என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

தேவதை தந்த வரம்..!

கடந்த வாரம் முழுதும் நம் பதிவர்கள் அனைவரும் தேவதையிடம் வரம்கேட்டு பதிவிட்டனர், அதுலே என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தினர். தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி, ஒரு வித்தியாசமா தேவதை எனக்கு வரம் தந்தது. நடு நிசி ஜாமத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தபோது ஒரு வித்தியாசமான வாசனை அறை முழுதும், யாரோ தட்டி எழுப்பியதுபோல் திடீரென எழுந்து உட்கார்கிறேன், தங்கத்தினால் முழுதும் அலங்கரிக்கபட்டு தக தக என மின்னி கண்ணை பறிக்க ஒரு அழகான தேவதை, கண்கள் விரிய நம் பதிவர்களின் பதிவுகளில் படமாக பார்த்த எனக்கு இப்போது நேரில் ஆச்சரியம் இருக்காதா என்னா?
அந்த தேவதை எனக்கு மிகப்பெரிய வரம் கொடுத்தது அதாவது இந்த நிமிடம் முதல் நீதான் உலகத்திலேயே பணக்காரன்!!!! அன்று முதல் என் வாழ்க்கை மாறியது...
வாசனை திரவியம்(அத்தர் மற்றும் சென்ட்) நிறைந்த என்னுடைய நீச்சல் குளம்

அந்த நிலவை வாங்கிடுவேன், அது எனக்கு மட்டும்தான் சொந்தமென்று கொண்டாடுவேன்நான் பயணம் செய்யும் வாகனம் இது, இதுலேதான் என்னுடைய அவசர‌ பிஸினெஸ் மீட்டிங்


என்னுடைய செக்யூரிட்டி, தேவையானபோது தப்பித்து செல்ல (தீவிரவாத மிரட்டல் இருக்கு இல்லியா)என்னுடைய வீட்டின் சன்னல்மூலம் இந்த உலகை கண்டு ரசிப்பேன். என்னுடைய வீட்டின் ரிசெப்ஷன் விண்வெளியில் பறந்துக்கொண்டிருக்கும்போது...


நேரம் கிடைக்கும்போது ஓய்வு எடுப்பதற்காக‌


போரடிக்கும்போது கோல்ஃப் விளையாடுவதது இங்கேதான்


வைரத்தினாலான என்னுடைய பர்ஷனல் லேப்டாப், உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இது


எல்லா பார்ட்டிகளிலும் பயன்படுத்துவது..


என்னுடைய தங்கத்தினாலான பெர்ஷனல் கார்

டிஸ்கி: ஆஃபீஸுக்கு டைம் ஆச்சு என்னா தூக்கம் வேண்டிகிடக்கு என்ற தங்கமனியின் சத்தத்தால்... அட கனவு, சரி கனவுலேயாவது இந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் என்று மனதை தேற்றிக்கிட்டேன்.. நீங்களும் வாழனுமா கனவு காணுங்கள் (முன்னாள் பிரெஸிடென்ட் அப்துல் கலாம் சொன்ன கனவு இல்லை)

18 கருத்துசொல்ல:

அபுஅஃப்ஸர் 25 September, 2009 14:52  

test

இராகவன் நைஜிரியா 25 September, 2009 15:17  

நல்லா கனவு கண்டீங்க போங்க.

கடைசியில் என்ன மாதிரிதான் நீங்களும் போலிருக்கு... அதாவது தங்கமணியிடம் சவுண்ட் வாங்குவதில்...

இராகவன் நைஜிரியா 25 September, 2009 15:18  

// அபுஅஃப்ஸர் said...
test //

பாஸ் பண்ணிட்டீங்க

பாலா 25 September, 2009 16:59  

ஆச தோச அப்பளம் வடை

rose 25 September, 2009 17:42  

உங்க கனவு சூப்பர் அபு

ஹேமா 25 September, 2009 18:00  

அபு,இதெல்லாம் பேராசை.தேவதை தந்திச்சா.பறிச்சு வாங்கினீங்களா !

ஜெஸ்வந்தி 25 September, 2009 23:34  

கனவுதானே! தேவதை மன்னித்து விட்டுப் போயிருக்கும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) 25 September, 2009 23:36  

எல்லா வரமும் பெற என்னுடைய வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் 25 September, 2009 23:46  

ஆஹா எல்லாமே ஹைகிலாஸ் கனவுகள்

படமும் அதுக்கு தகுந்த மாதிரி ஹைக்லாஸ்

தேவதை கொஞ்சம் கருணை காட்டும்மா...

அ.மு.செய்யது 26 September, 2009 07:37  

தல !!!

இது கொஞ்சம் ஓவராயில்ல..ஓக்கே நீங்க பெரிய ஆளு தான்.

எனக்கு கொஞ்சம் கைமாத்தா ஒரு 2 மில்லியன் AED வேணும்..

அ.மு.செய்யது 26 September, 2009 07:37  

//அபுஅஃப்ஸர் said...
test
//

ரிப்பீட்டு...

அ.மு.செய்யது 26 September, 2009 07:38  

இராகவன் நைஜிரியா said...
// அபுஅஃப்ஸர் said...
test //

பாஸ் பண்ணிட்டீங்க
//

ரசித்த வரிகள் !

அ.மு.செய்யது 26 September, 2009 07:38  

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லா வரமும் பெற என்னுடைய வாழ்த்துக்கள்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!

S.A. நவாஸுதீன் 26 September, 2009 09:35  

உனக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டு அம்போன்னு அது இப்போ எங்கே சுத்திகிட்டு இருக்கோ பாவம்!!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix 26 September, 2009 09:53  

லேப்டாப்பில ஸ்கிரீனையும் வைரமாக்கி கேட்டு இருக்கலாம்.
ஓ. கே, நெக்ஸ்ட் டைம்.

கலையரசன் 27 September, 2009 10:56  

அட்டகாசமான ரீ-என்டரி அபு!!

ஜீவன் 28 September, 2009 12:28  

எல்லாம் சூப்பர் ..! எதோ ஒன்னு குறையுது ..!;;)

இய‌ற்கை 28 September, 2009 16:31  

கனவு சூப்பர் :-)))


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே