என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

கவர்ண்மென்ட் உத்தியோகம்..!

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் த‌ல‌மையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..


























21 கருத்துசொல்ல:

ஹேமா 27 February, 2010 13:04  

வெளிநாட்டு வாழ்க்கை பற்றிச் சரியாகச் சொல்கிறீர்கள் அபு.
கஞ்சியாய்க் குடிச்சாலும் ஊர்லேயே குடிம்பத்தோடு இருக்கிற சந்தோஷமும் நின்மதியும் வெளிநாட்டில் கிடைக்கப்போறதில்லை.

ஷாகுல் 27 February, 2010 13:59  

மலரும் நினைவுகளா?

ஜெய்லானி 27 February, 2010 14:01  

இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிகிறதே...

சிநேகிதன் அக்பர் 27 February, 2010 17:47  

இல்லாததற்கு தான் மனம் ஏங்கும்.

ஆனால் எல்லோருக்கும் அரசு உத்தியோகம் கிடைப்பதில்லை.

நல்ல நினைவலைகள் அபுஅப்ஸர்.

நட்புடன் ஜமால் 27 February, 2010 18:14  

அப்படியே நம் தெருவில் நடந்த காட்சியை கொண்டு வந்துவிட்டாய்...

ஆனால் கடைசி வரி தான் நெருடலாய்

மற்றபடி நல்லதொரு பதிவு.

வினோத் கெளதம் 27 February, 2010 21:40  

என்ன பண்ணுறது எல்லாம் நேரம் ..

மதுரை சரவணன் 27 February, 2010 22:23  

நல்ல பகிர்வு. கடைசி வரி நியாயம் பெற்றொற்களுக்கு உரிய மரியாதையை தருகிறது. வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) 27 February, 2010 23:43  

அருமையான நினைவலைகள் அபு அஃப்ஸர், அந்த பசுமையான நினைவுகள் எப்போதும் நமக்கு ஒரு மகிழ்ச்சியை தரும்.

நான் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட் - தொடர்பதிவு ...

Tech Shankar 28 February, 2010 09:48  

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

கண்ணா.. 28 February, 2010 13:40  

வெளிநாட்டு வாழ்க்கையை வருந்தி வரிகள் பிறந்திருக்கிறது.. அருமை.

காஸ்மோபாலிடன் வாழ்க்கை முறையில் அவரவர் இடத்தில் இருக்க முடியாதபடி இருக்கிறது. :(

ஹுஸைனம்மா 28 February, 2010 13:47  

இக்கரைக்கு அக்கரைப் பச்சை!!

குடும்பத்தோரு இங்கு இருக்கும் அளவுக்காவது நம் நிலையை இறைவன் மேம்படுத்தித் தந்தானே என்று மன நிறைவு கொள்ள வேண்டியதுதான்.

அதிக சம்பாத்தியம் இருப்பதால் உற்றோருக்கும், மற்றோருக்கும் நிறைவாய் உதவ முடிகிறதே எனவும் நினைக்கலாம்.

பாலா 28 February, 2010 16:54  

நிறைவான பதிவு அபு
உங்களோட வலிய புரிஞ்சுக்க முடியுது

நிஜாம் கான் 28 February, 2010 18:42  

இதைப் படித்து உண்மையிலேயே நான் ரொம்பவே கிளர்ச்சியடைந்தேன். காரணம் நான் படிக்கும் போது சில நேரங்களில் தந்தையை அழைத்து வா என்பார்கள் என் நண்பர்களிடம். அடுத்த நாள் அவர்களின் அம்மா வந்து கூனிக்குருகி நிற்பார்கள். அப்போதே தெரிந்துகொண்டேன் வித்தியாசத்தை. அதை அப்படியே பிரதிபலித்து இருக்கிறீர்கள். அருமை

இராகவன் நைஜிரியா 28 February, 2010 20:25  

பல விதமான வேதனைகளின் ஒன்று வெளிநாட்டில் வேலை செய்வதும். ஒரு நல்லது / கெட்டது கிடையது, உறவுகள் இல்லை, பண்டிகைகள் இல்லை. பணம் மட்டும் உண்டு.

மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் அபு.

அன்புடன் மலிக்கா 01 March, 2010 07:47  

எதார்தத்தை அப்படியே எழுதியிருக்கீங்க.

வெளிநாட்டு
வாழ்க்கையில் நிச்சயம் எதோ ஒன்றை ஒன்றுக்காக பிரிகிறோம் அல்லது இழக்கிறோம்.

இதை மாற்றியமைக்க முயன்றும் முடியாமல் சிலநேரம் தவிக்கிறோம்.

Anonymous 01 March, 2010 08:46  

அலசல் வலியோட கூடிய உண்மை.......

SUFFIX 03 March, 2010 11:38  

ஆரம்பத்தில் வரும்போது சில காரணங்களுக்காக வெளி நாடு வருகிறோம், கால ஓட்டத்தில் தேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது, என்ன செய்வது, கிடைத்தவற்றில் இன்புற வேண்டும், அல்லது சரியான திட்டமிடலுடன் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் (இந்த அறிவுரை எனக்கும் சேர்த்து தான்)

Annam 04 March, 2010 08:02  

nalla pakirvu

அ.மு.செய்யது 09 March, 2010 14:09  

கொஞ்சம் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஒரு நல்ல பதிவை இத்தனை நாள் மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் மேலிடுகிறது.

ஜிசாட்டில் நீங்கள் எனக்கு சொல்லும் விஷயங்களை அற்புதமாக பதிவாக்கியிருக்கிறீர்கள்.

நிறைவான பதிவு.

rose 21 March, 2010 20:42  

இதை படிக்கையில் ஏதோ மனதில் வலி

priyamudanprabu 07 April, 2010 04:03  

ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து

//

aamaanga
\
ஆமாங்க


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே