அப்பா.....
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்...
நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..
அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்... அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று
நீயே ஆசானாய் இருந்து ஒரு மாணவனைப்போல்
பாடம் கற்றுக்கொடுத்தாய்..
சரியாக படிக்காத போது பெற்ற மகன் என்று பாராமல்
எல்லா மாணவர்களும் உரிய சம தண்டனையை அளித்தாய்...
மாலைப்பொழுது வந்து வாசல்தட்டும் முன்
வீடு வந்து சேரவேண்டும் என்ற
கட்டளையிட்டாய்.. அப்போதெல்லாம் வெறுத்த நான்
இப்பொழுதும் நினைத்து சந்தோசப்படுகிறேன்
காலத்தின் விசரத்தன்மையை நினைத்து...
பள்ளியில் பயின்ற காலத்தில்
ஒவ்வொரு துறையிலும்
முன் தரவரிசையில் தலைக்காட்டிய போதெல்லாம்
அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய்
அப்போதெல்லாம் பள்ளிப்பருவம் இப்படியே
தொடராதா என்று யோசித்திருக்கிறேன்...
தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்..
இல்லாதவர்கள் வேண்டி வந்தபொழுதெல்லாம்
தன் தகுதிக்கும் மீறி அள்ளிக்கொடுத்தாய்..
இப்பொழுது அழுது வருத்தப்படுகிறார்கள்
கொடுக்க ஆளில்லாமல்.?
ஆசான்களெல்லாம் உன் வழிப்பின்பற்றும்
ஆசானாய் வாழ்ந்தாய்... !
ஒரு பெற்றோர் எப்படி இருக்கவேண்டும் என்ற உதாரணமாய் திகழ்ந்தாய்..!!
தான தர்மத்தின் தலைமகனாய் இருந்தாய்...!
உலக கல்வி மார்க்க கல்வி இரண்டிலும்
சிறந்து விளங்கினாய்...!
பெரியவர்களை மதிக்கவும், ஏழை பணக்காரரை
சமநிலையில் பாவிக்கவும்,
எப்போதும் எந்த இடத்திலும் பொறுமையை
கையாலவும் கற்றுக்கொடுத்தாய்...
அதனுடைய பலனை அனுபவிக்கிறேன்... உன் வழிப்பற்றி
உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க விரும்புகிறேன்..
வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..
நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......
41 கருத்துசொல்ல:
//அப்பா.....//
தலைப்பு சொல்லுது ஒரு கவிதை...
முந்திக்கிட்டே .
நான் எழுதனும்ன்னு இருந்தேன் ...
//நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்..//
அருமை...
\\அப்பா ...\\
தலைப்பே சொல்லுது ஒரு வாழ்க்கையை ...
\\வார்த்தைகள் பழகும் வரைக்கும்
என் அழுகையை மங்கச்செய்தும்
தொட்டிலின் ஈரம் துடைத்தும்
தோள்மீது தூக்கி தாலாட்டினாய்... \\
மாப்ள தூள் ...
//உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க விரும்புகிறேன்..//
எல்லோரும் பின்பற்ற வேண்டிய
நல்ல வழி தந்தை காட்டும் வழியே...
\\அதிகாலையில் சேவல் கூவும் முன்னே
கைப்பிடித்து இறையில்லம் கூட்டிச்சென்று
நல்வழி உபதேசித்தாய்... அதன் பலனை அனுபவிக்கிறேன் இன்று\\
வெளியிட வார்த்தியில்லை ...
//நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......//
இழப்பின் வலி வார்த்தைகளில்...
அருமை அபுஅஃப்ஸ்ர்...
\\அடக்கமுடியாத ஆனந்ததில் வாரியனைத்துக்கொள்வாய் \\
நல்ல தந்தை ...
\தோலுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை
நிரூபிப்பதைப்போல்
தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்.. \\
அருமை தோழா ...
உன் தோழனையும் தோழமையுடன் பார்ப்பாரே ...
\\உன் வழிப்பற்றி
நானும் என் குழந்தைகளுக்கு
தந்தையாகவும், தோழனாகவும், நல்லதொரு வழிக்காட்டியாகவும்... இருக்க விரும்புகிறேன்..\\
மிகவும் அருமைடா ...
\\வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து.\\
அருமையான வரிகள் ...
\\நீ இன்று எங்களுடன் இல்லை என்றாலும்
நீ விட்டுச்சென்ற கடமைகளை தொடர்ந்து
கண்ணீருடன் நிறைவேற்றுபவனாய்......\\
அவர் செய்துவிட்டு போன பிரார்த்தனைகள் உன் உடன் இருக்கும்.
//வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..
//
சொல்ல வார்த்தைகளில்லை..........இந்த வரிகளைப் படித்து விட்டு...
நன்றிகள் பல நட்புடன் ஜமால்/புதியவர்களுக்கு, என் மன வலியை புரிந்ததற்கு.., இந்த பதிவின் மூலம் என் மனபாரத்தி இறக்கிவைத்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
PLS PRAY FOR HIM...
உங்கள் தந்தை இக்கவிதையை பார்க்கவில்லையே என்ற வருத்தம் தான் என்னை ஆட்கொள்கிறது....
//தொய்ந்திருத போதெல்லாம்
தோழமையுடன் தோள்கொடுத்தாய்.. //
அந்த தோள்களைத் தவிர வேறெதுவும் வலிமையானதாக எனக்கு தோன்றவில்லை.....
கவிதையின் தரமும் மதிப்பும் ஏறிவிட்டது அபுஅஃப்ஸர் !!!
வாழ்த்துக்கள் !!!!!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதை தெளிவாக சொல்லி இருக்க மாப்ளே
//அ.மு.செய்யது said...
உங்கள் தந்தை இக்கவிதையை பார்க்கவில்லையே என்ற வருத்தம் தான் என்னை ஆட்கொள்கிறது....//
நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பாங்க,, அவரும் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர் மற்றும் ஆசிரியர்...
//Syed Ahamed Navasudeen said...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதை தெளிவாக சொல்லி இருக்க மாப்ளே//
நிச்சயமாக....
நன்றி தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
"வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து."
பலருக்கும் அவர்களை பிரிந்த பிரியப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் உயரிய வாசகங்கள். ஒவ்வொருவருக்கும் பொறுந்தும் ஒப்பற்ற வார்த்தைகள்
உன் நண்பன்
நவாஸ்
//அ.மு.செய்யது said... அந்த தோள்களைத் தவிர வேறெதுவும் வலிமையானதாக எனக்கு தோன்றவில்லை.....//
உண்மைதான் செய்யது
//கவிதையின் தரமும் மதிப்பும் ஏறிவிட்டது அபுஅஃப்ஸர் !!!
வாழ்த்துக்கள் !!!!!//
நன்றி தாங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்..
PRAY FOR HIM
//நட்புடன் ஜமால் said...
முந்திக்கிட்டே .
நான் எழுதனும்ன்னு இருந்தேன் ...//
நீங்களும் ஒரு பதிவு போடலாமே....
//பலருக்கும் அவர்களை பிரிந்த பிரியப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் உயரிய வாசகங்கள். ஒவ்வொருவருக்கும் பொறுந்தும் ஒப்பற்ற வார்த்தைகள்
உன் நண்பன்
நவாஸ்//
நல்ல கருத்து நவாஸ்..வாழ்க்கையில் கொடுமையானது பிரிவு....
நன்றி தன் வருகைக்கு..
ஒவ்வொரு Feed Back படிக்குக்கும்போது அழுகிறேன்....
நன்றிகள் பல தாங்களுடைய மேலான கருத்துக்களுக்கு...
\\அபுஅஃப்ஸர் said...
ஒவ்வொரு Feed Back படிக்குக்கும்போது அழுகிறேன்....
நன்றிகள் பல தாங்களுடைய மேலான கருத்துக்களுக்கு...
\\
உணர்வுகள் வெளிப்படுத்தவே இந்த இடம் ...
மனதைத் தொட்ட சொற்கள்... உங்கள் அப்பா பிரிந்தாலும் உங்கள் உணர்வுகளில் வாழ்வார் என்று நம்புகிறேன்.
//’டொன்’ லீ said...
மனதைத் தொட்ட சொற்கள்... உங்கள் அப்பா பிரிந்தாலும் உங்கள் உணர்வுகளில் வாழ்வார் என்று நம்புகிறேன்//
ஆமாம் வாழ்ந்துக்கொண்டுதானிருக்கார், அதனோட வெளிப்பாடுதான் இந்த காவியம்...
நன்றி லீ தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்:::இந்த வரி எனக்கு பிடித்து உள்ளது.நல்லா இருக்குங்க
உங்கள்
உணர்வுகளைச்
சொல்லுகின்றன
வார்த்தைகள்!!!!
தேவா..
//kajan's said...
நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்:::இந்த வரி எனக்கு பிடித்து உள்ளது.நல்லா இருக்குங்க//
ரொம்ப நன்றி காஜன்ஸ் தாங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
//உங்கள்
உணர்வுகளைச்
சொல்லுகின்றன
வார்த்தைகள்!!!!
தேவா..//
உண்மைதான் தேவா..
ரொம்ப நன்றி தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
vanakam,
good theme and personification of the poem.
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
/*உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து..*
ஒவ்வொரு வரியும் உங்கள் உணர்வுகளை அழகாக வடித்துள்ளன. வெற்றிடத்தின் தாக்கம் மிகக் கொடியது.
நன்றிகள் பல தேவா, பிரகாஷ்தாஸ் மற்றும் அமுதா தாங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
அருமையான வரிகள்
எங்கள் பள்ளிக்கு உன் தந்தை வந்ததும், என்னோடு அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டு இருந்ததும் மறக்க முடியாத நினைவுகள். அவர் நல்ல மனிதர் என்று ஊர் சொன்னதென்ன??? இறைவனே செல்லி விட்டானே மெக்காவில் அவரை மரணமடையச் செயததன் மூலம்...
என் அன்பு அப்பாவின் நினைவில் மூழ்க வைத்தது உங்கள் பதிவின் வரிகள்.....
Really Supreb
Mikka Nandri Iyya
அபூ, பழைய பதிவு ஆனாலும், தந்தை பிள்ளைகள் உறவை அழகிய வரிகளில் வடித்து இருக்கின்றீர்கள். ஒரு தந்தைக்கான சிறு 'கைடு'!!
Post a Comment