இது எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது...
வளைகுடா ஏன் உலகம் முழுதும் வாழும் நம் சமுதாய மக்களின் வாழ்க்கை கூட ஒரு வகையான போர்க்களம் தான்....!
குடும்பம், பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள் வட்டம் குறிப்பாக இளமை என அனைத்தையும் இழந்து மற்ற நாட்டின் முன்னேற்றதிற்காக தம் உடல், உழைப்பு அனைத்தயும் இழந்து நிற்கும் நிலமைக்கூட ஒரு வகையான போர்களம்தான்..
வார இறுதி நாட்களில் தொலைப்பேசியிலேயே குடும்பம் நடத்தி (இப்பொழுது Online Chatting வந்துவிட்டது என்பது வேறு விசயம்), தம் குழந்தைகள் அவர்களின் கடந்த வாரம் பள்ளியில் படித்த கணித வாய்ப்பாட்டையும், ஆங்கில ரைம்ஸையும், பள்ளி ஆசிரியர் அடித்தது, பாரட்டியது வரை தொலைப்பேசியிலேயே கேட்டுமகிழ்ந்து வார நாட்களில் அந்த இன்பத்திலேயே நாட்களை கடத்தும் நம்மவர்களின் நிலைக்கூட ஒரு வகைப்போர்களம் தான்...
தமது வீடுகளில் தான் குடித்த தண்ணீர் பாத்திரத்தைக்கூட கழுவி வைப்பதற்கு அலுப்புபடும் நம்மவர்கள் இங்கே சாப்பாட்டிற்காக (சமைக்க தெரியாதென்றால் தங்குவதற்கு கூட இடம் தருவதற்கு மறுப்பார்கள் என்பது வேறுவிசயம்) எல்லாவகையுலும் உடலை வருத்தி கஷ்டப்படுவதுக்கூட ஒரு வகை போர்க்களம்தான்....
ஆயுதம் ஏந்தி போர்க்களதிற்கு செல்பவனும், நமது நாட்டிற்காக அரசின் அன்னியச்செலவாணியை பெருக்குவதற்காக அயல் நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை தொலைப்பவனும்......?
இப்போதைக்கு இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..
"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்..."
9 கருத்துசொல்ல:
// "வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்..."
//
"போர்க்களம் மாறலாம்..
போர்கள் தான் மாறுமா ???"
நல்ல பதிவுங்க !!!!!
//அந்த இன்பத்திலேயே நாட்களை கடத்தும் நம்மவர்களின் நிலைக்கூட ஒரு வகைப்போர்களம் தான்... //
யதார்த்தம்.....
//"போர்க்களம் மாறலாம்..
போர்கள் தான் மாறுமா ???"//
நல்லதொரு கேள்விங்க???
அமைதி வேண்டி பிரார்த்திப்பது தவிர வேறு என்ன செய்யமுடியும் நம்மால்
\\"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்..."\\
அருமை தோழா
//"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்..."//
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா...?
/*"வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கனும்..."*/
உண்மை..
Kite Runner என்றொரு படத்தில் ஆப்கன் போரின் விளைவுகளை ஆழமாக சித்திரித்திருந்தனர். நேரம் கிடைத்தால் பாருங்கள்
உண்மை...
ஆளவந்தான் said...
Kite Runner என்றொரு படத்தில் ஆப்கன் போரின் விளைவுகளை ஆழமாக சித்திரித்திருந்தனர். நேரம் கிடைத்தால் பாருங்கள்
அருமையான படம்..சர்ச்சைகளை கிளப்பிய படம் கூட..
ஆயுதம் ஏந்தி போர்க்களதிற்கு செல்பவனும், நமது நாட்டிற்காக அரசின் அன்னியச்செலவாணியை பெருக்குவதற்காக அயல் நாடுகளுக்கு சென்று வாழ்க்கையை தொலைப்பவனும்......?//
என்ன சாமிகளா!!
உங்களப்பார்த்து இங்க இருக்க பயகல்லாம் பொறாமைப்படுறான்க!!
நீங்க இப்பிடி கலங்குறீகளே அப்பு!!!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
தேவா..
Post a Comment