Financial Crisis……. இது உலக வர்த்தகத்தை, பெரிய/சிறிய வியாபாரம், வியாபாரிகளை மற்றும் பொருளாதார நிபுணர்களை ஆட்டிப்படைக்கும் கொடிய
வைரஸ், ப ட்டி தொட்டியெல்லாம் இதே பேச்சு. இந்த கொடிய வைரஸ் தாக்கத்தால் வேலை இழப்பு, பொருளாதார சீர்கேடு, சிறிய/பெரிய வியாபாரஸ்தலம் மூடு விழா.....மற்றும் மாதசம்பளம் குறைப்பு (அ) காலம் கடந்து கொடுத்தல்..
ஆபீஸ் துடைப்பவர்கள் முதல் மின்சாரம் பயன்பாடு, தேநீர் வரை அளவிற்குகதிகமாக குறைப்பு..
முன்பெல்லாம் வேலையை விட்டு தூக்கி விட்டால் வருத்தப்பட்ட காலம் போய் இப்போது எல்லோரிடமும் ஒரு சகஜமான சூழல்...
முதளாலித்துவ மக்களிடையே இது ஒரு HOBBY போல் ஆகிவிட்டது... நீ 4 பேரை தூக்குறியா... நானும் 7 பேரை வேலையிலிருந்து நீக்குவேன் என்ற இருமாப்பு..
புதிய ப்ராஜக்ட் கிடைக்கலியாம், வங்கி லோன் தருவதற்கு மறுக்கிறார்களாம், ரியல் எஸ்டேட் பாதிப்பு எனவே அதையொட்டியுள்ள வேலைகளெல்லாம் பாதிப்பு அதையொட்டி வேலை செய்பவர்கள், அதையொட்டி வியாபாரம் செய்பவர்கள் உட்பட.. இப்படியாக எல்லோரிடமும் எல்லா இடங்களிலேயும் உள்ள புலம்பலை காணமுடிகிறது.
இதன் தாக்கம் கணினியில் மென்பொருள் (Software) எழுதுவோரையும் விட்டுவைக்கவில்லை.. மனதில் தோன்றும் எண்ணிக்கையில் ஆள் குறைப்பு (கணினி வேலை தொடர்பு இல்லாதவர்கள், இவங்கலெள்ளாம் ஆடிய ஆட்டமென்ன என்று சந்தோஷப்படுவதை காணமுடிகிறது), இதன்மூலம் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் குடியிருப்பு (FLAT) விலை வீழ்ச்சி அதை வாங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அடிக்கடி குறுஞ்செய்திகள் (SMS) வேறு வந்த வண்ணம் உள்ளது (கணினியின் மென்பொருள் (Software) எழுதுவோருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் தோன்றுவது என்னமோ உண்மைதான்)
இந்த திடீர் பொருளாதார தாக்கதிற்கு என்ன காரணம்........???
ஏதோ ஒரு வளர்ந்த நாட்டில் அவர்களோட வியாபார உத்தியை கையாள்வதற்கு (புதிய ஆயுதங்கள் என்றால் அடுத்த நாட்டின்மீது போர் தொடுத்து சோதனை முயற்சி செய்வார்கள்) ஒரு சில வங்கிகள் தன்னோட பண இருப்பை பெருக்குவதற்காக தெருவில் போன குடிமகன்களுக்கெல்லாம் லோன் (Personal Loan, Business Loan) கொடுததார்களாம்.. அவர்கள் எந்த அளவிற்கு லோன் கொடுத்தார்கள் என்பதை நிரூபிக்க ஒரு சின்ன உதாரணம் இங்கே..... [ஒருத்தர் அவசரமாக வங்கிக்கு வந்து எனக்கு லோன் வேண்டும், மிக முக்கியமாக பணம் தேவைப்படுது, தாங்கள் எவ்வளவு வட்டி வேண்டுமானாலும் தருகிறேன், அப்படியும் நம்மவில்லை என்றால் என்னுடைய விலை மிகுந்த கார் (ROLLS-ROYCE) இருக்கிறது அதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். அவர்களும் அய்யோ பாவம் என்ன கஷ்டமோ தெரியவில்லை என்று வங்கிக்கு வெளியே நிறுத்தி இருந்த காரை சோதனை செய்துவிட்டு 25,000 டாலர் (உலக பொருளாதார விதிக்குட்பட்டு டாலர் லேயே பேசுவோம்) கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து அதே நபர் வங்கிக்கு வந்து நான் தாங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தர இருக்கிறேன், எவ்வளவு வட்டி சேர்த்து தரவேண்டும் என்று கேட்டுருக்கிறார்.அதற்கு அவர்கள் ஒரு வாரத்திற்கு கணக்கு பார்த்து 50/- டாலர் அதிகம் சேர்த்து மொத்தம் 25,050.00 டாலர் தரவேண்டும் என்றார்கள், அதற்கு அவர் பணம் கொடுத்து விட்டு தன்னுடைய கார் சாவியை வாங்கிக்கொண்டவுடன் வங்கியாளர் அவரிடம் கேட்டார், தங்களுக்கு நிச்சயமாக பணம் பற்றாகுரை இருக்கது, விலை மதிப்புமிக்க காரை அடமானமாக வைத்துவிட்டு குறைந்த பணம் பெற்று செல்லும் அளவிற்க்கு அப்படி என்ன கஷ்டம் என்று, அதற்கு அவர் சொன்ன பதில்
நான் ஒரு வாரம் வியாபர (Business Trip) விசயமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்தது அது வரை என்னுடைய விலை மதிப்புமிக்க காரை என்ன செய்வது என்று தெரியவில்லை, 50 டாலருக்கு தங்களைவிட இவ்வளவு பாதுகாப்பாக யாரும் வைத்திருக்க முடியாது, எனவே நானும் பயமில்லாமல் வெளிநாடு போய்வந்து என்னுடைய காரை திரும்ப பெற்றுக்கொண்டேன், நான் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கென் என்று சொல்லி தன் காரை எடுத்து சென்றார்]
இப்படியாக கொடுத்த லோன் திரும்ப பெறமுடியாமல் எல்லா வங்கிகளும் திவாலாகி மூட வேண்டிய சூழ்நிலை......லோன் வாங்கியவர்களெல்லாம் என்னிடம் பணம் இல்லை என்று கையை விரித்தார்கள், சரி பணம் இல்லேனா என்ன உன்னொட சொத்தை (வீடு, கார் மட்றும் இதரவை) கொடு என்று கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள்... இப்படியே எல்லோரிடமும் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தவுடன் எல்லோரும் சொத்தையெல்லாம் கொடுக்கவேண்டியதாகிவிட்டது.. இப்படியே ஒட்டுமொத்த சொத்து குவிந்தவுடன் அதை வாங்குவத்ற்கு நாட்டில் ஆளில்லை, எவ்வளவு விலை குறைத்தும் பயனில்லை, இதன் மூலம் ரியல் எஸ்டேட் குறைந்தது, திவாலான வங்கிகள் மூடப்பட்டன, அங்கு வேலை செய்தவர்களை LAYOFF என்றார்கள்.... அதையொட்டி வியாபாரம் செய்த கம்பெனிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் வருமானத்தை இழந்தன, இதன் தாக்கம் பிற உள்நாட்டிலுள்ள வியாபாரஸ்தலங்களையும் பாதித்ததுதான் நான் மேலே குறிப்பிட்ட புலம்பலுக்கு காரணம்...
இந்த ஒட்டுமொத்த தாக்கதுக்கு யார் காரணம், முதலாளித்துவமா, நாந்தான் பெரியவன் என்று மார்தட்டும் தலைக்கணமா (இப்போ கோவணம் அவிழ்ந்துவிட்டது என்பது வேறுகதை), அப்படியென்றால் நாந்தான் வல்லரசு என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் சில பெரிய நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, நாளைய வல்லரசுகள் எப்படி சமாளிக்கப்போகிறது..?????
நம்மவூட்டு பொருளாதாரத்தை கொஞ்சம் பாராட்டலாம்..
எங்கேயோ அதாலப்பாதாளத்துக்கு செல்லவென்டியதை விளிம்பில் நிற்கவைத்து தாங்கிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இதுவரை இந்திய வரலாறுலேயே அதிகம் படித்த தற்போதுள்ள தலமையை சொல்லலாம்...
சரி, இந்த வைரஸை அழிப்பது எப்படி????
உலகம் உருண்டைதான் என்பதை நிரூபிப்பதைப்போல
இந்த உலகப்பொருளாதாரம் மீண்டு எழுமா?
காலம்தான் பதில் சொல்லனும்......!!!
21 கருத்துசொல்ல:
//புதிய ஆயுதங்கள் என்றால் அடுத்த நாட்டின்மீது போர் தொடுத்து சோதனை முயற்சி செய்வார்கள் //
நச் வரிகள்..உண்மை தான்
அமெரிக்கா ஜப்பான் மீது அணுஆய்த சோதனை செய்து, அப்போது புதியாய் உருவான ரஷ்யாவை எச்சரித்தது போல..
எழுத்துகள் மட்டும் அல்ல..நீங்கள் போட்ட படங்கள் கூட கருத்து சொல்கின்றன.
ஊர் சுற்றிக் கொண்டு இருந்த காரணத்தால் உங்கள் அழைப்பை இன்றுதான் பார்த்தேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். திறந்த நிலைப் பொருளாதாரத்தைப் பற்றி விரைவில் நானும் ஒரு பதிவிடுகிறேன். :)
\\உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை......\\
தலைப்பே உள்ளுக்குள்ள கதிகலங்க வைக்குது-ba
நாமளும் பொட்டி தட்றோம்ல ...
\\முதளாலித்துவ மக்களிடையே இது ஒரு HOBBY போல் ஆகிவிட்டது... நீ 4 பேரை தூக்குறியா... நானும் 7 பேரை வேலையிலிருந்து நீக்குவேன் என்ற இருமாப்பு..\\
இப்படியுமா நடக்குது ...
\\(கணினி வேலை தொடர்பு இல்லாதவர்கள், இவங்கலெள்ளாம் ஆடிய ஆட்டமென்ன என்று சந்தோஷப்படுவதை காணமுடிகிறது)\\
ஆமா ஆமா ;)
\\50 டாலருக்கு தங்களைவிட இவ்வளவு பாதுகாப்பாக யாரும் வைத்திருக்க முடியாது, \\
ஹா ஹா ஹா
அருமையப்பூ ...
உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை......
சரியான பார்வை
//50 டாலருக்கு தங்களைவிட இவ்வளவு பாதுகாப்பாக யாரும் வைத்திருக்க முடியாது,//
அருமை...
//உலகம் உருண்டைதான் என்பதை நிரூபிப்பதைப்போல
இந்த உலகப்பொருளாதாரம் மீண்டு எழுமா?
காலம்தான் பதில் சொல்லனும்......!!!//
காலத்திடம் அனைத்திற்கும்
பதில் உண்டு...
நல்ல பதிவு அபுஅஃப்ஸர்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
நண்பர் செய்யது.. ரொம்ப நன்றிங்கையா முதன் முதலா வந்து வாழ்த்தியதுக்கு..
//உலகம் உருண்டைதான் என்பதை நிரூபிப்பதைப்போல
இந்த உலகப்பொருளாதாரம் மீண்டு எழுமா?
காலம்தான் பதில் சொல்லனும்......!!!//
காலத்திடம் அனைத்திற்கும்
பதில் உண்டு...
நல்ல பதிவு அபுஅஃப்ஸர்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...//
நாமும் காலத்தை எதிர்பார்து காத்துக்கொண்டிருக்கோம்.. நன்றி வாழ்த்தியதுக்கு
\\உலகப்பொருளாதார வீழ்ச்சி... ஒரு பார்வை......\\
தலைப்பே உள்ளுக்குள்ள கதிகலங்க வைக்குது-ba
நாமளும் பொட்டி தட்றோம்ல ...//
இப்போ எல்லோரையும் கதிகலங்க வெச்சிக்கிட்டு இருக்கு.... ஆள் குறைப்பில் பெரும் போட்டியே நிலவுது.. நன்றி உங்களது வாழ்த்திற்கு
//திறந்த நிலைப் பொருளாதாரத்தைப் பற்றி விரைவில் நானும் ஒரு பதிவிடுகிறேன். :)
//
நல்லது பதிவிடுங்கள் புதுகை புயலே... கருத்துகள் சொல்ல காத்திருக்கோம்
மிக நல்ல பதிவு அபு.. நீங்கள் தேர்தெடுத்த படங்களும் அருமை..
ரொம்ப நன்றிங்க ஆட்டோ ச்சே.. கேபிள் சங்கர்.. உங்கள் வாழ்த்துக்கு
//புதிய ஆயுதங்கள் என்றால் அடுத்த நாட்டின்மீது போர் தொடுத்து சோதனை முயற்சி செய்வார்கள் //
நச் வரிகள்..உண்மை தான்//
நாட்டு நடப்பை சொன்னேன்-ba
இது வளர்ந்த நாடுகளின் அரசியல் தந்திரம் இல்லையா? அதெப்படி 10 ஆண்டுக்கு ஒரு முறை வீழ்ச்சி அடையும்... லாங் டெர்ம் திட்டங்கள் என்றே சொல்வேன்,...
NALLA PATHIVU...KEEP WRITING...
Thanks for your comments mr.Vikneshwaran & mr.Ramasubramanian, keep on watch
பொருளாதாராத்தின் வீழ்ச்சி பற்றி கொஞ்சம் புரியறாப்பல படங்களோட விளக்கியதற்கு நன்றி
நல்ல அலசல்...:)
Post a Comment