அது ஒரு அமைதியாக நடந்துக்கொண்டிருக்கும் வகுப்பறை, மாணவர்கள் கவனத்துடன் பாடத்தை கவணித்துக்கொண்டிருந்தனர்...
பேராசிரியர் ஒரு அழகிய கண்ணாடி கிளாஸில்(எனக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை, மண்ணிக்கவும்)சிறுதளவிற்கு தண்ணீரை ஊற்றி அதை தூக்கிப்பிடித்து மாணவர்களை நோக்கி கேட்டார், எனதருமை மாணாக்களே, நான் இப்போது பிடித்துக்கொண்டிருக்கும் கண்ணாடி கிளாஸின் எடை எவ்வளவு என்பதை உங்களால் கூற முடியுமா???
அதற்கு மாணவர்கள், அவரவர் கருத்துக்கேற்ப 50 கிராம், 25 கி, 150கி, 200கி.... கூறிக்கொண்டிருந்தனர்... அதற்கு பேராசிரியர் சொன்னார் உங்களுடைய கருத்துப்படி அவ்வளவு பெரிய எடை இல்லை.. நான் எடை போட்டுப்பார்தால் தான் அதனோட உண்மையா எடை எவ்வளவு என்பது தெரியும், ரொம்ப சாதாரணம்தான், இருக்கட்டும் இதுவல்ல என்னுடைய கேள்வி...
மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி ஒரு சில நிமிடம் வரை வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?என்று மாணவர்களை பார்த்து கேட்டார். அதற்கு அவர்கள் ஒன்றும் ஆகாது என்றனர்..
பிறகு, மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி 1 மணி நேரம் வரை வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?? என்று அவர்களைப்பார்து கேட்டார்.. அதற்கும் அவர்கள் வலி விரலில் ஆரம்பித்து மூட்டுவரை வலிக்கும் என்றனர். சரி...
மறுபடியும் அதே கண்ணாடி கிளாஸை தூக்கி காண்பித்து இதை இதே நிலையில் தூக்கி பிடித்தபடி 1 நாள் முழுவதும் தூக்கி வைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் ?? என்று அவர்களைப்பார்து கேட்டார்..
அதற்கு அவர்கள்... கையில் தசைப்பிடிப்பு வந்து அதன் மூலம் உறைந்து விடுபதற்கு கூட வழியுண்டு அதன்மூலம் எலும்பு முறிவு மருத்துவரை அனுகி ட்ரெட்மென்ட் எடுக்க நேரிடும் என்றனர்... சரி இதன்மூலம் இந்த கிளாஸின் எடை கூடிவிடுமா என்று கேட்டார், அதற்கு அவர்கள் இல்லை என்று பதிலலித்தனர். அப்புறம் ஏன் இவ்வளவு வேதனை அதை தாங்கிக்கொண்டிருக்கும்பொது வருகிறது என்றார், எல்லா மாணவர்களும் குழப்பத்திலிருந்தனர்.
அப்போ இந்த கைவலியிலிருந்து மீள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார், அதற்கு ஒரு மாணவர் கீழே வைத்துவிட வேண்டும் என்று பதிலளித்தார், அதற்கு ஆசிரியர் அவரை பாராட்டிவிட்டு..
அதற்கு அவர் விளக்கமளித்தார்...
உங்கள் பார்வையில் சாதாரண (50 கிராம் 150கிராம்) எடையுள்ள கண்ணாடி கிளாஸ் மாதிரிதான் நமக்குள்ளே உள்ள பிரச்சினைகள்..!!, அதை சில நிமிடங்கள் பிடித்திருந்தால் அதனோட வலி அவ்வளவாக தெரியாது, எப்பவுமே தூக்கிப்பிடிதுக்கொண்டிருந்தால் அதனோட வேதனைதான் அதிகரிக்குமே தவிர எதுவுமே செய்யமுடியாமல் அந்த வளையத்தை விட்டு வெளியேறவே முடியாது.
வாழ்க்கையில் எப்பவுமே பிரச்சினைகளும், போராட்டங்களும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். முக்கியமான விஷயம் அதை எதிர்கொள்வதுதான், அதைவிட முக்கியமான விஷயம் அந்த கண்ணாடி கிளாஸை ஒவ்வொரு நாளின் முடிவிலும் கீழே வைத்துவிட்டு படுக்கைக்கு சென்றால்... அடுத்த நாளின் விடிவு எப்போதுமே புத்தம் புது நாளாக, எழிதில் போராட்டங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கலாம்...
9 கருத்துசொல்ல:
வாழ்க்கையில் எப்பவுமே பிரச்சினைகளும், போராட்டங்களும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். முக்கியமான விஷயம் அதை எதிர்கொள்வதுதான்
அருமையா கருத்து..சரியான உவமானக் கதையுடன் சொல்லியிருக்கிறீர்கள்..:-)
ஒரு கண்ணாடி கிளாஸ வச்சே கவுத்து புட்டீங்களே !!!!
ஆஆஹா..ஆஆஹா என்ன ஒரு தத்துவம்...
சமீபத்தில் ஆனந்த விகடனில் படித்த ஒரு கட்டுரை...
எப்படி ஒரு ஊரையே சிகப்பாக மாற்றுவீர்கள் ? ஊருக்கே பெயிண்ட் அடிக்கலாம்.அதற்கு பில்கேட்ஸ் இன் மகனாகவோ அல்லது மகளாகவோ தான் இருக்க வேண்டும்.அப்படியே அவ்வளவு பணம் இருந்தாலும் எல்லோரிடமும் அனுமதி பெறுவது சுலபமல்ல..
ஆனால் ஒரு பத்து ரூபாய் சிகப்பு மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்..ஊரையே சிகப்பாக பார்க்கலாம் என்று எழுதியிருந்தார்கள்.
ஆக, முடியாத ஒன்றை, செய்வதாக கற்பனை செய்வதிலும் வாழ்வில் ஒரு ஆனந்தமிருக்கிறது.
எல்லாம் நம் மனநிலையைப் பொறுத்தது.
A pessimist finds difficulty in every opportunity.
A optimist finds opportunity in every difficulty.
துவண்டு போனவர்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக உதவும்.தொடருங்கள் உங்கள் தன்னம்பிக்கை டானிக்கை !!!!
ஆஹா அருமை தோழா.
பிரட்ச்சனைன்னா கிளாஸ்(glass) எடுப்பானுங்க, அதவெச்சே கிளாஸ்(class) எடுத்துட்டீங்க ...
கிளாஸ் மாப்ள
//கண்ணாடி கிளாஸில்(எனக்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை, மண்ணிக்கவும்)//
கண்ணாடிக் குவளை...
//உங்கள் பார்வையில் சாதாரண (50 கிராம் 150கிராம்) எடையுள்ள கண்ணாடி கிளாஸ் மாதிரிதான் நமக்குள்ளே உள்ள பிரச்சினைகள்..!!, அதை சில நிமிடங்கள் பிடித்திருந்தால் அதனோட வலி அவ்வளவாக தெரியாது, எப்பவுமே தூக்கிப்பிடிதுக்கொண்டிருந்தால் அதனோட வேதனைதான் அதிகரிக்குமே தவிர எதுவுமே செய்யமுடியாமல் அந்த வளையத்தை விட்டு வெளியேறவே முடியாது.//
அருமை..அருமை...நல்ல பதிவு அபுஅஃப்ஸர்...
அ.மு.செய்யது said...
//A pessimist finds difficulty in every opportunity.
A optimist finds opportunity in every difficulty.//
தங்களுடைய வருகைக்கும், அருமையான சிறிய விளக்கத்திற்கும் நன்றி... தாங்களுடைய ஆதரவுடன் தொடருவோம்...
டொன்லீ, நட்புடன் ஜமால், புதியவன் அனைவரின் வந்து கருத்திட்டதுக்கு நன்றிகள் பல...
//நட்புடன் ஜமால் said...
பிரட்ச்சனைன்னா கிளாஸ்(glass) எடுப்பானுங்க, அதவெச்சே கிளாஸ்(class) எடுத்துட்டீங்க ...
கிளாஸ் மாப்ள//
கிளாஸ்(glass)பற்றி நினைத்தால் பலது ஞபகம் வருதுப்பா....
Post a Comment