின்றேன் , சொல்வதற்காக தவறாக நினைக்க வேண்டாம் , நன்றி
உங்கள் பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள் .
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
நல்ல அருமையான பகிர்வு .
// குழந்தை ஆணா/பெண்ணா என்று தெரிந்துக்கொண்டு அந்த உயிரை கருப்பையிலேயே வைத்து அழித்துவிடுவது//
இது ரொம்ப கொடுமை
சாரி நண்பரே ரொம்ப லேட்.
50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
உங்களுக்குதான் என் ஓட்டு
அருமையான பதிவு,
நான் ரொம்ப...ரொம்....ப லேட்ன்னு நினைக்குறேன்..
50க்கு வாழ்த்துக்கள்.
என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்குத்தான் (அதாங்க வோட்டு)
அமெளண்டை சீக்கிரம் அனுப்பவும்..
அருமையான பதிவு
50க்கு வாழ்த்துக்கள்
Post a Comment