என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பசங்க ஒரு கோப பார்வை..!

அபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்களைசந்திக்கவருகிறேன். காலச்சூழ்நிலை நம்மை எங்கெங்கோ கொண்டுசேர்த்துவிட்டது, வேலைப்பழு அதிகமாகி அதிகம் எழுத முடியாமல் போனது (தப்பிச்சோம்னுஇருந்தீங்களா?), இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு.

நான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா

அமீரகத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பிச்சாச்சு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் இங்கேவிடுமுறை. இந்த இரண்டு மாதங்கள் மட்டும் அதிகமானோர் வெக்கேஷனுக்குதத்தமது நாடுகளுக்கு சென்றுவிடுவதால் ட்ராஃபிக் குறைவாகவே இருக்கும், பெரும்பாலான ஷாப்பிங்க் காம்ளெக்ஸில் கூட்டமும் குறைவாகவேகாணப்படும்.இந்த வருடம் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவேஇருக்கின்றன. இது போன்ற நேரத்தில் ஷார்ஜாவில் மின்சாரம் ஒரு நாளைக்குகுறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் மணி நிறுத்திவிடுகிறார்கள். மின்சாரத்தேவை எவ்வளவு இன்றியமையாயது என்பது வளைகுடாநாடுகளில்குப்பைகொட்டுபவர்களுக்கு தான் தெரியும்.

பள்ளி விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் என் பையன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பாவம் இப்படி அடைத்து வைத்தால் என்னதான் செய்வாங்க. சும்மா இருக்கும்போது விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது, நினைத்ததை வரைவது இப்படி ஏதாவது வேலை செய்துக்கொண்டிருக்கும் என் மகனை ஒரு நாள் சாப்பிடாமல் அடம்புடிச்ச காரணத்தால் கொஞ்சம் ஓவராக(?) அடித்துவிட்டேன். அவ்வளவுதான் கடுப்பாகிப்போய் அவன் வரைந்த ஓவியத்தில் என்ன செய்திருக்கிறன் என்பதை பாருங்க.தெரியாதவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவும்

அதோடு ஒரு பேப்பர் பென்சிலை எடுத்து தன்னை இவ்வாறு அடிச்சுட்டாங்களேஎன்ற ஆதங்கம் தாங்கமுடியாமல் கீழே உள்ளவாறு எழுதி என் கிட்டேபடிச்சுப்பார்க்க சொல்லி காட்டினார்.
சரியா தெரியாவிடில் படத்தை க்ளிக்கி படிக்கவும்

இது முன்னர் வரைந்த படம், அப்புறம் கிறுக்கி மேலே ஹேப்பி ஃபேமிலினுஎழுதிட்டு அடி வாங்கியது அதையே கிறுக்கி.....

இப்பொழுது முதல் வகுப்பு கிரேட்-1 படித்துக்கொண்டிருக்கிறார்

இப்போ உள்ள பசங்களுக்கு என்னா மாதிரியான கோபம் வருதுனு சொல்றதுக்கு இதைவிட ஒரு நல்ல உதாரணம் இல்லை. நாம சிறுவராக இறுந்த போது நம்பெற்றோர்களிடம் அடி வாங்கியது மாதிரி நினைத்து நம் பிள்ளைகளையும்அடித்தால் பின் விளைவை நிறைய சந்திக்க நேரிடும். காலம் மாறிப்போச்சு.... .

26 கருத்துசொல்ல:

அக்பர் 26 July, 2010 17:53  

பசங்க பயங்கர கோவமாவுல்ல இருக்காங்க. :)

மீள் வருகைக்கு வாழ்த்துகள். கலக்குங்க அப்துல் மாலிக்.

Starjan ( ஸ்டார்ஜன் ) 26 July, 2010 17:56  

இப்போ எப்படி இருக்கிறார் அஃப்சர்.. கோபமெல்லாம் தீர்ந்திருச்சா.. நல்ல பையன். பசங்க குறும்பை நாள் பூராவும் ரசிச்சிக்கிட்டே இருக்கலாம்.

தமிழ் அமுதன் 26 July, 2010 18:08  

வாங்க தலைவரே..! வாங்க ..!

இவ்ளோ நாள் வராம இருந்ததுக்கு நாங்களும் கோவமாதான் இருக்கோம்...!

அப்துல்மாலிக் 26 July, 2010 18:08  

நன்றி அக்பர், கலக்குவோம் நேரம் மற்றும் வேலைப்பழுவும் ஒத்துழைத்தால்

நன்றி ஷேக்பாய், ஆமாம் ரொம்ப நல்லவர், எப்பவும் ரசிக்கலாம்

அப்துல்மாலிக் 26 July, 2010 18:09  

தமிழ் அமுதன் இந்த பாசக்கார கோவத்துனாலேதான் மீண்டும் எழுத வந்திருக்கேன்

நன்றி வாழ்த்துக்கு

ஆதவா 26 July, 2010 19:00  

பெயரில் என்ன இருக்கிறது அப்துல்? நமது எழுத்துக்களே நமது அடையாளங்கள். உங்களை வரவேற்கிறேன்.

உங்கள் மகனுடையை ஆற்றாமை, ஓவியத்தின் வாயிலாக அதுவும் இந்த முதல் வகுப்பில் படிக்கும்பொழுது வெளிப்படுவதும் அதை சகித்துக் கொள்ளுவதும் மிகவும் சிரமமான காரியம்தான். இப்பொழ்தைய தலைமுறை மிகவும் நுண்ணியமானது. அது அகப்புறங்களில் ஆழந்தோண்டியே வளர்ந்து வருகிறது,. இது பிற்காலத்தில் ஒரு சிறு பிரச்சனைகளையும் தாங்கிக் கொள்ளவியலாத மனோபக்குவத்தை ஏற்படுத்த வாய்ப்பு கோலும்.

உங்கள் மகன் மிக அருமையாக வரைகிறார். ஓவியம் என்பது கலைகளிலேயே மேன்மையானது. மனிதர்களின் ஆதிமொழியும், நவீன மொழிகளில் உயர்ந்து நிற்பதுமாகும். அதை நன்கு ஊக்குவியுங்கள். உலகின் எந்த துறையை எடுத்தாலும் அது ஓவியம் அல்லாமல் இருக்காது.

மீள் வருகைக்கு வரவேற்புகள்

sakthi 26 July, 2010 20:23  

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்ததில் மகிழ்ச்சி
பசங்க அழகாய் வரைந்திருக்கின்றனர்!!!

நட்புடன் ஜமால் 26 July, 2010 20:42  

கம்மி தான் கோபம் ...

ஜெய்லானி 26 July, 2010 21:47  

திரும்ப வந்ததில மகிழ்ச்சி... கண்டினியூ...!!!

இராகவன் நைஜிரியா 27 July, 2010 06:44  

வருக வருக நண்பரே...

இப்ப எல்லாம் குழந்தைகளை கண்டிப்பதற்கே பயமா இருக்கு... இதிலே நீங்க அவங்களை அடிக்க வேறு செஞ்சு இருக்கீங்க...

ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்... Be Careful. No beating

இராகவன் நைஜிரியா 27 July, 2010 06:45  

// அபுஅஃப்ஸராகிய நான் இப்போது அப்துல்மாலிக் என்ற உண்மையான பெயருடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திலுள்ள நட்பு மலர்களைசந்திக்கவருகிறேன். //

வெரிகுட் மாலிக்... வெல்கம் பேக்

இராகவன் நைஜிரியா 27 July, 2010 06:46  

//(தப்பிச்சோம்னுஇருந்தீங்களா?)//

சில விஷயங்கள் எல்லாம் நேரிடையாகச் சொல்லமுடியாதுங்க...

இராகவன் நைஜிரியா 27 July, 2010 06:47  

// இருந்தாலும் அவ்வப்போது எல்லா மலர்களைநுகர்ந்தும்முடிந்தால் சில பூக்களுக்கு தண்ணீர் ஊற்றியும் சென்றிருக்கிறேன். இனிமேல்நானும் பூக்கள் முளைக்க மீண்டும் விதை தூவ ஆரம்பிச்சாச்சு. //

நாங்களும் அவ்வப்போது தண்ணீர் போட.. ச்சே... ஊற்ற முயற்சிக்கிறோம்.

இராகவன் நைஜிரியா 27 July, 2010 06:48  

// நான் பதிவெழுத வந்த போது பதிவெழுதிய எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் இப்போவெல்லாம் ஏனோ சில பல காரணத்துக்காக ஒதுங்கியே இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பது என் அவா //

நல்ல என்று சொல்லிவிட்டு திரும்பவும் எழுத வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்.

பத்து வரி எழுதிய கவிஞ்சரை திரும்பவும் கவிதை எழுதச் சொல்லமாட்டீங்கன்னு நம்புகின்றேன்.

Anonymous 27 July, 2010 10:17  

meendum unga ezhuthukkalai padicha santhosham nenga kuzhanthaiya adichathala poiduchi...parunga avan manathil pattathai eppadi ezhuthu padam vaayilaga solli erukan...ithu kuzhanthaigalin manopavam purigirathu eni ithu negazhamal parthu kollungal..kozhathainga appadi thaan nama thaan konjam vettu koduthu anusarithu poganum ithu advice illai abu...happada ungalai thittiyathil konjam santhosham thaan,,,,,,hehehheehhe

gayathri 27 July, 2010 10:26  

unga paiyanuku ivalavu english theriuma rompa santhosam

அப்துல்மாலிக் 27 July, 2010 11:04  

நன்றி ஆதவா, உங்க பின்னூட்டம் என்றென்றும் சிறந்த டானிக், நிச்சயம் பசங்களை புரிந்துக்கொண்டு அவர்களின் வழியிலேயே போனால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்

அப்துல்மாலிக் 27 July, 2010 11:06  

நன்றி சக்தி

நன்றி ஜமால்

நன்றி ஜெய்லானி

தொடர்ந்திருங்கள்

அப்துல்மாலிக் 27 July, 2010 11:07  

//இராகவன் நைஜிரியா s

பத்து வரி எழுதிய கவிஞ்சரை திரும்பவும் கவிதை எழுதச் சொல்லமாட்டீங்கன்னு நம்புகின்றேன்//

இதுலே ஏதும் உள்குத்து இல்லியே

மீண்டும் பின்னூட்ட சிங்கம் அதே வேகத்தில் இருப்பது நினைத்து சந்தோஷம் அண்ணே

அப்துல்மாலிக் 27 July, 2010 11:09  

நன்றி தமிழ்ரசி

//.happada ungalai thittiyathil konjam santhosham thaan,,,,,,hehehheehhe//

பின்னூட்ட சாக்கா வெச்சி இதையும் செய்தாச்சு :)))

அப்துல்மாலிக் 27 July, 2010 11:09  

நன்ரி காயத்ரி, மிக்க சந்தோஷம்

Rajeswari 27 July, 2010 17:31  

Happy to see you again.

vaalthukkal

Rajeswari 27 July, 2010 17:31  

Happy to see you again.

vaalthukkal

அஹமது இர்ஷாத் 28 July, 2010 19:01  

Welcome Back...

sweatha 30 July, 2010 23:13  

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Shahulhameed 12 September, 2010 14:29  

நல்வேளை மனித உரிமை கழகத்தில் புகார் கொடுக்காமல் இருந்தானே!!!!


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே