என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நானும்.. தனிமையும்...!

எப்போதும் பார்த்துக்கொண்டிருந்து
எப்போதாவது நினைப்பதை விட‌
எப்போதும் நினைத்துக்கொண்டு
எப்போதாவது பார்ப்பதில்தான்
எப்போதுமே காதலின் ஆழம் தெரியும்...!

dont-be-sad

தனிமை...

இதுதாங்க வழ்க்கையிலே மிகப்பெரிய நோய்களெல்லாம் வருவதற்கு காரணம், இது சில பேருக்கு ரொம்ப பிடிக்கும், பல பேருக்கு இதுதான் முதல் எதிரி. நான் அதுலே இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன். நீங்க எப்படினு நான் கேட்கமாட்டேன், அனுபவிக்கிறவனுக்குதான் அதனோட வலியும், சுகமும் தெரியும்.

"நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை கலைக்கப்படுகிறபோது ஏற்படும் இழப்புகளை
நான் அறிவேன்"
(நன்றி: தபூசங்கர்)

தனிமையிலே இனிமைக்கான முடியுமா..?

முடியும்... முடியாது என்ற இருவேறு கருத்துக்கள் கண்ணதாசன் காலத்திலிருந்தே இருந்துக்கொண்டுதானிருக்கிறது. இப்போது நமக்கு அதுவல்ல பிரச்சினை...

பெற்றோரின் அரவனைப்பிலிருந்து பிரிந்து (பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்)  படிக்க செல்கிறது  (முதன்முதலில் என் குழந்தையை பள்ளியில் விட்டுவரும்போது குழந்தையும், தாயும் அழுதது இன்னும் என் கண்முன்), நண்பர்கள் வட்டம் பெருகியவுடன் தனிமை காணாமல் போகின்றது.

a-gang-of-friends

நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது... அதைவிட மகிழ்ச்சியான ஒரு சூழல் எப்போதுமே இருக்காதுங்க..இதனால் பசியை மறந்தும், இருக்கும் இடம் மறந்தும், வெயில் உச்சி மண்டையை பிளந்தும் உணர்வற்று இருக்கும்போது அடுத்தவர் நினைவுப்படுத்தி ஓஹ்.. என்ற நினைப்புடன் கலைந்து சென்ற காலமும் உண்டு, அப்போதெல்லாம் முக்கியமான தேர்வையும் மிஸ் பண்ணிய சம்பவம் நடந்திருக்கிறது. வேலைப்பழுவிலும், குடும்ப சூழ்நிலையாலும் ஒவ்வொருதரும் பார்ப்பதற்கே அரியதாக இருக்கும்போது பழைய நினைவுகளின் ஏக்கத்தால் நம்மை நாமாகவே தனிமைப்படுத்தப்படுகிறோம்

காதலுக்காகவும்,காதலிக்காகவும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும்போதும்,   அதற்குப்பிறகு முதல் பிரிவிலும்   தனிமையின் வலி அதிகம்..

சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா                                                                                      அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா                                                                                      அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா                                                                               அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று...       

என்னைவிட அதிகமாக என்னை காதலிக்கும்
உனக்கும் தெரியும் தனிமையின் வலி

யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...

sad

தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌...  

57 கருத்துசொல்ல:

புதியவன் 28 January, 2009 14:09  

//நானும்.. தனிமையும்...!//

இதோ நானும் வந்துட்டேன்...

Syed Abdul kadhar.M 28 January, 2009 14:12  

ஆஹ்..தனிமை....விட மாட்டோம்ல..

Syed Abdul kadhar.M 28 January, 2009 14:14  

//இதுதாங்க வழ்க்கையிலே மிகப்பெரிய நோய்களெல்லாம் வருவதற்கு காரணம், இது சில பேருக்கு ரொம்ப பிடிக்கும், பல பேருக்கு இதுதான் முதல் எதிரி. நான் அதுலே இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன். நீங்க எப்படினு நான் கேட்கமாட்டேன், //

ஏதோ சொல்ல வர்ரீஙக்..

திகழ்மிளிர் 28 January, 2009 14:16  

/சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று... /

அருமை

புதியவன் 28 January, 2009 14:18  

//பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்//

ம்ம்ம்...அப்படியும் சொல்லலாம்...

Syed Abdul kadhar.M 28 January, 2009 14:20  

//பெற்றோரின் அரவனைப்பிலிருந்து பிரிந்து (பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்) படிக்க செல்கிறது (முதன்முதலில் என் குழந்தையை பள்ளியில் விட்டுவரும்போது குழந்தையும், தாயும் அழுதது இன்னும் என் கண்முன்), நண்பர்கள் வட்டம் பெருகியவுடன் தனிமை காணாமல் போகின்றது. //

உண்மை..உண்மை...

அ.மு.செய்ய‌து...( ஏதோ லாகிள் பிர‌ச்சினை )

நட்புடன் ஜமால் 28 January, 2009 14:20  

என் உயிரே - நானும் தனிமையும்.

புதியவன் 28 January, 2009 14:21  

//யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...
தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌... //

ஆஹா...ஆஹா...அபுஅஃப்ஸர் என்னதிது சத்தமெல்லம் கேக்குது.
அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

நட்புடன் ஜமால் 28 January, 2009 14:21  

\\யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...\\

ஆஹா - வந்துடுச்சா முத்த ஜுரம்.

நட்புடன் ஜமால் 28 January, 2009 14:24  

\\தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌... \\

அருமையான தவம்.

அ.மு.செய்யது 28 January, 2009 14:40  

//சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று... //

உங்களுக்கு என்னமோ ஆச்சு..ஒரு கொலவெறியோடதான் எழுதியிர்கீங்க..

நல்ல ப்ளோங்க...

அ.மு.செய்யது 28 January, 2009 14:42  

//காதலுக்காகவும்,காதலிக்காகவும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும்போதும், அதற்குப்பிறகு முதல் பிரிவிலும் தனிமையின் வலி அதிகம்..//

இதுல முதல் ரகம் வரைக்கும் ஏதோ அனுபவிச்ச மாதிரி ஒரு கனவு.

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:43  

//புதியவன் said...
//நானும்.. தனிமையும்...!//

இதோ நானும் வந்துட்டேன்...
//

ம்ம் வாங்க புதியவரே

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:44  

//Syed Abdul kadhar.M said...
//இதுதாங்க வழ்க்கையிலே மிகப்பெரிய நோய்களெல்லாம் வருவதற்கு காரணம், இது சில பேருக்கு ரொம்ப பிடிக்கும், பல பேருக்கு இதுதான் முதல் எதிரி. நான் அதுலே இரண்டாவது ரகத்தை சேர்ந்தவன். நீங்க எப்படினு நான் கேட்கமாட்டேன், //

ஏதோ சொல்ல வர்ரீஙக்..
//

உங்களுக்கும் தெரிஞ்சிப்போச்சா

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:45  

//திகழ்மிளிர் said...
/சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று... /

அருமை
//

நன்றி திகழ்மிர் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:46  

//Syed Abdul kadhar.M said...
//பெற்றோரின் அரவனைப்பிலிருந்து பிரிந்து (பிரிவு கூட ஒரு வகைதனிமைதான்) படிக்க செல்கிறது (முதன்முதலில் என் குழந்தையை பள்ளியில் விட்டுவரும்போது குழந்தையும், தாயும் அழுதது இன்னும் என் கண்முன்), நண்பர்கள் வட்டம் பெருகியவுடன் தனிமை காணாமல் போகின்றது. //

உண்மை..உண்மை...
//

நன்றி காதர் தங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:49  

//புதியவன் said...
//யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...
தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌... //

ஆஹா...ஆஹா...அபுஅஃப்ஸர் என்னதிது சத்தமெல்லம் கேக்குது.
அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...
//

நன்றி புதியவரே தங்கள் வாழ்த்துக்கு

உங்கள் ரசிகன் நான் அந்த காத்து கொஞ்சம் கூட வீசாதா...சத்தமில்லாமல் முத்தமிடுவதில் நீங்கள் கில்லாங்க.. (ஹெ ஹெ கவிதையை சொன்னேன்)

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:51  

//நட்புடன் ஜமால் said...
\\தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌... \\

அருமையான தவம்.
//

வாங்க வலைசரத்தின் ஆசிரியரே, நீங்கள் என் பதிவுக்கு வருவதே பெரிய தவம்.. ரொம்ப நன்றிங்கன்னா உங்க பின்னூட்டத்திற்கு

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:52  

//அ.மு.செய்யது said...
//காதலுக்காகவும்,காதலிக்காகவும், திருமணத்திற்காகவும் காத்திருக்கும்போதும், அதற்குப்பிறகு முதல் பிரிவிலும் தனிமையின் வலி அதிகம்..//

இதுல முதல் ரகம் வரைக்கும் ஏதோ அனுபவிச்ச மாதிரி ஒரு கனவு.
//

வாங்க செய்யது..
உங்களுக்கும் கனவு வந்துடுச்சா...
அப்போ இன்னோரு பதிவு எதிர்ப்பார்க்கலாம்

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:54  

//அ.மு.செய்யது said...
//சூரியன் தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை கோல்கள் என்று
நிலவு தனித்து இல்லையா என்றாய்...
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை விண்மீன்கள் என்று...
பூக்கள் தனித்தில்லையா என்றாய்
உனக்கு தெரியுமா அதை சுற்றி எத்தனை வண்டுகள் என்று... //

உங்களுக்கு என்னமோ ஆச்சு..ஒரு கொலவெறியோடதான் எழுதியிர்கீங்க..
//

கொலை வெறி இல்லீங்க‌
தனிமையின் வெறி..

அ.மு.செய்யது 28 January, 2009 14:55  

//நன்றி காதர் தங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்//

ஏமாந்திட்டிங்களா !!!
ஏமாந்திட்டிங்களா !!!

அதுவும் நான் தாங்க‌..த‌சாவதார‌ம் மாதிரி நாங்க‌ கெட்ட‌ப் மாத்தியும் வ‌ந்து பீதிய‌ கிள‌ப்புவோம்.

அ.மு.செய்யது 28 January, 2009 14:58  

//நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது... அதைவிட மகிழ்ச்சியான ஒரு சூழல் எப்போதுமே இருக்காதுங்க..இதனால் பசியை மறந்தும், இருக்கும் இடம் மறந்தும், வெயில் உச்சி மண்டையை பிளந்தும் உணர்வற்று இருக்கும்போது அடுத்தவர் நினைவுப்படுத்தி ஓஹ்.. என்ற நினைப்புடன் கலைந்து சென்ற காலமும் உண்டு//

அந்த தனிமையை நான் இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

மக்கள் எல்லாம் பிழைப்பைத் தேடியும், கல்வியையைத் தேடியும் அந்நிய தேசங்களில்
சிதறிக் கிடக்கின்றனர்.

அபுஅஃப்ஸர் 28 January, 2009 14:58  

//அ.மு.செய்யது said...
//நன்றி காதர் தங்களுடைய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்//

ஏமாந்திட்டிங்களா !!!
ஏமாந்திட்டிங்களா !!!

அதுவும் நான் தாங்க‌..த‌சாவதார‌ம் மாதிரி நாங்க‌ கெட்ட‌ப் மாத்தியும் வ‌ந்து பீதிய‌ கிள‌ப்புவோம்
//

இப்படி எத்தினி பேரு கெளம்பிருக்கீங்கன்னா

பாத்துங்கனா அப்புறம் பத்திக்கப்போகுது

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:00  

//அ.மு.செய்யது said...
//நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது... அதைவிட மகிழ்ச்சியான ஒரு சூழல் எப்போதுமே இருக்காதுங்க..இதனால் பசியை மறந்தும், இருக்கும் இடம் மறந்தும், வெயில் உச்சி மண்டையை பிளந்தும் உணர்வற்று இருக்கும்போது அடுத்தவர் நினைவுப்படுத்தி ஓஹ்.. என்ற நினைப்புடன் கலைந்து சென்ற காலமும் உண்டு//

அந்த தனிமையை நான் இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறேன்.

மக்கள் எல்லாம் பிழைப்பைத் தேடியும், கல்வியையைத் தேடியும் அந்நிய தேசங்களில்
சிதறிக் கிடக்கின்றனர்.
//

அதே அனுபவத்தில் வந்ததுதான் இந்த வரிகள்..
தவிக்கிறோம்....

கைப்பேசியிலும், ஆன்லைனிலும் அந்த அனுபவம் கிடைக்காது..

Syed Ahamed Navasudeen 28 January, 2009 15:05  

தனிமை என்பது சில நேரம் தான் மருந்து ஆனால் பல நேரம் அதுவே ஒரு மிகக்கொடிய நோய்

அ.மு.செய்யது 28 January, 2009 15:08  

//அபுஅஃப்ஸர் said...

கைப்பேசியிலும், ஆன்லைனிலும் அந்த அனுபவம் கிடைக்காது..//

உண்மை தான்..

ஒன்றாக சேர்ந்து கையேந்தி பவனில் சாப்பிட்டு கும்மி அடிக்கும் சுகமே தனி..

நட்புடன் ஜமால் 28 January, 2009 15:15  

\\வாங்க வலைசரத்தின் ஆசிரியரே, நீங்கள் என் பதிவுக்கு வருவதே பெரிய தவம்.. ரொம்ப நன்றிங்கன்னா உங்க பின்னூட்டத்திற்கு\\

அட பாவி - நான் என்னமோ இப்பதான் வந்த மாதிரி எழுதிகீற ...

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:21  

//Syed Ahamed Navasudeen said...
தனிமை என்பது சில நேரம் தான் மருந்து ஆனால் பல நேரம் அதுவே ஒரு மிகக்கொடிய நோய்
//

அதுக்கு மருந்து கண்டுபிடிச்சா நிச்சயம் ஆஸ்கார் விருது உண்டு

அ.மு.செய்யது 28 January, 2009 15:21  

//\\வாங்க வலைசரத்தின் ஆசிரியரே, நீங்கள் என் பதிவுக்கு வருவதே பெரிய தவம்.. ரொம்ப நன்றிங்கன்னா உங்க பின்னூட்டத்திற்கு\\//

இதுல ஏதோ நுண்ணரசியல் இருக்குமோ....

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:22  

//நட்புடன் ஜமால் said...
\\வாங்க வலைசரத்தின் ஆசிரியரே, நீங்கள் என் பதிவுக்கு வருவதே பெரிய தவம்.. ரொம்ப நன்றிங்கன்னா உங்க பின்னூட்டத்திற்கு\\

அட பாவி - நான் என்னமோ இப்பதான் வந்த மாதிரி எழுதிகீற ...
//

இல்லீங்கன்னா கடந்த 3 நாட்களா படு பிசிலே அதைதான் சொல்ல வந்தேன்

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:24  

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...

கைப்பேசியிலும், ஆன்லைனிலும் அந்த அனுபவம் கிடைக்காது..//

உண்மை தான்..

ஒன்றாக சேர்ந்து கையேந்தி பவனில் சாப்பிட்டு கும்மி அடிக்கும் சுகமே தனி..
//

அதை சொல்றதுக்கு ஒரு மாசம் மெனக்கெட்டு பதிவு போட்டலும் பத்தாது

Syed Ahamed Navasudeen 28 January, 2009 15:29  

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற கலைஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

Syed Ahamed Navasudeen 28 January, 2009 15:33  

ஒரு plate பிரியாணியும் ஒரு டெலிபோன் கார்டும்தான் எங்கள் பெருநாளும் தீபாவளியும் பொங்கலும் என்று யாரோ எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

’டொன்’ லீ 28 January, 2009 15:36  

தனிமை ஒரு சுகம் தான்...ஆனால் சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்கு :-)

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:36  

//Syed Ahamed Navasudeen said...
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற கலைஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன
//

ஆஹா கிளம்பிட்டாருய்யா இன்னோரு ஆளு

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:37  

//’டொன்’ லீ said...
தனிமை ஒரு சுகம் தான்...ஆனால் சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்கு :-)
//

வாங்க டொன்லீ...
ஆமாங்க அதுவும் சரிதான்..

அ.மு.செய்யது 28 January, 2009 15:39  

//Syed Ahamed Navasudeen said...
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற கலைஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.//

பார்வையிலே சில நிமிடம்..

பயத்தோடு சில நிமிடம்..

கட்டியணைத்தபடி கண்ணீரிலே சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்....( அடுத்த வரிகள் கொஞ்சம் சிரமமாக‌ இருக்கும் )

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:40  

//yed Ahamed Navasudeen said...
ஒரு plate பிரியாணியும் ஒரு டெலிபோன் கார்டும்தான் எங்கள் பெருநாளும் தீபாவளியும் பொங்கலும் என்று யாரோ எழுதியதும் நினைவுக்கு வருகிறது
//

உண்மையிலும்... உண்மை

அபுஅஃப்ஸர் 28 January, 2009 15:51  

//அ.மு.செய்யது said...
//Syed Ahamed Navasudeen said...
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற கலைஞரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.//

பார்வையிலே சில நிமிடம்..

பயத்தோடு சில நிமிடம்..

கட்டியணைத்தபடி கண்ணீரிலே சில நிமிடம்..

இலக்கணமே பாராமல்....( அடுத்த வரிகள் கொஞ்சம் சிரமமாக‌ இருக்கும் )
//

த்தோ வந்துட்டாரப்பா அடுத்த கலைஞர் ச்சே கவிஞரு

sayrabala 28 January, 2009 16:53  

aaga super appu

unmaiyileye arumai abuuuuuuuuuuu

sayrabala 28 January, 2009 16:58  

antha "kadasi vari" ennamo pannuthu abu
supper

அபுஅஃப்ஸர் 28 January, 2009 16:59  

//sayrabala said...
antha "kadasi vari" ennamo pannuthu abu
supper
//

வாங்க சாய்ரபால, நன்றி தாங்கள் பின்னூட்டத்திற்கு

அன்புடன் அருணா 28 January, 2009 18:08  

இதைப் பிரசுரிக்க வேண்டாம்..
கோல்கள் - கோள்கள்
அரவனைப்பிலிருந்து-அரவணைப்பிலிருந்து
கொஞ்சம் கவனமாக எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாமே?
அன்புடன் அருணா

அன்புடன் அருணா 28 January, 2009 18:11  

மிக நல்ல பதிவு...
அன்புடன் அருணா

அ.மு.செய்யது 28 January, 2009 19:28  

//இதைப் பிரசுரிக்க வேண்டாம்..
கோல்கள் - கோள்கள்
அரவனைப்பிலிருந்து-அரவணைப்பிலிருந்து
கொஞ்சம் கவனமாக எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாமே?
அன்புடன் அருணா//

அச்சச்சோ...போச்சே..போச்சே..

சரி ஃபிரீயா விடுஙக....

அ.மு.செய்யது 28 January, 2009 19:31  

நாப்பத்தியாறு

அ.மு.செய்யது 28 January, 2009 19:32  

நாப்பத்தியேழு..

அ.மு.செய்யது 28 January, 2009 19:32  

நாப்ப‌த்தியெட்டு..

அ.மு.செய்யது 28 January, 2009 19:32  

49...............

அ.மு.செய்யது 28 January, 2009 19:33  

50....ய‌ப்பா..ஆஃப் செஞ்சுரி போட்டாச்சு..

thevanmayam 28 January, 2009 19:59  

அய்யா!
எனக்குத்தெரியதுய்யா!!
இப்படி நடக்குதுன்னு!!

தேவா....

அபுஅஃப்ஸர் 28 January, 2009 21:28  

//அன்புடன் அருணா said...
இதைப் பிரசுரிக்க வேண்டாம்..
கோல்கள் - கோள்கள்
அரவனைப்பிலிருந்து-அரவணைப்பிலிருந்து
கொஞ்சம் கவனமாக எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாமே?
அன்புடன் அருணா
//

நன்றி அருணா, தாங்கள் வருகைக்கும், கருத்தும்
இனிமேல் எழுத்துப்பிழையில் கவணம் செலுத்துவோம்

அபுஅஃப்ஸர் 28 January, 2009 21:30  

//அ.மு.செய்யது said...
50....ய‌ப்பா..ஆஃப் செஞ்சுரி போட்டாச்சு..
//

எடுங்கப்பா அந்த கப்பை, தூக்கிக்கொடுங்கப்பா செய்யதுக்கு.. யாருப்பா அது கைத்தட்டுங்கப்பா... டக் டப் டிக் டப்....

ரொம்ப சந்தோஷமப்பா உங்களோட Half Century

Divya 29 January, 2009 02:01  

Really a good write up:))

\\யார் சொன்னது நான் தனித்திருக்கிறேனென்று
நீ கொடுத்த முத்தத்துடன் கலந்த ஸ்பரிசம் என்னுடன்...

தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌...\\

Excellent lines!

அமுதா 29 January, 2009 09:52  

//தனித்திருக்கும்போது 'தவம்' செய்கிறேன்
பிணைப்பின் 'வரம்' பெறுவ‌த‌ற்காக‌...\
அருமை.

MayVee 31 January, 2009 08:28  

தனிமையை நான் கண்டதே இல்லை....
சில நேரங்களில் என்னது அறிவு என்னகு துணை..... பல நேரங்களில் அறிவான நண்பர்கள் துணை.
ஆனால் தனிமையில் இனிமை காண முடியாது......
தனிமை பல நேரங்களில் அது ஓர் சிறை தண்டனை......

thevanmayam 01 February, 2009 20:27  

/புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!
//

அது என்னிக்கு புரிஞ்சிருக்கு///

அபு! புதிய பதிவு
தேடி வந்தேன்!!
என் பதிவில்
கருத்துரைக்கு நன்றி..

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே